இதன் பெயரும் கொலை 1997-98 ஆம் ஆண்டு வாக்கில் குமுதம் இதழில் தொடராக வந்த சைக்கோபாத் கொலைகாரன் பற்றிய துப்பறியும் நாவல். இதில் வாத்தியார் கூடுதல் சோமாறி போன்ற கலைச் சொற்களை வசந்த் வாயால் அறிமுகம் செய்திருந்தார்.
வஸந்த் இணைந்து துப்பறிந்த நாவல். இதில் ஒரு முக்கியமான விஷயம் கணேஷுக்கு[40+] மிகவும் வயதாகிக்கொண்டே போவதை உணர்ந்த வாத்தியார் இன்ஸ்பெக்டர் இன்பா[இன்பானந்தி] என்னும் அழகிய ஐபிஎஸ் ஆஃபிஸருக்கும் கணேஷுக்கும் காதல் மலர்ந்து திருமணப் பேச்சில் முடிவது வரை சுவையாக எழுதியிருந்தார்,இது இந்த ஜோடி துப்பறிந்த 25ஆம் நாவலாம்.
வசந்த் அநியாயத்துக்கு அந்த ஐபிஎஸ் அதிகாரி இன்பாவிடம் வம்பிழுப்பார்,அக்கிரமத்துக்கு வர்ணிப்பார்.அவரே தன் எஜமானன் கணேஷின் காதலுக்கு ரூட்டும் போட்டு கொடுப்பார்.அதன் பின்னர் திருமணம் ஆனதா?என்பதை அடுத்த நாவலை வாசித்த வாத்தியாரின் டைஹார்ட் ரசிகர்கள் தெளிவு படுத்தவும்.இக்கதையை வாசிக்கையில் சைலன்ஸ் ஆஃப் த லாம்ப் [1991] என்னும் படம் நினைவுக்கு வந்தது,வாத்தியார் அப்படத்தைக் கூட நாவலில் அடுத்தடுத்து நிகழும் கோல்ட் பளட் கொலைகளுக்கு உந்துதலாகக் கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
கதைச் சுருக்கம்

வாழ்க்கைப் படகு உள்ளிட்ட தனியார் டீவி சீரியல் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருக்கும் நடிகை ப்ரேரணா தன் கணவன் தூக்கில் தொங்க முயற்சிப்பதாக சொல்லி வழக்கம் போல கணேஷை அழைக்கிறாள், அவர்கள் ஆஜராகி கணவனுக்கு முதலுதவிக்கு கொண்டு செல்கையில் இறந்து போகிறான்.
கொடிய சந்தேக நோயாளியான கணவனின் மறைவு அவளுக்கு துக்கத்துக்கு மாறாக நிம்மதியையே தருகிறது. இந்நிலையில் ப்ரேர்னா செல்லும் இடங்களில் எல்லாம் சந்தேகமாக மரணங்கள் நிகழ்கின்றன,

அவளை தேற்றி தங்க இடம் தந்து உதவும் கணேஷ்-வசந்த்துக்கும், நடக்கும் கொலைகளுக்கு ப்ரேரணாவை வாரண்டுடன் கைது செய்ய வரும் இன்ஸ்பெக்டர் இன்பாவுக்கும் அந்த சைக்கோ பாத் செல்போன், டெலிபோன், பேஜர் ஈமெயில் என எல்லா வழிகளிலும் நூதனமாக அனுப்பும் கொலை மிரட்டல்கள் எல்லாம் நம்மை 90களின் பிற்பாதிக்கே இட்டுச் செல்கின்றன.
கணேஷ்வசந்த் மற்றும் இன்பாவை திசைதிருப்ப அந்த சைக்கோ மயக்க மருந்தும் செக்ஸ் லேகியமும் கலந்த சாக்லேட்டை பிரயோகிக்கிறான்,அதை உண்ட வசந்தின் காரியதரிசியும்,இன்பாவும் ஆடை அவிழ்ப்பு செய்து வசந்த் மற்றும் கணேஷிடம் அத்துமீறும் கொடுமையும் நடக்கிறது.
நகரில் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் குடும்பப் பெண்கள் மூன்று பேர் ரேண்டமாக அடுத்தடுத்து கழுத்தறுத்து கொல்லப்படுகின்றனர், நகரில் சட்டம் ஒழுங்கு கெடுகின்றது,போலீசுக்கு தூக்கம் கெடுகின்றது. அந்த கம்ப்யூட்டர் சவ்வியான சைக்கோபாத் கொலையாளி இன்பாவின் மனவளர்ச்சி குன்றிய தங்கையை பிணைக் கைதியாக கடத்திக்கொண்டு சென்று விடுகிறான்,
கடைசியில் பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி நிருபர்கள் சூழ அந்த சைக்கோபாத் கொலையாளி செல்லப்பா மிகுந்த கூல் ஆட்டிட்யூடுடன் கைது செய்யப்படுகிறான்.
வீரதீர சாகசங்களுக்குப் பின்னர் கணேஷ் இன்பாவின் திருமணப்பேச்சுடன் முடிகிறது நாவல்