மேகே தாக தாரா 1960 அமரர். ரித்விக் கட்டக் அவர்கள் சினிமா அகராதியாக செதுக்கிய அற்புதமான திரைப்படம்,இந்திய சினிமாவில் காட்சி,இசை,கதை ,திரைக்கதை,நடிப்பு என எல்லா துறையிலும் பரிமளித்த திரைப்படஅகராதி இப்படம்.
ஒளிப்பதிவாளர் தினேன் குப்தா மேக தாக தாரா 1960 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்,மேகே தாக தாரா படத்தின் ஒளிப்பதிவு மிகுந்த தொலைநோக்கானது,படம் வெளியாகி 55 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வியப்பூட்டுவது,படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியமைப்பும் தொழில்நுட்ப ரீதியாகவும் அழகியில் ரீதியாகவும் மேதமையின் உச்சத்தில் இருப்பவை .

படத்தில் ஒரு உதாரணக் காட்சியை சொல்கிறேன்,அது ஒரு மிகப்பெரிய தூங்குமூஞ்சிமரங்கள் இரு மருங்கிலும் கொண்ட சாலை,அங்கே காலை வேலைக்குச் செல்ல நடந்து வருகிறாள் தங்கை,வேலைக்குப் போகாத சங்கீதப் பித்து கொண்ட அண்ணன் நீர்நிலையின் அருகே சாதகம் செய்வதை மிகுந்த ஆதூரத்துடன் பார்த்து தேவதை போன்ற தங்கை புன்னகைத்தபடி கடக்கும் ஒரு மிக அழகான காட்சி,
அங்கே ஒரு ஃப்ரேமில் தொலைவில் கடக்கும் ரயில்,இடப்புறம் கீழே சாதகம் செய்கிற அண்ணன்,வலப்புறம் மேலே புன்னகைக்கும் தங்கை என அழகியல் பொருந்திய ஒரு காட்சி,இன்று கூட இது போன்ற ஒரு காட்சியை சிருஷ்டிப்பது மிகவும் கடினம்.
இங்கே தினேன் குப்தாவின் இப்பேட்டி PDF வடிவத்தில் இருக்கிறது,ஒளிப்பதிவு ஆர்வலர்கள் சேமித்து வைத்து அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.http://cameraworking.raqsmediacollective.net/pdf/interviews/dinen_gupta.PDF