ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா 1986 ஆம் ஆண்டு தமிழ் தெலுங்கு,இந்தி மொழிகளில் வெளியானது,இந்தியில் Shirdi Sai Baba Ki Kahani என்ற பெயரிலும், தெலுங்கில் ஸ்ரீ் ஷீர்டி சாய்பாபா மகாத்மியம் என்ற பெயரிலும் வெளியானது.
படத்தின் இயக்கம் வாசு,இது ஷீர்டி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்.படத்தின் தயாரிப்பு எடிட்டர் மோகன் அவர்கள் ( ஜெயம் ரவி தந்தை )
2009 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஷீர்டி சாய்பாபா என்று தொலைக்காட்சி தொடர்களாக வந்த கதைகள் இத்திரைப்படத்திலும் வருகின்றது.
ஷீர்டி சாய்பாபாவாக நடிகர் விஜய் சந்தர் நடிக்க , முக்கிய கதாபாத்திரங்களில் சரத்பாபு, சோமையாஜுலு அஞ்சலிதேவி, சந்திரமோகன் நடித்தனர்,
இசைஞானி இசையில் அற்புதமான எட்டு பாடல்களைக் கொண்டது, (LP உறை காண்க ) தாசேட்டா பாடிய இரண்டு ஸ்லோகங்கள் அடக்கம்
1.அதில் சாயி சரணம் பாபா சரணம் சரணம் என்ற தாசேட்டா மற்றும் குழுவினர் பாடிய பாடலை வானொலியில் கேட்டு வளர்ந்திருப்போம். இப்பாடல் கவிஞர். மருதகாசி இயற்றியது.
https://youtu.be/dfw8l0PCKCg
2.எங்கள் பாவங்கள் பாடல் தாசேட்டா குழுவினர் பாடியது, கவிஞர் காமகோடியன் இயற்றியது,இப்பாடல் என் பாவக்கணக்குக்கு பட்டியல் போட்டால் பாடலின் மெட்டில் அமைந்துள்ளது , பாச மலர் ஒன்றை வேண்டி வளர்த்தேன் ஏழு மலையானே என்ற பாடலும் இதே மெட்டில் இசைஞானி புனைந்துள்ளார்.
https://youtu.be/gXRipaRuF-k
3.பாபா சாய் பாபா என்ற பாடல் எஸ்.பி.பி பாடியது கவிஞர் காமகோடியன் எழுதியது.
https://youtu.be/HmHs0J5m6lo
4.அழுகின்றோம் என்ற பாடல் எஸ்.பி.பி, சுசிலாம்மா பாடியது ,கவிஞர் வைரமுத்து எழுதியது , இப்பாடல்
https://youtu.be/FCS-vo4WfDA
5.ஆண்டவன் என்ற பாடல் சுசிலா ,குழுவினர் பாடியது ,கவிஞர் மருதகாசி எழுதியது,இப்பாடல் சாய்பஜனில் பாடும் நமஷிவாய் ஓம் நமஷிவாய் என்ற மெட்டில் உள்ளது எது முதலில் வந்தது தெரியவில்லை
https://youtu.be/Cf_qG2FLCkg
6. ஜெய் ஷீர்டி நாதா பாடல்
வி.ராமகிருஷ்ணா பாடியது, கவிஞர் மருதகாசி எழுதியது
https://youtu.be/Y8-E9CwJ1wI
7.சாயி ஸ்லோகம் 1 - தாஸேட்டா பாடியது
https://youtu.be/eg2vZ9EgKdM
8.சாயி ஸ்லோகம் 2 - தாஸேட்டா பாடியது
https://youtu.be/PNtHKeJjhJs
#இசைஞானி,#வாசு,#எடிட்டர்_மோகன்,#மருதகாசி,#காமகோடியான்,#சாய்பாபா_மகிமை,#சாய்பாபா_மகாத்மியம்,#ஸ்ரீஷீர்டி_சாய்பாபா