மூன்லைட் Moon Light 2016

மூன்லைட் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது.

இத் திரைப்படம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை மிக நேர்த்தியாகவும் ஆழமாகவும் விவரிக்கிறது.

 வறுமையும் போதைப்பொருள் புழக்கமும் நிறைந்த ஒரு சூழலில் பிறந்து வளரும் ஒரு ஆண் தன் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் அகம் மற்றும் புறம் சார்ந்த போராட்டங்களை இந்தத் தத்துவார்த்தக் கதைக்களம் மிக மென்மையாகப் பேசுகிறது.

மூன்லைட் திரைப்படத்தின்  அடிநாதம்  ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் நடத்தும் "சுயத்தைத் தேடும் உள்முகப் போராட்டம்" ஆகும்.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது ஒரு வெற்றுப் பக்கமாகவே இருக்கிறான். 

ஆனால், அவன் வாழும் சூழல், சமூகம், மற்றும் அவனுக்குக் கிடைக்கும் மனிதர்கள் அவனது அடையாளத்தை அவனுக்கு முன்பாகவே தீர்மானித்து விடுகிறார்கள். லிட்டில், சிரோன், பிளாக் என மூன்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஒரே மனிதன், உண்மையில் "நான் யார்?" என்ற கேள்விக்கான விடையைத் தேடியே தன் வாழ்நாளைக் கழிக்கிறான்.

இப்படத்தின் ஆழமான மையப்புள்ளி, "நாம் நாமாக வாழ்வதா அல்லது சமூகம் எதிர்பார்க்கும் நபராக மாறுவதா?" என்ற முரண்பாடுதான். 

தன் இயல்பான மென்மை குணத்தால் சிறுவயதில் ஒடுக்கப்படும் ஒருவன், தன்னைத் தற்காத்துக் கொள்ள வன்முறையையும் முரட்டுத்தனத்தையும் கவசமாக அணிந்துகொள்கிறான். 

இந்த முகமூடி அவனுக்குப் பாதுகாப்பைத் தந்தாலும், அவனது ஆன்மாவை முழுமையாகச் சிறைப்பிடித்து விடுகிறது. 
ஒரு கட்டத்தில், தான் வெறுத்த அதே போதைப்பொருள் உலகிற்குள்ளேயே அவனும் ஒரு அங்கமாக மாறுவது, சூழல் மனிதர்களை எப்படி விழுங்குகிறது என்பதன் சாட்சியாகும்.

படத்தின் மிக முக்கியமான குறியீடு அதன் தலைப்பிலும், ஜுவான் சொல்லும் அந்த ஒரு வரியிலும் ஒளிந்துள்ளது: "நிலவொளியில் கறுப்பர் உடலும் நீல நிறமாக மாறும்."

இதன் உண்மையான அர்த்தம், இருண்ட, கரடுமுரடான இந்த உலக அமைப்பில் (Black) மனிதர்கள் தங்களின் கடினமான பிம்பங்களைச் சுமந்து திரியலாம்; ஆனால், நிலவொளி போன்ற ஒரு மென்மையான, ஆத்மார்த்தமான சூழல் வரும்போது, அவர்களின் உள்ளே இருக்கும் அசல் மனிதன், அவனது தனித்துவம் மற்றும் தனித்துவமான அழகு  வெளிப்பட்டே தீரும்.

அடிப்படையில், இப்படம் குற்ற உணர்ச்சி, கடந்த கால ஏமாற்றங்கள் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்து, ஒரு மனிதன் தன் உள்மனதோடு சமாதானம் அடைவதைப் பற்றியது.

 எத்தனை அடுக்குகள் கொண்ட முகமூடியைப் போட்டுக்கொண்டாலும், ஒரு தனிமனிதனின் அசல் ஆளுமையையும், அவனது இயல்பான உணர்வுகளையும் இந்த உலகத்தால் ஒருபோதும் நிரந்தரமாக அழித்துவிட முடியாது என்பதைத்தான் இப்படம் தன் மௌனமான காட்சிகளின் வழியே கடத்துகிறது.

உலக சினிமாவின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்திரைப்படம் மனிதர்களின் அடையாளக் சிக்கலை மிகவும் உன்னதமான முறையில் அனுகியிருக்கிறது.

 வழக்கமான வணிகக் சினிமா கூறுகளைக் கடந்து மனித மனதின் ஆழமான மௌனங்களையும் ஏமாற்றங்களையும் காட்சிகளின் வழியே கடத்தியதில் இந்தத் திரைப்படம் உலக அளவில் திரை மேதைகளால் கொண்டாடப்படும் ஒரு அரிய காவியமாகத் திகழ்கிறது.

இப்படத்தை இயக்கிய பேரி ஜென்கின்ஸ் மிகக் குறைவான வசனங்களைக் கொண்டு கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் கதையின் போக்கை மூன்று அத்தியாயங்களாகப் பிரித்து ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித ஆளுமை எப்படி மாறுகிறது என்பதை மிக நுட்பமான திரைக்கதை அமைப்பின் மூலம் அவர் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் லாக்ஸ்டன் மியாமி நகரின் எழிலையும் அங்குள்ள மனிதர்களின் அக உலகையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் மிக அழகாகப் படமாக்கியுள்ளார் மூன்று காலகட்டங்களுக்கும் வெவ்வேறு வண்ண அமைப்புகளைப் பயன்படுத்தி கதாபாத்திரங்களின் மனநிலையைக் காட்சிகளின் வழியே கடத்திய விதம் உலகத் தரம் வாய்ந்தது.

பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டுக்களைப் பெற்ற இத்திரைப்படம் ஏ24 நிறுவனத்தால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது .

மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட போதிலும் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களின் அமோக ஆதரவால் இது மிகச் சிறந்த வசூலையும் குவித்துக் சாதனை படைத்தது
இதில் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்த மூன்று நடிகர்களும் ஒரே மனிதனின் வெவ்வேறு பரிமாணங்களைத் தங்களுக்குள் எந்தப் போலித்தனமும் இன்றி மிக எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

 குறிப்பாக ஜுவான் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாஹெர்ஷாலா அலி மற்றும் தாயாக நடித்த நவோமி ஹாரிஸ் ஆகியோரின் நடிப்பு உலகத் தரம் வாய்ந்தது.

நிக்கோலஸ் பிரிட்டெல் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹிப் ஹாப் இசையின் நுட்பங்களை ஆர்கெஸ்ட்ரா எனப்படும் மேற்கத்திய செவ்வியல் இசையோடு கலந்து அவர் உருவாக்கிய பின்னணி இசை இப்படத்தின் அமைதியான சூழலுக்கு மேலும் ஒரு ஆன்மீகத் தன்மையைக் கொடுத்துக் காட்சிகளைத் தாங்கிப் பிடிக்கிறது.

89வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இத்திரைப்படம் மிகச் சிறந்த திரைப்படம் மிகச் சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை மற்றும் மிகச் சிறந்த துணை நடிகர் என மூன்று மிக முக்கிய அகாடமி விருதுகளை வென்று உலக சினிமா வரலாற்றில் தனது பெயரை ஆழமாகப் பதிவு செய்துள்ளது.

 இப்படத்தின் கதைக்கு அடிப்படையாக அமைந்த நாடகத்தை தாரெல் ஆல்வின் மெக்கிரேனி 2003 ஆம் ஆண்டில் எழுதினார். தனது தாயார் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த துயரத்திலிருந்து விடுபடுவதற்காகவே அவர் இந்த சுயசரிதை சார்ந்த கதையை உருவாக்கினார். 

ஆனால் இந்த நாடக வடிவம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் மேடையேற்றப்படாமல் முடங்கிக் கிடந்தது. பின்னரே இயக்குனர் பேரி ஜென்கின்ஸ் கைகளில் இது தற்செயலாகக் கிடைத்தது.

இந்த முதல் பாகத்தில் வரும் ஜுவான் என்ற போதைப்பொருள் வியாபாரியின் கதாபாத்திரம் முற்றிலும் கற்பனையானது அல்ல. 

கதாசிரியர் மெக்கிரேனியின் சிறுவயதில் அவருக்குப் பாதுகாப்பாக இருந்த அவரது மாற்றாந்தாயின் சகோதரரை அடிப்படையாகக் கொண்டே ஜுவான் உருவாக்கப்பட்டது.

 அதேபோல் லிட்டிலின் அம்மாவான பாலா என்ற கதாபாத்திரம் இயக்குனர் ஜென்கின்ஸ் மற்றும் கதாசிரியர் மெக்கிரேனி ஆகிய இருவரின் உண்மையான தாயார்களின் நிஜ வாழ்க்கைப் பிரதிபலிப்பாகும். 

அவர்கள் இருவருமே நிஜ வாழ்க்கையில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி மீண்டவர்கள் என்பதால் அந்தப் பாத்திரத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக அசல் தன்மையுடன் எழுதப்பட்டது.

படப்பிடிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மியாமியின் லிபர்ட்டி ஸ்கொயர் பகுதி மிகவும் ஆபத்தானது எனக் கருதப்பட்ட போதிலும் அங்கேயே படப்பிடிப்பை நடத்த இயக்குனர் பிடிவாதமாக இருந்தார்.

 ஏனெனில் அவரும் கதாசிரியரும் தங்கள் சிறுவயதில் வளர்ந்த அதே தெருக்களில் தான் கதையும் நிகழ்கிறது. அங்கு படப்பிடிப்பு நடந்தபோது படக்குழுவினருக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 

ஆனால் ஆச்சரியமளிக்கும் விதமாக உள்ளூர் மக்கள் இயக்குனர் ஜென்கின்ஸைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதி படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் இல்லாமல் பெரும் ஆதரவை வழங்கினர்.

சிறுவன் சிரோனாக நடித்த அலெக்ஸ் ஹிப்பர்ட் மியாமியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த திறந்தவெளித் தேர்விலேயே முதன்முதலாகக் கண்டறியப்பட்டார். 

அவருக்கு நீச்சல் கற்றுத்தரும் புகழ்பெற்ற காட்சியைப் படமாக்கியபோது அவர் நிஜமாகவே நீச்சல் தெரியாத பயத்தில் இருந்தார். ஜுவானாக நடித்த மாஹெர்ஷாலா அலி அந்த அச்சத்தைப் போக்கி அவரைத் தன் கைகளில் தாங்கிப் பிடித்தபடி நிஜமாகவே நீச்சல் கற்றுக்கொடுத்தார். 

அந்த எதார்த்தமான பயமும் நம்பிக்கையும் தான் அந்தக் காட்சியை அத்தனை உன்னதமாக மாற்றியது.
இந்த முதல் பாகத்தின் காட்சிகளுக்கு ஒரு தனித்துவமான காட்சி அமைப்பைக் கொடுக்க ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் லாக்ஸ்டன் புஜி பிலிம் ஸ்டாக்கின் வண்ண அமைப்பைப் பயன்படுத்தினார்.

 இது கறுப்பின மனிதர்களின் தோலின் பளபளப்பையும் மியாமியின் வெப்பமண்டல சூழலையும் திரையில் மிகவும் அடர்த்தியாகவும் அழகாகவும் காட்ட உதவியது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் இருபத்தைந்தே நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிக்கப்பட்ட போதிலும் இந்த முதல் அத்தியாயம் உலக சினிமா வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையைத் பதித்துள்ளது.

டீனேஜ் பருவத்து சிரோனாக நடித்த ஆஷ்டன் சாண்டர்ஸ் தேர்வு செய்யப்பட்ட விதம் மிகவும் சுவாரசியமானது. இயக்குனர் பேரி ஜென்கின்ஸ் மூன்று காலகட்டத்து சிரோன் கதாபாத்திரங்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

 மாறாக அவர்களின் கண்களில் இருக்கும் அந்தத் தனித்துவமான அமைதியும் ஏக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பியே ஆஷ்டனைத் தேர்வு செய்தார்.

இயக்குனர் எடுத்த மிக விசித்திரமான மற்றும் துணிச்சலான முடிவு என்னவென்றால் மூன்று காலகட்டங்களில் சிரோனாக நடித்த மூன்று நடிகர்களையும் படப்பிடிப்பு முழுவதும் ஒருவரையொருவர் சந்திக்கவே விடவில்லை. 

டீனேஜ் சிரோன் குழந்தை சிரோனையோ அல்லது வளர்ந்த சிரோனையோ பார்த்து அவர்களின் உடல்மொழியையோ பேசும் பாணியையோ நகலெடுத்து விடக்கூடாது என்பதில் ஜென்கின்ஸ் மிகக் கவனமாக இருந்தார். 

இதனால் ஆஷ்டன் சாண்டர்ஸ் தனக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வார படப்பிடிப்பு காலத்தில் மற்ற சிரோன்களைப் பார்க்காமலேயே தன் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார்.

டீனேஜ் சிரோனின் வாழ்க்கையை உலுக்கும் அந்தப் பள்ளி வன்முறை மற்றும் கடற்கரைக் காட்சிகள் வெறும் ஐந்து நாட்களுக்குள் படமாக்கப்பட்டன. 

அவனது நண்பன் கெவினாக நடித்த ஜாரெல் ஜெரோம் இப்படத்தின் மூலம் தான் உலக சினிமாவிற்கு முதன்முதலாக அறிமுகமானார். கடற்கரையில் சிரோனும் கெவினும் அமர்ந்து பேசும் அந்த நீண்ட காட்சியில் நிலவொளியின் அழகைக் கொண்டுவர ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் லாக்ஸ்டன் அக்ஃபா பிலிம் ஸ்டாக்கின் வண்ண அமைப்பைப் பயன்படுத்தினார்.

 இது காட்சிகளில் ஒருவித நீல மற்றும் சியான் நிறக் கலவையை ஏற்படுத்தி பதின் பருவத்து மனப் போராட்டங்களை அழகியல் உணர்வோடு திரையில் காட்டியது.

ஆரம்பத்தில் சிரோனின் தாயார் பாலா கதாபாத்திரத்தில் நடிக்க நாோமி ஹாரிஸ் தயங்கினார். கறுப்பினப் பெண்களைப் போதைக்கு அடிமையானவர்களாக மட்டுமே காட்டும் வழக்கமான பாணியில் இது அமைந்துவிடுமோ என்று அவர் அஞ்சினார். 

ஆனால் இயக்குனர் அவரிடம் இது தனது சொந்த தாயின் கதை என்று விளக்கியதும் சம்மதித்தார். மிக ஆச்சரியமாக நாோமி ஹாரிஸ் விசா நடைமுறைகள் காரணமாக அமெரிக்காவில் தங்குவதற்கு மிகக் குறைந்த நாட்களே அவகாசம் பெற்றிருந்தார்.

 அதனால் அவர் சிரோனின் டீனேஜ் பருவம் உட்பட ஒட்டுமொத்தப் படத்திற்கான தனது அனைத்துக் காட்சிகளையும் வெறும் மூன்று நாட்களுக்குள் எந்த ஒரு ஒத்திகையும் இன்றி நடித்துக் முடித்துக் கொடுத்தார்.
பள்ளியில் ரவுடி மாணவன் டெரல் தூண்டுதலால் கெவின் தன் நண்பன் சிரோனை அடிக்கும் அந்தக் கொடூரமான காட்சியைப் படமாக்கியபோது ஒட்டுமொத்தப் படக்குழுவும் உணர்ச்சிவசப்பட்டது. 

நிஜ வாழ்க்கையில் மிகச் சிறந்த நண்பர்களாக மாறிய ஆஷ்டனும் ஜாரெல் ஜெரோமும் அந்தக் காட்சியில் உண்மையான வன்புணர்ச்சியையும் துரோகத்தையும் தங்களின் அசாத்தியமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினர். 

கைதாகிச் செல்லும் சிரோனின் அந்தப் பார்வையும் அதைத் தாங்க முடியாமல் கெவின் தவிப்பதும் எந்த ஒரு பெரிய வசனமும் இன்றி மௌனத்தின் மூலமாகவே உலக ரசிகர்களைக் உலுக்கியெடுத்தது.

மூன்லைட் திரைப்படத்தின் இறுதி அத்தியாயமான பிளாக் உருவான விதம் மற்றும் அதன் பின்னணி விவரங்கள் மிகவும் அசாத்தியமானவை. வளர்ந்த சிரோனாக நடித்த ட்ரெவாண்டே ரோட்ஸ் உண்மையில் முதலில் கெவின் கதாபாத்திரத்திற்காகத்தான் ஆடிஷன் செய்தார். 

ஆனால் அவரிடம் இருந்த ஒரு தனித்துவமான மௌனமும் தோற்றப் பொலிவும் இயக்குனர் பேரி ஜென்கின்ஸைக் கவர்ந்ததால் அவரை முதன்மைக் கதாபாத்திரமாகவே மாற்றினார். ட்ரெவாண்டே ரோட்ஸ் ஒரு முன்னாள் தடகள வீரர் என்பதால் அட்லாண்டா போதைப்பொருள் வியாபாரிக்குத் தேவையான அந்த முரட்டுத்தனமான உடல்வாகைக் கொண்டுவருவது அவருக்கு எளிதாக இருந்தது.

இறுதிப் பாகத்தின் மிக முக்கியமான பகுதியாகக் கருதப்படும் அந்த உணவகக் காட்சி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் எடிட் செய்யப்பட்டபோது பல சுவாரசியமான மாற்றங்களைப் பெற்றது. 

இப்படத்தின் எடிட்டர்களான நாட் சாண்டர்ஸ் மற்றும் ஜோய் மெக்மிலன் ஆகிய இருவரும் இயக்குனரின் கல்லூரி நண்பர்கள் ஆவர். திரைக்கதையின் அசல் அமைப்பில் சிரோன் தனது தாயார் பாலாவைச் சந்திக்கும் காட்சிதான் இந்த இறுதி அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. 

ஆனால் எடிட்டிங் மேசையில் அமர்ந்தபோது எடிட்டர்கள் இருவரும் இயக்குனரை வற்புறுத்தி அந்தத் தாய் மகன் சந்திப்புக் காட்சியைப் படத்தின் பிற்பகுதிக்கு மாற்றினர். 

இந்த எடிட்டிங் மாற்றம் தான் சிரோனின் மனமாற்றத்திற்கும் கெவினை அவன் தேடிச் செல்வதற்கும் ஒரு மிகச் சிறந்த உணர்ச்சிப்பூர்வமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

கெவினாக நடித்த ஆண்ட்ரே ஹாலந்து இந்த இறுதிப் பாகத்தின் அனைத்துக் காட்சிகளையும் வெறும் ஐந்து நாட்களுக்குள் நடித்து முடித்தார்.

 அவர் ஏற்கனவே கதாசிரியர் மெக்கிரேனியின் நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் என்பதால் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே இது தான் தன் வாழ்நாளில் படித்த மிகச் சிறந்த வடிவம் என்று பாராட்டி உடனே ஒப்புக்கொண்டார்.

 உணவகத்தில் சிரோனுக்காக அவர் சமைக்கும் காட்சியில் உண்மையான சமையல்காரரின் லாவகம் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் சில நாட்கள் நிஜ உணவகங்களில் பயிற்சி பெற்றார்.

இந்த இறுதிப் பாகத்திற்கு ஒரு முதிர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்க ஒளிப்பதிவாளர் கோடாக் பிலிம் ஸ்டாக்கின் வண்ண அமைப்பை மாற்றியமைத்துப் பயன்படுத்தினார். இது பிளாக்கின் தற்போதைய ஆடம்பரமான ஆனால் தனிமையான வாழ்க்கையைத் திரையில் தத்ரூபமாகக் காட்டியது. 

இசையமைப்பாளர் நிக்கோலஸ் பிரிட்டெல் இந்த அத்தியாயத்தில் சோவ்ட் அண்ட் ஸ்க்ரூவ்ட் எனப்படும் ஹிப் ஹாப் இசை நுட்பத்தை ஆர்கெஸ்ட்ரா இசையோடு கலந்து ஒரு விசித்திரமான பின்னணி இசையை உருவாக்கினார். 

இது சிரோன் வெளியில் பார்க்கப் பெரிய ஆளாக இருந்தாலும் உள்ளே இன்னும் அந்தப் பழைய சிறுவனாகவே தவிக்கிறான் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.

இந்தத் திரைப்படத்தின் மூலம் ஜோய் மெக்மிலன் ஆஸ்கார் விருது வரலாற்றில் சிறந்த எடிட்டிங் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 

மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு மாற்றுச் சினிமா ஆஸ்கார் மேடையில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற அந்த வரலாற்றுத் தருணம் உலக சினிமா வரலாற்றில் ஒருபோதும் மறக்க முடியாத இறுதிப் பக்கமாகும்.

===============================
படத்தின் கதை:-

மூன்லைட் திரைப்படம் மியாமி நகரில் வாழும் சிரோன் என்ற ஒரு சிறுவனின் வாழ்க்கையை மூன்று முக்கிய காலகட்டங்களாகப் பிரித்து மிக எளிமையாக விவரிக்கிறது.

முதல் பகுதி: சிறு வயது (லிட்டில்)

சிரோன் (அலெக்ஸ் ஹிப்பர்ட்) சிறுவனாக இருக்கும்போது மிகவும் அமைதியான, பயந்த சுபாவம் கொண்டவனாக இருக்கிறான். 

அவனது உடல்வாகைக் கிண்டல் செய்து மற்ற சிறுவர்கள் துரத்துவதால், அவன் "லிட்டில்" என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறான். 

ஒருநாள் சிறுவர்களிடமிருந்து தப்பிக்க ஒரு பாழடைந்த வீட்டில் ஒளிந்திருக்கும் சிரோனை, ஜுவான் (மஹெர்ஷாலா அலி) என்ற போதைப்பொருள் வியாபாரி காப்பாற்றுகிறான்.

 ஜுவானும் அவனது காதலி தெரசாவும் (ஜனெல்லே மோனே) சிரோனுக்கு அடைக்கலம் கொடுத்து, தங்கள் சொந்தப் பிள்ளை போல அன்போடு கவனித்துக் கொள்கிறார்கள்.

சிரோனின் அம்மா பாலா (நவோமி ஹாரிஸ்) போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி, தன் மகனைச் சரியாகக் கவனிப்பதில்லை.

 இதனால் சிரோன் ஜுவான் தம்பதியினரைத் தன் குடும்பமாக நினைக்கிறான். ஒரு கட்டத்தில், தன் அம்மாவுக்குப் போதைப்பொருள் விற்பதே தனக்கு ஆதரவாக இருக்கும் ஜுவான் தான் என்ற உண்மை சிரோனுக்குத் தெரியவருகிறது.
 இதனால் ஜுவான் குற்ற உணர்ச்சியால் தலைகுனிகிறான்.

இரண்டாம் பகுதி: பதின் பருவம் (சிரோன்)

சிரோன் (ஆஷ்டன் சாண்டர்ஸ்) இப்போது பள்ளிக்குச் செல்லும் டீனேஜ் பையன். ஜுவான் இறந்துவிட்டதால், தெரசாவின் ஆதரவோடு வாழ்கிறான். அவனது அம்மா பாலாவின் போதைப்பழக்கம் இன்னும் மோசமாகி, தெரசா சிரோனுக்குக் கொடுக்கும் பணத்தையும் பிடுங்கிக் கொள்கிறாள்.

 பள்ளியில் டெரல் (பேட்ரிக் டெசில்) என்ற ரவுடி மாணவன் சிரோனைத் தொடர்ந்து சித்திரவதை செய்கிறான்.
இந்தக் கடினமான சூழலில், சிரோனின் சிறுவயது நண்பனான கெவின் (ஜாரெல் ஜெரோம்) மட்டுமே அவனுக்கு ஆறுதலாக இருக்கிறான். 

ஒரு நாள் இரவு கடற்கரையில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்பட்டு, முத்தமிட்டுக் கொள்கிறார்கள். 

ஆனால் அடுத்த நாளே பள்ளியில், டெரல் என்ற ரவுடி மாணவன் கெவினை வற்புறுத்தி சிரோனை அடிக்க வைக்கிறான். நண்பனே தன்னை அடித்ததை தாங்கிக்கொள்ள முடியாத சிரோன், அடுத்த நாள் வகுப்பறைக்குள் நுழைந்து டெரலை நாற்காலியால் அடித்துத் தன் கோபத்தைக் காட்டுகிறான். இதற்காகச் சிரோன் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறான்.

மூன்றாம் பகுதி: இளம் பருவம் (பிளாக்)
பத்து வருடங்கள் முடிகின்றன. இப்போது சிரோன் (ட்ரெவாண்டே ரோட்ஸ்) வளர்ந்து பெரியவனாகி, அட்லாண்டா நகரில் "பிளாக்" என்ற பெயரில் ஒரு பெரிய போதைப்பொருள் வியாபாரியாக வாழ்கிறான்.

 பழைய சிரோன் போல இல்லாமல், தன்னை யாரும் பயமுறுத்தக் கூடாது என்பதற்காகத் தன் உடலை மிகவும் கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டு, வெளியில் பார்க்கக் கடுமையானவனாகக் காட்டிக்கொள்கிறான்.

இந்தச் சூழ்நிலையில், மறுவாழ்வு மையத்தில் இருக்கும் அவனது அம்மா பாலா, தான் செய்த தவறுகளுக்காக அழுது சிரோனிடம் மன்னிப்புக் கேட்கிறாள். 

அவனும் தன் அம்மாவை மன்னித்து அவளைக் கட்டிப்பிடித்து அழுகிறான். இதற்கிடையே, பல வருடங்களாகப் பேசாமல் இருந்த அவனது பழைய நண்பன் கெவின் (ஆண்ட்ரே ஹாலந்து), சிரோனைத் தொடர்பு கொண்டு தான் மியாமியில் ஒரு உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்வதாகவும், முடிந்தால் வந்து பார்க்குமாறும் அழைக்கிறான்.

சிரோன் கெவினைப் பார்க்க மியாமிக்குச் செல்கிறான். அங்கு கெவின் அவனுக்கு உணவு சமைத்துக் கொடுத்து உபசரிக்கிறான். இருவரும் தங்கள் பழைய நினைவுகளைப் பேசுகிறார்கள். 

அப்போது கெவின், தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், இப்போது அமைதியான வாழ்க்கை வாழ்வதாகவும் கூறுகிறான். இறுதியில், சிரோன் கெவினிடம் ஒரு ரகசியத்தை உடைக்கிறான்:

 அன்று கடற்கரையில் கெவினோடு இருந்த அந்த இரவிற்குப் பிறகு, இந்த பத்து வருடங்களில் தான் வேறு யாருடனும் நெருக்கமாக இருந்ததில்லை என்று கூறுகிறான். கெவின் அவனைப் புரிந்து கொண்டு அன்போடு அணைத்துக் கொள்ள, சிரோன் நிலவொளியில் நின்ற தன் சிறுவயது அழகான நாட்களை நினைத்துப் பார்க்கையில் படம் நிறைகிறது.

மூன்லைட் திரைப்படம் மனிதர்களின் அகம் சார்ந்த பல ஆழமான யதார்த்தங்களை மிகவும் மென்மையாகப் பேசுகிறது. சமூகம் ஒரு ஆண் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சில பொதுவான விதிகளை வகுத்து வைத்திருக்கிறது. 

குறிப்பாக, வறுமையும் குற்றங்களும் நிறைந்த பின்னணியில் வாழும் ஆண்கள் தங்களை எப்போதும் கடுமையானவர்களாகவும், வன்முறையை எதிர்க்கொள்ளும் வல்லமை படைத்தவர்களாகவும் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். 

ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் ஒரு ஆணின் மென்மையான உணர்வுகளையும், அவனது பலவீனங்களையும், பாசத்திற்காக ஏங்கும் அவனது ஏமாற்றங்களையும் இந்தத் திரைப்படம் மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

ஒரு மனிதன் சிறு வயது முதல் எதிர்கொள்ளும் அவமதிப்புகளும், தனிமையும் அவனது எதிர்கால ஆளுமையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதை இப்படம் உணர்த்துகிறது. 

தாயின் அரவணைப்பு கிடைக்காத ஒரு குழந்தை, வெளியில் தனக்குக் கிடைக்கும் சின்னஞ்சிறு அன்பிற்காக எப்படி ஏங்குகிறது என்பதையும், தவறான பாதையில் இருக்கும் ஒரு மனிதனிடம் கூட (ஜுவான் போன்ற கதாபாத்திரங்கள்) ஒரு குழந்தைக்குத் தேவையான மிகச் சிறந்த வழிகாட்டுதலும், உண்மையான பாசமும் இருக்க முடியும் என்பதையும் படம் காட்டுகிறது.

இதோடு, ஒரு மனிதன் தனது உண்மையான அடையாளத்தை, குறிப்பாகத் தனது பாலின விருப்பங்களைச் சுற்றியுள்ள சமூகப் பயத்தின் காரணமாக எப்படி மூடி மறைக்க வேண்டியிருக்கிறது என்பதை இப்படம் பேசுகிறது. 

தன்னை மற்றவர்கள் கேலி செய்யக் கூடாது என்பதற்காகவே, ஒருவன் தனக்குப் பிடிக்காத ஒரு முரட்டுத்தனமான முகமூடியை அணிந்து கொண்டு வாழ நேரிடுகிறது. ஆனால், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக மாறினாலும், ஒரு மனிதனின் உண்மையான அகம் மாறாது என்பதை இறுதிக்காட்சிகள் உணர்த்துகின்றன.

இறுதியில், மனிதர்களுக்குத் தேவைப்படுவது பணமோ, அதிகாரமோ அல்லது முரட்டுத்தனமான உடலமைப்போ அல்ல; தங்களை அப்படியே புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளும் ஒரு ஜீவனின் அன்பான அணைப்பு மட்டுமே என்பதை இப்படம் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

 நிலவொளியில் எல்லா மனிதர்களும் தங்களின் முகமூடிகளைக் கழற்றிவிட்டு, தங்களின் உண்மையான நிறத்தோடு, ஆத்மார்த்தமான அமைதியைத் தேடுவதே இந்த ஒட்டுமொத்த கதையின் செய்தியாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) சென்னை (82) ஆஸ்கர் (81) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)