கே.பாலசந்தரின் ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்


ஸ்ரீ ராகவேந்திரர் கவிதாலயா தயாரிப்பில்,இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் இயக்கியது,அவர் கவிதாலயாவுக்கு 5 படங்கள் ரஜினியை வைத்து இயக்கினார்,ரஜினியை ஒரு சூப்பர் ஸ்டாராக மிளிரச் செய்ததில் இவரது பங்கு மகத்தானது.ரஜினியை இதுவரை 26 படங்களில் இயக்கியிருக்கிறார்.

 ஸ்ரீ ராகவேந்திரர் ரஜினியின் 100ஆவது படம்,ஒரே சமயத்தில் தமிழ்  தெலுங்கில்[Sri Mantralaya Raghavendra Swamy Mahatyam]  இயக்கினார் . ஆனால் சரியாக போக வில்லை, இப்படத்துக்கு எம்ஜியார்  பாராட்டி வரிவிலக்கும் அளித்தார். அடுத்த படைப்பான வேலைக்காரன் [1987] படத்தையும் ரஜினியை வைத்து தயாரித்து வெற்றிப்படமாக்க விரும்பினார் இயக்குனர்.பாலசந்தர். 
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்

ரஜினி நடித்தால் எஸ்.பி.முத்துராமன் இயக்கினால் தான் சரிவரும் என்று நம்பினார் இயக்குனர். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை விருந்தாக இருக்க வேண்டும் என்று இயக்குனரை பணித்தார்,முழு சுதந்திரம் கொடுத்தார். நான் எதிலும் தலையிடமாட்டேன்,முதல் பிரதி காட்டினால் போதும்,என்று சொன்னவர் அதன் படி நடந்தார்.

இப்படத்தின்  அரை பாகம் படப்பிடிப்பு நடந்தது காஷ்மீரில்.  நடிகர் மற்றும் குழுவுடன்  புது டெல்லி சென்றுவிட்டார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் .

தயாரிப்பாளர்  கே.பாலசந்தர் ,இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ரசனையை அவர் கவிதாலயாவுக்குச் செய்த முந்தைய படங்கள் மூலம் நன்கு கிரகித்தவர்   வாவாவா கண்ணா வா பாடலையும் எனக்குத்தா உன் உயிரை எனக்குத்தா பாடலையும் இசைஞானியுடன் அமர்ந்து கவிஞர் மு.மேத்தாவை  பாடல் எழுத வைத்து  ஒரே ஸ்கெட்யூலில் வாங்கி   இசையமைத்து பாடல் பதிவு செய்து அப்பாடலை உடனே  வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு விமானத்தில் அனுப்பி வைத்தாராம்.அப்படி எதிலுமே தொய்வில்லாதபடி படப்பிடிப்பு நடக்க உதவினாராம் இயக்குனர்,அதே 1987 ஆம் ஆண்டில் மனதில் உறுதி வேண்டும் படத்தின் உருவாக்கத்திலும் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தார் இயக்குனர் பாலசந்தர்.

எஸ்.பி,முத்துராமன் 75 படங்கள் இயக்கியுள்ளார்,கடும் உழைப்பாளி,சொன்ன தேதியில் படத்தை முடிப்பதில் முழு கவனமாக இருப்பவர்,இவரது சொந்த தயாரிப்பான பாண்டியன் படப்பிடிப்பு நடக்கையில் இவரது மனைவி காலமாகிவிட ,அந்த மீளாத்துயரிலும் மீண்டு வந்தவர் சொன்ன தேதியில் படத்தை முடித்து வெளியிட்டார்.
வா வா வா கண்ணா வா பாடல் இங்கே
எனக்குத்தா பாடல் டெல்லி ஷெரட்டனில் படமாக்கியிருப்பார்கள்.  பாடல் இங்கே

இப்படத்தின் மற்ற பாடல்களையும் அவரே இசைஞானியுடன் உடனமர்ந்து உருவாக்கி தயாராக வைத்திருந்தவர் படப்பிடிப்பு குழு சென்னை வந்ததும் அதைப் பயன் படுத்தினாரார் என்பதை இயக்குனர் பாலசந்தர் ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்தார்.

இப்படத்தில் வேலை இல்லாதவந்தான் வேலை தெரிஞ்சவந்தான்  பாடல் டைட்டில்ஸ்க்ரோல் பாடல் அதை தமிழக கிராம சூழலில் படமாக்கியிருப்பார்.
பாடல் இங்கே

இப்படத்தில் பெத்து எடுத்தவதான் என்னையோ தத்துக்கொடுத்துப்புட்டா பாடல் உழைப்பாளர் சிலையருகே படமாக்கியிருப்பார்.
பாடல் இங்கே

இப்படத்தில் தோட்டத்துல பாத்திக்கட்டி பாடல் அடையார் கேட் ஓட்டல் என்று அழைக்கப்படும் பார்க் ஷெரட்டனில் படமாக்கியிருப்பார்கள்.
பாடல் இங்கே
https://www.youtube.com/watch?v=LKuD7TkND3I

எஸ்.பி.முத்துராமன்  ரஜினியை வைத்து இயக்கிய 26 படங்களின் பட்டியலும் கவிதாலயாவுக்கு இவர் ரஜினியை வைத்து இயக்கிய 5 படங்களின் பட்டியலும் இங்கே.

1 Chor Ke Ghar Chorni (1992) - Hindi [அடுத்த வாரிசு]
2 பாண்டியன் (1992) 
3 அதிசயப்பிறவி(1990)
4 ராஜா சின்ன ரோஜா(1989) 
5 தர்மத்தின் தலைவன்(1988)
6 குரு சிஷ்யன்(1988)
7 வேலைக்காரன்(1987) கவிதாலயா தயாரிப்பு 5
8 மனிதன் (1987) 
9 மிஸ்டர் பாரத் (1986)
10 Fauladi Mukka (1985) - Hindi [பாயும் புலி]
11ஸ்ரீராகவேந்திரர்(1985)தெலுங்கில் [ஸ்ரீமந்த்ராலய ராகவேந்த்ர ஸ்வாமி மஹாத்மியம்]  கவிதாலயா தயாரிப்பு 4
12 நான் மகான் அல்ல (1984) கவிதாலயா தயாரிப்பு 3
13 நல்லவனுக்கு நல்லவன்(1984)
14 Zulm Ki Zanjeer (1984) - Hindi [ராணுவ வீரன்]
15அடுத்த வாரிசு (1983)
16 பாயும் புலி(1983)  
17 எங்கேயோ கேட்ட குரல்(1982)
18 போக்கிரி ராஜா(1982)    
19 புதுக்கவிதை(1982) கவிதாலயா தயாரிப்பு 2
20 கழுகு(1981)
21 நெற்றிக்கண் (1981)  கவிதாலயா தயாரிப்பு 1
22 ராணுவ வீரன்(1981)
23 முரட்டுக்காளை (1980)
24 ஆறிலிருந்து அறுபது வரை(1979)
25 ப்ரியா(1978)   
26 புவனா ஒரு கேள்விக்குறி(1977) 
    

1 comments:

பெயரில்லா சொன்னது…

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=40144&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)