ஆர்க்கறியாம் |மலையாளம் |2021(யாரறிவார்)





ஆர்க்கறியாம் |மலையாளம் |2021(யாரறிவார்)

சென்றவருடம் மார்ச் 2020  கொரோனா முதலாம் அலை முழு தேச ஊரடங்கு காலத்தில் அந்த அவஸ்தையான சூழலை உபயோகித்து உருவான அழகிய noir thriller திரைப்படம்.

நடிகர் பிஜூ மேனன் 70 வயது ஓய்வு பெற்ற கணக்கு வாத்தியார் இட்டி என்ற கதாபாத்திரத்தில்  பிரமாதப்படுத்தியிருக்கிறார்,
இந்த வயசன்- விதவன் , ரப்பர் கிருஷி, முன்னாள் பன்றி பண்ணையாளர், கோட்டயம் நஸ்ரானி கதாபாத்திரத்தில்  அபாரமான transformation நடத்தியிருக்கிறார் இவர்,
லீலாவுக்குப் பின்னர் மீண்டும் அவர் பெயர் சொல்லும் படம் .

இவரது மகள் ஷெர்லியாக பார்வதி,பிஜுமேனன் உடம்பு ஷீனித்திருந்தால் இவரோ இந்த இளம் அம்மா கதாபாத்திரத்திற்காக மிக அழகாக தடிகூடியிருக்கிறார், இவரது இரண்டாவது கணவன் ராயாக ஷரஃப்புதீன் அம்சமாக பொருந்திப் போகிறார்.

ஷெர்லியின் முன்னாள் காதல் கணவன்  ஊதாரியான அகஸ்டின் இவளுக்கு வயிற்றில் பிள்ளை தந்து விட்டு காணமல் போனவன்  இரு வருடங்கள் கழித்து உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறான்,  அந்த பேரதிர்ச்சியில் இருந்தவளுக்கு மிகப்பொருத்தமான நண்பன் போல இரண்டாம் கணவன் ராய் அமைந்திருக்கிறான், ராய் ஏற்கனவே மணமாகி மணமுறிவும் பெற்றவன்.

அவன் வசிக்கும் மும்பைக்கு திருமணத்துக்குப் பின் தந்தையைப் பிரிந்து சென்று வசிக்கிறாள் ஷெர்லி, தன் மகளை நாகர்கோவில் கான்வென்டில் சேர்த்திருக்கிறாள்.

மும்பையில் நண்பன் வைஷாக்குடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் ராய் கொரோனாவில் தொழில் நசிந்திருக்கிறான், இவன் மூளையை நம்பிய நண்பன் வைஷாக்கின் கையிருப்பான சுமார் இரண்டு கோடிகளை வழித்து வாங்கி தொழிலில் முடக்கிய ராயின்
பெரும் விலை கொண்ட ஓரு shipment மும்பை துறைமுகத்தில் மாட்டிக் கொண்டுள்ளது, எத்தனை லஞ்சம் தந்தாலும் அதை வெளிக்கொண்டு வர முடியவில்லை.

நொந்து நொடிந்து போயிருக்கிறான் வைஷாக், நண்பனின் புலம்பல்களையும் ஏச்சு பேச்சுக்களையும் தினம் கேட்கத் துவங்குகிறான் ராய், ஷெர்லி வேலைக்குச் செல்லும் நிறுவனத்திலும்  எந்த வேலையும் நடப்பதில்லை, சரி நீண்ட விடுப்புக்கான நேரம் இது என்று இருவரும் முடிவு செய்கின்றனர்.

இந்த முழு தேச ஊரடங்கு துவங்கும் முன் பெரிய விடுமுறையில் கார் ஓட்டிக்கொண்டு மும்பையில் இருந்து கோட்டயம் வருகின்றனர், சரியாக தேசம் தழுவிய ஊரடங்கு மறுநாள் துவங்கப்படுகிறது, மகள் இருக்கும் நாகர் கோவிலுக்குச் சென்று அவளை கோட்டயம் அழைத்து வர முடியாத படிக்கு மாநில எல்லைகள் மூடப்படுகின்றன.

கோட்டயம் , பாலையில் இட்டி வசிக்கும் 3 ஏக்கர் பரம்புடன் கூடிய வீட்டிற்கு கட்டுமான சந்தையில் நல்ல விலை இருக்கிறது, நிலத்திற்கு ஐந்து கோடி வரை மனதில் நினைத்திருக்கிறார் இட்டி, 

மகள்  மருமகன் கிசு கிசுவென பேசுவது முகம் மாற்றம் கண்டு ராயின் தொழில் நசிந்ததை அறிகிறார், மகள் கடனின்றி யாரின் ஏச்சு பேச்சின்றி என்றும்  வாழ வேண்டும் என்று இச்சிக்கலுக்கு பெரும் பணம் தந்து உதவ எண்ணுகிறார், 

பரம்பையும் வீட்டையும் விற்று விட்டு கடனடைத்து  எஞ்சும் பணத்தில் அடுக்கு மாடி 3BHK அடுக்ககம் வாங்கிக் கொண்டு செல்ல முடிவெடுக்கிறார்.

இட்டி வெளியில் பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் ,தீவிர தெய்வ விசுவாசி, தினமும் அந்தியில் நெடுநேரம் பாவமன்னிப்பு கேட்கிறார்,தான் நெடுங்காலம் சுமக்கிற சிலுவையை இறக்கி வைக்க தோள்கள் தேடுகிறார், அது  ராய் தான் என்று தீர்மானித்தவர்,

 அவனிடம் தனிமையில் வந்து தான் செய்த ஒரு மகா பாவத்தைச் சொல்கிறார், இந்த பாவத்தில் இருந்து காப்பாற்ற உன்னிடம் தான் உதவி கேட்க முடியும், இது ஷெர்லிக்கு தெரியவே கூடாது , தள்ளாமையால் என் ஒருவனால் இதை தனியே செய்ய முடியாது,

எனக்கு உதவ வேண்டும் என்கிறார், அதை கண்டிப்புடன் சொல்கிறார், மருமகனிடம் கேட்கும் தோரணையின்றி மகனிடம் ஆணையிடுவது போலவே கேட்கிறார்,

ராய் பெரிய தெய்வ விசுவாசி அல்ல , ஆனால் தைரியசாலியும் அல்ல, தன் தள்ளாமை கொண்ட மாமனாருக்கு எல்லா பணிவிடைகளையும் செய்ய முடியும், காரணம் மனைவி ஷெர்லி மீதான காதல் , ஆனால் இவர் கேட்ட உதவி யாரும் செய்ய முடியாத உதவி, மகா பாவத்துக்கு உடந்தையாக இருப்பது, 

ராய்க்கு மும்பையில் வளர்ந்தவனாதலால் உடல் உழைப்பே இருந்ததில்லை,சுகமாக மூளையை வைத்து ஜீவித்து இருந்தவன் , மென்மையான உள்ளங்கைகளைக் கொண்டவன், அவன் இதற்கு சரிப்பட்டு வந்தானா?  எத்தனை எத்தனை கேள்விகள், மெல்ல நகருகிற இப்படத்தில் இதற்கு அற்புதமாக விடை சொல்லியிருக்கின்றனர்,

த்ருஷ்யம் போன்ற ஒரு மையக் கரு, ஜோஜி போன்றே ரப்பர் பரம்பு ,நஸ்ரானி சமூக சூழல் என்றாலும் முற்றிலும் புதிய கோணத்தில் இயக்கியிருக்கிறார் சனு ஜான் வர்கீஸ்,இவர் ஒளிப்பதிவாளரும் கூட, இத்திரைப்படத்தை ஆஷிக் அபு தயாரித்திருக்கிறார்.

அமேஸான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது
எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)