Triangle of Sadness | Reuben Ostlund | டென்மார்க் சினிமா | 2022 | ட்ரையாங்கிள் ஆஃப் சாட்நெஸ்


இந்த ஆண்டு உலக சினிமா திருவிழா திரையிடல்களில்  பெரும் பாராட்டைப் பெற்ற  திரைப்படம் டென்மார்க் இயக்குனர் Reuben Ostlund  இயக்கிய Triangle of Sadness. 

இது பரீட்சார்த்தமான அவல நகைச்சுவை நையாண்டியாக மிளிர்கிறது, 

சோகத்தின் முக்கோணம் தலைப்பின்  body dynamics வரையறுத்த நேரடி அர்த்தம் என்றால் , நம் இரு புருவங்களுக்கு நடுவில் உள்ள பகுதி, தீவிரமாக சிந்திக்கையில் முக்கோண சுருக்கங்களை உண்டாக்கும், அதேபோல இந்த படைப்பும் உங்கள் சிந்தனை  மனதில் எழும் கேள்வி  பதில்களை  எழுப்புகிறது, சமூக ஏற்றத்தாழ்வுகளை பகடி செய்கிறது இப்படம், இனவெறி vs நிறம், இனவெறி vs மதம், பணக்காரன் vs ஏழை, ஆண் vs பெண் , குறிப்பாக மாடல் துறையில் பெண் மாடல்கள் மற்றும் ஆண் மாடல்  இடையே ஆன சம்பள வேறுபாடு (பெண்ணுக்கு அதிக சம்பளம்), 

உரிமையாளர் / முதலாளி vs தொழிலாளி / பணியாளர், அதிகாரம் vs துரதிஷ்டம், அசிங்கம் vs அழகு, உடைமை vs துறப்பு, பொருந்தாக் காமம் (வயதான பெண் vs இளம் ஆண் மாடல்)  , அதிகாரமிகு கட்டுப்பாடு  vs ஆல்பா ஆண்களின் நிலைத்தன்மை (அமைதியான கடல் கப்பல்) vs உருட்டல் (கரடுமுரடான கடல் கப்பல்), சூழ்நிலை மாற்றம், ஏழை/தொழிலாளர் வர்க்கம் அதிகாரமும் தலைமையும் பெறுகிற நிலை இவற்றை நகைச்சுவையாக பேசுகிறது, 

தீவிர மார்க்சிஸ்ட் கொள்கை பற்று கொண்ட அமெரிக்க மாலுமி  தலைமையிலான சொகுசு கப்பலில்  பயணிக்கும் தினவு மிகுந்த ரஷ்ய முதலாளித்துவ செல்வந்தர்களின்  குழு என்ற ஒற்றைத் திரி தான் ,அதை அத்தனை அழகான திரைக்கதையாக்கி சாதித்திருக்கிறார்கள்.

சொகுசு கப்பலின் குடிகார கேப்டன் தாமஸ் கதாபாத்திரத்தில் நம் மனம் கவர்ந்த நடிகர் Woody Harrelson அற்புதமாக நடித்துள்ளார் , இவர் அமெரிக்கர் ஆனாலும் மார்க்ஸியத்தின் தீவிர அனுதாபி, புத்திசாலித்தனமான குதர்க்கம் மிகுந்த கேப்டனும் கூட, சொகுசு கப்பல் கிளம்பியவுடன் தன் அறைக்குள் சென்று குடித்து மட்டையானவர் வெளியே வருவதேயில்லை, சொகுசு கப்பலில் வழமையான ஒரு சம்பிரதாயம் captains dinner, வியாழன் அன்று இரவு இவரை கழுவி குளிப்பாட்டி சீருடை உடுத்தி சொகுசு உணவகத்தில் நிறுத்தி வைக்கின்றனர் சக சிப்பந்திகள், 

ஆனால் அன்று கடுமையாக கடல் கொந்தளிக்கிறது, அந்த இரவு விருந்தில் ஒவ்வொரு பணக்கார பயணிக்கும் ஆடம்பரமான பிரத்யேகமான கடல் உணவுகள் தனித்தனியாக தனித்துவ வகையாக பரிமாறப்படுகிறது,

அங்கு  கப்பல் ஆடிய ஆட்டத்தில் மதுக்குப்பிகள், மதுக்கோப்பைகள் அங்கிங்கும் உருள்கின்றன, ஒவ்வொருவரின் குடலும் கொந்தளிக்கும் கடலால் பிரட்டப்பட்டு அத்தனை சொகுசாக துவங்கிய அந்த உணவு விருந்தில் சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு செல்வ சீமானும் சீமாட்டியும் வாந்தி எடுக்கின்றனர்,அத்தனை பேருக்கும் sea sickness பீடிக்கிறது, உயர்தர மது, உயர்தர cuisine உணவு ,ராஜபோக விருந்து கசந்து அங்கங்கே தரையில் வாந்தியில் உழல்கின்றனர், 

ஒரு ரஷ்ய உரமுதலாளியின் மனைவி தொடர்ந்து கழிகிறாள், கழிவறை கோப்பையில் இருந்து தூக்கியும் எறியப்படுகிறாள், மீண்டும் பீங்கான் கோப்பையை பற்றி அடைய அல்லாடுகிறாள், கடல் நீர் கொந்தளிப்புடன் மலம் வாந்தி இவற்றுடன் கப்பல் முழுக்கவும் பொங்கி வழிகிறது, கடைநிலை சீருடை துப்புறவுப் பணியாளர்கள் அதை சிரமேற்கொண்டு துடைத்து புதிதாக்குகின்றனர், கப்பல் தளங்களை அங்குலம் அங்குலமாக மாப் வீசி கழுவி மெருகேற்றி வைக்கின்றனர்.

படகின் விருந்தினர்களில் ஒரு இளம் ஆண் மாடல் கார்ல்  மற்றும் அவனின் இன்ஸ்டாக்ராம் புகழ் மிக்க காதலி யாயா, அவள் காதலனை  பணியாளன்  போலவே நடத்துபவள்,அவளுக்கு சொகுசு கப்பல் நிறுவனம் தந்த give away பயணச்சீட்டில் தான் இந்த இருவர் பயணிக்கின்றனர், அவளுக்கு glutton ஒவ்வாமை உண்டு என்றாலும் இன்ஸ்டாக்ராமில் படம் இடுவதற்கு வேண்டி பாஸ்டா சாப்பிடுவது போல பாசாங்கு படங்கள் , காதலனை எடுக்க செய்து தரவேற்றுகிறாள், சொகுசு கப்பலில் தனது ஒவ்வொரு தருணத்தையும் கார்லை படமெடுக்க செய்து தரவேற்றுகிறாள், காதலனை அவ்வப்போது possessive ஆக மாற்றி வைத்து சீண்டுகிறாள், இதற்காகவே பல ஆண்களுக்கும் கண்விடுகிறாள், உடன் ஆடுகிறாள் ,அடிக்குரலில் பேசுகிறாள்,உடன் மது அருந்துகிறாள், அந்த கப்பலில் அழகிய பெண் எது கேட்டாலும் வாங்கித்தர கெட்ட பணம் கொண்ட செல்வந்தர்கள் உள்ளனர்.

அதில் தனியனாக வந்த மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் , கோர விபத்தில் பக்கவாதம் ஏற்பட்டு ஜெர்மன் மொழியில் in den Wolken” (“in the clouds”) என்ற ஒரு வாக்கியம் மட்டுமே பேசக்கூடிய பெண்ணான தெரேஸ் என விதவிதமான கதாபாத்திரங்கள் உண்டு.  

இயக்குனர்  Östlund இந்த மேல்தட்டு செல்வ சீமான் கதாபாத்திரங்களை  நையாண்டி செய்ய அப்படி பயன்படுத்துகிறார் ,முற்பாதியில் செல்வந்தர்களாக இருந்தவர்கள் பிற்பாதியில்  மீன் துண்டுக்காக கையேந்துகிறார்கள்,பிழைப்புக்காக பெண் கழுதையைக் கொல்கிறார்கள், தீ மூட்டுகிறார்கள்  தண்ணீருடன் ஒட்டிக்கொள், மலிவான விலையில் கொள்ளையடிக்கப்பட்ட உயரடுக்கு பொருட்கள் மற்றும் ரோலக்ஸ் பாட்கே ஃபிலிப் உணவுக்கு தகுதியற்ற வாட்ச்கள், பெரும் பணக்காரர்கள் கப்பல் கவிழ்ந்தாலும் கூட உடல் வணங்குவதில்லை தங்கள் வசதிக்காகத்  ஏழைகளை மீண்டும் அவர்களுக்கு உதவுமாறு கேட்கிறார்கள்,இவற்றை அப்படி பகடி செய்கிறார் இயக்குனர்.  

ஆயுதங்களை விற்று பெரும் வருமானம் ஈட்டிய வயதான பிரிட்டிஷ் தம்பதிகள்,தங்கள் நிறுவன signature தயாரிப்பான கையெறிகுண்டை வியந்தோந்துகின்றனர், சோமாலியா கடற் கொள்ளையர்களுக்கு இவர்கள் சர்வதேச தரகர்கள் மூலம் விற்ற இவர்கள் நிறுவன கையெறி குண்டை ஒரு கொள்ளையன் வீசுகிறான்,  அது விடிகாலை அமைதியான  கடலை வேடிக்கை பார்த்த மனைவி காலடியில் விழ, அவள் நம் தயாரிப்பு பாருங்கள் என கணவனிடம் காட்ட,அங்கே கப்பலில் ஒரு பாதி வெடித்துச் சிதறுகிறது , 

சொகுசு கப்பலில்  துப்புரவு ஊழியர்களில் ஒருத்தியாக பணிபுரியும் ஃபிலிப்பினோ நாட்டுப் பெண் அபிகெய்ல் கதாபாத்திரம் திடீர் விஸ்வரூகம் எடுப்பதாகும்,
 கடற்கொள்ளையர்களின் தாக்குதலால் வெடித்த கப்பலில்  சொகுசு பிரயாணிகள் தனித்தீவில் கரை ஒதுங்கிய பின்னர் , அபிகெய்ல் 24 பேர் பயணிக்கும் ஒரு life boat ல் தனியாக அதே தீவில் கரை ஒதுங்குகிறார், உணவையும்  தண்ணீரையும் பதுக்கி அதன் மூலம் எஞ்சிய பயணியர் கூட்டத்தில் செல்வாக்கு அடைகிறாள், 

சொகுசு கப்பலில் தன்னைக் கேவலமாகப் பார்த்த அதே செல்வந்தர்களை அந்த தீவில்  வழிநடத்தத் தொடங்குகிறாள் , அபிகெயல் கதாபாத்திரம் செய்த De Leon திறமையான நகைச்சுவை நடிகை, நெடுநாள் அழுத்தத்திற்கெதிராக வேளை வந்ததும் பொங்குதல், கோபம், நயவஞ்சகம், உணவுப் பொதியை தந்து இளைஞனை வல்லுறவுக்கு இரையாக்கும் கீழ்மை, ஆகியவற்றை சமநிலையாக செய்திருக்கிறார், அபிகெய்ல் கதாபாத்திரம் பல விவாதங்களை துவக்கும்.  

படத்தின் தலைப்பான முக்கோண சோகநிலையை நமக்கு அந்த தொடர்ஓட்ட வாந்தி காட்சியில் உணர்த்திவிடுகிறார் இயக்குனர், அதன் பின்னும் சோகநிலையும் சோதனைகளும் ஓய்வதில்லை, அவல நகைசவை அத்தனை வல்லமையுடன் அடுத்தடுத்த காட்சியை நகர்த்திச் செல்கிறது.

இந்த வாந்தியெடுக்கும் காட்சியை துல்லியமாக சித்தரிப்பதற்காக இயக்குனர் பிரத்யேகமான rocking set மரத்தாலான அசையும் தளத்தை வடிவமைத்து அதில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார், இந்தக் காட்சிகளை இத்தனை தத்ரூபமாக எடிட் செய்ய மட்டும் ஆறுமாதம்  ஆகியுள்ளது.

ட்ரையாங்கிள் ஆஃப் சாட்னஸ் 2022 ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, உலக சினிமா ஆர்வலர்களுக்கு வியக்கவும் விமர்சிக்கவும் விவாதிக்கவும் பல விஷயங்களைக் கொண்டிருக்கிறது, இயக்குனர் Östlund நுணுக்கமான வசனங்களில் உலகளாவிய உயரடுக்கினரை அவர்களின் நுகர்வு வெறியை கடுமையாக விமர்சிக்கிறார்,உடன் கூர்மையான சுவையான வர்ணனையையும் வழங்குகிறார்.

திரைப்படத்தில் யாயா என்ற இளம் இன்ஸ்டா மாடல் காதலி கதாபாத்திரம் செய்த தென்னாப்பிரிக்க நடிகை Charlby Dean 31 ஆகஸ்ட் 2022 அன்று நியூயார்க் மருத்துவமனையில் 32 வயதில் திடீர் என நோய்வாய்பட்டு அகால மரணமடைந்ததை படித்து அறிந்தேன், அத்தனை வல்லமையான கதாபாத்திரத்தை செய்திருந்தார்,அவருக்கு நியாயமாக ஒரு posthumous அஞ்சலிக்குறிப்புடன் படத்தை துவக்கியிருக்க வேண்டும் என தோன்றியது, இந்தப்படம் பற்றி முழுமையாக ஒரு விமர்சனத்தில் பகிரவே முடியாது, காரணம் ஊடும் பாவுமான Details,

இப்படம் சென்னை திரைப்பட திருவிழாவின் கடைசி நாள் அன்றும் மீள் திரையிடப்படும், அன்றும் ஒரு முறை மீள்பார்வை பார்த்தால் வேறு புதிய கண்ணோட்டத்தில் இப்படத்தை பார்க்கலாம், பல நுணுக்கமான வசனங்களுக்கு மீண்டும் உணர்ந்து சிரித்து மகிழலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)