சிதம்பரம் படத்தில் வரும் அழகிய காட்சி இது,மூணாறை அடுத்த மாட்டுப்பட்டி கால்நடை பண்ணையில் கீழ்நிலை பணியாளன் முனியாண்டிக்கு (சீனிவாசன்) சூப்பரிண்டிண்டண்ட் சங்கரன் (பரத்கோபி) தன் குவாட்டர்ஸில் வைத்து ரம் ஊற்றி குடிக்கத் தருகிறார்,
அடுத்த வாரம் நடக்க இருக்கும் அவன் திருமணத்தைக் கொண்டாட இந்த மது விருந்தை அவனுக்குத் தருகிறார், முதலில் தயங்கிய முனியாண்டி ஒரு பெக் குடித்ததும் தைரியம் பெற்றவன், அடுத்த பெக் தானே ஊற்றிக் கொண்டு குடித்ததும், பெருங்குரலெடுத்து அதிகாரி சங்கரனை நடராஜராகவே நினைத்து கைகூப்பியபடி
" மார்கழி மாதம் திருவாதிரை நாள் " என்று பாடத்துவங்குகிறான்,அதிகாரி சங்கரன் கடைநிலை பணியாளர்களுடம் பேதம் பாராமல் நட்பு பாராட்டும் வியக்தி, அவருக்கே தர்மசங்கடம் சலம்பிய படி பாடும் அவனை பிரயத்தனப்பட்டு வெளியேற்றி அவன் வீட்டில் கொண்டு விடுகிறார்.
இந்த துண்டுப்பாடலைப் பாடியது சீர்காழி சிவ சிதம்பரம், இப்படத்தின் தயாரிப்பு இயக்கம் இயக்குனர் G.அரவிந்தன் அவர்கள்,ஒளிப்பதிவு ஷாஜி.N.கருண்.
இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக விஷயம் தட்டுப்படும் , இப்படம் பற்றி விரிவாக எழுத வேண்டும்.
#சிதம்பரம்,#G_அரவிந்தன்,#சீனிவாசன்,#ஸ்மிதா_பாட்டில்,#பரத்கோபி,#மோகன்தாஸ்,#ஷாஜி_N_கருண்