பெரிய கார்பொரேட் கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்கள் சக ஆண் ஊழியர்களிடம், உயர் அதிகாரிகளிடம் வழக்கமாக கேட்கும் பொய்யான வாக்குறுதிகளை, சபலம் தோய்ந்த வார்த்தைகளை,சக ஊழியருக்கு அல்லது உயர் அதிகாரிக்கு அடிபணிய மறுக்கும் பட்சத்தில் அந்தப்பெண் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களை, வேலை மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை,மிரட்டல்களை மிக நேர்மையாக பதிவு செய்த படம் சுதிர் மிஷ்ராவின் இன்கார்|Inkaar [மறுத்தல் அல்லது மறுதலித்தல் ], இப்படம் 2013 ஜனவரி மாதம் தான் வெளியானது.
சுதிர் மிஷ்ரா ஹிந்தி மாற்று சினிமாவின் நம்பிக்கை ஒளி ,இவரின் ஹஸரான் க்வாய்ஷெய்ன் அய்ஸி இந்திய எமர்ஜென்சி குறித்தும், மார்க்ஸிஸம், நக்ஸல்பாரி குறித்தும், முக்கோண காதல், அமர காதல், சுயநலக் காதல் குறித்தும் நேர்பட பேசிய தனித்துவமான முயற்சி, அதில் கே.கே.மேனன் நடித்த சித்தார்த்தா என்ற கதாபாத்திரமும் சித்ராங்கதா சிங் நடித்த கீதா என்னும் கதாபாத்திரமும்,ஷைனி அஹுஜா தோன்றிய விக்ரம் என்னும் கதாபாத்திரமும் மாற்று சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
இன்காரும் அதே இயக்குனர் சுதிர் மிஷ்ரா,Hazaaron Khwaishein Aisi படத்தில் கீதாவாக தோன்றிய சித்ராங்கதா சிங், சர்ச்சைக்குரிய லஜ்ஜையில்லா வேடங்களில் மட்டுமே நடிக்கும் அர்ஜுன் ராம்பால்,மற்றும் அபிமான பாலிவுட் நட்சத்திரங்கள் தோன்றிய பிரமாதமான படம்,அப்படியே இன்றைய தெகல்கா நிறுவனத்தின் தருண் தேஜ்பால் சம்பவத்தை திரையில் தோலுரித்துக் காட்டும்படியான படைப்பு என்றால் மிகையாகாது,இப்படத்தை செட் போட்டு எடுக்காமல் தத்ரூபத்துக்காக விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் குறித்து மிக அருமையாக தீஸிஸ் செய்து எம் என் சி விளம்பர தயாரிப்பு நிறுவனங்களான Leo Burnett Worldwide மற்றும் Grey Worldwide இன் அலுவலகத்திலேயே அனுமதி பெற்று படம் பிடித்திருந்தார் சுதிர் மிஷ்ரா. படத்தை பார்த்தால் ஒருவர் அதன் ரியாலிசத்தை உணர முடியும்.
இன்கார் வெளியாகி ஒருவருடம் கூட முடியவில்லை அதே போன்ற கேவலமான சம்பவம் ஸ்ட்ரீட் ரியலாக இந்திய கார்பொரேட் அரங்கில் நடந்திருக்கிறது,இது மிகவும் அருவருக்கத்தக்கது,அதுவும் நம் அபிமான ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டிநீரோ தன் மகளுடன் இந்தியா வந்திருந்த பொழுது,அவருக்கு காரியதரிசியாக செயல் பட்ட பெண்ணிடம் தருண் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்.
இன்கார் படத்தின் முன்னோட்டம்இன்காரும் அதே இயக்குனர் சுதிர் மிஷ்ரா,Hazaaron Khwaishein Aisi படத்தில் கீதாவாக தோன்றிய சித்ராங்கதா சிங், சர்ச்சைக்குரிய லஜ்ஜையில்லா வேடங்களில் மட்டுமே நடிக்கும் அர்ஜுன் ராம்பால்,மற்றும் அபிமான பாலிவுட் நட்சத்திரங்கள் தோன்றிய பிரமாதமான படம்,அப்படியே இன்றைய தெகல்கா நிறுவனத்தின் தருண் தேஜ்பால் சம்பவத்தை திரையில் தோலுரித்துக் காட்டும்படியான படைப்பு என்றால் மிகையாகாது,இப்படத்தை செட் போட்டு எடுக்காமல் தத்ரூபத்துக்காக விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் குறித்து மிக அருமையாக தீஸிஸ் செய்து எம் என் சி விளம்பர தயாரிப்பு நிறுவனங்களான Leo Burnett Worldwide மற்றும் Grey Worldwide இன் அலுவலகத்திலேயே அனுமதி பெற்று படம் பிடித்திருந்தார் சுதிர் மிஷ்ரா. படத்தை பார்த்தால் ஒருவர் அதன் ரியாலிசத்தை உணர முடியும்.
இன்கார் வெளியாகி ஒருவருடம் கூட முடியவில்லை அதே போன்ற கேவலமான சம்பவம் ஸ்ட்ரீட் ரியலாக இந்திய கார்பொரேட் அரங்கில் நடந்திருக்கிறது,இது மிகவும் அருவருக்கத்தக்கது,அதுவும் நம் அபிமான ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டிநீரோ தன் மகளுடன் இந்தியா வந்திருந்த பொழுது,அவருக்கு காரியதரிசியாக செயல் பட்ட பெண்ணிடம் தருண் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்.
தருண் தேஜ்பால்:-
இன்காருக்கும் தருண் தேஜ்பால் இச்சம்பவத்துக்கும் ஒரே வித்தியாசம் அந்தப் படம் கார்பொரேட் விளம்பரத் தயாரிப்பு நிறுவனத்தில் நடக்கும் கதை, நிஜத்தில் இது தெகல்கா என்னும் கார்பொரேட் பத்திரிக்கை நிறுவனத்தில் நடந்திருக்கிறது, படத்தில் வருவது போல துணிந்து புகார் தந்த அந்தப் பெண், எக்காரணம் கொண்டும் புகாரை திரும்ப வாங்காமல் இருக்க வேண்டும், சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கிடையே பணிக்குச் செல்லும் பெண்களுக்கு எதிரான அத்துமீறலாக தான் நாம் இதைப் பார்க்க வேண்டும், அவள் மட்டும் என்ன ஒழுங்கா?தனிப்பட்ட விரோதம், குரோதம் காரணமாகக் கூட தருண் தேஜ்பாலை வீழ்த்தியிருக்கக் கூடும் என்ற ரீதியில் இதை பார்க்கக் கூடாது,

தருண் தேஜ்பால் |
விசாரணையில் தருண் தேஜ்பால் அந்தப் பெண்ணின் சம்மதத்துடனே அவரிடம் தான் உரிமை எடுத்துக் கொண்டதாக சொல்லி வழக்கை திசை திருப்பவில்லை, தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, தனது சக பத்திரிகையாளரின் மகளாகவும், பின்னர் சக பத்திரிகையாளராகவும் அறிந்த பெண்ணின் நம்பிக்கையை உடைத்ததற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். தன்னுடைய எடை போடும் திறனில் ஏற்பட்ட பிறழ்வுக்காக வருந்துவதாக சொல்கிறார். இந்த பிறழ்வுக்கு பரிகாரமாக காந்தி போல, ஆறு மாதங்கள் தெகல்கா ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி இருப்பதாகவும் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டிருக்கிறார்,என்ன துணிச்சல் பாருங்கள்?அவரே தவறும் செய்து விட்டு அவரே தண்டனையும் தந்துகொண்டால் அதற்கு எதற்கு போலீஸ்,நீதித்துறை இவை எல்லாம்?தருண் தேஜ்பாலின் இந்த இழிசெயல் தண்டிக்கப்பட் வேண்டியது.
இதே நேரத்தில் பழைய சீனியாரிட்டி கொண்ட மகா கேடிகளையும் இங்கே இனம்கண்டு சரியாக தண்டிக்கவேண்டும்,சென்ற மாதம் காங்கிரஸ் எம் பி பீதாம்பர குருப் நடிகை ஸ்வேதா மேனோனிடம் ஒரு கணவன் தன் மனைவியிடம் உரிமையோடு நடப்பதைப் போல பொது மேடையில் வைத்து அவருக்கு பாலியல் தொல்லை தந்தார்,அதற்கு வீடியோ சாட்சியும் உண்டு,புகாரும் உண்டு,என்ன தண்டனை கிடைத்தது பீ..குரூப்புக்கு?
அவ்வளவு ஏன்? முன்னாள் ஆந்திர கவர்னர் நாராயண தத் திவாரி,என்னும் குடு குடு கிழம்[அப்போது 83 வயது] தன் ராஜ்பவன் படுக்கை அறையில் மூன்று கல்லூரிப் பெண்களுடன் த்ரீசம் ஆர்ஜியில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டாரே?[காரியம் ஆவதற்கு பெறவேண்டிய லஞ்சமாக கல்லூரிப் பெண்களை தருவித்தாராம்] 2009 பிடிபட்டவருக்கு இன்னும் டிஎன் ஏ சோதனை எடுத்து தண்டனை தருகிறார்கள் பாருங்கள்.இன்னும் பல உண்டு,இந்த இரு சாம்பிள் சம்பவங்கள். காங்கிரஸிற்கு இது ஒன்றும் புதிதல்ல என நினைக்க வைக்கிறது,பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு யாராவது பெரும்புள்ளி கடும் தண்டனை அடைந்தால் தான் சற்றேனும் மட்டுப்படும் என நினைக்க வைக்கிறது.குற்றவாளிகள் தண்டிக்கப்படுவரா பார்ப்போம்?!!!