கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை 1974 திரைப்படத்தின் மூர்த்தி என்னும் புல்லுருவி அண்ணன் கதாபாத்திரம் வெவ்வேறு காலகட்டம் மற்றும் வெவேறு மொழியில் மறு ஆக்கம் செய்கையில் அடைந்த பரினாமங்கள் இங்கே காணலாம்
1.தமிழில் அவள் ஒரு தொடர்கதை(1974) நடிகர் ஜெய்கணேஷ் அறிமுகமாகி நடித்ததை நாம் அறிவோம்,இந்த கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை பார்வையாளர்களுக்குக் கடத்த இந்த தெய்வம் தந்த வீடு என்ற மிக அருமையான சிச்சுவேஷன் பாடல் படத்தில் வைக்கப்பட்டது, பாடலை எழுதியது கவிஞர் கண்ணதாசன், இசை எம்ஸ்வி, பாடியவர் யேசுதாஸ் . இயக்கம் கே.பாலசந்தர், இப்பாடலை இங்கே பாருங்கள். https://www.youtube.com/watch?v=GmRolavyukg
2.தெலுங்கில் அந்துலேனிகதா(1976) திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தார், தெய்வம் தந்த வீடு பாடல் தெலுங்குக்காக தேவுடே இச்சாடு வீதி ஒக்கடி என உருமாற்றம் செய்யப்பட்டது, இப்பாடலை எழுதியது கே.பாலசந்தரின் ஆஸ்தான தெலுங்குக் கவிஞர் ஆத்ரேயா ஆச்சார்யா, இசை எம்ஸ்வி, பாடியவர் யேசுதாஸ் . இயக்கம் கே.பாலசந்தர், இப்பாடலை இங்கே பாருங்கள்.
3.வங்காளத்தில் கொபிதா [Kabita ](1977) திரைப்படத்தில் நடிகர் அனில் சேட்டர்ஜி நடித்தார்,இவர் மேக தாக தாரா 1960 படத்திலும் நாயகி குக்கியின் சங்கர் என்னும் பொருப்பற்ற சுயநலமி சங்கீதபித்து கொண்ட அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர்,அப்படம் வெளியாகி சுமார் 17வருடங்கள் கழித்து இக்கதாபாத்திரத்தில் நடித்தார். வங்காள சினிமாவின் மிக முக்கியமான நடிகர் இவர் .இப்படத்தின் இயக்கம் பரத் ஷம்ஷேர், இப்படத்தின் இசை சலீல் சவுத்ரி,தெய்வம் தந்த வீடு பாடல் வங்காளத்துக்காக Amito Kumir Dhare Aanini என உருமாற்றம் செய்யப்பட்டது, அப்பாடலை எழுதியது Shuvo Dasgupta , பாடியவர் பழம் பெரும் பாடகர் மன்னா டே அவர்கள் ,இப்பாடலை இங்கே கேளுங்கள்
4.ஹிந்தியில் ஜீவன் தாரா[1982] திரைப்படத்தில் நடிகர் நடிகர் ராஜ் பப்பர்[Raj Babbar] நடித்தார், தெய்வம் தந்த வீடு பாடல் இந்திக்காக Paida Karke Bhool Gaya என உருமாற்றம் செய்யப்பட்டது, இப்பாடலை எழுதியது ஆனந்த் பக்ஷி,இசை லஷ்மிகாந்த் பியாரிலால்,பாடியவர் Salim Premragi . இயக்கம் டி.ராமராவ்.இப்பாடலை இங்கே பாருங்கள் https://www.youtube.com/watch?v=sIOriQtrOMM
5.கன்னடத்தில் பெங்கியாலி ஹரலிட ஹூவு[1983] திரைப்படத்தில் நடிகர் ராஜீவ் அறிமுகமாகி நடித்தார் ,இப்படத்தின் இயக்கம் கே.பாலசந்தர்,தெய்வம் தந்த வீடு பாடல் இப்படத்துக்காக ஹோகு என்னலு நீயாரு? என்று உருமாற்றம் செய்யப்பட்டது, இப்பாடலைப் பாடியவர் எஸ் பிபி, இப்படத்தின் இசை எம் எஸ் வி.பாடலாசிரியர் சித்னஹல்லி.உதயசங்கர். இப்பாடலை இங்கே பாருங்கள் https://www.youtube.com/watch?v=MbFTL1SWkX4