Bypass 2003 ஆம் ஆண்டு வெளியான crime noir silent குறும்படம், அப்போதைய திரைப்படக் கல்லூரி மாணவர் அமித்குமார் இயக்கியது , ஒளிப்பதிவு கேரளத்தின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, இசை இத்தாலிய இசையமைப்பாளர் ஆஸ்கார் வென்ற Dario marianelli
படத்தின் கதைக்களம் ராஜஸ்தானின் ஒரு பாலைவனத்தின் ஊடே ஒரு பைபாஸ் சாலை , இதில் மூன்று தலைசிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர்,
இப்படம் மிகச்சிறந்த ஆக்கத்தைக் கொண்டுள்ளது, கதையின் மாந்தர்கள் ஒருவரை ஒருவர் சங்கிலித் தொடராக கருவருத்துக் கொள்கின்றனர், இந்தப் படம் இதன் பெயர் துவங்கி ஒவ்வொரு துறையிலும் ஜொலிக்கிறது.
இர்ஃபான்கான், நவாசுதீன் சித்திக்கி, சுந்தர் தன் தேத்தா என மூன்று நடிகர்களுக்கும் பெயர் இல்லை வசனம் இல்லை. இதில் இர்ஃபான்கான் கெட்ட போலீஸ், நவாசுதீன் மற்றும் வாய் பேச முடியாத சுந்தர் தன் தேத்தா இருவரும் கொள்ளையர்கள்,
இந்த இரட்டையர்கள் ஈவு இரக்கமற்ற கொள்ளையர்கள். அந்த மணல்பாங்கான பைபாஸ் சாலையில் யார் வந்தாலும் பாறைகளை வீசி எறிந்து கார் கண்ணாடியை உடைத்து அவர்கள் பணம் நகை என கிடைப்பதை கொள்ளை அடித்து உய்ப்பவர்கள்,
அன்று ஹனிமூனுக்கு காரில் வந்த இளம் ஜோடி, இவர்கள் எறிந்த பாறையில் கண்ணாடி உடைந்து கணவன் ஸ்டியரிங்கில் தலை மோதி இறந்து விடுகிறான்,நீண்ட ஹாரன் ஒலிக்கிறது,மணல் மேட்டில் இருந்து இறங்கிய நவாசுதீன் ஹாரனை நிறுத்துகிறான், கணவனது பர்சை பறித்து பெரும் பணத்தை எடுத்துக் கொள்ள,
குற்றுயிராக இருந்த மனைவியை சுந்தர் தன் தேத்தா அனுபவிக்க துடிக்கிறான்,அவள் கழுத்தில் கட்டாரியை பதிக்கிறான்.கணவனது கையில் புதிய தங்க வாட்ச் சரியாக ஸ்டியரிங் வளையத்தின் உள் இருந்த horn வளையத்தின் இடையில் மாட்டிக் கொண்டிருக்க வாட்சை அவிழ்க்க முடியவில்லை,
சற்றும் தயங்காத நவாசுதீன் சித்திக்கி தன் வெட்டுக் கத்தியால் அவன் கையை வெட்ட ஓங்குகிறார், அப்போது connection ஆக கை துண்டாவதைக் காட்டாமல் தொலைவில் டீக்கடையில் மாமிசம் துண்டு போடுவதைக் காட்டுகின்றனர்.
நீண்ட ஹாரன் ஒலித்ததால் ரோந்தில் இருந்த இர்ஃபான்கான் இங்கு வரும் புல்லட் சத்தம் தொலைவில் கேட்க இவர்கள் காரை அப்படியே போட்டு விட்டு ஓடுகின்றனர்.
இர்ஃபான் இங்கு காரில் இருந்த பிணங்களைப் பார்க்கிறார், கீழே கிடந்த வெற்றுப் பர்சைப் பார்க்கிறார், ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில் கணவன் துண்டான கையில் இருந்து வாட்சையும் கூலிங் கிளாஸையும் களவாடிக் கொண்டு வட்டாரத்தின் ஒற்றை டீக்கடைக்கு வருகிறார் .
டீக்கடைக்காரன் உணவு தந்து தாஜா செய்ய அவன் கண்ணை ஊடுருவிப் பார்க்கிறார், அவன் சமீபத்தில் கடத்திய வழிப்போக்கப் பெண்ணை அடைத்து வைத்த அறையின் சாவியை மெதுவாகத் தர, இர்ஃபான் கண்ணில் வெறியுடன் அறைக்குள் செல்கிறார்.
இரண்டு கொள்ளையர்கள் எல்லைக்கு நடந்து அங்கிருக்கும் டீக்கடையில் மதிய உணவு கேட்கின்றனர். நவாசுதீனிடம் காசிருக்குமோ? என்று உணவு தர மறுத்த டீக்கடைக்காரன் கையில் நவாசுதீன் ஜநூறு ரூபாயைத் தர, வாங்கியவன் உணவு தருகிறான்.
இப்போது நவாசுதீன் அந்தப் பெண்ணுடன் டீக்கடைக்குள் பின் கதவு வழியே வர, போலீசைப் பார்த்த இரட்டையர்கள் நழுவி கைகழுவ, டீக்கடைக்காரன் வேறு ஐநூறின் மீதத்தை தர அழைக்க, இவர்கள் அதை சட்டை செய்யாமல் நழுவ எத்தனிக்க, இர்ஃபான் அதை வாங்கச் சொல்கிறார்.
நவாசுதீனுக்கு தேள் கொட்டியது போல இருக்கிறது.
இனி என்ன ஆகும்? என்ன ஒரு படம்.இது no country for old men (2007 ) படத்திற்கு முந்தி வந்துள்ளது, நேர்த்தியான படம், மனிதனின் வஞ்சம் பொல்லாதது, பெரியது, ஒன்றை ஒன்று விழுங்குவது, அதை இத்தனை நேர்த்தியாக காட்டியுள்ளார் இயக்குனர். #crime_noir,#silent_short,#short_film,#irfan_khan,#navasudin_siddiqui,#sundar_Dan_detha