2008 ஆம் ஆண்டு பேர்ரி லெவின்சன்னின் இயக்கத்தில் இதே பெயரில் ஆர்ட் லின்சன் தன் ஹாலிவுட் திரை அனுபவங்களை தொகுத்து எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டு வெளிவந்த காமெடி டிராமா வகை திரைப்படம்.
தமிழ் திரையுலகில் அருமையான நடிப்பிற்க்கு பெயர் போனவர்களின் பெயர்களை பட்டியலிட்டால் பத்து விரல்களே அதிகம்.ஹாலிவுட் திரைப்பட உலகின் அருமையான நடிகர்களை பட்டியலிட்டால் பத்து விரல்கள் போதாது.அதில் முக்கியமான மோதிர விரலாய் இருப்பவர் ராபர்ட் டிநீரோ,மனிதர் படத்துக்கான ஸ்க்ரிப்டை கையில் வாங்கியவுடனே அந்த பாத்திரமாகவே மாறிவிடுபவர்,நடிகர் கமல் ஹாசனிடம் இவரின் பாதிப்புகள் அதிகம் பார்க்கலாம்,ஆரோக்கியமான விஷயம் தானே!
உலகின் மிகச்சிறந்த 10 திரைப்பட கதாபாத்திரங்களில் இவரின் ”ரேஜிங் புல்” படத்தின் பாக்ஸர் ”ஜேக் லே மோட்டா” பாத்திரத்தை ஒன்றாகச் சொல்லலாம்,அதில் முதல் ஒரு மணி நேரம் வரும் இளம் வயது தோற்றத்துக்காக தன் எடை குறைத்து சிக்ஸ் பேக்ஸ் வைத்தவர்,அதன் பிற்பாதியில் வரும் நடப்பு கால தோற்றத்துக்காக 30 கிலோ எடையை கூட்டியிருப்பார்,சதை போடுவதென்றால் செயற்கையாக வெறும் பீர் தொப்பை மட்டும் வைப்பது அல்ல,முகத்தில் கூட சதைபோட்டு முதுமையை கொண்டுவந்திருப்பார்.இவர் நடிக்காத பாத்திரங்கள் தான் உண்டா? எனத் தெரியவில்லை, இந்த 67 வயதிலும் மனிதர் படு பிஸி.கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்கள்.
ராபர்ட் டினீரோ இப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பென் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் , அவர் தன் புதிய படம் ஃபியர்ஸ்லியை முடித்து வெளியிடுவதற்க்குள் இரண்டு வாரங்களில் படும் அல்லல் துயரங்களை, மிகுந்த நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள் .கட்டுக்கோப்பான ஒழுங்கோடு பாடு பட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளரான இவர் ஸ்டுடியோ ஹெட் என்னும் திட்ட நிர்வாக உயர் அதிகாரி லூவை (கேத்ரீன் கீனர்) திருப்தி படுத்த வேண்டி படத்தின் கதையை மாற்றுவது, நடிகர்களின் படத்தில் வரும் தோற்றத்தை திடீரென மாற்றுவது, கதாபாத்திரத்தை சாகடிப்பது,உயிர்பிழைக்க வைப்பது மற்றும் செலிப்ரிட்டியான அவர் அனுதினமும் வாழ்வில் சந்திக்கும் சர்ச்சைகள், பொல்லாப்புகள் என்றாலும் சொன்னவிதம் ஒரே வெடிச்சிரிப்பு தான்.
படம் பார்க்கும் நாமும் அவர் கூடவே போகுமிடமெல்லாம் பயணிக்கிறோம்.
வயிறு குலுங்க சிரிக்கிறோம். அவரின் முதல் மணவாழ்க்கை கசந்து விவாகரத்தாகி,முதல் மனைவிக்கு மிகப்பெரிய தொகையையும் வீட்டையும் அலிமனியாக(ALI MONEY) கொடுத்தும் மகளின் பாசமும் விடாமல் இவரை வாட்டுகிறது , இரண்டாம் மணவாழ்க்கையும் கசந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்து பின்னர் பேச்சுவார்த்தை என்னும் சமரச நிலைக்கு வந்து ஓயாத வேலைப் பளுவின் இடையிலும் பிரபல அட்டார்னிகளிடம் கவுன்சிலிங்கிற்கு போய் வருகிறார்கள். இவருக்கு உள்ள நிதிநிலை இன்னொரு அலிமனி விவாகரத்துக்கு இடமளிக்கவில்லை.மனைவி கெல்லியின் புரிதல் மற்றும் ஒப்புதலோடு பிரிய நினைக்கிறார்
அவ்வப் பொழுது நடிக்க வாய்ப்பு கேட்டு வலிய வந்து மாடல் நங்கைகள் படுக்கைக்கு விருந்தாகின்றனர்.இவரும் சோலியை முடித்து விட்டு உன்ன மைண்ட்ல வச்சுக்க்றேன் என்கிறார். இவரது இரண்டாம் மனைவி கெல்லிக்கு(ராபின் ரைட் பென்) ஸ்காட் சாலமன்(ஸ்டான்லி டஸ்ஸி) என்னும் ஒரு கதாசிரியரோடு கள்ளத் தொடர்பு இருக்கிறது. சாலமனுக்கு நடிகர் பிராட் பிட் தான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அளிக்க, இவரால் சாலமனை பகைத்துக்கொள்ளவும் முடியவில்லை,காரி துப்பவும் முடியவில்லை . இவரே ஒழுங்கில்லாததால் இவரால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் , கெல்லியை தலை முழுகவும் முடியாமல் படும் அவஸ்தை. அடடா!

சாலமனின் ஒற்றை ஸாக்சை படுக்கைக்கு அடியில் கண்டெடுத்து அதை வைத்து துப்பறியும் காட்சிகள் எல்லாம் படு ஜோர் .மேலும் தன் பள்ளியிறுதி படிக்கும் மூத்த மகள் தூக்கு மாட்டி இறந்த இளம் ஸ்டூடியோ ஏஜென்டிடம் தன்னை பறிகொடுத்ததை சொல்கையில் ஏற்படும் பதட்டம்,பரிதவிப்பு என அப்படி ஒரு இயற்கையான நடிப்பு. தன் புதிய படத்தில் "ஷான் பென்" என்னும் பெரிய ஹீரோவை நடிக்க வைத்து ,படமும் முடிந்து ப்ரீவியூ காட்சி பிரமுகர்களுக்கு திரையிடப்படுகிறது,
முதல் கட்ட சோதனையாக படத்தின் ப்ரிவ்யூவால் வந்த தலைவலி:-
வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் படம் ஒரே வன்முறை,"ஷான் பென்" செத்திருக்க கூடாது, எனவும், மீதி பேர் அந்த நாயை துடிக்க துடிக்க சுட்டு கொள்வது தப்பு, ரொம்ப கொடுமை என்கின்றனர். இதை தங்களுக்கு வழங்கப்பட்ட கருத்து அட்டையிலும் திட்டி எழுதி ,திரும்ப கொடுக்க. ஸ்டூடியோ ஹெட் "லு" என்னும் பெண் உயர் அதிகாரி . இவரையும் படத்தின் இயக்குனரையும் அழைத்து , மனுஷன் சாகலாம், ஆனால் "நாய் சாகக் கூடாது." இது தான் இன்றைய ஹாலிவுட்டின் லாஜிக்,டிரென்ட் எல்லாம் .அதனால் நாயை பிழைக்க வை என்கிறார்.
இவரின் பிரிட்டிஷ் இயக்குனர் ஜெரிம்மி (மைக்கெல் வின்காட்) கதையை மாற்ற முடியாது என முரண்டு பிடிக்கிறார்,நான் சொன்னபடி படம் எடுத்தால் அமெர்ரோஸ் பெர்ரோஸ் மாதிரி புகழ்ப்படும் என உறுதியாய் இருக்கிறார்,வேறு வழி தெரியாத "லு" வேறு ஒரு இயக்குனரை வைத்து அந்த காட்சியை படம் எடுக்க வைப்பேன் என மிரட்டி , மேலும் வரும் வாரம் "கேன்ஸ்" நடக்க போகிறது . அதில் இப்படம் சிகப்பு கம்பள வரவேற்ப்பை பெறாது எனவும் மிரட்டுகிறார்.
இயக்குனர் ஜெரிம்மி அழுகிறார், புரள்கிறார். பொருட்களை தட்டிவிடுகிறார். பெரும் ஆர்பாட்டத்திற்கு பின்னர் பென் சமாதானம் செய்ய பூனைபோல பணிகிறார். "ஷான் பென்"ஐ அழைக்காமலேயே அவர் சம்மந்தப்பட்ட அந்த காட்சியை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கொண்டு எடுத்து நாயை பிழைக்க வைக்கிறார். பென்னிற்க்கோ சந்தோஷம், இயக்குனரை அப்படியே கட்டிக் கொள்கிறார். கிளைமாக்ஸ் மாற்றத்தை ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு போட்டு காட்ட, அவர் ”திஸ் பீஸ் ஐ வாண்ட்” என்று துள்ளி "கேன்ஸிற்கு இப்படத்தை பரிந்துரைக்கிறார்.லூ மிகவும் பெருமிதத்துடன் திரிகிறார்.அங்க தானே நம்ம இயக்குனர் ஜெரிம்மி வச்சார் ஆப்பு.
இரண்டாம் கட்ட சோதனையாக ப்ரூஸ் வில்லீசால் வந்த தலைவலி:-
ஆறு மாதம் முன்பு தன் வேறு ஒரு புதிய படத்திற்கு ப்ரூஸ் வில்லீசிடம் அட்வான்சு கொடுக்கும் போதே கதைப்படி அவர் காரல் மார்க்ஸ் போல அடர்ந்த தாடி,மீசை வைக்க வேண்டும். என சொன்னதன் பேரில் அவரும் ஆறு மாதம் தாடி, மீசை வளர்த்து கால்ஷீட் கொடுத்த தேதியில் ஆஜர் ஆகிறார். ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு யாரோ ஒரு பிரமுகர் "இதுவரை ப்ரூஸ் வில்லீஸ் தாடி,மீசை வைத்து நடித்ததில்லை" அப்படி நடித்தாலும் படம் ஓடுமா?ஓடாது , அதனால் வழக்கம் போல வழு வழு முகத்துடனே அவர் நடிக்கட்டும், என ஐடியா கொடுக்க.லூ வழக்கம் போல இவரை மந்திரிக்கிறார்.
இயக்குனரும் ஸ்க்ரிப்டில் எளிதாக தாடி,மீசையை எடுத்துவிட்டு காட்சியை மாற்றி வைக்க , ப்ரூஸ் வில்லீசிடம் போய் தாடியை எடுக்க சொல்ல பயந்து அவரின் அதீத வயிற்றுவலி கொண்ட உதவியாளர் டிக் பெல்லிடம் சொல்லி பேச சொல்ல ,ப்ரூஸ் வில்லீஸ் டிக் பெல்லை ஆத்திரத்தில் வேலையை விட்டு தூக்கிவிடுகிறார்.பின்னர் ஆரம்பிக்கிறது விபரீதம். ப்ரூஸ் வில்லீஸ் ஏசுகிறாரே பார்க்கணும்.?நம்மூர் கமல் ஹாசன் எல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்கு ஏசுகிறார். கண்டதையும் போட்டு உடைத்து என் சம்பளத்தில் பிடிச்சுக்கோங்கடா கொன்னியா என்கிறார், ஐயோ.அருகில் சென்ற எல்லோரும் எல்லாம் சகட்டு மேனிக்கு வாங்கி கட்டி கொள்கின்றனர்.பென்னிற்கோ போதாத காலம் காதெல்லாம் ரத்தம்.
பென்னிற்கோ மத்தளம் போல இரண்டு பக்கமும் அடியும் வேறு. காலில் விழாத குறையாக கெஞ்சியும் மசியாத ப்ரூஸ் வில்லீஸ் பிடி வாதம் எல்லை மீற . ஸ்டூடியோ ஹெட் "லு "கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறார், நாளை கடைசி நாள், ப்ரூஸ் விலீஸ் தாடியை எடுத்தால் படம், இல்லை என்றால் ட்ராப் - ஊத்தி மூடலாம் என்கிறார். மறுநாள் எவ்வளவு கெஞ்சியும் மசியாத ப்ரூஸ் வில்லீஸ் காரவானின் கதவை திறந்து வெளியே வர , எல்லா யூனிட் ஆட்களுக்கும் அதிர்ச்சி.
தாடியுடன் ப்ரூஸ் வில்லீஸ் , பென் அவரை திட்ட வாயெடுக்க, ப்ரூஸ் வில்லீஸ் அப்படியே திரும்பி இன்னொரு பக்க தாடையை காட்டுகிறார். பளபளவென்ற ஷேவ் செய்த கன்னம், மனிதர் சிரித்துக் கொண்டே "MOTHERFUCKERS"என் பிளட் ப்ரெஷரை ஏற்றி விட்டீர்கள் அல்லவா? உங்களுக்கு இப்போ திருப்தியா ?என்று சொல்லி இறுதியாக ஏச மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.
மூன்றாம் கட்ட சோதனையாக "கேன்ஸ்" திருவிழாவில் வந்த தலைவலி:-
ஒருவழியாக எல்லா சோதனையையும் கடந்து சிகப்பு கம்பள வரவேற்ப்பை பெற்று, படத்தை இரண்டாயிரம் திரை நட்சத்திர பார்வையாளர் முன் திரையிட. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நெருங்குகிறது, "பென்" இயக்குனர் ஜெரிம்மியின் முகத்தை சமாதானத்துக்காக பரிவுடன் பார்க்க, அவர் விருட்டென கூலிங் கிளாசை மாட்டிக் கொள்கிறார்.
திரையில் "ஷான் பென்" பெரிய மணல் திட்டின் மேல் நிற்க அவரை துரத்தி வந்த வில்லன்கள் கூட்டம் அவரை ஆறு ரவுண்டுகள் சுடுகின்றது. அவர் பிதாவே இந்த பாவிகளை மன்னிப்பீராக, என்று அப்படி உருண்டு விழுந்து இறக்கிறார்.(படு இயற்கையான உருளல்)என்ன ஒரு நடிப்பு?. அடுத்து அவரின் செல்ல நாய் குரைத்த படி ஓடி வந்து அவரை பரிவுடன் நக்க, வில்லன் கூட்டம் அந்த நாயையும் விட்டு வைக்காமல் நான்கு ரவுண்டு,தலை வயிறு என சுட, அரங்கே ஊ.ஆ ,அவுச் ,என்று உச்சு கொட்டி மவுனிக்க ,
யாரோ ஒரு புண்ணியவான் கை தட்டலை லேசாக ஆரம்பித்து வைக்க , அரங்கே மந்தை ஆடு போல அதை தொடர்ந்து ஆரவாரம் செய்து கைதட்டி அங்கீகரிக்கிறது. அனைவரும் பாராட்ட, இயக்குனர் ஜெரிம்மி பிடிவாதம் ஜெயிக்கிறது, படம் அமோக வரவேற்பை பெறுகிறது. ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு வந்த கோபத்தில், வேண்டுமென்றே பென்னை விட்டு விட்டு தன் தனி விமானத்தை எடுத்துக் கொண்டு,மற்ற குழுவினருடன் ஹாலிவுட்டிற்கு பறக்கிறார்.

இப்போது இவரின் இரண்டாம் மனைவி கெல்லியின் கள்ளக்காதலன் சாலமன் நடிகர் ப்ராட் பிட் திடீரென தன் இயக்கத்தில் நடிக்கவிருந்த படத்தை நிராகரித்துவிட கவலையில் குடித்து அழிகிறார்.அவரை இப்போது இவரின் இரண்டாம் மனைவி கெல்லி துரத்திவிட, அவர் பென்னின் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். பென்னுக்கு அப்பாடா என்றிருக்கிறது .ப்ரூஸ் வில்லீசின் முன்னாள் உதவியாளர் பெல் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுகிறார்.அவருக்கு டேட்டிங் செய்ய பெண்ணே கிடைத்த பாடில்லை.
ஸ்டுடியோ ஹெட் லூவிற்கு சிறந்த படத்தை திட்டமிட்டு தயாரித்து நிர்வகித்தமைக்கான பாராட்டும் விருதும் கிடைக்க , கூசாமல் அதை வாங்கிகொள்கிறார்.
இயக்குனர் ஜெரிம்மி தன் படைப்பில் வெளியான ஃபியர்ச்லி என்னும் படம் அமோக வெற்றி பெற புகழின் போதையால் கோகெய்ன் போதைக்கும் அடிமையாகி தன் சூட்கேஸில் கோகெய்னை தைரியமாய் வைத்து விமானத்தை பிடிக்க, போலீஸாரால் கைது செய்யப்பட்டு போதை மறுவாழ்வு மையத்துக்கும் அனுப்பப்படுகிறார். பென்னுக்கு இது வருத்தமளித்தாலும் மீண்டும் திறமையுள்ள ஜெரிம்மியுடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.அவர் வரும் வரை காத்திருக்க முடிவெடுக்கிறார்.
கதை முடிகிறது. படம் முடிந்தவுடன் ஏற்படும் வியப்பு, எப்படி இந்த மனிதரால் தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறமுடிகிறது என்பது மட்டுமே.
இந்த கட்டுரையில் நான் சொன்னது சொற்பமே. படம் பார்த்தீர்களென்றால் உங்களுக்கு சிரித்து சிரித்து வயிற்று வலி வந்துவிடும். சும்மாவா சொன்னார்கள் ?ஒரு படத்தை ரிலீஸ் செய்வது தலைபிரசவம் போல என்று? நாமெல்லாம் எளிதாக சொல்லிவிடுகிறோம், பட்டால் தான் தெரியும் போலிருக்கு. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா?. இந்நேரத்துக்கு ஹிந்தியில் இதை படமெடுத்திருக்கணுமே? இல்லை ஷூட்டிங்கிற்காவது கிளம்பியிருக்கனுமே?யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

படத்தின் இசை மிகப்பாந்தம்:-மார்சிலோ சார்வோஸ்,ஒளிப்பதிவு அருமையும் அழகும் :-ஸ்டீபென் ஃபோண்டைன்.
படத்தின் முன்னோட்ட காணொளி:-