தாசி திரைப்படத்தில் வரும் அபாரமான ஜமீன் தர்பார் காட்சி இது,
ஒரு மணி ஒரு முறை அடிக்கும் மணி ஒலித்ததும், பெரிய வராந்தாவில் புங்கா விசிறி நன்கு விசிறி வீசுகின்றனர் இரண்டு புங்காவாலாக்கள்,
ஓயிலாக கால் மீது கால் போட்டு அமர்ந்து என்னைப் பாட வேண்டுமா? பாடேன் என்ற தோரணை கொண்ட ஜமீன்தாரரை வரிய புலவர்கள் திரளாக போற்றிப் பாடும் அந்த காட்சியில் நாம் அக்காலத்திற்கே பயணிப்போம்,
புலவர்கள் சற்று அதிகமாக கூவுகையில் அங்கு கணக்கெழுதும் எழுத்தர் வட்டக்கண்ணாடி வழியே புலவர்களை வேடிக்கையாகப் பார்ப்பதைப் பாருங்கள்.
இது போல அழகிய 50 காட்சிகள் படத்தில் உண்டு, முழுக்க காட்சி இன்பம், அத்தனை Dark humour, அத்தனை details, அத்தனை sarcasm, ஒவ்வொரு காட்சியிலும் ஓரிரு வசனங்கள் இருந்தாலே அதிகம் , அந்த வசனத்திலும் சொற்சிக்கனம்.
தாசி திரைப்படம் பற்றி மேலும்
https://m.facebook.com/story.php?story_fbid=10159676095221340&id=750161339
https://m.facebook.com/story.php?story_fbid=10159677247311340&id=750161339
#தாசி,#தர்பார்,#பங்கு,#punkha
எழுதியவர் கீதப்ப்ரியன்
உரையாட geethappriyanbloggeratgmail.com