கே.பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் வரும் கையில காசு வாயில தோச பாடல்

அச்சமில்லை அச்சமில்லை 1984 படத்தில் நடிகர் ராஜேஷ் நல்ல தொண்டுள்ளம் கொண்ட கட்சித் தொண்டராக இருந்தவர், வேறொரு போட்டிக் கட்சி பெரிய பதவி தந்தவுடன் கட்சி தாவி விடுவார்,எம் எல் ஏ தேர்தலில் போட்டியிடுவார். அங்கே பணம் தாறுமாறாக வாரி இறைக்கப்படும்,

ஊர் இளசுகளான ராதாரவி,ரவீந்திரன்,தவக்களை கேங்க் தங்கள் ஓட்டை அன்று தேர்தலில் ராஜேஷின் கட்சிக்கு விற்றுவிட்டு கட்சிக்காரர்கள் தந்த சாராயத்தை நன்றாக குடித்துவிட்டு பிரியாணியை ஒரு பிடி பிடித்துவிட்டு,பணத்தை பெருமிதத்துடன் எண்ணிக்கொண்டு ஊர் பெரியவர் எப்போதும் அரசியல் தத்துவம் பேசித் திரியும் கோமல் சுவாமிநாதனை வெறுப்பேற்றிப் பாடும் பாடல் இது.

இது மிகுந்த நெஞ்சுரமிக்க பாடல்,இதை இயற்றியவர் ஈரோடு தமிழன்பன்,இப்படத்தின் இசை வி.எஸ்.நரசிம்மன்.எஸ்பிபி மிக அருமையாக பாடியிருப்பார்,சிங்காரி சரக்கு நல்ல சரக்கு போன்ற தாளக்கட்டில் அமைந்த பாடல் இது. இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்திப் போவது தான் இதன் சிறப்பு.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு பாலசந்தரின் இத்திரைப்படப் பாடல் மீது என்ன ஒரு மோகமோ தெரியவில்லை,இந்த பாடல் வரியான வாழ்க சனநாயகம் என்ற பெயரில் ஏற்கனவே 90களில் ஒரு படம் எடுத்தார், இப்போது கையில் காசு வாயில தோச என்னும் பெயரில் படம் இயக்குகிறாராம்.

பாடல் வரிகளை இங்கே பாருங்கள்.

தேர்தலைப் பாடுவோம்
தெரிஞ்சத ஆடுவோம்


கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர

சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி

சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி
நம்ம சனநாயகம் வாழ்ந்தாப்போதும் அண்ணாச்சி

சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி
நம்ம சனநாயகம் வாழ்ந்தாப்போதும் அண்ணாச்சி

வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்
வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்
வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்

கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர

அஞ்சு வருஷம் தீபாவளித் திருநாள்
அசந்தா சூரியன் மேலேயும் போஸ்டர ஒட்டு

கையில காசு வாயில தோச

கையிலுள்ள வாக்குரிமச் சீட்டு
அத வாக்கரிசி போல நீயும் பொட்டியில கொட்டு

கொடிமரங்க ஊரெல்லாம் மொளச்சி
அட நிக்குதடா பொணமாக வெறச்சி

காந்தி அண்ணல் காமராசர் பொழச்சி
வந்திடுவார் நம்மையெல்லாம் நெனச்சி


கட்சி நூறுண்டு
தாவு ராசாவே
தேர்தல் சர்க்கஸ் தான்
ஆஹா கரகோஷம்

நரியின் கனவில்
எலும்பு மழைதாண்டா போ

ஆகா ஆகா இது குடிமகன் பேச்சு

கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர

செத்தவனும் ஓட்டுப் போட வருவான்
அசந்தா செத்தவன் கூட ஒண்ணுகூடி கட்சியமப்பான்


கையில காசு வாயில தோச

ஓட்டுப் போடத்தான நாம பொறந்தோம்
நம்ம வயசக்கூட தேர்தல் வச்சே அளந்தோம்

தாய்குலத்து மவுசென்ன குறைவா
கட்சியெல்லாம் கால சுத்தும் உறவா

அலங்காரம் சேரியெல்லாம் புதுசா
அவங்களுக்கும் காட்ல மழ ஒருநா

ஆள நாடில்ல ஆனா நாமதான்
ராசா ஆனோமே போதை போதாதா?

புடிடா தலைவா
குடிடா நறையா நீ!!!!

ஆமாண்டா ராசா இது குடிமகன் பேச்சு!!!


கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
குத்தினேன் முத்திர,குடுத்தாங்க சில்லர


சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி

சனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி
நம்ம சனநாயகம் வாழ்ந்தாப்போதும் அண்ணாச்சி

வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்
வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்
வாழ்க சனநாயகம்
வாழ்க பணநாயகம்


கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
கையில காசு வாயில தோச
https://www.youtube.com/watch?v=iHeAB0LHr28


Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)