அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசு இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆனதற்கு இனிய நல்வாழ்த்துகள்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதில் நிறைய பேருக்கு விமர்சனமுள்ளதைப் பார்க்கிறேன், பெரிய மனிதர்களின் வீட்டுப் பிள்ளைகளுக்கு கூட  Identity crisis பிரச்சனை உண்டு, காரணம் அவர்கள் அப்பா தாத்தா சேர்த்து வைத்த புகழை மிஞ்சுவதற்கு பகீரத பிரயத்தனப்பட வேண்டும்,

அவர்களுக்கு விரும்பிய எல்லாமே எளிதில் உடனே கிடைத்து விடும் என்று நினைத்தாலும், எதுவும் எளிதில் கிடைத்து விடாது என்பதே உண்மை, காய்த்த மரத்திற்கு  கல்லடி என்றால் பெரிய மனிதர் வீட்டு பிள்ளைகளுக்கு சொல்லடி என்பதே உண்மை.

நான் 2001 ஆம் ஆண்டு கூட்டமிகுந்த 21 G பேருந்தில் ராஜபவன் சாலையில் வேலைக்கு பயணிக்கையில் உதயநிதி ஸ்டாலின்  
ராஜ்பவன் தொலைபேசி இணைப்பகம் எதிரே தொடங்கிய snooker point பார்த்து பேருந்தில் எல்லோரையும் போல வயிறெரிந்திருக்கிறேன், எனக்கு கூட இன்று அது போல ஒன்றை  என் மகனின் சுயதொழிலுக்கு செய்து தர முடியும், நான் சம்பாதித்து வாழ்வில் முன்னேறி தன்னிறைவு பெற்றவுடன் இன்று யோசித்துப் பார்த்தால் என் மாமியார் உடைத்தால் மண்குடம் போன்ற செய்கைக்கு சிரிப்பாக வருகிறது,

பாலு ஜுவல்லர்ஸ் என்பவரை மொட்டையடித்து அவர் நகைக்கடையை வழித்து கொள்ளையடித்து ராஜா அண்ணாமலைபுரத்தையே முழுக்க மூடி அரண் அமைத்து பொது மக்களை அது வழியாக சுமார் ஒரு மாதம் கடந்து போக விடாமல் மயிலை வழியாக சாந்தோமுக்கு சுற்றிப் போக வைத்து வளர்ப்பு மகன் திருமணத்தை புருனே சுல்தான் திருமணம் போல நடத்தினார் அம்மையார் ஜெயலலிதா, மக்கள் இயல்பிலேயே மஸாக்கிஸ்ட்கள் என்பதால் ஆட்சியாளர்கள் இத்தனை குரூரதையுடன் இருந்தால் தான் அவர்களுக்கு இனிக்கும்,இடி அமீன் போன்ற ஆட்சியாளர்களையே மக்கள் இரும்பு பெண்மணி என புகழ்வார்கள்.

நான் திமுகவிற்கு வாக்களித்ததற்கு பெருமைப்படும் விதமாக என் தங்கை  வீட்டார் பத்து வருடங்களுக்கு மேலாக தாழம்பூரில் வருடா வருடம் பெரு மழைநாளில் அனுபவித்த மழைநாள் பேரிடர் திமுக அரசு மேற்கொண்ட மழைநீர் கால்வாய் பணிகள் மூலம் மறைந்தது.

என் பம்மல் வீடு தரைத்தளத்தில் உள்ளது,சாலையை விட மூன்றடி தாழ்வாக உள்ள வீடு, திமுக அரசு மேற்கொண்ட மழைநீர் கால்வாய் பணிகள் மூலம் உள்ளே மழைநீர் புகுமோ என்ற  அச்சம் மறைந்தது, நிம்மதியாக தூங்கினேன்.

இன்று அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்கையில் அடையாற்றில் வெள்ளம் அப்படி கரைபுரண்டு ஓடுவதை போகையிலும் திரும்ப வருகையிலும் பாலத்தின் மீதிருந்து பார்த்தேன்,வெறும் வினாடிக்கு 2000 கன அடிக்கே அத்தனை வேகம் கண்டேன், அத்தனை விசை இருந்தது, அம்மையாரும் அடிபொடிகளும் 2015 டிசம்பர் 1 நடு இரவில் வினாடிக்கு 29,400 கன அடி நீரை திறந்து விட்டதை நினைத்துப் பார்த்தேன்,ஒரு நிரந்தர சென்னைவாசியாக  அத்தனை வயிறு கலக்கியது, எத்தனை பெரிய மனிதர்கள் வீடு கூட தரைத்தளம் மூழ்கி படகில் தப்பியதை மறக்க மாட்டார்கள், பால் வாங்கி வருகிறேன் என தெருவில் இறங்கியவர்கள் வெள்ள சுழலில் சிக்கி அடையாறு கழிமுக புதைகுழி சேற்றில் JCB ல் வாறப்பட்டு கண்டெடுக்கப்பட்டதை நினைவுகூறுகிறேன்.

இன்று மாலை மகனை அழைக்க குரோம்பேட்டை sunshine பள்ளி போனேன்,  அந்த பள்ளியை சுற்று சுவரை சுற்றி தெருவாசிகள் தத்தம் கார்களை ஒட்டி நிறுத்தி உள்ளனர், ஒரு ஹார்ட்வேர் கடைக்காரர் தான் விற்கிற செங்கல் திப்பைகளை , ஹாலோ ப்ளாக் திப்பைகளை, aac block திப்பைகளை, 3/4 ஜல்லி, 1 1/2" ஜல்லி , m.sand என பள்ளி சுற்று சுவரை சுற்றி ஆக்கிரமித்து வைத்து விற்கிறார், முதல்வரின் மகளின் பள்ளி இது,பள்ளி சுற்றத்தில் வசிக்கும் மக்கள் எல்லோரும் அமைதியாக இயல்பாக வாழட்டும் என ஒரு உருட்டல் மிரட்டலில்லை, இயல்பாக உள்ளது அந்த 4 நெரிசல் மிகு தெருக்கள் , ஒரு கூடுதல் சிறப்பு வசதி கிடையாது, ஒன்றுமில்லை போன ஆட்சியில் போலீஸ் கமிஷனர் மனைவி நினைத்தால் கூட பக்கத்து வீட்டுக்காரரை கஞ்சா வழக்கு அல்லது கைபிடித்து இழுத்த வழக்கு பதிந்து உருட்டி மிரட்டலாம், அப்படிப்பட்ட சம்பவங்களை அனு தினம் கேட்டிருக்கிறேன்.

மக்களுக்கு எதிர் கட்சி தலைமைக்கு  மண்டபத்தில் தூங்கிக்கொண்டு இருந்த விலாசமில்லாதவருக்கு தலைமை பதவி தந்தால் கூட ஏற்றுக் கொள்வர்,ஆனால் ஆளும் கட்சியில்  நாற்பது வருடமாக கண்முன்னால் பார்ப்பவர்கள் தலைமை பதவிக்கு வருவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது,மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் ஆனதற்கு இனிய நல்வாழ்த்துகள்,அவரின் இந்த எளிமை தொடர்ந்தால் அது அவரை கல்லடிகளிலிருந்தும் சொல்லடிகளிலிருந்தும் காக்கும்,செஸ் ஒலிம்பியாட் என்ற பெருமைமிகு நிகழ்விற்கும் தன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கும்  பின்னிருந்து உழைத்தது போல இந்த தமிழ்நாடு அரசு இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் பதவிக்கு அவர் உளமார திறம்பட  உழைத்தால் தமிழக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடிப்பார், பகைவர் உள்ளங்களையும் வெல்லுவார் என்பது திண்ணம்.

இது தாழம்பூர் வெள்ள வடிகால் பணிகள் பற்றி  உணர்ந்து எழுதியது.
https://www.facebook.com/750161339/posts/10160730481806340/?mibextid=Nif5oz

அண்ணாசாலையில் சாலை ஆக்கிரமித்து செய்த ராட்சத உயர் திமுக கொடிகம்பம் ,அறப்போர் இயக்கத்தினர் புகார் எதிரொலியால் இன்று  அகற்றப்பட்ட பதிவு 

https://www.facebook.com/100070041472363/posts/446574051020640/?mibextid=Nif5oz
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)