கொல்லிலக்கம் |(அதிர்வலை) (1981) சூப்பர் ஸ்டார் ஜெயன் மரணித்த படப்பிடிப்பு

 
காலஞ்சென்ற மலையாள சூப்பர் ஸ்டார் ஜெயன் பங்கு பெற்ற கடைசி படப்பிடிப்பு இது, கொல்லிலக்கம் (அதிர்வலை) (1981) என்ற மலையாள திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி.


சென்னையை அடுத்த சோழவரம் ரேஸ் கோர்ஸில் நவம்பர் 16 1981 ஆம் தேதி  பகல் 2-30 மணிக்கு இந்த கோரமான ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது.


இப்படத்தின் இயக்கம் PR. சுந்தரம், 

இவர் இந்திய சினிமாவில் மூத்த ஒளிப்பதிவாளரும் கூட , இந்தியில் 1965 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற waqt படத்தின் மலினமான ரீமேக் இக்கதை,படத்தின் க்ளைமேக்ஸிற்கு பலம் கூட்ட வேண்டி ஹெலிகாப்டர் எல்லாம் தருவிக்கப்பட்டது, மூலப்படத்தில் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி ஹெலிகாப்டர் எல்லாம் இல்லை.

  

இது  ஒரு revenge thriller,  multi star cast திரைப்படம்,நான்கு கேமரா வைத்து இந்த நீண்ட சண்டைக்காட்சியை அன்று காலை தொடங்கி எடுத்தனர்,


தந்தை மது, சகோதரர்கள் எம்.ஜி.சோமன், மற்றும் சுகுமாரன் மூவரும் வில்லன் பாலன் .கே.நாயர் மற்றும் அவர் அடியாட்களுடன் மோதும் நீண்ட காட்சி, உடன் வீல்சேரில் அம்மா கே.ஆர்.விஜயா சண்டையை வேடிக்கைப் பார்க்கிறார்.


அதில் பாலன் கே.நாயர் சோழவரம் ரேஸ்கோர்ஸில் காத்திருக்கும் ஹெலிகாப்டரில் ஏறி தப்புகிறார், அவரை சுகுமாரன் (பிரித்விராஜ் அப்பா  ) பைக்கில் துரத்த பின்னால் ஏறி நின்றபடி ஜெயன் ஜெலிகாப்டரின் லேண்டிங் ஸ்கிட்டை எகிறிப் பிடித்து தொங்கியபடி உள்ளே காக்பிட்டில் ஏறியவர் பாலன் கே நாயரை இழுத்து வெளியே எறிய வேண்டும், 


அது போல பாலன் கே நாயர் இவர் பிடித்து வெளியே எறிய குதித்தும் விடுகிறார், ஆனால் அவரின் எடை காக்பிட்டில் குறைந்ததும், லேண்டிங் ஸ்கிட்டில் இவர் எடை கூடியதும் அந்த ஹெலிகாப்டரை நிலைகுலையச் செய்கிறது, 


பைலட் எத்தனை முயன்றும் சமநிலையை எட்ட முடியாமல், ஜெயன் குதிப்பதற்குள்ளாக ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது, இதில் தாழ்வான உயரம் என்றாலும் இவர் மீது ஹெலிகாப்டர் விழுந்ததில் ஜெயனுக்கு தலை கால் முட்டிகள் , முதுகு என பலத்த காயமடைந்து அதிக ரத்த சேதம் ஆகியது, 


அவரை உதவி  ஒளிப்பதிவாளர், இணை தயாரிப்பாளர் எல்லாம் சேர்ந்து அவரின் ப்ரீமியர் காரில் வைத்து சென்ட்ரலிற்கு எதிரே உள்ள அரசு மருத்துவமனைக்கு 40 கிமீ பயணித்து வந்து ஐந்தரை மணிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.


ஒரு மணி நேரம் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் நிலைமை கைமீறிப் போய் மரணித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ஜெயன்,


அவரை 6-30 மணிக்கு மார்ச்சுவரியில் பிணங்களோடு பிணமாக தரையில் வைக்க, இவர்கள் கெஞ்சிக் கேட்டு அவருக்கு இரண்டு பெஞ்சுகள் தருவித்து அதில் அவரது ஜடத்தை கிடத்தினார்களாம். 


இவர் சூப்பர் ஸ்டார் என்பதால் மறுநாள் முறையாக பிரேத பரிசோதனை நடந்து ,அதன் பின்னர் விமானத்தில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஓலையில்  இருக்கும் கொல்லத்திற்கு இறுதி மரியாதைக்கு பூத உடல் சென்றது. அங்கு இறுதி மரியாதையில் பெருங்கூட்டம் கூடியது.


ஜெயன் இறந்த அன்று அவரது தீபம் திரைப்படம் மாலைக்காட்சி  திரையரங்கில் ஓடுகையில் படத்தை இடைநிறுத்தி மரித்த ஜெயனுக்கு அஞ்சலி ஸ்லைட் காட்டியிருக்கின்றனர் கேரள திரையரங்கத்தார், 


அதைக் கண்டு பெருங்கூட்டம் கண்ணீரில் மூழ்கியதாம்.பலர் படத்தை பாதியில் புறக்கணித்து நெஞ்சு வெதும்பி வீடு திரும்பினராம். 


 இந்த படத்திற்கு காலையில் எடுக்கப்பட்ட முதல் காட்சியே நன்றாக வந்துள்ளது போதும் என்று இயக்குனர் PR. சுந்தரம் அவர்கள் OK செய்த நிலையில் ,இல்லை எனக்கு திருப்தி இல்லை , நாம் இன்னொரு டேக் போகலாம் என்று அவரே வலியப் போய் காலனிடம் சிக்கியிருக்கிறார் ஜெயன்.


தனக்கு உடம்பில் தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் போராடுகையில் கூட அவரது விக்கை அவர் கழற்றி எறியவில்லை என்று இப்படத்தின் இணை தயாரிப்பாளர் குறிப்பிட்டார், மற்ற எந்த ஒரு நடிகருமே படப்பிடிப்பில் காட்சி முடிந்திதுமே அதை பிடுங்கி கடாசுவார்களாம்.


மலையாள சினிமாவில் ஜெயன் மறைவுக்குப் பின்னர் தான் அதீத மசாலா படங்கள் வழக்கொழிந்து ரியாலிச படங்கள் வெளியாகும் போக்கை கொண்டு வந்தது என்றும் சொல்கின்றனர்.


ஜெயன் 1972 துவங்கி 1981 வரை சுமார் 150 வெகுஜன மசாலா multi star cast திரைப்படங்களில் நடித்துள்ளார், இறக்கையில் அவருக்கு வயது 42, அவர் 1950 முதல் 1966 வரை இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


தமிழில் இயக்குனர் மகேந்திரனின் பூட்டாத பூட்டுக்கள்(1979) படத்தில் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரம் செய்தார், இவர் நடிகை ஜெயபாரதியின் cousin, 


250 திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்த மூத்த ஒளிப்பதிவாளர் PR.சுந்தரம் அவர்கள் இதற்குப் பின்னர் எந்த படமும் செய்யவில்லை.


#கொல்லிலக்கம், #ஜெயன், #PR_சுந்தரம், #சோழவரம், #ஹெலிகாப்டர்,#மது,#எம்ஜி_சோமன்,#சுகுமாரன்,#கேஆர்_விஜயா

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)