
ப்ளட் சிம்பிள் 1984ஆம் ஆண்டு கோயன் பிரதர்ஸ் கதை, திரைக்கதை தயாரிப்பு ,இயக்கத்தில் வந்த நியோ நாய்ர் த்ரில்லர் வகைப்படம், இது அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டியூட்டின் ஆகச்சிறந்த 100 த்ரில்லர் படங்களில் 98 ஆம் இடத்தில் உள்ளது. மேலும் கோயன் சகோதரர்களின் முதல் படம், இயக்குனர் பார்ரி சோனன் ஃபீல்டுக்கும் ஒளிப்பதிவாளராக முதல் படம், அவர் பின்னாளில் இயக்கிய மென் இன் ப்ளாக், வைல்ட் வைட் வெஸ்ட் போன்றவை பற்றி நீங்கள் அறிவீர்கள். கார்ட்டர் பர்வெல்லின் மிரட்டல் இசை சொல்லவே வேண்டாம். கோயன் பிரதஸுடன் இணைந்து இவர் 13 படங்கள் செய்துள்ளாராம்.

இதில் இவர்கள் வில்லனை சித்தரித்திருந்த விதம்!!!இவர்களின் படங்களில் வரும் வில்லன்கள் பயங்கர தோற்றத்துடன் இருக்கமாட்டார்கள்.நாம் அன்றாடம் பேசும் பழகும் சாமான்ய மனிதர்களை போலத் தான் இருப்பர். ஆனால் விளைவு? இவர்களின் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரங்களை வாழ்நாளில் ஒருவர் சந்திக்காமல் இருப்பதே நல்லது என்பேன்.
கோயன் பிரதர்ஸ் எப்போதும் இயக்குனர் ஸ்டான்லி க்யூப்ரிக்கின் படைப்புகளை சிலாகிப்பார்கள், இவர்களது படைப்புகளிலும் அவை நடிகர்களின் ஐ லெவல் க்ளோசப் ஷாட் காட்சிகளாக வெளிப்பட்டிருக்கும். இப்படத்திலும் வாஷ்பேசின் குழாயிலிருந்து நீர்த்துளி விழுவதைக் கூட வித்தியாசமாய் எடுத்திருப்பார்கள். இவர்களின் படத்தை கவனித்து பார்த்தால் 10 பதிவு எழுத மேட்டர் இருக்கும். எப்போதும் ஒவ்வொரு விஷயத்தையும் டீட்டெய்லாக சிந்திப்பவர்கள். சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் இப்படம்.
============000============
பெரும்பாலும் கோயன் பிரதர்ஸின் படங்கள் ஒரு வித அங்கலாய்பான நேரேஷனுடன் துவங்கும்.அப்படி இப்படத்தில் லாரன் விஸ்ஸர் என்னும் ப்ரைவேட் டிடெக்டிவ் பேசும் முதல் வசனம்.

============000============
படத்தின் கதை:-
டெக்ஸாசின் சிற்றூரில்,மனைவி மீது சந்தேகத்தின் உச்சத்திலிருக்கும் பார் ஓனர் கணவன் மார்ட்டி (டான் ஹெடாயா). அவனிடம் அனுதினமும் சித்திரவதைக்கு ஆளாகும் அழகிய மனைவி அப்பி (ஃப்ரான்கஸ் மெக்டார்மண்ட்-ஜோயல் கோயனின் மனைவி) , கணவன் பாரில் வேலை செய்யும் பார் மேனேஜர் ரே (ஜான் கெட்ஸ்)உடன் கள்ளக்காதல் வைத்துக் கொள்கிறாள்.
சந்தேக புத்தி கணவன் மார்ட்டி வயதான ப்ரைவேட் டிடெக்டிவ் லாரன் விஸ்ஸர் (M.எம்மெட் வால்ஷ்) கொண்டு இருவரையும் துப்பறிகிறான். இது தெரியாமல் அப்பியும், ரேயும் ஊரை விட்டு ஓடி ஒரு மோட்டலில் தங்குகின்றனர். அந்த டிடெக்டிவ் இவர்கள் படுக்கையில் உல்லாசமாயிருப்பதை புகைப்படங்கள் எடுத்து மார்டியிடம் காட்டுகிறான், கொதித்த கணவன் விடியலில் மோட்டலுக்கு போன் செய்தவன் .
’’லவ்வர் பாய்’’ . என்ன சாந்தி முஹூர்த்தம் நல்லா நடந்துச்சா? எனக்கு அவளுக்கு கள்ளக்காதலன் இருப்பான என தெரியும், ஆனால் நீ என தெரியாது. உனக்கு அவள் தன் சோக கதைகளை கூறி வலையில் வீழ்த்தியிருப்பாளே?, ஆனால் அவளுக்கு உன்னைப்போல் எத்தனையோ பாய்ஃப்ரெண்ட்ஸ், உன்னையும் ஒருநாள் கழற்றி விட்டுவிடுவாள், அது அவள் இயல்பு . எப்போதும் என் பார் பக்கம் வராதே!! நான் சுட்டுவிடுவேன் என மிரட்டி போனை வைக்கிறான் .
ரேவுக்கு ஊரை விட்டு வெளியேற பணம் தேவைப்படுகிறது, மோட்டலில் தங்குவது ஆபத்தானது என தெரிந்து கொண்டவன் தன் வீட்டுக்கே அப்பியை கூட்டிப்போய் குடும்பம் நடத்த ஆரம்பிக்கிறான்.அங்கும் அடிக்கடி போன் செய்த மார்ட்டி அப்பி போன் எடுத்தாலும் ரே போனை எடுத்தாலும் பேசாமல் மவுனம் சாதிக்கிறான். ரேவுக்கு தன் காதலி மேல் சந்தேகம் வருகிறது, இவளுக்கு தன்னை தவிர வேறொரு காதலன் இருக்கிறான் என உறுதியாக எண்ணுகிறான்.அப்பியோ ரேவுக்கு தன்னை தவிற இன்னொரு இளம் காதலி இருப்பாள் போலும்,என குழம்புகிறாள்.
எதனால் கணவனை வெறுக்கிறாய் என அப்பி யிடம் இவன் கேட்டதற்கு, அவன் ஒரு குதப்புணர்ச்சி விரும்பி, நான் ஒரு முறை நீ ஏன் இப்படி ஆனாய் ? என கேட்டதற்கு , என்னை மனநல மருத்துவரிடம் கூட்டிப் போனான், மருத்துவர் எனக்கு ஒன்றுமில்லை என சொன்னதற்கு மருத்துவனை மாற்றிவிட்டான். என்கிறாள். ரே ஹுஹூம் என்று இதை அலட்சியமாக கேட்கிறான்.
இப்போது அப்பிக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்பட, முன்பு கணவன் மார்ட்டி தனக்கு பரிசளித்த இத்தாலியன் லேடீஸ் பிஸ்டலை மார்ட்டியின் வீட்டுக்குள் இருவருமாக நுழைந்து எடுத்துக்கொண்டு வருகின்றனர். அப்பி பிஸ்டலை தன் கைப்பையில் வைத்துக்கொள்கிறாள்.

இப்போது அப்பிக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்பட, முன்பு கணவன் மார்ட்டி தனக்கு பரிசளித்த இத்தாலியன் லேடீஸ் பிஸ்டலை மார்ட்டியின் வீட்டுக்குள் இருவருமாக நுழைந்து எடுத்துக்கொண்டு வருகின்றனர். அப்பி பிஸ்டலை தன் கைப்பையில் வைத்துக்கொள்கிறாள்.
இப்போது ரே , மார்ட்டியை சந்தித்து தன் சென்ற வார சம்பளத்தை வாங்க போகிறான். அங்கே மார்ட்டி இவனை கடுமையாக எச்சரிக்கிறான். பணம் கொடுக்க முடியாது என்கிறான். நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என பார்க்கிறேன் என்கிறான்.
மார்ட்டி துப்பாக்கியை தன் அறையில் தேடியவன் கோபமாகி,இவர்களின் வீட்டுக்குள் விடியலில் நுழைகிறான். அங்கே வந்த அப்பி செல்ல நாயைக் கண்டு அதை கொஞ்ச,பின்னால் இருந்து இவன் இவளை கழுத்தை நெரித்து கொல்ல எத்தனிக்கிறான், சுதாரித்த அப்பி லாவகமாக, மார்ட்டியை விதைக்கொட்டையில் உதைத்தவள், அவன் துடிக்கையிலேயே இவனின் ஆட்காட்டி விரலையும் பலமாக பிடித்து திருப்பி ஒடித்தும் விடுகிறாள், அங்கே துப்பாக்கியோடு வந்த ரே இவனை துரத்த கறுவிக்கொண்டே காரை கிளப்புகிறான் ,மார்ட்டியின் செல்ல அல்சேஷன் நாயும் காருக்குள் லாவகமாக பாய்கிறது.(அருமையான காட்சியது)

படுவேகத்தில் காரை விரட்டியவன் எதிர்திசையில் காரை செலுத்த, அது ஒரு முட்டு சந்து, போன வேகத்தில் காரை திருப்பிக்கொண்டு வந்து இருவரையும் மீண்டும் திட்டி விட்டு அகல்கிறான். இப்போது முறிந்த விரலுக்கு ஸ்பெஷல் ஸ்டீல் ப்ரேஸிங் போட்டுக்கொண்டு திரியும் இவனை. எல்லோரும் கேவலமாக பார்க்கின்றனர். ஒரு இளைஞன் இவனைப்பார்த்து Hey mister, how'd you break your pussyfinger? எனக்கேட்கிறான்.அமெரிக்காவில் ஆட்காட்டி விரலை ஒடித்துக் கொண்டால் மகா கேவலம் போலும்.

- டிடெக்டிவ் லாரன் விஸ்ஸர் கள்ளக் காதலர்களை கொன்றாரா?
- இவரிடம் 10,000டாலர் பணம் வாங்கினாரா?
- வாடகை கொலைகாரனை நியமித்துவிட்டு மார்ட்டியால் நிம்மதியாய் இருக்க முடிந்ததா?
இனிமேல் தான் படத்தில் அருமையான புதிர்களும் திருப்பங்களும் வரப்போகின்றன, அதை நான் விளக்குவதை விட நீங்களே
டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
ஒவ்வொரு காட்சியும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஒரு சோற்று பதமாக இந்த கிளை மாக்ஸ் காட்சியை சொல்லுவேன். அது படமாக்கப்பட்ட விதத்தையும் டார்க் ஹ்யூமரை என்ன அழகாக ஒவ்வொரு காட்சியிலும் இவர்கள் புதைத்து வைக்திருக்கிறார்கள் என்றும் பாருங்கள்.
============000============
டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
ஒவ்வொரு காட்சியும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஒரு சோற்று பதமாக இந்த கிளை மாக்ஸ் காட்சியை சொல்லுவேன். அது படமாக்கப்பட்ட விதத்தையும் டார்க் ஹ்யூமரை என்ன அழகாக ஒவ்வொரு காட்சியிலும் இவர்கள் புதைத்து வைக்திருக்கிறார்கள் என்றும் பாருங்கள்.
============000============
============000============