என்னும் பதிவின் இறுதியில் டிவிடியில் இருந்த இயக்குனர் டேவிட் லின்ச்சின் தினாவெட்டான 10 கேள்விகள்,கொடுத்து மறு நாள் விடைகள் எழுதுவதாய் சொல்லியிருந்தேன்,அதை நான் மறந்திருந்தாலும் தல ஹாலிவுட் பாலா மறக்கவில்லை, எங்கே பார்ட் -2 என்று கேட்டார், உடனே எனக்கு டர்ரானது, கிடைத்த இடைவெளியில் இதோ அதற்கான விடைகளையும் எழுதி விட்டேன். தயவு செய்து படம் பார்த்தவர்கள் அல்லது சென்ற பகுதியை படித்தவர்கள் மேற்கொண்டு தொடரவும்.சென்ற பதிவை படிக்காதவர்கள் மேலே உள்ள சுட்டியில் முதல் பகுதியை படித்து விட்டு தொடரவும்.நன்றி வணக்கம்.
படத்தின் இறுதியில் கேட்கப்பட்ட 10 கேள்விகள்:-
1. Pay particular attention in the beginning of the film: At least two clues are revealed before the credits.
1.படத்தின் துவக்க பெயர் போடும் காட்சியில் இந்த10கேள்விகளுக்கான 2 விடைகள் ஒளிந்துள்ளன?அவை என்ன?
இயக்குனர் ஆடம் கெஷர் நடிக்க வந்த மாடல் அழகிகளை நேர்முகத்தேர்வு செய்யும் காட்சி அப்ஸ்ட்ராக்ட் வடிவத்தில் திரையில் வரும். அங்கே இளம்பெண் தூங்குவதையும் ,வயதான தம்பதியரின் அவுட்லைனையும் காண முடியும்.
2. Notice appearances of the red lampshade.
2.சிகப்பு லாம்ப் ஷேட் படத்தில் எந்தெந்த காட்சிகளில் வருகிறது?
படத்தின் ஆரம்ப காட்சியில் வில்லனகள் மாற்றி மாற்றி போன்செய்து அந்த பெண்ணை இன்னும் காணவில்லை,என்பர்,அப்போது ஒரு ஆள் எதோ ஒரு வீட்டிற்கு போன் செய்வார் . அப்போது போனுக்கு அலறும் அருகில் பெரிய ஆஷ் ட்ரேயும் அருகே சிகப்பு லாம்ப் ஷேடும் இருக்கும்.
டயான் காணும் கனவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் ஜன்னல் வழியாக உள்ளே நுழைவர்,படுக்கை அறையில் அந்த பெண் அழுகிய நிலையில் பிணமாய் இருப்பாள்,அவள் அருகே அந்த லாம்ப் ஷேட் இருக்கும்.
பின்னர் கிளைமாக்ஸில் இவளின் முன்னாள் அறைத்தோழி வந்து சில பாத்திரங்கள்,பெரியாஅஷ்ட்ரே மற்றும் சிகப்பு லாம்ப் ஷேடை எடுத்துச் செல்வாள்.
3.Can you hear the title of the film that Adam Kesher is auditioning actresses for? Is it mentioned again?
3.இயக்குனர் ஆடம் கெஷர் இயக்கும் படத்தின் பெயர் என்ன? அது படத்தில் மீண்டும் சொல்லப்படுமா? (தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி:- ஹாலிவுட் பாலா)
ஆடம் கெஷர் இயக்கும் படத்தின் பெயர் "The Sylvia North Story."படத்தில் கிளைமாக்ஸில் வரும் டின்னர் பார்டியில் அந்த படத்தைப் பற்றி டயான்,அதில் லீட் ரோலில் நடிக்க இருந்த வாய்ப்பு பறி போய்விட்டது என்பாள்.
4. An accident is a terrible event — notice the location of the accident.
4.அந்த கொடிய விபத்து நினைவிருக்கும்.அது எங்கே நடந்தது?
ஆம் அது கொடிய விபத்து தான் , அது நடந்த இடம் மல்ஹால்லாண்ட் ட்ரைவ் ஆகும்
5. Who gives a key, and why?
5. யார் சாவியை கொடுத்தது?ஏன் கொடுக்கப்பட்டது?
ஜோ என்பவன் மிகவும் ப்ரொஃபெஷனலான வாடகை கொலைகாரன்
இவள் தோழியை கொலைசெய்ய பணம் வாங்குகையிலேயே , கொல்லப்படப்போவது இவள் தோழி ஆதலால் இவளின் டெலிபோன் கால் ஹிஸ்டரியை டிடெக்டிவ்கள் சோதிக்கக்கூடும் என்ற முன் யோசனையுடன் ,ஒரு சிறிய நீல நிற பெட்டியை அட்வான்ஸ் வாங்கும் போது தருகிறான் .
கிளைமாக்ஸில் அதே சாவி டயான் தூங்கி எழுந்ததும் கதவு வின்னியால் கதவு தட்டப்பட இவளின் டீப்பாயின் மேல் வைக்கப்பட்டிருக்கிறது.
6.Notice the robe, the ashtray, the coffee cup.
6.படத்தில் இரவு உடை, ஆஷ் ட்ரே, காபி கப் வரும் காட்சியை கவனித்தீர்களா?
ஆம்.
இரவு உடை :- டயான் இவள் தூக்கம் கலைந்து விழிக்கையிலும்.ஒரு உள்ளே பூட்டிய விட்டில் கொலையான பெண் அணிந்திருந்த இரவு உடையும், கனவு காட்சியில் ரீட்டாவும் பெட்டி எல்மும்
லெஸ்பியன் உறவு கொள்வர்,அப்போது ரீட்டா அவிழ்க்கும் இரவு உடையும் ஒன்றே.
காபி கோப்பை & ஆஷ் ட்ரே :- படத்தில் முதல் காட்சியில் ஆடம் கெஷரை ஸ்டுடியோஹெட்டின் அடியாட்கள் இருவரில் ஒருவர் எக்ஸ்ப்ரெஸ்ஸோ காபி குடித்து , முகத்தை சுளித்துவிட்டு முறைத்து மிரட்டுவார்.அவர் குடித்த கப்பும்.அவரின் மேசை மீது இருந்த ஆஷ் ட்ரேயும்.
படத்தின் துவக்கத்தில் ரெஸ்டாரண்டில் ஆண்கள் இருவர் சந்திப்பர்.அவர்கள் பருகும் காபி கப்பும்.
படத்தின் கிளைமாக்சில் ஜோவும் டயானும் சந்திப்பர்.அவர்கள் பருகும் காபி கப்பும்.ஒரே மாதிரியானவை.
படத்தின் ஆரம்ப காட்சியில் வில்லனகள் மாற்றி மாற்றி போன்செய்து அந்த பெண்ணை இன்னும் காணவில்லை,என்பர்,அப்போது ஒரு ஆள் எதோ ஒரு வீட்டிற்கு போன் செய்வார் . அப்போது போனுக்கு அலறும் அருகில் பெரிய ஆஷ் ட்ரே சிகப்பு லாம்ப் ஷேடுக்கு அருகே இருக்கும்.
7. What is felt, realized, and gathered at the Club Silencio?
7.சிலன்ஷியோ என்னும் கிளப்பில் இவர்கள் என்ன கண்டனர்,இவர்களுக்கு
என்ன கிடைத்தது?
கனவில் நடந்த சம்பவம் இது
ரீட்டா அரைத்தூக்கத்தில் சிலன்ஷியோ என்கிறாள்,அது ஒரு புதிருக்கான விடையாக இருக்கும் என எண்ணிய பிட் எல்ம் ரீட்டாவை சிலன்ஷியோ என்னும் ஸ்பானிஷ் நைட் கிளப்பிற்கு அழைத்துபோகிறாள்.
அங்கே ஸ்பானிஷில் ஒபேரா போன்ற இசையை கேட்டு மெய்மறந்து இருவரும் கைகளை பிணைத்துக்கொள்கின்றனர்.பாடல் முடிந்தவுடன் கைப்பையை பார்க்க அதில் நீல நிற பெட்டி இருக்கிறது. அதை அங்கேயே திறக்காமல்,விட்டுக்கு வந்து பிட் எல்ம் திறக்கிறாள்.
8.கமீல்லா ரோட்ஸ் பெரிய நடிகையாக அவளின்
திறமை மட்டும் உதவியதா?
நிச்சயமாய் இல்லை, முன்னொரு சமயத்தில் டயானுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்பு ஸ்டுடியோ ஹெட்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் உச்சமான சிபாரிசால் கமீல்லா ரோட்சுக்கு கிடைத்தது.
(அந்த சம்பவம் தான் டயான் கண்ட கனவில் பிரதிபலித்தது) அதுவும் தவிர கமீல்லா ஆடம் கெஷெரிடம் வைத்திருந்த உடல் தொடர்பும் அவளுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.இந்த குற்ற உணர்வால்
தான் கமீல்லா டயானுக்கு சிறிய சிறிய வேடங்களை சிபாரிசு செய்து பெற்று தந்து வந்திருக்கிறாள்.
9. Note the occurrences surrounding the man behind Winkie's.
9.வின்கி என்னும் உணவகத்தில் ஒருவன் பேய் போன்ற உருவத்தைக் கண்டு மூர்ச்சையாகிறானே? அவன் வேறு எங்கெல்லாம் எதிர்படுகிறான்.
அந்த ஆண் ,டயான் கமீல்லாவின் மனமாற்றத்தால் மனமுடைந்து வாடகை கொலைகாரன் ஜோவை வின்கி என்னும் உணவகத்தில் சந்திக்கிறாள்,தீர்த்துகட்டுவதற்கு கமீல்லாவின் போட்டோவைத் தருகிறாள், ஜோ அதை புறந்தள்ளி இதை எல்லாம் இங்கே எடுத்துவரவேண்டியதில்லை என்கிறான். அப்போது இவள் பதட்டத்தில் சர்க்கரை ஜாடியை கைதவறி தட்டிவிட உணவகமே திரும்பிப்பார்க்கிறது, அப்போது கேஷ் கவுண்டரில் நின்றிருந்த மேலே சொன்ன ஆண் இவளை பார்வையாலேயே அளவெடுக்கிறான்.
ஜோ டயானினிடம் கமீல்லாவின் போட்டோவை உணவகத்தின் பின்னே இருக்கும் ஒரு அகோர உருவத்திடம் கொடுத்துவிடச் சொல்ல,அந்த அகோர உருவம் அதை பார்த்துவிட்டு எரிக்கிறது.அப்போது அந்த நெருப்பில் ஒரு முதிய ஜோடிகளின் உருவமும் எரியும் (அதில் இவளை ஏர்போர்டில் வாழ்த்தி அனுப்பிச் சென்ற தாத்தா பாட்டியின் நல்ல குணநலன்களும், பண்புகளும் சேர்ந்தே எரிவதாக இயக்குனர் காட்சிகளை ஜோடனை செய்திருப்பார்)
10. Where is Aunt Ruth?
10.சித்தி ரூத் எங்கே?
தாயிழந்த டயானுக்கு பரிவும் பாசமும் காட்ட தாத்தா பாட்டியும், வாழ்வில் நடிகையாவதற்கு ரோல்மாடலாக சித்தி ரூத்தும் இருந்தனர்.இவள் ஹாலிவுட்டுக்கு நடிக்க வந்த கொஞ்ச நாட்களிலேயே
சித்தி ரூத் இறந்து விடுகிறாள்.வாரிசு இல்லாத ரூத் இறக்கும் போது அவளின் வாழ்நாள் சேமிப்பான 50000$ இருக்க அதை டயான் அனுபவிக்கிறாள்,அதில் தான் வாடகைக்கொலைகாரன் ஜோவிற்கு கமீல்லாவை கொலை செய்ய பணம் தருகிறாள்.
(கிளைமேக்ஸ் காட்சியில் சித்தி இறந்த விஷயத்தை டின்னர் பார்ட்டியில் வைத்து ஆடம் கெஷரின் அம்மாவிடம் சொல்லுவாள்)