கமல்ஹாசன் அவள் ஒரு தொடர்கதையின் ஐந்து மறு ஆக்கங்களில் நான்கில் பங்களித்திருக்கிறார்.
1.தமிழில் அவள் ஒரு தொடர்கதை 1974 மாடி வீட்டு விகடகவி
2.தெலுங்கில் அந்துலேனிகதா 1976 நல்லுள்ளம் கொண்ட அலுவலக முதலாளி
3.வங்காளத்தில் கொபிதா 1977 மாடி வீட்டு விகடகவி
4.ஹிந்தியில் ஜீவன் தாரா 1982 கால்ஷீட் கெடுபிடியால ஒருகதாபாத்திரமும் செய்ய இயல வில்லை
5.கன்னடத்தில் பெங்கியாலி ஹரலிட ஹூவு 1983 பேருந்து நடத்துனர் கதாபாத்திரம்.
பெங்கியாலி ஹரலிட ஹூவு [Benkiyalli Aralida Hoovu] [1983]அவள் ஒரு தொடர்கதை [1974] வெளியாகி சுமார் 9 வருடம்
கழித்து கன்னடத்தில் கவிதா என்னும் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை சுஹாசினியை
வைத்து கே.பாலசந்தர் இயக்கிய படம்,
இதில் தமிழில் திடீர் கண்ணையா செய்த 23 பி பேருந்து நடத்துனர்
கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தார். கமல்ஹாசனும் சுஹாசினியும் சிற்றப்பா, மகள்
உறவு முறை என்று நமக்குத் தெரியும், இந்திய சினிமாவில் இப்படத்தில் தான்
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் கவிதா [சுஜாதா] நடத்துனரிடம் ஒரு ஜெமினி ப்ளீஸ் என்பார்,கன்னடத்தில் பெங்களூருவின் 14 ஆம் நம்பர் பேருந்தில் பயணிக்கும் கவிதா [சுஹாசினி] ,பேருந்து நடத்துனரிடம் ஒரு விதான் சவுதா [Vidhana Soudha ] ப்ளீஸ்!!! என்று கண்டிப்புடன் கேட்பார்,
அதிகப்பிரசங்கி நடத்துனர் அத்துடன் தன் எல்லையை உணர்ந்தவர் பேச்சை நிறுத்திவிட்டு டிக்கட் கொடுத்து விட்டு நகர்வார்.