குட் ஃபெல்லாஸ் 1990 (Goodfellas) ரொம்ப (வாழ்ந்து ) கெட்டவர்கள்


goodfellas குட்ஃபெல்லாஸ்:- நியூயார்க்கின் க்ரைம் ரிப்போர்டரான நிகோலஸ் பிலக்கியின் உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு எழுதப்பட்ட "நைஸ்கை" என்னும் செமிஃபிக்‌ஷன் நாவலை தழுவி , மார்ட்டின் ஸ்கார்சஸியின் மிக அற்புதமான இயக்கத்தில் ,1990 ஆம் ஆண்டு  வெளிவந்த க்ரைம் ட்ராமா த்ரில்லர் வகைப்படம் இது.

கேங்ஸ்டர் வாழ்க்கையே மிக ஆடம்பரமும்,உச்சகட்ட கொண்டாட்டமும் கொண்டது தான் ,   அதை 2‍‍ மணி 20 நிமிடத்தில் ஒவ்வொரு காட்சியையும் டீடெய்லாக விளக்கி பிரித்து பேன் பார்த்திருக்கிறார் இயக்குனர் . ஹாலிவூட்டில்  இதுவரை வெளிவந்த எல்லா கேங்ஸ்டர் படங்களிலிருந்தும் முற்றிலும் மாறுபடும் தனித்துவம்   இந்த படத்துக்கு  உண்டு,

டம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தன்னை ஒரு மாப்ஸ்டராகவே பாவிக்க செயத  ப்ரொஃபெஷனலிசம் , இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸஸி யாருக்கும் எதையும் விளக்க முற்பட்டு எதிலும் எந்தவிதமான காம்ப்ரமைஸும்  செய்து கொள்ளவில்லை. அதிரடியான திருப்பங்கள் , சரவெடி போன்ற நீண்ட வசனம்,கூடவே  நிறைய  ப்ளாக் ஹ்யூமர் காக்டெயில்,

டத்தின் ரியாலிடிக்காக அமெரிக்காவின் நிஜ கேங்ஸ்டர்களிடம்  நிறைய ஆலோசனைகள் கேட்ட  பின்னரே  படக்குழுவினர் அனைவரும்  ஒன்றி நடித்தனராம் . படம் முழுக்க அவ்வளவு கதாபாத்திரங்கள் , அத்தனையும் அப்போது அமெரிக்காவில்  நிஜமாக வாழ்ந்த கேங்ஸ்டர்களை  வைத்து பின்னப்பட்டவையே , படையப்பா அருணாச்சலம் போன்ற படங்களையே மிஞ்சும் அளவுக்கு வதவதவென கூட்டம்.

ந்த படம் மூன்று தலைமுறையாக கேங்ஸ்டர் தொழிலில் இருக்கும் மூன்று கேங்ஸ்டர்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றிய கதை,படம் 1958ஆம் ஆண்டு களத்தில் துவங்கி 1987 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தை தொட்டு நம் மனதில் நீங்காத அனுபவமாக பதிக்கிறது. நீங்கள் ஒரு கேங்ஸ்டர் பட‌ பிரியர் இன்றால் இந்த படம் பார்க்காமல் உங்கள் கேங்ஸ்டர் திரைப்பட   தேடுதல் பயணம் முழு நிறைவடையாது.

கதை:‍-

தாவு தீர்ந்து போன ,உயிர்பயம் கொண்ட கேங்ஸ்டரான ஹென்றி ஹில் (ரே லியாட்டா) எஃப்பிஐ யின் விட்னெஸ் ப்ரொடெக்ஷன் ப்ரொக்ராமில் அப்ரூவராகி தன் முன்னாள் கேங்க்ஸ்டர் சகாக்கள் இருவரான  ஜிம்மி  (ராபர்ட் டெனீரோ) ம‌ற்றும் பாலீ யை (பால் சொர்வினோ) எஃப்பிஐ வசம் மாட்ட‌ வைத்து 20 வருடத்துக்கும் மேல் கடுங்காவல் தண்டனை வாங்கித்தந்துவிட்டு , இன்று வரை தான் ஒரு சராசரி மனிதனாக வாழும் உண்மைக்கதை.படம் பார்க்காதவர்கள்  ஸ்பாய்லர் வேண்டாம் என்பவர்கள் ட்ரெய்லரை பார்த்துவிட்டு  தல ஹாலிவுட் பாலாவின்  செம கலக்கலான விமர்சனத்தையும்  படித்துவிட்டு செல்லவும்.
==========================================================


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===========================================================

இதற்கு மேல் முழு கதை சுருக்கம்,இப்போவே ஸ்பாய்லர் அலர்டு குடுத்துக்கறேன்.

ரிஷ் மற்றும் இத்தாலிய கேங்ஸ்டர்களுக்கு பெயர்போன கிழக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளினில், பள்ளியில் படிக்கும் ஐரிஷ்-அமெரிக்க சிறுவன் ஹென்றி, தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் இத்தாலிய கேங்ஸ்டரான் பாலீ யிடம் பகுதி நேரமாக வேலைக்கு சேர்கிறான்,இதுவே துரிதமாக வாழ்வில் முன்னேறும் வழி என்பதை புரிந்துகொண்டு இளம் வயதிலேயே கடத்தலை கற்க துடிக்கிறான்.

தில் இவனை மிகவும் கவர்ந்த ஐரிஷ் இனத்தவனான ஜிம்மியிடம் (ராபர்ட் டெனீரோ) கடத்தல் தொழிலை துரிதமாக கற்கிறான். இதனால் எங்கு போனாலும் ராஜமரியாதை தேடி வருகிறது.முதல் முறையாக கார்கோவில் திருடிய சிகரெட்டுகளை விற்கும்போது போலீசிடம் பிடிபட்டு வாய் திறக்காமல் இருக்க,அன்றே கேங்ஸ்டரின் அகராதியில் வயதுக்கு வருகிறான். பாராட்டப்பட்டு அந்தஸ்து பெருகிறான்,அருகாமையிலுள்ள கேங்ஸ்டர்களின் நன் மதிப்பையும் பெற்று விடுகிறான்.

வனுக்கு தேவைக்கு அதிகமாக டாலர்களும் ஆடம்பர காடிலாக் காரும் பெண்களும் மதுவிருந்தும் திகட்ட திகட்ட கிடைக்கிறது, தனது 21 வயதிலேயே புத்திசாலி யூத பெண்ணான கேரென் ஐ , தான் ஒரு ஹால்ஃப் ஜூவிஷ் (அரை யூதன் ) என் பொய் சொல்லி டேட்டிங் செய்து நல்ல‌ அபிமானத்தை பெற்று , திருமணமும் செய்கிறான். ஆடம்பர மாளிகையும், காரும் தினசரி கேளிக்கை  விருந்தும் , உலக நாடுகள் சுற்றுலாக்கள் என நாள் வேகமாக ஓடுகிற‌து.இரு பெண் குழந்தைகளும் அடுத்தடுத்து  பிறக்கின்றன.

ஜிம்மிக்கும் (ராபர்ட் டெனீரோ) வயதாகிறது,டாமி (ஜோ பெஸ்ஸி ) என்னும் இத்தாலிய கேங்ஸ்டர் சைக்கோபாத் சகாவைப் பற்றி இப்போது சொல்லியே ஆகவேண்டும், மிக காமெடியாக  எல்லோரும் வயிறு குலுங்க சிரிக்குமாறு பேசிவிட்டு சடனாக சீரியஸாகி துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடும் ஆசாமி, மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் என்னும் கூற்றுக்கேற்ப அவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இவன் மாறுகிறான்.(இந்த அற்புதமான சைக்கோ பாத்திரத்திற்கு 1991 ஆம்  வருடத்திற்கான சிறந்த சப்போர்டிங் ரோலுக்கான ஆஸ்கார் கிடைத்ததாம்.)

ப்போது அமெரிக்க மாபியா வரலாறே இவர்கள் மூவரால் திரும்ப எழுதப்பட்டது என்றால் மிகையில்லை. அந்த அளவுக்கு கள்ளக்கடத்தல்,கட்டை பஞ்சாயத்து என அதகளம் செய்கின்றனர்.
அதில் "made man” (made = இத்தாலிய ஐதீகப்படி ஒரு கேங்ஸ்டராக அவதாரம் எடுக்க ஒருவன் வாங்கிக் கொள்ளும் பாப்டிசம்) "பில்லி பாட்” என்பவன் ஒரு விருந்தில் சைக்கோபாத் சகாவான டாமியை பார்த்து "ஷைனிங் பாய்" (சிறுவயதில் ஷூ பாலீஷ் போட்டவன்) என கிண்டலாக அழைக்க, மிகக்கடுப்பான டாமி  பில்லி பாட் ஒரு மேட்மேன் என்றும் யோசிக்காமல் அவனை விருந்து முடிந்து எல்லோரும் போனதும் கடுமையாக தாக்க,ஜிம்மியும் கூட சேர்ந்து தாக்க, ஹென்றியும் சேர்ந்து தாக்குகிறான்,

டாமி ஆத்திரம் அடங்காமல் துப்பாகியாலும் சுடுகிறான்.மூர்ச்சையான பில்லி பாட்  ஐ டாமியின் கார் டிக்கியில் போட்டுக்கொண்டு புதைக்க எடுத்துப்போகும் வழியில் தான் படம் துவங்குகிறது. போகும் வழியில் பில்லி பாட்  டிக்கிக்குள் முனகி சத்தம் செய்ய, காரை நிறுத்தி டிக்கியை திறந்து மீண்டும் அவனை கத்தியால் குத்தியும்,துப்பாக்கியால் சுட்டும் முழுக்க கொன்று புதைக்கின்றனர்.

ப்போது டாமி ஒரு இத்தாலிய மேட்மேனை கொன்றான் என தெரிந்ததோ? அப்போதே பாலீ டாமியிடமிருந்து ஹென்றியை விலகியிருக்க சொல்கிறான்,மேட்மேனை கொன்றவனை இத்தாலிய மாப்ஸ்டர்கள் குடும்பத்தின் கடைசிஆள் வரை கொன்று பழி தீர்க்காமல் விடமாட்டார்கள் என அறிவுரை சொல்கிறான்.

ஹென்றி இப்போது வெள்ளிக்கிழமையை மனைவியுடனும் சனிக்கிழமையை காதலிகளுடனும்  விருந்தில் உல்லாசமாக கழிக்க பழகுகிறான்,புதிய காதலியாக ஜானீஸ் என்னும் அழகிய இளம்பெண் கிடைக்கிறாள்,தொழிலிலும் பேருதவியாக இருக்கிறாள். ஹென்றி பணமும் தண்ணீராக செலவு செய்கின்றான். இதனால் இன்னும் அதிகமாக பணம் தேவைப்படுகிறது, கொஞ்சம் கொஞ்சமாக போதை மாத்திரைக்கு அடிமையாகிறான். இதற்கிடையே இவர்கள் மூவரும் பில்லி பாட்டை புதைத்த இடத்தில் குடியிருப்பு வரப்போவதை அறிந்து அந்த இடம் சென்று மீண்டும் அந்த சவக்குழியை தோண்டி சடலத்தை வெளியில் எடுத்து கொளுத்துகின்றனர்.

ஹென்றி தன் காதலி ஜானீஸ் ஐ தன் வீட்டின் அருகிலேயே ஒரு அடுக்கு மாடியில் உயர்தர வீடெடுத்து குடிவைக்கிறான். மனைவி கேரனுக்கு இது பெரிய தலைவலியாக மாறி இருவரையும் சுட்டுக்கொன்றுவிடுவேன் என் மிரட்டுகிறாள்.இவனுக்கும் கேரன் மேல் வெறுப்பு கிளம்புகிறது.மனைவியின் எல்லா எதிர்ப்பையும் மீறி இவர்கள் காதல் இனிதே தொடர்கிறது.

வருடம் 1974 :-  இவனின் குடும்ப பிரச்சனை ஜிம்மியிடமும், பாலீயிடமும் செல்ல ,அவர்கள் அவனை மனைவியை வெறுக்காதே,காத‌லியுடன் அதிகம் சுற்றாதே! என அறிவுறுத்தி, டாம்பா எனும் ஊரில் ஒரு சூதாடியிடமிருந்து பணம் கறக்கும் கட்டைப்பஞ்சாயத்துக்கு அவனை அழைத்து செல்கின்றனர், மிருககாட்சி சாலையில் வைத்து  அந்த சூதாடியை  அடித்து நையப்புடைத்து சுடப்போக, அவன் அப்போதும் தன்னிடம் பணம் இல்லை என்றே சொல்ல. அவனை டாமி தலைகீழாக கட்டிப்போட்டு சிங்கத்துக்கு இறையாக வேலியை தாண்டி வீசப்போக அவன் பணம் தந்துவிடுகிறேன் என தன் சகோதரிக்கு போன் செய்து பணம் கொண்டு வர சொல்கிறான்,அவன் சகோதரியோ எஃப்பிஐ இல் டைபிஸ்டாக இருக்க போலிஸ் வசம் வலுவான கேஸாக மாற ஜிம்மிக்கும் ஹென்றிக்கும் 10 வருட சிறை வாசம் கிடைக்கிறது,

சிறையில் ராஜா போல நினைத்ததை சமைத்து சாப்பிட்டு,மது மாது கொண்டாட்டம் என மிகவும் ரசித்து அனுபவிக்கின்றனர். இப்போது புழக்கத்தில் உள்ள கோகெய்ன் என்னும் விலையுயர்ந்த போதை மருந்தை தன் மனைவி கேரன் மூலம் சிறைக்குள் தருவித்து அதை உள்ளே சில்லரையாக விற்க அமோகமான வருமானம் கிடைக்கிறது.சைக்கோபாத் டாமி இப்போது கேங்ஸ்டராக வெளியே கொடி கட்டை பறக்க, இவர்கள் அதீதமான லஞ்சம் மற்றும் அன்பளிப்புகளால் நான்கே வருடங்களில் பெயிலில் விடுதலை ஆகின்றனர்.

சிறையிலிருந்து வெளிவந்த ஜிம்மி,ஹென்றி,டாமி,பாலி மற்றும் இன்ன பிற கும்பல் சேர்ந்து அமெரிக்காவின் புகழ்பெற்ற லூஃப்தான்ஸா ஹெய்ஸ்ட் என்னும் கார்கோ பணக்கொள்ளையை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனர்.இதன் மூலம் எட்டேமுக்கால் லட்சம் அமெரிக்க டாலர்கள் கிடைக்கிறது,

தனால்  நாளுக்கு நாள் இவர்களின் கொட்டம் இன்னும் அதிகமாகிறது, பெரும்பங்கு கொள்ளை பணத்தை ஜிம்மியும் (ராபர்ட் டெனீரோ) டாமியுமே எடுத்து கொள்கின்றனர், ஹென்றிக்கும்  அதில் கணிசமான  பங்கு  கிடைக்கிறது,  ஹென்றிக்கு இப்போது கோகெய்ன் மூலம் கிடைக்கும்  பணமே  பெரிதாக  இருக்க கொள்ளையில் கவனம் செல்லவில்லை.கொள்ளையில் பங்கு பெற்ற யாரும் புதிதாக எந்த ஆடம்பரப்பொருளோ சொத்தோ வாங்கக் கூடாது! என ஜிம்மி கட்டளையிடுகிறான்.அதை மதிக்காமல் ஆடம்பரப் பொருட்கள் வாங்கிக் குவித்தவர்களையும், பணம் கேட்டு மிகவும் நச்சரித்தவர்களையும் சகட்டுமேனிக்கு ஜிம்மியும் டாமியும்  போட்டுத்தள்ளுகின்றனர் , அடுத்தடுத்து சடலங்கள் போலிசாரால் குப்பை தொட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டு மிகத்தீவிரமாக விசாரிக்க தொடங்குகின்றனர்,    வலுவான ஆதாரத்திற்காக  வலைவீசிவிட்டு காத்திருக்கின்றனர்.

24x7 என ஹென்றியின் போதை மருந்து கடத்தல் பிழைப்பு ஓடுகிறது,பணம் கொட்டோ கொட்டென கொட்டுகிறது.போதைக்கும் மிகவும் அடிமையாகிறான். தன் குழந்தையை பார்த்துக் கொள்ளும் தாதியை விமானத்தில் வாடகைக்குழந்தையுடன் அனுப்பி குழந்தையின் ட்யாப்பரில் கோகெய்னை கடத்தி வந்து பணம் சம்பாதிக்கிறான்.காதலியுடன் சேர்ந்து போதை மருந்தை வீட்டிலேயெ சுத்தீகரித்து தயாரிக்கின்றான்.

து மிகவும் ஆபத்தான தொழில் என்பதால் ஹென்றியை பாலீ எச்சரிக்க, இவன் அதை கேட்காமல் தன் போக்கிலேயே போகிறான்.இதற்கிடையில்  ஒரு உணவகத்தில் வைத்து ஜிம்மி ஹென்றியிடம் சைக்கோபாத் டாமிக்கு இத்தாலிய மாப்ஸ்டர்கள் மேட் மேன் பாப்டிசம் கொடுக்கபோவதாக  மகிழ்சியுடன் சொல்கிறான். இதன்மூலம் இன்னும் நமக்கு மாமூலும் மரியாதையும் கட்டை பஞ்சாயத்துகளும் பாதுகாப்பும் கிடைக்கும் என வாய்பந்தல் போடுகிறான்.

னால் மேட் மேன் (பாப்டிசம்) வாங்க ஆவலாக குருமார்கள் இருவரால் அழைத்து செல்லப்பட்ட  சைக்கோபாத் டாமி குருமாரில் ஒருவராலே முகத்தில் சுடப்பட்டு இறக்கிறான், முகத்தில் சுடப்பட்டதால் ஓபன் காஃப்ஃபின் என்னும் முகமுழிக்கு கூட சவப்பெட்டியை டாமியின் அம்மாவால் திறந்துவைக்க முடியாமல் போகிறது.

ப்போது ஜிம்மிக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது, நண்பனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் போன் பூத்தை எட்டி உடைத்து கீழே தள்ளுகிறான். உயிரின் அருமை புரிகிறது. எங்கே தானும் ? போலிசிடம் இப்படி மாட்டுவோமோ? அல்லது எதிராளி கேங்ஸ்டரால் சுடப்பட்டு இறப்போமோ ? என புழுங்குகிறான்.  இப்போது ஒரே குறிக்கோள் அடக்கி வாசிப்பது, என முடிவு செய்து அமைதி காக்கிறான். போதைக்கு அடிமையான ஹென்றியை வெறுக்கிறான்.

ஹென்றியும் அவன் காதலி ஜானீஸும்  இப்போது வசமாக போதை ஒழிப்பு போலிசாரால் கைதுசெய்யப்படுகிறனர்,பல லட்சம் டாலர்கள் மதிப்புள்ள போதை பொருட்களை போலீஸ் கைப்பற்றுகிறது.இவன் மனைவி போலிசின் ரெய்டில் இருந்து தப்பிக்க அரை கிலோ எடையுள்ள 60000 டாலர் மதிப்புள்ள கோகெய்னை டாய்லெட்டில் கொட்டி ஃப்ளஷ் செய்கிறாள்,

1980 ஆம் வருடம்:-  ஹென்றியும் அவன் காதலி ஜானீஸும்   பெயிலில் விடுதலையாகின்றனர்,வந்ததும் தான் டீவி பெட்டிக்குள் ஒளித்து வைத்த கோகெய்னை தேட அதை கேரன் டாய்லெட்டில் கொட்டி பாழாக்கியதை கேட்டு துடிக்கிறான்.இப்போது தன் மாஃபியா குருவான பாலியை சென்று சந்திக்க, அவன் இவனை பார்த்து வெறுக்கிறான், இவனிடம் பழகிய தோஷத்திற்காக 3200  டாலர்களை தந்து அவனது விசுவாசத்தை விலைக்கு வாங்குகிறான்.

ழுது கொண்டே வீடு திரும்பிய ஹென்றிக்கு உயிர்பயம் தொற்றிக்கொள்ள , மனைவி கேரனோ ஜிம்மியை சென்று சந்திக்கிறாள், அவன் சில ஆயிரம் டாலர்களை செலவுக்கு கொடுத்துவிட்டு அவளை ரகசிய இடத்திற்கு அழைத்து போய் கொல்ல பார்க்கிறான்.இவளுக்கு எங்கும் பாதுகாப்பில்லை என விளங்கி விடுகிறது.

று நாள் ஹென்றி ஜிம்மியின் அழைப்பின் பேரில் ஜன நடமாட்டமுள்ள உணவகம் ஒன்றில் ஜிம்மியை சந்திக்கிறான், கண்களில் பழைய நட்பு எள்ளளவும் காணகிடைக்கவில்லை.ஜிம்மி ஒரு கட்டபஞ்சாயத்துக்கு ஹென்றியை தன் ஆட்களுடன் செல்லுமாறு கட்டளையிட, இவனுக்கு அது தனக்கான் சவக்குழி என விளங்கிவிடுகிறது. இவன் தான் மூவரின் அங்க அசைவுகளிலிருந்தும் பாடம் கற்றவனாயிற்றே, எஃப்பிஐக்கு செல்கிறான்,

விட்னெஸ் ப்ரொடெக்ஷன் ப்ரொக்ராமில் இணைந்து புதிய பெயரும் அடையாளமும் பெற்று பாலீ மற்றும் ஜிம்மி மீதான எல்லா கொலை கொள்ளை கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் மொத்தத்திற்கும் ஏக சாட்சியாக ஆகிறான்.

ஜிம்மி பாலி இருவருக்கும் வாழ் நாளுக்கும் பெயிலிலேயே வரமுடியாதபடிக்கு 20வருடத்திற்கும் மேற்பட்ட சிறை தண்டனை கிடைக்க அதை , அடுத்தடுத்து அனுபவிக்கின்றனர். அதில் பாலி 1988 ஆம் ஆண்டு தன் 73ம் வயதில் நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே இறக்க,  ஜிம்மி மட்டும் இப்போதும் சிறையில் தண்டனையை அனுபவிக்கிறானாம்.

ஹென்றி இப்போது விவாகரத்தாகி , அடையாளம் தொலைந்து சராசரிக்கும் கீழான வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறானாம்.அப்பப்பா படம் முடிந்தவுடன் நமக்கு எழும் உணர்ச்சி அலைகள் இருக்கிறதே?ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா ! என்பது தான் எவ்வளவு உண்மை ? ! என நிச்சயம் உணர்வீர்கள்.
==============================================
படக்குழு விபரம்:-
Directed by
Martin Scorsese
Produced by
Irwin Winkler
Written by
Screenplay:
Nicholas Pileggi
Martin Scorsese
Book:
Nicholas Pileggi
Narrated by
Ray Liotta
Lorraine Bracco
Starring
Ray Liotta
Robert De Niro
Joe Pesci
Lorraine Bracco
Paul Sorvino
Cinematography
Michael Ballhaus
Editing by
Thelma Schoonmaker
Distributed by
Warner Bros.
Release date(s)
September 21, 1990
Running time
146 minutes
Country
United States
Language
English
Budget
$25,000,000[1]
Gross revenue
$46,836,394
=========================

இந்த படத்தின் காணொளியை யூட்யூபில் தரவேற்றிய அன்பருக்கும்,அதை வழங்கிய யூட்யூபுக்கும் நன்றி ,இந்த படத்தினைப் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை தந்து உதவிய ஐ எம் டி பி மற்றும் விக்கிபீடியாவுக்கும் நன்றிகள் பல.
-------------------
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)