the boy in the branch 1993 | தி பாய் இன் தி ப்ரான்ச் | அரசியல் ஆவணப்படம்

The Boy in the Branch |1993|மற்றும்  The men in the tree |2002|  இந்தியாவின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தரமான அரிய ஆவணப்படங்கள் , இவை  யூட்யூபில் சப்டைட்டிலுடன் காணக்கிடைக்கின்றன.

இதன் இயக்குனர் லலித் வச்சானி இந்தியாவின் முக்கியமான ஆவணப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் வீடியோ எடிட்டரும் ஆவார்,   இவர் புது தில்லியை தளமாகக் கொண்ட wide eye  பட நிறுவனத்தின் இயக்குனரும் கூட.  தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு முன்னாள் மாணவர். 

லலித் வச்சானியின் ஆவணப்படங்களில் The Starmaker இந்தி திரையுலகில் 'ஸ்டார்மேக்கிங்' வணிகம் பற்றிய ஆவணப்படம்.

The salt stories எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை உப்பு சத்தியாகிரஹம் துவங்கிய பாதயாத்திரை வழித்தடத்தை தேடிச் சென்ற ஆவணப்படம்.

Tales from Napa இந்தியாவில் 2002 ஆம் ஆண்டு குஜராத் மத கலவரத்தின் போது இந்து அடிப்படைவாத சக்திகளை எதிர்த்த napa என்ற ஒரு கிராமம் பற்றிய ஆவணப்படம் , 

An Ordinary Election  இந்திய தேர்தல் பிரச்சாரம் பற்றி ஆழமான ஆய்வைக் கொண்ட ஆவணப்படம்.

இனி The Boy in the Branch ,  The men in the tree ஆவணப்படங்கள் பற்றி பார்ப்போம்.

இந்தியாவின் முதன்மையான இந்து மத அடிப்படைவாத அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) இளம் இந்து சிறுவர்களை சங்கத்திற்குள் உறுப்பினர்களாக  சேர்த்து வலதுசாரி சித்தாந்தத்தில் பயிற்சிகள் தற்காப்புக் கலைகள் தருவது பற்றிய முக்கியமான படைப்பு இது.  
ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரும் இரண்டு வெவ்வேறு  சகாக்கள், அந்த  இரு கிளைகளின் செயல்பாடுகள்,  இளம் ஆர்எஸ்எஸ் ஆர்வலர்கள்,  சங்கத்துக்கு ஆள்சேர்ப்பவர்கள்,  அதில் வழிவழியாக சொல்லப்படும்  கதைகள் விளையாடப்படும் விளையாட்டுகள், பயிற்சிகள், சடங்குகள் மற்றும் நாடகம் ஆகியவற்றை இப்படங்கள் நன்கு ஆவணப்படுத்துகிறது.
 
அக்டோபர் 1992 ஆம் ஆண்டு, லலித் வச்சானி மற்றும் wide eye  திரைப்படக் குழு தி The Boy in the Branch படப்பிடிப்பு நடத்துவதைப் பார்க்கிறோம்.  
அப்போது படத்தின் மையக் கதாபாத்திரமான காளிக்கு 9 வயது.  தினமும் பள்ளி முடிந்து வந்த சிறுவர்கள் விளையாடும் மகிழ்ச்சியான இடம் என்று ஆர்எஸ்எஸ் சங்கத்தில்  ஆர்வமாக சேர்வதைப் பார்க்கிறோம்.

21 வயதான சந்தீப், இந்து தேசியவாதத்தின் மீதான தனது பக்தியைப் பற்றியும், ஆர்எஸ்எஸ் சேவையில் தனது வாழ்க்கையை எவ்வாறு எல்லாம் செலவிடுவேன் என்றும் இந்த ஆவணப்படத்தில் கண்கள் விரியப் பேசுகிறார்.

ஆர்எஸ்எஸ்ஸின் கராத்தே தற்காப்புக் கலை நிபுணரான ஸ்ரீபாத் (அப்போது 19 வயது) தனது  உடலைக் ஆரோக்கியமாக கட்டியெழுப்பவும், அகண்ட பாரத இந்துதேசத்தை கட்டி ஆளவும் ஆர்வமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

18 வயது லலித் ஒரு மென்மையான, வித்தியாசமான தன்னார்வத் தொண்டர், அவர் ஆர்.எஸ்.எஸ்-ன் உடற்கல்விப்பயிற்சியை மட்டும்  விரும்பவில்லை என்கிறார்.
ஃபாஸிஸம் பற்றி  கிடைத்த பிம்பங்களை உறுதிசெய்ய மிகுந்த எதிர்பார்ப்புடன்  நாங்கள் ஆர்எஸ்எஸ் சங்கத்தில் சேர்ந்தோம்.  
மாறாக, நாங்கள் கண்டறிந்தது அதன் எளிமை , மிகவும் புத்திசாலித்தனம் என்றவர் ,  தயங்கி  இது அமைதியற்றது என்று முடிக்கிறார் , 

இளம் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானத்தின் கவர்ச்சியும்,  அடிப்படைவாதத்தின்  மீது நம்பிக்கையும் கொண்ட சாதாரண இளைஞர்களின் நம்பிக்கைகள் , கனவுகள், அச்சங்கள் மற்றும் கவலைகள் இந்த ஆவணப்படங்களில்  நிதர்சனமாக அடுத்தடுத்து காணக்கிடைக்கின்றன.

டிசம்பர் 6, 1992 அன்று, இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை சுற்றி வளைத்து இடித்தனர்.

மசூதி இடிக்கப்பட்ட போது லலித், காளி, ஸ்ரீபாத், சந்தீப் எங்கே இருந்தார்கள்?  இடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 1500 பேர் (பெரும்பாலும் முஸ்லிம்கள்) இறந்ததைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? 

 ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து தேசியவாதமானது இந்திய அரசியலின் விளிம்பிலிருந்து மையத்திற்கு, எதிர்ப்பு இயக்கத்திலிருந்து தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் சித்தாந்தத்திற்கு நகர்ந்தபோது, ​​அன்றிலிருந்து அவர்களுக்கு என்ன நடந்தது? 

போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடி மீண்டும் இதே படக்குழு
 எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காளி, சந்தீப், ஸ்ரீபாத் மற்றும் லலித் ஆகியோரைத் தேடி நாக்பூர் போவதை அடுத்த ஆவணப்படத்தில் நாம் பார்க்கிறோம் .

அரசியல் ஆவணப்படத்தின் மரபுகள் மற்றும் தனிப்பட்ட 'மறுபரிசீலனை' ஆகியவற்றை ஒருங்கிணைத்து, The Boy in the Branch நான்கு பகுதிகளைக் கொண்ட ஆவண குறும்படங்களாக நீள்கிறது.

பகுதி I, Memories (22 நிமி.) என்பது முந்தைய படமான The Boy in the Branch ஆவணப்படத்தின்  தனிப்பட்ட பிரதிபலிப்பாகும்.

 பகுதி II, Buildings (24 நிமி.)  The Boy in the Branch கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது, அதில் சந்தீப், ஸ்ரீபாத் மற்றும் காளியை எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்படக்குழு சந்திக்கிறது.  இது முதன்மையாக பல்வேறு இஸ்லாமிய மத வழிபாட்டுக் கட்டிடங்களை  உடைப்பது பற்றிய பகுதி, அதில் மிக முக்கியமான ஒன்று பாபர் மசூதி, டிசம்பர் 6,1992 அன்று இடிக்கப்பட்டது.

 பகுதி III, Stories (32 நிமி.) என்பது இந்த ஆவணப்படத்தில் பேசும் தலைவர்கள், அவர்கள் தரும் வரலாற்றுத் தகவல்கள் பற்றிய பகுதி.  இது ஆர்எஸ்எஸ் கிளை மற்றும் பரந்த ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்திற்குள் தொன்று தொற்று பரப்பும் கதைகள் ,  மதச்சார்பற்ற இந்திய வரலாற்றை மாற்றி எழுதவும், இந்துத்துவப்படுத்தவும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய பகுதி.  

முன்னாள் ஆர்எஸ்எஸ் தொண்டர்களான டி.ஆர்.  கோயல் மற்றும் புர்ஷோத்தம் அகர்வால் ஆகியோர், மகாத்மா காந்தி போன்ற தேசியத் தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் இழைத்த  அயோக்கியத்தனத்தை பேசுகின்றனர், இந்தியாவில் உள்ள முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் விரோதப் போக்கை மனம் திறந்து பேசுகின்றனர்.

 பகுதி IV, Branches (20 நிமி.) 1992 இல் இதே படக்குழு படமாக்கிய சங்கத்தின் கிளைகளுக்குத் மீண்டும்  சென்று பார்க்கும் படலம் இது,  சமகால இந்தியாவில் உள்ள RSS கிளைகளின் நிலையைப் பற்றி நிதர்சனமாகப் பேசுகிறது.

 மார்ச் 2002 இல் நடந்த நிகழ்வுகள் தொடர்பான ஒரு கதையுடன் இந்த The men in the tree ஆவணப்படம் நிறைவடைகிறது.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கோரி ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான VHP புதிய போராட்டத்தைத் தொடங்கியது.  இது குஜராத்தில் பயங்கரமான இனப்படுகொலையில் விளைந்தது, இந்து வலதுசாரி உறுப்பினர்களால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன என்ற end card உடன் படம் நிறைவடைகிறது.

இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்க்க லிங்க் இங்கே.

the boy in the branch 1993
https://youtu.be/H777tU7-uvk

The men in the tree 2002
https://youtu.be/TyiC9uv6WwU
#ஆவணப்படம்,#லலித்_வச்சானி,#குறும்படம்,#அரசியல்_ஆவணப்படம்,
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)