அகோன்டுக் 1991ஆம் ஆண்டு வெளியான படம்,இது சத்யஜித்ரேவின் கடைசிப் படம், ரே முதுமையாலும், நோய்வாய்ப்பட்டு தளர்வுற்றிருந்தபடியாலும் , இதன் பெரும்பான்மையான காட்சிகள் வீட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டன , வழக்கம் போல ரேவின் சினிமாவுக்கே உரிய அழகியலை ஒருவர் இதிலும் நன்கு உணர முடியும், மிஷ்கின் படங்களில் நாம் கால்களுக்கு மட்டும் முக்கியம் தந்து படமாக்கப்பட்ட ஷாட்களை பார்ப்போம், அந்த கால்களுக்கு முக்கியம் தந்து ஷாட் வைக்கும் நேர்த்தியை ரே தன் படங்களில் 90 களிலெயே மிக அருமையாக கையாண்டுள்ளார். அத்தனை சிறந்த எக்ஸ்பெரிமெண்டலிஸ்ட் ரே.
இதில் மன்மோகன் மித்ரா [உத்பல் தத்] மற்றும் அவர் வீட்டார் பேசும் நீண்ட வரவேற்பறை உரையாடல்கள் மூலம் சத்யஜித் ரேவுக்குள் இருக்கும் சமூகம், மதம், ஜாதி, கடவுள், ஒழுக்கம், நாகரீகம் போன்றவற்றின் மீதான விஷய ஞானம் பார்வையாளருக்கு பிடிபடும், அவை கதையின் போக்கினூடே வரும், உரையாடல்களின் நுட்பத்தால் அவை பார்வையாளரை வசீகரிக்கும், உலக ஞானம் ஒரு சமுத்திரம் போன்றது ,அதை சினிமாவுக்குள் சற்றும் மேதாவித்தனமோ திணித்தலுமோ இன்றி நுழைப்பது என ரேவிடம் ஒரு இயக்குனர் படிக்க வேண்டும்.
இப்படத்தை ரே தான் எழுதிய அதிதி என்னும் சிறுகதையில் இருந்தே படமாக்கியுள்ளார், படத்தில் இய்றகையான ஒளி அமைப்புடன் எடுக்கப்பட்ட காட்சிகள், பார்வையாளர்களை கதையின் போக்கில் ஒன்றச்செய்து விடுகிறது. வழக்கமான ரேவின் படங்களைப் போலவே கொல்கத்தா தான் இதற்கும் கதைக்களம், தற்காலத்தில் ஒரு மேல்தட்டு குடுமபத்தில் நடக்கும் கதை, அனிலா போஸ் [மமதா ஷங்கர்] 33 வயது குடும்பத்தலைவி, கணவன் சுதீந்த்ரா பன்னாட்டு கம்பெனியில் உயர் அதிகாரி, செழிப்பான குடும்பம், மிகுந்த ஜாக்கிரதை உணர்வும் லட்சியமும் உடையவர் சுதீந்த்ரா போஸ் [திபாங்கர் டே], ஒரே மகன் சாட்யாஜி , சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழும் இவர்களுக்கு ஒரு இன்லேண்ட் லெட்டர் வருகிறது,20 வருடங்களுக்கு முன்னர் நம் குடும்பங்களுக்கு வாரம் தவறாமல் வரும் இன்லேண்ட் லெட்டரை மறக்க முடியுமா?!!!

அனிலாவுக்கு 35 வருடங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய அவளின் தாய் மாமா மன்மோஹன் மித்ரா கடிதம் எழுதியிருக்கிறார்,இவர்கள் அறியாத ஒரு குடும்ப நண்பர் மூலம் இவர்களின் விலாசம் கிடைத்தது என்கிறார். அதில் இத்தனை நாள் அறிவுத்தேடல்,உலகம் சுற்றல்,பணிகள் என இருந்து விட்டேன், என் பெற்றோர் இறுதிக்கடன் செய்ய கூட அங்கே வரமுடியவில்லை, உறவுகளின் தொடர்பை முற்றிலும் விலக்கியிருந்த நான் இப்போது என் ஒரே சொந்தமான உன்னைப் பார்க்க வருகிறேன், நான் ஆஸ்திரேலிய கண்டத்தை சுற்றிப்பார்க்க புறப்படும் முன்னர் , உன் வீட்டில் ஒரு வாரம் தங்கப் போகிறேன், இந்த அவசர யுகத்தில் யார் வீட்டுக்குள்ளும் விருந்தாளியாக நுழைந்து தங்குவது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாதது என அறிவேன்,
மன்மோகன் பேரனிடம் சொல்லும் மேஜிக் என்னும் வாக்கியம் |
என்னை நீ பார்த்த நினைவு உனக்கிருக்காது,உன்னை நான் பார்த்த நினைவு எனக்கிருக்காது, இது ஒரு வகையில் உனக்கு ஒரு தண்டனை தான், நான் போலியான மாமாவா?, உண்மையான மாமாவா? என உன் கணிப்புக்கே விட்டு விடுகிறேன், நீ என்னை ஏற்றாலும் மகிழ்ச்சி, என்னை ஏற்காவிட்டாலும் மகிழ்ச்சியே, அன்பு ஆசிகள்-மன்மோஹன் மித்ரா என முடிகிறது கடிதம். கடிதம் அருமையான தூய பெங்காலி எழுத்து நடையில் பிழையேயின்றி இருக்கிறது, இது சுதீந்த்ராவுக்கு சந்தேகத்தை இன்னும் கிளப்புகிறது, அனிலாவுக்கு கணவரை மீறி ஒன்றும் செய்ய முடியாது, இருந்தும் 35 வருட தாய் மாமன் உறவையும் சந்தேகிக்க முடியாது,
தன் கணவர் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதையும்,அவர் அதனால் அவமானப்படுவதையும் சகிக்க முடியாது,மகன் சாட்யாவுக்கு என உயிரோடு இருக்கும் ஒரே தாத்தா அவர் மட்டுமே, வருவது உண்மையானவர் என்று எப்படி உறுதியாக நம்ப முடியும்? யாரிடம் உறுதி செய்து கொள்வது? இவை எல்லாம் சேர்ந்து அனிலாவை அச்சுறுத்துகிறது, கணவர் சுதீந்திரா முதலில் தனக்கு இவர் வருகையில் உடன்பாடு இல்லை என்றவர் ,மனைவியின் பச்சாதாபத்துக்கு உரிய தோற்றத்தினாலும், அவரை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்தினாலும், அவரின் வருகைக்கு சம்மதிக்கிறார், மாமாவின் வருகைக்கு வீடே தயாராகிறது.
ரே இப்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ்ஸில்,ஒட்டப்பட்ட பயணிகள் பட்டியலில் மிக அருகாமையில் காட்டுகிறார், அதில் டைப் செய்யப்பட்ட மன்மோகன் மித்ரா என்னும் பெயர் கன்ஃபர்ம்ட் என்றிருக்கிறது, இப்போது மன்மோகன் மித்ரா படிக்கும் நாளிதழை மட்டும் நாம் பார்க்கிறோம்,பின்னர் அவருக்கு இரவு உணவு வருவதையும்,இரு கைகள் அவற்றை திறப்பதையும் பார்க்கிறோம், ரயில் கொல்கத்தா வந்தடைகிறது, இப்போது போர்டரின் கால்களையும், மன்மோகன் மித்ராவின் கால்களுக்கும் மட்டுமே க்ளோஸ் அப், நாம் தன் இலக்கை நோக்கி நடைபோடும் பூட்சு கால்களை மட்டுமே பார்க்கிறோம், டாக்ஸியில் மீட்டர் விழுகிறது,

இங்கே வீட்டில் குறித்த நேரத்தில் அனிலா தன் மகனை வாசலில் நிறுத்தி தாத்தா வந்தவுடன் குரல் கொடுக்க சொல்கிறாள் ,தன் கணவனின் ஆலோசனைக்கேற்ப வீட்டு வரவேற்பறையில் இருந்த பஞ்சலோக சிலைகளையும், யானை தந்தத்தால் செய்த பொம்மைகளையும் எடுத்து பீரோவில் வைத்து பூட்டுகிறாள், ஆனாலும் அதை அரைமனதுடனே செய்கிறாள், இப்போது டாக்ஸியில் இருந்து இறங்கிய மன்மோகன் மித்ராவை நாம் முழுதுமாய் பார்க்கிறோம், [இதில் மன்மோகன் மித்ராவாக தோன்றிய உத்பல் தத், ஹிந்தி மற்றும் பெங்காலி சினிமாவின் சிறந்த அண்டர்ரேட்டட் நடிகர், மிகச்சிறந்த நாடகக் கலைஞரும் கூட, இவரின் கோல்மால் ஹிந்திப் படத்தின் பவானி சங்கர் என்னும் முதலாளி கதாபாத்திரத்தை தான் தில்லுமுல்லு படத்தில் ஸ்ரீராமச் சந்திரமூர்த்தியாக தேங்காய் சீனிவாசன் செய்திருப்பார்.]
அனிலா மாமாவிடம் ஆசி வாங்கினாலும் அவரை மாமா என அழைக்க நா எழவில்லை, சாட்யாவும் தயக்கத்தின் மீதத்தினால் தாத்தா என அழைப்பதில்லை, இதை மன்மோகன் மித்ரா நன்கு உணர்ந்து கொள்கிறார், தான் பதில் கடிதம் எதிர்பார்த்ததாகவும், வராததால் இங்கே கிளம்பி வந்து விட்டதாகவும், இவளின் பதில் எதுவாக இருந்தாலும் ஏற்று தங்குவது, புறப்படுவதை முடிவு செய்து கொள்ள முடியும் என்கிறார், அனிலா அவரை அதற்கு அவசியமே இல்லை நீங்கள் இங்கே விருப்பம் போல தங்கலாம் என்கிறாள், மன்மோகன் மித்ரா அவளுக்கு தன் பாட்டி சொன்ன ஸ்ரீ கிருஷ்ணரின் 108 நாமாவளியில் இருந்து 4 வரியை பாடிக்காட்ட அவளுக்கு மிகுந்த நம்பிக்கை வந்து விடுகிறது,

மாமாவை மாடியில் இருக்கும் தன் காலம் சென்ற மாமனாரின் அறையில் தங்க வைக்கிறாள், குளித்து விட்டு வந்தவருக்கு அறுசுவை விருந்தை பறிமாறுகிறாள். தான் கல்கத்தா உணவு சாப்பிட்டு 35 வருடம் ஆகிறதை சொல்கிறார் மாமா, அவருக்கு தாயின் கையால் உண்ட உணவு நினைவுக்கு வருகிறது, பேரன் சாட்யா தாத்தாவிடம் பிரியத்துடன் ஒட்டிக்கொள்கிறான், தன் நண்பர்களுக்கும் அவரை பின்னால் இருக்கும் தோட்டத்தில் வைத்து அறிமுகம் செய்கிறான்,அவர் அவனுக்கு தான் வைத்திருந்த வெளிநாட்டு காசுகளை அது எந்த நாட்டைச் சேர்ந்தது,அதன் பெயர் என்ன என விளக்கித் தருகிறார்.சாட்யா நாணயம் சேமிப்பவர்களை Numismatics என்பார்கள் என விஷய ஞானத்துடன் சொன்னதைக் கேட்டு வியக்கிறார்,
அனிலா,மன்மோகன் மித்ரா,சாட்யா உணவு மேஜையில் |
அவனுக்கும் அனிலாவுக்கும் தன் பயணத்தைப் பற்றி நிறைய சொல்கிறார், அனிலா அவரிடம் நீங்கள் ஏன் வீட்டை விட்டு வெளியேறினீர்கள்? எனக் கேட்க, அவர் அதற்கு இரண்டு விஷயங்கள் உந்துதலாக இருந்தன, தான் கற்ற ஜெர்மானிய மொழியில் இருக்கும் wanderlust[அலைந்து திரிபவன்] என்னும் சொல்லும், தான் பிஏ படிக்கையில் கண்ட நாளிதழில் வெளியான ஒரு ஆதிவாசி வரைந்த காட்டெருமையின் குகை ஓவியமுமே தன் வாழ்வின் லட்சியம், ஊர் சுற்றுதல் என்று இலக்கு நிர்ணயிக்க வைத்ததாக சொல்கிறார்,அதை முன்னிட்டு லண்டன் சென்றவர், அங்கேயிருந்து அமெரிக்கா, மற்றும் அனைத்து ஐரொப்பிய நாடுகள்,மற்றும் தான் படித்த இளங்கலை ஆந்த்ரோபோலஜி பட்டப்படிப்பு, அதன் பின்னர் ஐநாவில் ஆந்த்ரோபோலஜிஸ்டாக வேலை, அதன் பின்னர் சுமார் 41 பழங்குடிகள் நாகரீகங்களை தான் அவர்களின் இனத்தோடு இனமாக தங்கி ஆராய்ந்தது எல்லாவற்றையும் சுவை படச் சொல்கிறார்.
இதன் மூலம் மாமா தேசாபிமானம், பாஷாபிமானம்,மத அபிமானம்,ஜாதி அபிமானம், கடவுள் அபிமானம் விட்டவராக திகழ்வதை அனிலா அறிகிறாள், அவர் குடும்பத்தில் இத்தகைய மேலான நற்குணங்களுடன் உயிரோடு இருக்கும் ஒரே நபரான மாமாவை மிகவும் மதிக்கிறாள்,பேரனுக்கும் அவரை மிகவும் பிடித்துப் போகிறது, இப்போது அனிலாவின் கணவர் அலுவலகத்தில் இருந்து அழைக்கிறார், மாமா வந்ததை அறிந்தவர்,அவரிடம் பாஸ்போர்டை வாங்கி சோதித்துப் பார்க்கச் சொல்கிறார்,அனிலா மறுக்கிறாள்,வந்திருப்பது தன் மாமாவே தான் என்னும் நம்பிக்கை தனக்கு இருப்பதாக உறுதியாக கூறுகிறாள். அப்படி உங்களுக்கு வேண்டுமானால் அவரை சோதனை செய்து கொள்ளுங்கள் என்கிறாள்.
மாலை வேலை முடிந்ததும், சுதீந்த்ரா வருகிறார், மனைவின் வேண்டுகோளுக்கிணங்க மாமாவிடம் ஆசி பெற குனிந்தவரை மாமா தடுத்தவர் ,என் மேல் முழு நம்பிக்கை ஏற்பட்டவுடன் ஆசி வாங்குவதே நல்லது என்கிறார், மருமகனின் முகத்தில் சந்தேகம் குடிகொண்டிருப்பதை கண்டவர், தன் பாஸ்போர்டை எடுத்து அவரிடம் தந்து படிக்கச் சொல்லுகிறார். அதை படித்த சுதீர்ந்திரா அவரை மாமா தான் என நம்பிய அதே வேளையில் இடியாக ஒன்றைச் சொல்கிறார். இப்போது போலி பாஸ்போர்ட் தயாரிப்பதும் பெறுவதும் ஒன்றும் கடினமில்லை, யார் வேண்டுமானாலும் போலி பாஸ்போர்டை காட்டி தான் இன்னார் என சொல்லக்கூடும், உண்மையான நபரை புரிந்து கொள்ள சற்று காலம் ஆகும், இப்போது சொல், நான் என் பெட்டியைக் கூட திறந்து வெளியே எதையும் அடுக்கவில்லை, உன் சொல்லுக்காகத்தான் காத்திருக்கிறேன், இப்படியே கிளம்பிவிடுகிறேன், என்கிறார்,

சுதீந்திரா,அதெல்லாம் தேவையே இல்லை,என மழுப்பி கீழே மனைவியிடம் வருகிறார்.தனக்கு மாமாவை இன்னார் என கண்டுபிடிப்பதில் குழப்பம் இருப்பதாகவும், அதனால் தன் நண்பனும் நகைச்சுவை நடிகனுமாகிய சந்தாவையும் அவரின் மனைவியையும் மாமாவைப் பற்றிய உண்மைகளை வெளிக் கொணர வீட்டுக்கு அழையா விருந்தாளிகள் போல வரவழைக்கப் போகிறேன் என்கிறார்,மாலையில் அவர்கள் வந்ததும் மாமா தன் பயணம் பற்றியும் உலக அறிவு,சமூக சிந்தனை, தத்துவ விசாரங்கள் பற்றியும் மிக நுட்பமாக உரையாடுகிறார், கடைசியாக தன் புத்திகூர்மையால் வந்திருப்பவர்கள் எதேச்சையாக இங்கே வரவில்லை, சுதீந்திராவால் ஆழம் பார்க்க வரவழைக்கபட்டதை அறிகிறார். மனம் நோகிறார். அங்கே அனைவரும் மாமாவிடம் மன்னிப்பும் கேட்க அன்று சுமூகமாக இரவு உணவு அருந்துகின்றனர்.
மறுநாளே அனிலா முந்தைய நாள் ஒளித்து வைத்த பஞ்சலோக சிலைகளையும், தந்த சிலைகளையும் வரவேற்பறையில் திரும்ப பார்வைக்கு வைக்கிறாள், அவற்றை பார்வையிட்ட மன்மோகன்,நேற்று இவற்றை நான் பார்க்கவில்லையே என்கிறார், அனிலா அவை வேறொரு அறையில் இருந்தன,இன்று இடம் மாற்றியிருக்கிறேன் என சமாளிக்கிறாள். சந்தேகம் மறைந்து உறவு துளிர்விடும் அற்புதமான கட்டம் அது, ரே அதை மிக அருமையாக காட்சிப்படுத்தியிருப்பார். அன்று இரவு அனிலா அகதா க்ரிஸ்டியின் ஒரு க்ரைம் நாவல் ஒன்றை தூக்கம் வரும் வரை படிக்கிறாள், திடீரென அவளுக்கு பொறி தட்டுகிறது, இவரின் தாத்தா [அம்மாவின் அப்பா] சாகும் முன்னர் சொத்தை பாகம் பிரித்து உயில் எழுதியது அவளுக்கு நினைவிருக்கிறது,அதில் இவரின் மறைந்த மூத்த மாமாவுக்கும், அம்மாவுக்கும் பாகம் வந்ததும் நினைவிருக்கிறது,தாத்தா தன் இளைய மகன் மீது வைத்த அளவு கடந்த பாசத்தை வீட்டார் சொல்லி அதுவும் நன்கு நினைவிருக்கிறது, அப்படியென்றால் இங்கே வந்திருக்கும் மாமா அன்று பிரிக்கப்பட்ட சொத்தில் தன் பாகத்தை வாங்கத்தான் இங்கே வந்திருக்கிறாரா? அந்த சொத்தில் மாமாவுக்கு பங்குண்டா?

அந்த சொத்தை நிர்வகித்த வக்கில் யார்? அதற்கு எக்ஸிக்யூட்டர் யார்?என பல குழப்பங்கள் ஒரு சேரக் கிளம்புகின்றன,கணவரிடம் இதைப் பகிர,அவருக்கு வந்திருப்பவர் போலியா, அல்லது நிஜமானவரா?என அறிய வேண்டிய கட்டாயத்துடன், மேற்கண்ட கேள்விகளும் சேர்ந்து கொள்கின்றன.உடனே டெலிபோன் டைரக்டரியில் இருந்து வக்கீலின் எண்ணை எடுத்தவர்,அவருக்கு அந்த அகால நேரத்தில் அழைக்கிறார், அவர் உயிருடன் இருப்பதையும் வீட்டார் மூலம் அறிகிறார் . மறு நாளே அவரைப் பார்க்க வர நேரம் வாங்குகிறார். அங்கே சென்றவர் ஒரு 85 வயது கிழ வக்கீலை பார்க்கிறார், அவருக்கு செவித்திறன் மிகவும் குறைந்து விட்டிருக்கிறது, ஒப்புக்கு ஒரு செவித்திறன் கருவியை அணிந்திருந்தாலும் அவருக்கு இவர் சொல்லும் எதுவுமே கேட்பதில்லை, அவருக்கு சுதீந்திரா கத்தி விளக்க திராணியற்றுப் போன நிலையில் தன் வெறும் உதட்டை அசைத்து மெதுவாக வாக்கியமாக கேள்விகளைக் கேட்க , அதை கிழவர் கிரகித்து பதில் சொல்கிறார். மிகவும் இயல்பான நடையில் அமைந்திருந்த நகைச்சுவைக் காட்சி அது,ரேவின் படங்களில் இருக்கும் யதார்த்தமான எள்ளல்களில் க்ளாசிக் தன்மையை நமக்கு உணர்த்தும்.
வக்கில் கிழவர், மாமா மன்மோகனுக்கு சொத்தில் பங்கு உண்டு, அச்சமயம் தான் சிங்கப்பூர் சென்றிருந்தமையால் வேறொரு எக்ஸிக்யூட்டர் நியமிக்கப்பட்டு, அது குறித்து மாமாவுக்கும் தெரிவிக்கப்பட்டதாக சொல்லுகிறார், இப்போது சுதீந்திராவுக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது, அப்போதே பாகம் பிரிக்கப்பட்டு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் போல வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட அத்தொகை மிகவும் பெரிய தொகை, இப்போது வட்டியுடன் பெருகியிருக்கும், அதை மன்மோகன் மித்ரா என்னும் பெயரில் போலியாக ஒருவர் அடித்துக்கொண்டு போவதில் சற்றும், உடன்பாடு இல்லை, வங்கியில் அடையாளத்தை நிரூபிக்க பாஸ்போர்ட் போதுமானது என வக்கில் சொன்னது வேறு இவருக்கு சந்தேகத்தை கூட்டுகிறது, எப்படி வந்திருப்பது உண்மையானவர் என கண்டுபிடிப்பது? தன் கிரிமினல் வக்கில் நண்பர் செங்குப்தாவை அன்று மாலை வீட்டுக்கு அழைக்கிறார் சுதீந்திரா.
இனி என்ன ஆகும்?!!! மன்மோகன் மித்ரா உண்மையானவரா?போலியா? என்பதை வக்கில் செங்குப்தா கண்டறிந்தாரா? மாமா தன் சொத்துக்களை எக்ஸிக்யூட்டரிடமிருந்து பெற்றாரா? அவற்றை என்ன செய்தார்? மாமா ஆஸ்திரேலியா சென்றாரா? போன்றவற்றை படத்தில் பாருங்கள், செங்குப்தா , சுதீந்திரா, அனிலா இவர்களுக்குடனான அந்த வரவேற்பறை உரையாடல் மிகவும் முக்கியமானது. அங்கே அனிலா தம்பூர் என்னும் தந்தி வாத்தியத்தை மீட்டி பாடும் இறைவனின் மீதான பக்திப்பாடல் மிக அரிய, அழகான பாடல். அது தாகூரால் இயற்றப்பட்ட பாஸிலோ கஹாரோ பீனா என்னும் மிக இனிய பாடலாகும், வாழ்க்கையில் பணம் தான் பிரதானமா? உறவு என்பது என்ன? குடும்பம் என்பது என்ன? நாகரீகம் என்பது என்ன போன்ற கேள்விகளுக்கு மன்மோஹன் மித்ரா தன் 35 வருட தனிமனிதனின் அறிவுத்தேடல் மூலம் சொன்ன பதில்களை அவசியம் பாருங்கள்,
இந்திய சினிமா வரலாற்றில் இது மிக முக்கியமான படம், உரையாடல் மூலமாகவே ஒரு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தும் கலை எல்லோருக்கும் கைவந்து விடாது, அந்த நேர்த்தியில் ரே தான் எத்தகைய ஆட்டியர்+Auteur
என்பதை இப்படம் மூலம் ஆணித்தரமாய் நிரூபிக்கிறார். உலக சினிமா ரசிகர்கள், தேடிப்பார்க்க வேண்டிய படம், இதை அடுத்த முறை டிடியில் ஒளிபரப்பும் போது தவறாமல் பாருங்கள். உத்பல் தத் சொற்பம் படங்களே செய்திருந்தாலும் அவரின் பெயரை இது போன்ற நல்ல தரமான படைப்புகள் மூலம் நிலைநாட்டியுள்ளார். படத்தின் ஒப்பற்ற இசையும் சத்யஜித் ரேவே செய்திருக்கிறார், படத்தின் உயிரோட்டத்துடன் கலந்த ஒன்று இதன் பிண்ணனி இசை.
அகோன்டுக்=டோண்ட் மிஸ் இட்!!!

அனிலா பாடும் பாஸிலோ கஹாரோ பீனா என்னும் ரபீந்த்ரநாத் தாகூரின் மிக அருமையான பாடல்