Parsley | Prajel | DIRECTED BY JOSÉ MARÍA CABRAL | 83MIN | 2022 | DOMINICAN REPUBLIC | HAITIAN CREOLE | SPANISH | DRAMA | THRILLER | பார்ஸ்லி






இன்று 20 ஆம் சென்னை திரைப்பட திருவிழாவில் பார்த்த திரைப்படம் Parsley மிகவும் அற்புதமான படைப்பு,

1937 ஆம் ஆண்டு டொமீனிக்கன் குடியரசு நாட்டில்  ஹைத்தியர்கள் சுமார் முப்பதாயிரம் புதிதாக பதவி ஏற்ற சர்வாதிகாரியால் நாட்டின் மூலை முடுக்கெங்கிலும்  தேடித்தேடி  இன அழிப்பு செய்யப்பட்ட கோர நிகழ்வை ரத்தமும் சதையுமாக பேசும் படைப்பு இது.

1937 ஆம் ஆண்டு ஹைத்திக்கும் டொமினிகன் குடியரசுக்கும் இடையிலான எல்லையில், நவீன அடிமைத்தனமான பணிச்சூழலில்  கிராமப்புறங்களில் பணிபுரிந்த சுமார் 30,000 ஹைத்தியர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 
டொமினிகன் சர்வாதிகாரி 
Raphael L.  By Trujillo ஆணையால் நிகழ்ந்த இந்த ஹைத்திய இனப்படுகொலை Parsley Massacre என்று அழைக்கப்படுகிறது. , 

இந்த வார்த்தை Parsley ஐ வோக்கோசு என்று ஒலிக்குமாறு ஹைத்தி என்று ஐயப்பட்டு விசாரிக்கப்படுபவர் சரியாக உச்சரிக்க வேண்டும், இது ஒரு பரிசோதனையின் அங்கமாகவே ராணுவத்தினரால் கடைபிடிக்கப்பட்டது,

ஹைத்தியர்களில் பலர் Creole ஐ தங்கள் தாய் மொழியாகக் கொண்டிருந்தனர், எனவே 'பார்ஸ்லி' என்ற வார்த்தையின் பிழையான உச்சரிப்பு அவர்களை கோர மரணத்திற்கு உடனே இட்டுச் சென்றது.

அப்படி சரியாக உச்சரிக்காதவர்கள் உடனே வெட்டிக் கொல்லப்பட்டனர், சுட்டுப் கொல்லப்பட்டனர் , கொன்ற எண்ணிக்கைக்காக 
காதறுக்கப்பட்டனர், 

கர்ப்பிணிகள் கூட ராணுவத்தினரால் வன்புணரப்பட்டனர், குழந்தைகள் கூட சுட்டுக்கொல்லப்பட்டனர், கூட்டு சவ அடக்கம் கூட அவர்களுக்கு அதிகம் என்று நாய் நரி தின்ன வேண்டி அப்படியே காடுகளில் அழுக விடப்பட்டனர், Massacre என்ற பெயரைக் கொண்ட ரத்தசரித்திம் கொண்ட எல்லை ஆற்றில் அழுகிய  சவங்கள் வெள்ளத்தில் அப்படி அடித்துச் செல்ல கொட்டப்பட்டன .

ஒன்பது மாத கர்ப்பிணியான மேரி ஹைத்தி இனத்தவள், அவள் காதல் கணவன்  ஃபிராங்க் டொமினிகன்  இனத்தவன்,கடும் உழைப்பாளிகள்,

சர்வாதிகாரி  Trujillo அன்று இரவு ஏவி விட்ட ராணுவ வன்முறையால் அந்த இரவு மேரியின் குடும்பம் சிதைந்து சீரழிந்து போகும் வலியின் தருணங்களை இப்படம் தத்ரூபமாக பேசுகிறது, 

அன்று இரவு நிலவொளியில்ல கணவனும் மனைவியும் குளித்து கொஞ்சிவிட்டு உறங்குகையில் வேட்டை நாய்கள் போன்ற  டொமினிகன் இராணுவம் இவர்கள் குடியிருப்பில் நுழைகிறது, அதன் பின்னான கொலைவெறித் தாக்குதலில் கணவனை இழக்கிறாள் மேரி, 

ஃப்ராங்க் தன்னை டொமினிக்கன் என்று சொன்னாலும்  அவனின் விசுவாசத்தை சார்பு நிலையை  நிரூபிக்க அவன் கையால் ஹைத்தி இன ஆண் ஒருவனை வெட்டிக்கொல்லும்படி நிர்பந்திக்கப்படுகிறான்,

அவன் வெட்டிக் கொன்று விட்டு கதறி  அழுகையில் மீண்டும்  ஒரு ஹைத்தி இன சிறுவனை வெட்டிக் கொல்ல நிர்பந்திக்கப்படுகிறான், ஃப்ராங்க் மறுக்கவே உடனே சுட்டுக்கொல்லப்படுகிறான்,

நிறைமாத கர்ப்பிணி மேரி, குவியலில் பிணம் தின்ன வந்த நாய்களை தீவெட்டி கொண்டு விரட்டுகிறாள், பிணக்குவியலில் கணவனுக்கு பிரார்த்தனை செய்து நெஞ்சில் ஜெபமாலை வைத்து கொள்ளி இட்டு விட்டு தப்புகிறாள்,

 பிரசவ வலி எடுக்கவே இங்கு பிரசவிக்க கூடாது என உறுதி பூண்டவள் வனத்தில் பலகாதம் நடக்கிறாள், தன் மகனை எல்லையில் அகதிகுழுவுடன் விட்டு வந்த நிலையில் கணவனை தேடி வந்தவளுக்கு என்ன என்னவோ நேர்ந்திருக்கிறது,

ஒரு தெரிந்த டொமீனிக்க அதிகாரி ஹைத்தி இன அனுதாபி அவர் வீட்டில் நுழைந்து அடைக்கலம் கேட்கிறாள் மேரி, 

அந்த குடும்பம் கடும் தர்மசங்கடத்தில் உழல்கிறது, வரப்போகும் ஆபத்தை அறிந்தும் கூட மேரிக்கு அங்கே தனி அறையில் அடைக்கலம் தருகின்றனர், மேரியின் காயங்களுக்கு மருந்திடுகிறாள் ஹைத்தி இனப் பணிப்பெண், அவளுக்கு குளியல் தொட்டியில் இதமான வெந்நீரில் இறக்கி குளித்து விடுகிறாள், விதி வலியது, இந்த வீட்டிலும் ராணுவம் வந்துவிடுகிறது, இங்கு பணியில் இருந்த ஹைத்தியர்கள் ஒவ்வொருவரையும் சுட்டுக் கொன்று கணக்காய்வுக்கு இடது காதை அறுத்து சவங்களை மாட்டு வண்டியில் ஏற்றுகிறது, 

இவளை கொல்ல வந்த ராணுவ சிப்பாய் ஜெர்மன்,  மேரியின் கணவன் ஃப்ராங்கின் பால்ய தோழன், ஆதலால் மேரியின் இடது காதை மட்டும் கணக்கு காட்ட வேண்டி அறுத்து எடுத்துக் கொள்கிறான்,மேரி பல்லை வைத்து கத்தியின் மரப்பிடியை  கடித்து காதறுக்க காட்டித் தருகிறாள், கர்ப்பிணி  சவம் அதிக கனம் என்பதால் வண்டியில் ஏற்றவில்லை என்கிறான் ஜெர்மன்,

மேரி காட்டுக்குள் தப்பி ஓடுகிறாள், அவளுக்கு பனிக்குடம் உடைந்து பனிநீர் பிசின் கால்களில் வழிகிறது, மானமுள்ள  மேரி மிகுந்த இடர்பாடுகளை தாங்கி பாறைகள் இடறும் ஆற்றில் இறங்கி நடந்து ஹைத்தி கரையில் ஆற்று நீரில் இறங்கி ஆண் சிசுவை பிரசவிக்கிறாள்,

சிசுவுக்கு தாய்ப்பால் புகட்டியபடியே தாய் இறந்தும் விட்டிருப்பதை மறுநாள் அவளின் மகன் குழந்தை அழுகுரல் அழைக்க தேடி வந்தவன் பார்க்கிறான்,

காதறுக்கப்பட்ட தாயைப் பார்க்கிறான் மகன், அவனுக்கு தாயை சவமடக்க எல்லாம் நேரமில்லை, இரு உயிர்களின் மரணப் போராட்டம் துவங்குகிறது,வீறிடும்  கைக்குழந்தை இன்னும் தொப்புள் கொடியுடன் இருக்கும் தம்பியை கைகளில் ஏந்தி பிற அகதிகளுடன்  இணைய வேண்டி ஆற்றின் பாறைகளூடே நடப்பதுடன் இப்படம் நிறைகிறது.

இப்படம் நிறைமாத கர்ப்பிணி மேரி தன் வயிற்று சிசுவை பிரசவிக்க காட்டுக்குள் அலைந்து திரிந்து அல்லாடும் ஜீவ மரணப்போராட்டத்தையும் உடன் அன்பின் தியாகத்தின்  வலிமையையும் படம் அத்தனை தத்ரூபமாக விவரிக்கிறது.

வாய்ப்பிருப்பவர்கள் அவசியம் தேடிப் பாருங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)