சுபர்ணரேகா [Subarnarekha] [1965] ரித்விக் கட்டக் அவர்களின் மாஸ்டர் பீஸ்




சுபர்ணரேகா திரைப்படத்தை, மேகே தாக தாரா 1960 ,கோமல் காந்தார்  1961 திரைப்படங்களை அடுத்து 1962 ஆம் ஆண்டிலேயே கட்டக் அவர்கள் இயக்கி முடித்து விட்டாலும் பல சிக்கல்களால் 1965 ஆம் ஆண்டில் தான் வெளியிட முடிந்தது.
சுபர்ணரேகா என்பது மேற்கு வங்காளத்தில் ஓடும் நதி என்றாலும் தன் மூன்று படங்களையும் இந்த ட்ரலஜிக்குள் அடக்கியதில் சுபர்ணரேகா என்று பிரிவினைக் கோட்டைத் தான் தங்கக் கோடு என்று சர்காசிஸமாக பொருள் வைத்தார் இயக்குனர் ரித்விக் கட்டக் என எண்ணுகிறேன்,

மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என பலமுறை துண்டாடப்பட்ட வங்கதேசப் பிரிவினையை கிஞ்சித்தும் விரும்பாதவர் ரித்விக் கட்டக் , அப்பிரிவினையினால் கிழக்கு வங்கத்திலிருந்து மேற்கு வங்கத்துக்குள் அகதிகளாக வந்த லட்சக்கணக்கானவர்களில் கட்டக்கின் குடும்பமும் அடங்கும்.

கட்டக்கின் குடும்பம் மெத்தப் படித்த குடும்பம், நன்கு வாழ்ந்து கெட்ட குடும்பம், கட்டக்கின் தந்தையார் சுரேஷ்சந்த்ர கட்டக்  மாஜிஸ்திரேட், கவிஞர், நாடக ஆசிரியர் என பன்முகம் கொண்டவர், அவரின் 9 வாரிசுகளில் ரித்விக் கட்டக்கும் அவரின் [இரட்டையர் ]தங்கை ப்ரதீதியும் கடைக்குட்டிகள். தன் தங்கை மீது கொண்ட ஆழமான அன்பே இந்த சுபர்ணரேகா ட்ரலஜி மற்றும் ரித்விக் கட்டக்கின் ஏனைய படைப்புகளில்  பிரதிபலித்தன என்றால் மிகையில்லை,

தன் தேசத்தை ஒரே இரவில் துறந்து உயிருக்காகவும் புது வாழ்வுக்காகவும் அண்டி வந்த வங்கதேசத்தில் இவரின் குடும்பம் பட்ட அல்லல்களே அவரது படைப்புகளில் பிரதிபலித்தன. ரித்விக் கட்டக்கின் குடும்பத்தில் இருந்து வந்த யாருமே  சோடை போனதில்லை, ரித்விக் கட்டக் அவர்கள் தான் வாழும் காலத்தில் பாழும் குடியால் நல்வாய்ப்புக்களை இழந்த மாபெரும் படைப்பாளி.

அவர் எழுதி இயக்கிய படைப்புகளில் சோகம் நிரம்பியிருந்தாலும்,அதை கதாபாத்திரங்கள் லாவகமாக எதிர்கொள்ளும்படியான  நம்பிக்கை ஒளியும், யதார்த்தமும், உண்மைத்தன்மையும்  நிரம்பியிருக்கும். ரித்விக் கட்டக் தன் 50ஆம் வயதிலேயே மண்ணுலகிலிருந்து விடை பெற்றுக் கொண்டார்.இவர் நேரடியாக உருவாக்கிய திரைப்பட ஆளுமைகள் இயக்குனர் மணி கவ்ல், ஜான் ஆப்ரஹாம்,குமார் சஹானி,சையத் அக்தர் மிஸ்ரா,அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோர்.

அவரைப் பார்த்து இயக்குனராக வந்தவர்களில் மீராநாயர் குறிப்பிடத்தக்கவர். கட்டக்கின் படைப்புகளை பொதுவெளியில் மிகவும் புகழ்ந்தும், அவற்றை பாதுகாத்து மறு வெளியீடு காண வைத்ததில் கட்டக்கின் சமகால சினிமா இயக்குனர் மேதையான சத்யஜித் ரே அவர்களின் நல்லுள்ளமும் உழைப்பும் மெச்சத்தக்கது, கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது போல தன் படைப்புகளை ரே அவர்கள் எத்தனை விரும்பினாரோ? கட்டக்கின் படைப்புகளை அவர் அதைவிட அதிகம் விரும்பினார்,

அவற்றை சர்வதேச கவனம் பெற ஆன முயற்சிகளை அவர் கடைசி வரை மேற்கொண்டார். அவரின் தீவிர முயற்சியினாலும்  கட்டக் உயிரோடு இருக்கும் போதே இந்திய அரசு அவரை பத்மஸ்ரீ விருது தந்து மரியாதை செய்தது.

 ஆனால் தேசிய விருது  கட்டக் அவர்கள் மறைந்த பின்னரே அவருக்கு கிடைத்தது, Jukti Takko Aar Gappo என்னும் 1977 ஆம் ஆண்டு வெளியான கட்டக் இயக்கிய கலைசினிமாவின் சிறந்த கதைக்கான ரஜத்கமல் தேசிய விருதை அவர்  மறைந்து ஒரு வருடம் கழித்தே அரசு அவருக்கு  அளித்தது.

அவர் மறைந்த பின்னரே கட்டக் 1952 ஆம் ஆண்டே இயக்கி பல ஆண்டுகள் கிடப்பில்  போடப்பட்ட நாகரிக் 1977 ஆம் ஆண்டு வெளியானது மிகவும் துரதிர்ஷ்டமானது.

கட்டக் பற்றி தெரிந்து கொள்ள அவரின் திரைப்படங்களைப் பார்த்தாலே போதும்,அதில் அவர் ரத்தமும் சதையுமாய் உருவாக்கபட்ட கதாபாத்திரங்கள் ஊடாக வாழ்ந்து வருகிறார்.கட்டக்கின் குடும்பம் பல உயரிய விருதுகளைப் பெற்ற பண்டிதக் குடும்பம், அதை அவரின் படைப்புகளில் வரும் மெத்தப் படித்த கதாபாத்திரங்கள் மூலம் ஒருவர் நன்கு உணரலாம்,தன் படைப்புகளில் கல்வியின் அருமையை மிக அருமையாக விளக்கிய இயக்குனர் அவரைப் போல யாரும் இலர். கட்டக்கின் குடும்பம் பற்றி படித்து அறிய இங்கே செல்லவும்.http://en.wikipedia.org/wiki/List_of_Hindi_film_clans#Ghatak_family

சுபர்ணரேகா திரைப்படம் 1948 ஆம் ஆண்டில் துவங்குகிறது, கிழக்கு வங்கத்தின் டாக்கா நகரிலிருந்து விரட்டப்பட்ட இந்துக்கள் கொல்கத்தாவின் புறநகரில் அகதிகளாக தஞ்சம் அடைந்து,அங்கே நிலச்சுவாந்தாரர்களின் தரிசு நிலங்களில் மெல்லக் குடியேறுவதையும்,அவர்கள் பதிலுக்கு அவர்களை இரவும் பகலுமாக தங்கள் நிலங்களிலிருந்து காலி செய்ய அடியாட்களை ஏவி விட்டு நடவடிக்கை எடுப்பதையும் நாம் கண்ணுறுகிறோம்,

அங்கே அந்த பனைமரக்காட்டில்  ஈஷ்வர் மற்றும் அவரின் நண்பர் ஹரப்ரசாத் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் தலைமையில் நவஜீவன் காலனி உதயமாகிறது. பள்ளியும் உருவாகிறது,அங்கே ஈஷ்வர் ஆங்கிலம் பயிற்றுவிக்கிறார், ஹரப்ரசாத் பூகோளம் கணக்கு பாடங்களை அகதி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர். ஹரப்ப்ரசாத் போராட்ட குணம் நிரம்பியவர், நிலச்சுவான் தாரரின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் துணிந்து போராடுகிறார்.

ஈஷ்வர் பிறப்பால் வங்க பிராமணர்,அவரது பெற்றோரும் உடன் பிறந்தோரும் உக்கிரமான வங்கப்பிரிவினையின் 1942-1948  ஆண்டுகளில் மிகவும் அல்லல்களுக்கு உள்ளாகி மடிகின்றனர், எஞ்சியது 20 வயது வித்தியாசம் கொண்ட அன்புத் தங்கை சீதா மட்டுமே. நிலையான நல்வாழ்வுக்காக ஏங்கும் அன்னையின் முகம் கூட அறியாத தேவதை போன்றதொரு சிறுமி சீதா. அண்ணன் ஈஸ்வர் அவளுக்குத் தாயும் தந்தையுமானவர்,தங்கைக்காக திருமணமே செய்து கொள்ளாதவர் ஈஷ்வர்,

அதே நவஜீவன் காலனியில் ஒரு தாய் தன் சிறுவயது மகன் ஆபிராமுடன் கிழக்கு வங்கத்தின் குக்கிராமத்திலிருந்து வந்து ஒண்ட இடம் கேட்டு வருகிறார், அகதிகளுக்குள்ளாகவும் அங்கே பாரபட்சம் நிலவுகிறது, ஒரு மாவட்டத்தார் மற்றோர் மாவட்டத்தாருடனோ, ஒரு சாதியினர் மற்றோர் சாதியினருடனோ சேருவதில்லை. அவரை நவஜீவன் காலனி மக்கள் விரட்டுகின்றனர், தன் மகன் ஆபிராமை நிலச்சுவான் தாரர் தூண்டிய கலவரத்தில் தொலைத்த அந்த தாய் அடியாட்களால் தொலைவான ஊருக்கு கடத்தப்படுகிறாள்.

இப்போது அனாதையான ஆபிராமை ஈஷ்வர் கண்டெடுத்தவர்,அவனை தாயுடன் சேர்க்க தினசரியில் விளம்பரம் தந்தும் பலனில்லை,ஈஷ்வரை தன் தம்பியாகவே  நினைத்து உடன் தங்க வைத்துக்கொள்கிறார். ஆபிராமும் சீதாவும் ஒன்றாக விளையாடிக் களிக்கின்றனர்,பாசப்பறவைகளாக சுற்றி வருகின்றனர்.

ஈஷ்வருக்கு அவர் நண்பரின் தொலைதூரத்து சிற்றூரில் இருக்கும் இரும்புத் தொழிற்சாலை மற்றும் அரிசி ஆலைக்கு கணக்காளர் தேவைப்பட,அங்கே செல்ல முடிவெடுக்கிறார், இது நண்பர் ஹரப்ப்ரசாத்துக்கு அறவே பிடிக்கவில்லை, ஈஷ்வரை நம்பிக்கை துரோகி என்கிறார்.

சுபர்ணரேகா நதி தீரத்தில் இருக்கும் சிற்றூருக்கு வந்து குடியேறிய ஈஷ்வர், அங்கே ஆலையில் இருக்கும் மேலாளர் சித்தம் களங்கிய நிலையில் இருப்பதைப் பார்க்கிறார், விசாரித்ததில் அவரின் மகள் வேற்று சாதிக்காரன் ஒருவருடன் ஓடிப்போனதில் இருந்து இப்படி ஆகிவிட்டதை அறிகிறார். சீதாவுக்கு சாஸ்திரிய இசை பயிற்றுவிக்கிறார்,[சீதாவின் இசை ஆசிரியராக இயக்குனர் கட்டக் அவர்களே தோன்றியுள்ளார்]


அங்கே இவர்கள் சுபர்ணரேகா நதி தீரத்தில் ஓடி விளையாடுகின்றனர்,அங்கே சிதிலமடைந்திருக்கும் இரண்டாம் உலகப் போரின் போது அமைக்கப்பட்ட விமான தளத்தை தங்கள் விளையாட்டுக் களமாக உபயோகிக்கின்றனர், அங்கே இடிந்து போன கிளப் ஹவுஸ் கட்டிடங்கள்,போர் விமானத்தின் சிதிலங்களுடன் விளையாடுகின்றனர்.ஒரு காட்சியில் கட்டக் அவர்கள் விமானத்தின் காக்பிட்டினுள் இருந்து விமானம் அந்த ஓடுதளத்தில் வேகமாகப் புறப்படுவதை இவர்கள் கற்பனை செய்து பார்ப்பதை அத்தனை மினிமலிச யுத்தியில் மிக அருமையாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

வளர்ப்புத் தம்பி அபிராமைஅவ்வூரில் பள்ளி இல்லாத்தால்  போர்டிங் ஸ்கூலில் நன்கு சேர்த்துப் படிக்க வைக்கிறார்,அவன் ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு மட்டும் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறான்,பள்ளி இறுதி நன்கு எழுதியவன் விடுமுறைக்கு ஊர் திரும்புகிறான்.அவன் எழுதிய சில சோகம் ததும்பிய கதைகளும் கட்டுரைகளும் சில இதழ்களில் வெளியானதைப் படித்திருக்கிறார் ஈஷ்வர், மிகவும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வாழும் அவர் அந்த பிரிவினைக் காலத்து சோக நிகழ்வு கதைகளை விரும்புவதில்லை, அவனிடம் சந்தோஷமான முடிவு கொண்ட படைப்புகளை இனி படை என்கிறார்.

மேலும் ஈஷ்வர் அபிராமின் பள்ளி இறுதி முடிவுகள் நல்ல மதிப்பெண்களுடன் வந்திருக்க, அவனை மேற்படிப்புக்கு நான்கு வருட இஞ்சினியரிங் படிப்பை ஜெர்மனியில் படிக்க அனுப்ப விண்ணப்பம் தருவித்தவர்  பயணத்துக்கு ஏற்பாடு செய்கிறார், அபிராமோ தான் ஒரு எழுத்தாளன் ஆவதையே விரும்புகிறான், மேலும் சீதாவும் அபிராமும் ஒருவருக்கொருவர் விரும்புவதை அத்தருணத்தில் நன்கு அறிகின்றனர், அது வெறும் இனக்கவர்ச்சி அல்ல என்பதில் மிகவும் தெளிவாக உள்ளனர்.
இந்நிலையில் அபிராம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்னும் விஷ விதையை ஈஷ்வரின் முதலாளியும்,ஆலையில் பணிபுரியும் ஃபோர்மேனும் இவர் மனதில் விதைக்க,அவர் ஆபிராமை சாதீயக் கண்ணோட்டத்துடன் பார்க்கத் துவங்குகிறார். அதற்கேற்றார்போல அவ்வூரின் ரயிலடியில் ஒரு முதிய பெண்மணி ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாகும் தருவாயில் இருக்க,அவருக்கு கூட்டம் கூடி முதலுதவி செய்ய,கூட்டத்தை விலக்கிச் சென்று பார்க்கும் ஆபிராமுக்கு அந்த முதிய பெண்மணி தன் தாய் என்று புரிந்தவுடன்,அம்மா என் அம்மா என்று கதற,அப்பெண்மணி சந்தோஷ அதிர்ச்சியில் உயிரை விட்டு விடுகிறாள்,அவளின் நீத்தார் சடங்குகளை தனியே நின்று செய்கிறான்,இப்போது அவனிடமின்று ஈஷ்வர் முற்றிலுமாக விலகத் துவங்குகிறார்.

ஆபிராம் ஈஷ்வரை நேருக்கு நேர் பார்த்து,தான் ஜெர்மனிக்கு படிக்கப் போவதில்லை என்று கூற,அவரும் உடனே விட்டது தொல்லை என்று சரி என்கிறார்.கொல்கத்தா சென்று வேலை தேடிக்கொண்டு சொந்தக் கால்களில் நிற்குமாறு அறிவுரை சொன்னவரிடம் ஆபிராம்,சீதாவை விரும்புவதாகவும் அவளை மணந்து கொள்ளப்போவதுமாக சொல்ல,மிகுந்த கோபம் கொள்ளும் ஈஷ்வர் மறு நாள் காலை அவன் இவ்வூரை விட்டுப் போயிருக்க வேண்டும் என்கிறார்.இப்போது வீட்டை விட்டு வெளியேறிய ஆபிராம் அம்மாவின் கடைசிக் காரியங்களை சுபர்ணரேகா நதி தீரத்தில் சிரத்தையாக செய்கிறான்,அங்கே வரும் சீதா வாழ்ந்தால் அவனுடன் தான் என்கிறாள்.

அண்ணன் ஈஷ்வருக்கு இப்போது சாதீய மோகம் கொண்ட முதலாளி அவரது நிறுவனத்தில் பங்குதாரராக ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்,அவரை பகைத்துக்கொள்ளவும் இந்த நல்வாய்ப்பை உதறவும் விரும்பாத ஈஷ்வர்,தங்கையின் விருப்பத்துக்கு மாறாக தம் சாதியில் வரன் பார்த்து திருமணம் நிச்சயிக்கிறார்,திருமணத்தன்று கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறாள் சீதா.

 சீதாவும் அபிராமும் வீட்டை வீட்டு கொல்கத்தாநகரில் குடியேறுகின்றனர்,ஆறு ஆண்டுகள் கழிகின்றன,அங்கே இந்த ஜோடி படும் பாட்டை சொல்லில் வடிக்க முடியாது,அங்கே இந்த துலாபாரம் கதை துவங்குகிறது.இவர்களுக்கு மகன் பிறக்கிறான்,அங்கே கொல்கத்தாவில்  எழுத்தாளனாக முயன்று தொடர்ந்து தோற்கிறான் ஆபிராம்,அண்ணன் ஈஷ்வரிடம் வேண்டுமானால் திரும்பச் சென்று உதவி கேட்கலாமா என்று கூட அதைர்யமான தருணத்தில் மனைவியிடம் கேட்க,அவள் வீறு கொண்டவள் நான் தெருவில் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன்,தாசியானாலும் ஆவேன் ஆனால் என் அண்ணனிடம் கையேந்தேன் என்கிறாள்.
மனைவி சீதாவிடம் பதிப்பகத்தார் யாருமே சோகக் கதைகளை விரும்புவதில்லை என்கிறான்,அவனால் மகிழ்ச்சியான படைப்புகளை இருக்கும் மனநிலையில் தர முடிவதில்லை, அபிராம் புதின எழுத்தாளனாக முடியாதவன் வயிற்றுப்பாட்டிற்காக தெரியாத வேலையான பேருந்தை அவன் நண்பன் ஒருவனின் சிபாரிசால் கற்று ஓட்டுனராக வேலைக்குச் சேருகிறான்.

அங்கே அரசு போக்குவரத்துக் கழகத்தில் அப்படி ஊழல் மலிந்து கிடக்கிறது,இவனுக்கு ஓட்டத் தந்த பேருந்தில் ப்ரேக் வேலை செய்யாத நிலை இருப்பதை மனைவியிடம் பகிர்கிறான்,அன்று சம்பள நாள் அன்று மகனையும் மனைவியையும் ஆசையாகக் கொஞ்சிவிட்டுச் சென்றவன் அந்தப் பேருந்தை ஓட்டியதில் ஒரு சிறுமியை விபத்தில் மோதிக் கொன்றுவிடுகிறான்,
அங்கே பெருங் கூட்டம் கூடி அவனை தர்மஅடி போட்டு பேருந்துடன் வைத்து தீவைத்துக் கொன்று விடுகின்றனர்,இவையெல்லாம் காட்சியாக வருவதில்லை,சீதாவின் வீடு தேடி வரும் அதிகாரி தான் அக்கம்பக்கத்தாரிடம் நடந்தவற்றை சொல்வார்.சீதா மயங்கி விழுவாள்,மிக அருமையாக எடுக்கப்பட்ட மினிமலிசம் பொருந்திய சோகம் ததும்பும் காட்சியது.

இப்போது அண்ணன் ஈஷ்வர் சித்தப்பிரமை பிடித்தவராகவே காணப்படுகிறார்,ஊரில் அவமானம்,ஏச்சுப் பேச்சுக்கள்,ஒரு நாள் அந்நிலை முற்ற,உத்தரத்தில் தூக்கு போட்டு சாக முயன்றவர் நீண்ட நாள் பாராமல் இருந்த நண்பர் ஹரப்ப்ரசாத்தின் வருகையால் தற்கொலையை கைவிடுகிறார்.ஹரப்ப்ரசாத்துடன் சேர்ந்து குடிக்கப் பழகுகிறார்.ஹரப்ப்ரசாத் இவரிடம் கொல்கத்தா போய் அங்குள்ள நகரசூழலில் மகிழ்ச்சியைத் தேடுவோம் நீ பணம் வைத்திருக்கிறாய் அல்லவா செலவு செய் என்று அழைத்துப் போகிறார்.

அங்கே பாரில் வைத்து மூக்கு முட்டக் குடிக்கின்றனர்.போதையில் தள்ளாடிய ஹரப்ப்ரசாத் நாற்காலியுடன் சரிந்து விழ,அங்கே ஈஷ்வரின் மூக்குக் கண்ணாடி உடைகிறது,இருவரும் உச்ச போதையில் டாக்ஸி பிடித்தவர்கள் எங்கே போவதென அறியாமல் தொலைவில் சென்று இறங்க,அங்கே ஒரு தரகன் பேச்சுக் கொடுக்கிறான்,ஈஷ்வரின் இசை ஆர்வத்தை எப்படியோ முகர்ந்தவன்,அவரிடம் இங்கே வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்துப் பெண் இசையமைத்துப் பாடுவாள்,அவளின் அழகு சொக்க வைக்கும் வருகிறீர்களா?என தூண்டில் போட, இவரும் கண் சுத்தமாகத் தெரியாத நிலையிலும் உடன் போகிறார்,ஹரப்பரசாத் அங்கேயே மயங்கிச்சரிகிறார்.
தன் மகனின் பள்ளிக் கட்டணமும்,மூன்று மாத வாடகை பாக்கியும் அச்சுருத்த,பக்கத்து வீட்டில் வசிக்கும் தரகன் மனைவி கல்லையும் கரைப்பவள்,சீதாவின் பதி விரத்தத்தையே கரைத்து விடுகிறாள். அன்று வழக்கம் போல பசியால் உறங்கிய மகனை அணைத்து உறங்கிக் கொண்டிருந்தவளை எழுப்புகிறாள் அந்த தரகுப் பெண்மணி, அவளிடம் வாசலில் ஒரு சீமான் வந்திருப்பதாகவும்,அவனை இசைபாடி மகிழ்வி,அவன் மனம் குளிர நட,என்றவள் இந்தா பிடி என்று ஐம்பது ரூபாயைத் திணிக்கிறாள்.

சீதாவும் அங்கே மந்திரத்துக்குக் கட்டுப்பட்டாற்போல தன்னை அலங்காரம் செய்து தயாராகிறாள்,வருபவன் முரடனாக இருந்தால் என்ன செய்வது என்று,மீன் நறுக்கும் அரிவாமனையை பாதுகாப்புக்காக மேலே எடுத்து வைக்கிறாள்.
 கதவைத் திறந்து உள்ளே வந்த அவளுடைய முதல் வாடிக்கையாளரைக் கண்ணுறுகிறாள் சீதா, ஊரிலிருந்து அவமானத்தால் உள்ளம் நொந்தபடி கொல்கத்தா வந்திருக்கும் இது வரை பெண்சுகமே அறிந்திராத அண்ணன் ஈஷ்வர், அவருக்கோ கண்ணாடி இல்லாததால் பெண்ணின் உருவமே தெரியவில்லை, அண்ணனைத் தன் முதல் வாடிக்கையாளராகக் கண்ட அதிர்ச்சியிலும் தன் அண்ணனை ஒரு வேசியாக பார்க்க தைரியமில்லாத கழிவிரக்கத்திலும் தங்கை சீதா அந்த பெரிய அரிவாமனையால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு  சுவற்றில் சாய்ந்தபடி உயிர் விடுகிறாள்.
நடந்தது என்ன என்று தாமதமாக உணர்ந்த ஈஷ்வர் அந்த அரிவாமனையை கையில் எடுத்தபடி குற்ற உணர்வுடன் கதவைத் திறந்து வெளிப்படுகிறார். தன்னையே கொலைகாரன் என்கிறார், ஆனால் பார்த்த சாட்சிகள் அதை ருசுப்படுத்தாததாலும்,இரண்டு வருடம் வழக்கை இழுத்தும்  அதில் இவருக்குத் தோல்வியே கிடைக்கிறது,இப்போது தங்கையின் மகனான பீனு மாமாவின் பொருப்பில் வளருமாறு அக்கம்பக்கத்தவரால் கொண்டு வந்து விடப்படுகிறான்.

அவன் தங்கை பாடிய பாடல்களை அத்தனை துல்லியமாகப் பாடியதில் தன் தங்கையையே திரும்பப் பார்த்த மகிழ்ச்சி , அண்ணன் ஈஷ்வருக்கு இப்போது அச்சிறுவனை நன்கு வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்கிறது,அதை மகிழ்ச்சியுடன் ஏற்றவர் சுபர்ணரேகா நதி தீரத்திலிருக்கும் அந்த ஊருக்குச் செல்ல ரயிலுக்கு நிற்கையில் இவரது  ஆலையின் ஃபோர்மேனிடமிருந்து ஒரு கடிதம் வந்ததாக ஒருவர் தருகிறார்.அதில் இவர் வழக்கை முடித்து வருவதற்குள் தன்னால் காத்திருக்க முடியாத முதலாளி தன்னை மேலாளராக நியமித்துள்ளதாகவும்,சீக்கிரம் ஊருக்கு வந்து வீட்டை காலிசெய்து தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டு எழுதியிருக்கிறான் அந்த நெடுங்காலம் பழகிய ஃபோர்மேன்,அதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளும் ஈஷ்வர் தங்கையின் மகன் பினு அவ்வூருக்கு வந்தவன் அம்மா வளர்ந்த ஊரைக் காண ஆவலுடன் முன்னால் ஓட பின்னால் விரைவதாக முடிக்கிறார் கட்டக் அவர்கள்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் திலிப் ராஜன் முகர்ஜி,தன் முந்தைய  அஜாந்த்ரிக் [1958] மற்றும் மேகே தாகதாரா படங்களின் ஒளிப்பதிவாளர் தினேன் குப்தா  இப்படத்துக்கு பணியாற்ற நாட்கள் இல்லாமையால் இப்படத்துக்கு  திலிப் ராஜன் முகர்ஜியை ஒளிப்பதிவாளராக அமர்த்தி மேகே தாக தாராவுவின் ஒளிப்பதிவுக்கு ஈடான தரத்தில் இப்படத்தை சிருஷ்டித்தார் கட்டக் ,

அவர் தன் படைப்புகளில் வெவெறு கலைஞர்களை அமர்த்தி பரீட்சார்த்தமான முயற்சிகள் மேற்கொள்ளத் சற்றும் தயங்காதவர்.கட்டக்கின் கோமல் காந்தார் 1961 திரைப்படத்துக்கு திலிப் ரஞ்சன் முகோபாத்யாய் ஒளிப்பதிவு.

அதே போல கட்டக்  தன் திரைப்படங்களின் இசையமைப்பாளர்களாக அலி அக்பர் கான் [அஜாந்த்ரிக்],ஜ்யோதீந்த்ர மொய்த்ரா [கோமல் காந்தார்] உஸ்தாத் அமீர்கான்  [மேகே தாக தாரா] என வித விதமாகக்  கூட்டணி அமைத்து இசை விருந்து படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே என்னும் அர்த்தம் தொனிக்கும் ரபீந்திரநாத் தாகூரின் பாடல்,இயக்குனர் ரித்விக் கட்டக்கின் சுபர்ணரேகா 1965படத்தில் இருந்து இங்கே பாருங்கள், இதன் இசை உஸ்தாத் பஹதூர் கான் அவர்கள்.ஒளிப்பதிவு திலிப் ராஜன் முகர்ஜி அவர்கள்
https://www.youtube.com/watch?v=gvbrhgwXTtY&sns=fb

சுபர்ணரேகா திரைப்படத்தை உந்துதலாகக் கொண்டு தமிழ் சினிமாவில் வெளியான மிகச்சிறந்த அண்ணன் தங்கை பாசப் படைப்பாக இயக்குனர் மகேந்திரன் அவர்களின் முள்ளும் மலரும் திரைப்படத்தைச் சொல்லலாம், அதில் சுபர்ணரேகா திரைப்படத்துக்கு ஈடான  அண்னன்  தங்கைப் பாசமும், நிலவியலின் அழகியலும் மிக அழகாகக் கையாளப்பட்டிருக்கும்,

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)