ரிக்ஷாகாரன் (1971)திரைப்படத்தில் வரும் கடலோரம் வாங்கிய காற்று பாடல் இந்த பழைய சிதலமாகாத broken bridge ற்காகவே மிகவும் பிடிக்கும், படத்தின் ஒளிப்பதிவு V. Ramamoorthy,இயக்கம் M.கிருஷ்ணன் (எம்ஜியார் நாயரை cut செய்து விட்டாராம் )
அடையாறு வங்கக்கடலில் கலக்குமிடம், அந்த மிகப்பெரிய பல்லுயிர் பெருக்கம் நிகழும் கழிமுகம்,
தொலைவில் பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் ,
முத்து திரைப்படம் எடுத்த MRC நகர் செட்டிநாடு அரண்மனை , மிகப்பெரிய பழமையான அடையார் ஆலமரம் இருந்த பிரம்மஞான சபை வனப்பகுதி என பாடலின் முதல் பகுதி முழுக்க படமாக்கியிருப்பார்கள்,
இரண்டாம் பகுதி covelong aka கோவளம் கடற்கறையின் பெரிய வழுக்குப் பாறைகளின் அருகே படமாக்கியிருப்பார்கள், அங்கே தொலைவில் தெரியும் திட்டுப் பாறைகள் இருக்கும் இடத்தில் இன்று புகழ்பெற்ற கோவளம் தர்கா உள்ளது.
இந்தப் பாலம் கட்டப்பட்ட ஆண்டு 1967. அடையாற்றை ஒட்டியிருக்கும் ஸ்ரீனிவாசபுரம் மீனவர் பகுதியையும் பெசன்ட்நகர் ஊரூர் ஆல்காட் குப்பத்தையும் இப்பாலம் இணைத்தது .
மீனவர்கள் தங்களின் மீன்பாடி வாகனங்களில் மீன்கள் இரால்களை கூடை கூடையாக ஏற்றி இந்த பாலத்தின் வழியாகத்தான் எடுத்துச் செல்வார்கள்.
இந்த குறுகிய பாலத்தில் நான்கு சக்கர வண்டிகள்கூட நின்று ஒதுங்கி வழிவிட்டு போவதற்கு ஏற்ப சிறிய துறை (bay ) கட்டப்பட்டு இருந்தது,
அன்று அடையாறு மாசுபடாமல் இருந்ததால் பலர், மீன் ,நண்டு ,இரால் பிடிக்க இந்த பாலத்திற்கு நிறைய வந்தனர். இதெல்லாம் 1977 ஆண்டோடு நின்று போனது,
14 நவம்பர் 1977 ஆம் ஆண்டு ஆந்திராவைத் தாக்கிய கடும் புயல் காரணமாக இப்பாலத்தின் நடுப்பகுதி உடைந்து போனது, அடையாறு கழிமுகத்தில் மீன் பிடித்தொழில் நலிந்து பலர் துறைமுகத்திற்கு வேலை தேடப் போயினர்.
அதன் பிறகு இப்பாலத்தில் எஞ்சியிருந்த railings ஒவ்வொன்றாக சமூக விரோதிகளால் திருடப்பட்டு இப்பாலம் 43 ஆண்டுகளாக எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது,
இப்பாலம் மட்டும் பயனில் இருந்தால் நம்மால் பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் இருந்து சாந்தோம் பீச்சிற்கு ஐந்து நிமிடங்களில் சென்று விட முடியும், இன்று திருவிக பாலம் வழியாக சுற்றிச் சென்று வாகன நெரிசலில் அல்லாடி சாந்தோம் பீச் செல்ல சுமார் இருபது நிமிடங்களாகிறது.
இப்பாலத்தை இன்னும் பேய் பங்களா போல வைத்திருக்க அரசுகளுக்கும் அதிகாரிகளுக்கும் எத்தனை குரூர மனநிலை வேண்டும்? பாலத்தை நன்கு தரமாக கட்டியிருந்தால் புயலுக்கு நடுப்பகுதி விழுந்து சேதமடைந்திருக்காது, அதற்கு செத்த கமிஷன் அமைத்தார்களா? தெரியவில்லை.
#broken_bridge,#santhome_beach,#eliots_beach,#theosopical_society, #covelong_beach,#ரிக்ஷாகாரன்,#எம்ஜியார்,#மஞ்சுளா,#அடையார்,#கழிமுகம்,#உடைந்த_பாலம்