இயக்குனர் மற்றும் நடிகர் ரா.சங்கரன் அவர்கள் ( மிஸ்டர். சந்திரமௌலி) இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பாரதிராஜா அவர்கள்,
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு 1974, தேன் சிந்துதே வானம் 1975, தூண்டில் மீன் 1977 மூன்று படங்கள் இவருடன் பணியாற்றினார்,
இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா இவருடன் கடைசியாக பணிபுரிந்து விட்டு 16 வயதினிலே படம் இயக்கச் சென்றாராம், இதை இயக்குனர் ரா.சங்கரன் சாய் வித் சித்ரா பேட்டியில் பகிர்ந்தார்.
நான் இயக்குனர் பாரதிராஜா பெயர் பார்க்க இந்த ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பட rolling credit மற்றும் தேன் சிந்துதே வானம் பட rolling credit பார்த்தேன் அதில் இயக்குனர் பெயர் இல்லை, இயக்குனரின் இயற்பெயரான சின்னசாமி என்ற பெயரிலும் credit இல்லை, எத்தனை பெரிய இமாலய தவறு நடந்துள்ளது,ஒரு வரலாற்று சாதனை செய்த இயக்குனர் தன் துவக்ககாலத்தில் பணி செய்த இரண்டு படங்களில் uncredited ஆக பணிசெய்திருக்கிறார்.
தூண்டில் மீன் படம் இணையத்தில் காணக் கிடைக்கவில்லை அதனால் rolling credit பார்க்க முடியவில்லை. அப்படி அதிலும் அவர் பெயர் இல்லை என்றால் இயக்குனர் மூன்று படங்களிலும் uncredited ஆக பணிபுரிந்துள்ளார் என ஆகிறது,பின்னாளில் ஆறு முறை தேசிய விருது பெற்ற இயக்குனர் எப்படி அவரது துவக்க கால உழைப்பு அங்கீகாரம் இன்றி போயிருக்கிறது,
எனவே இத்தனை உழைக்கிறோமே , அங்கீகாரம் கிடைக்கவில்லையே! பாராமுகமாயிருக்கிறதே! என கருதாமல் உழையுங்கள், உழைப்பு வேறு எங்காவது பலனைப் பெற்றுத் தரும்.
இயக்குனர் பாரதிராஜா பற்றி இயக்குனர் ரா.சங்கரன் சாய் வித் சித்ரா பேட்டி
https://youtu.be/XrqqsJPGFfg
#ரா_சங்கரன்,#பாரதிராஜா,#சாய்_வித்_சித்ரா,#uncredited
https://m.facebook.com/story.php?story_fbid=10158723068941340&id=750161339