தென்னிந்திய
சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர், மற்றும் 30 படங்களின் இயக்குனர்
வின்சென்ட் அவர்கள்,24 பிப்ரவரி 2015 அன்று தனது 86ஆவது அகவையில் சென்னையில் மறைந்தார்.
இவரின் மகன்கள் ஜெயனன் வின்சென்ட்,அஜயன் வின்சென்ட்
இருவரும் இன்றைய தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்கள்
ஆவர்,
அவர் ஒளிப்பதிவு செய்த இயக்குனர் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஒளிப்பதிவில் மிகுந்த தொலைநோக்கான படைப்பு, அதில் மருத்துவமனை
15’x15’அறைக்குள்ளேயே இவர் படமாக்கிய பரீட்சார்த்தமான வெரைட்டியான ஷாட்கள்
இன்றும் அதிசயமானவை.
நடிகர்கள் தேவிகா ,முத்துராமனுக்கு அப்படி வளைத்து வளைத்து
க்ளோஸப் போட்டிருப்பார். அக்காலத்தில் செயற்கை வெளிச்சத்தில் ,இப்படி
ஒளியமைப்பு செய்து, அதற்கு பொருத்தமான லென்ஸ்கள் கொண்டு இப்படி
பிரமிக்கத்தக்க ஃப்ரேம்கள் வைத்து ஷாட் கம்போஸ் செய்வது பிரம்மப்
பிரயத்தனமானது.
நடிகர் முத்துராமனின் ஆஸ்பத்திரி கட்டிலுக்கு அடியில் ராட்சத சைஸ் கேமராவை
லாவகமாக நுழைத்து தேவிகாவின் முகத்துக்கு அருகே கொண்டு சென்று க்ளோஸ் அப்
போட்டு முடிப்பார். இதில் தேவிகாவுக்கு முகத்துக்கும் வீணையை ஏந்தி வாசிக்கும் இரு
கைகளுக்கும் எத்தனை டீடெய்ல்கள் வைத்தார் பாருங்கள்.
இந்த சொன்னது நீ தானா
பாடலை பார்த்துவிட்டு அந்த மேதையின் மற்ற பிற படைப்புகளையும்
நினைவுகூறுவோம். https://www.youtube.com/watch?v=4WGVo1Zh3Yw
அவரின் தவறவிடக்கூடாத முக்கியமான படைப்புகள் இங்கே
- அமரதீபம்
- உத்தம புத்திரன்
- எங்க வீட்டுப் பிள்ளை [சுந்தரம் மாஸ்டருடன் இணைந்து]
- கல்யாணப் பரிசு
- விடிவெள்ளி
- தேன் நிலவு
- கௌரவம்
- வசந்த மாளிகை
- போலீஸ்காரன் மகள்
- நெஞ்சம் மறப்பதில்லை
- காதலிக்க நேரமில்லை
- பிரேம் நகர்
- அன்னமய்யா