தேவி தியேட்டர் | தேவி பேரடைஸ் | தேவி கலா | தேவி பாலா | ஆர்கிடெக்ட் K.N.ஸ்ரீநிவாசன்இன்றுடன் மவுண்ட் ரோடு தேவி திரையங்கம் திறக்கப்பட்டு 51 ஆண்டுகள் ஆகிறது (மே 17 1970 ). இங்கு முதலில் திரையிட்ட திரைப்படம் Sweet Charity
என்ற 1969 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் Musical/Comedy திரைப்படம்.

90 களில் பள்ளி ஆண்டு விடுமுறை விட்டால் அன்று சென்னை சிறுவர்கள் முதலில் செல்ல நினைக்கும் இடம் மவுண்ட் ரோடு தேவி திரையரங்கம்,காரணம் வகுப்பில் சக மாணவர்கள் சொல்லச் சொல்ல வாய் விரிய கேட்ட திரையரங்கம் பற்றிய பல  கதைகளால்  தான், 

சிறுவனாக இருக்கையில் பல்லாவரத்தில் இருந்து பஸ் 18 A பேருந்து ஏறி மெட்ராஸ் போய் தேவியில் படம் பார்த்து வருவது அத்தனை பெருமைக்குரிய விஷயம்,

தேவி திரையரங்கின் 70 mm projection ல் படம் பார்ப்பது அலாதியானது,நான் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தேவி திரையரங்கில் கண்டு களித்துள்ளேன், அது multiplex  ஆக மாற்றம் கண்ட பின்னர் இது வரை ஒரு முறை கூட சென்றதில்லை.

தேவி பாரடைஸ், தேவிபாலா, தேவி கலா திரையரங்குகள் செல்வதற்கு அந்த எண்கோண  ramp படியில் சுற்றி சுற்றி நடப்பது அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும், அந்த நடுவில் இருக்கும் நீரூற்று, அந்த புதுமையான மெக்ஸிக்க abstract சிற்பம் மறக்க முடியாதது,

நல்ல சுத்தமான கழிவறைகள், கதவைத் திறந்ததும் எழும்பும் room freshener வாசனை, நல்ல தானே மடங்கும் மெத்து மெத்தென்ற  குஷன் இருக்கைகள் இருந்தன, ஏஸியை குறைக்காமல் அணைக்காமல் படம் திரையிட்ட நிர்வாகம்,  திரையரங்கத்துக்கான கம்பீரம் ,சென்னை ரசிகர்களுக்கான மரியாதையை தந்த திரையரங்கம்

பக்கத்தில் இருந்த அலங்காரும் அப்படி ஒரு நல்ல திரையரங்கம் (இன்று raheja towers) குறிப்பாக தேவியில் அந்த பத்து ரூபாய் சகாய விலை டிக்கட்டுக்கு சென்று மணிக்கணக்கில் நின்று வாங்கி படம் பார்த்தவர்கள் நாங்கள்.

இந்த திரையரங்கத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்த திரு.K.N.ஸ்ரீனிவாசன் அவர்கள், மூத்த கட்டுமானப் பொறியாளர், வடிவமைப்பாளர், இவர் 1958 ஆம் ஆண்டு பெங்களூரில் BMS கல்லூரியில்  தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர், 

பம்பாயின் தலைசிறந்த திரையரங்க வடிவமைப்பாளரான  D.S.Bajpai அவர்களிடம் சென்று பணியில் சேர்ந்து மூன்று வருடங்கள் பணியாற்றி திரையரங்க வடிவமைப்பின் நுணுக்கங்களைப் பயின்றவர், (D.S.Bajpai அவர்கள் sapphire,blue diamond, emerald வடிவமைத்தவர்  ) 

திரு.K.N.ஸ்ரீனிவாசன் அவர்களை Houseful architect என்றும் அன்புடன் அழைக்கின்றனர் ,இன்று 94 வயது,  தமிழகமெங்கும் சிறந்த முறையில் 20 க்கும் மேற்பட்ட பல சினிமா தியேட்டர்களையும் இந்தியா முழுக்க 80 தியேட்டர்களையும் குறுகிய காலத்தில் திறம்பட வடிவமைத்து கட்டுமானம் செய்து சொன்ன தேதியில் திறந்து திறப்பு விழாக்கள் நடத்திய பெருமைக்குரிய ஆளுமை , இவரின் வாழ்நாள் சாதனைக்கு வேண்டி limca book of records லும் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

அவர் வடிவமைத்து கட்டுமானம் செய்த முதல் திரையரங்கம் பெங்களூர் m.g.சாலையில் இருக்கும் சங்கம் திரையரங்கம்,1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, அதன் எண்கோண வடிவ ramp ,அதன் நடுவே உள்ள , நீரூற்று , அதன் structural glazing கண்ணாடிகள் வேய்ந்த  வெளிப்புற facade பார்வையாளர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றது, 

சங்கம் திரையரங்கத்தை வடிவமைப்பதற்கு முன்னர் இவர் பம்பாயில் அன்று இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்கங்களுக்கும் சென்று case study செய்தவர், மக்கள் கூடும் இடங்கள் கூடிய மட்டும் grand and luxury ஆக இருக்க வேண்டியவற்றை மனதில் கொண்டு வடிவமைத்தார்.
இவர் அமெரிக்காவின் நியூயார்க்  சென்றவர் அமெரிக்க கட்டிடகலையின் தந்தை எனப் போற்றப்படும் frank Lloyd wright அவர்களின் கட்டிடங்களை case study செய்து வந்தாராம், அவர் வடிவமைத்த Solomon R. Guggenheim மியூசியத்தின் ramp போல ஒன்றை வடிவமைக்க எண்ணியவருக்கு இந்த எண்கோண ramp வடிவமைக்க கிடைத்தது.

பின்னாளில் பெங்களூரில் கேலக்ஸி ,சந்தோஷ், பல்லவி, நர்த்தகி திரையரங்கங்களை வடிவமைத்தவர், சென்னையில்  ப்ரிட்டிஷார் வடிவமைக்காத திரையரங்கங்களை இவர் தான் வடிவமைத்து நிர்மாணித்தார் எனக் கொள்க,

 இவர் வடிவமைத்த திரையங்குகளில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் குறைவின்றி கடைபிடிக்கப்பட்டன, குறைந்தது ஐந்து பெரிய அவசரகால வெளியேற்ற கதவுகள் இருக்கும், கழிப்பறையில் குறைந்தது 20 urinals இருக்கும், ஆயிரம் பார்வையாளர்கள் நின்று செல்ல  மிக அகலமான lobby க்கள் முப்புறமும் இருக்கும்.

தொலைக்காட்சி இல்லாத அக்காலத்தில் நல்ல புதுமையான தரமான சூழல் கொண்ட திரையரங்கங்களின் தேவை அதிகமாக இருந்தது, 

இவரது ஆளுமைத்திறன் குறுகிய காலத்தில் அந்த திரையரங்கங்களின் வடிவமைப்பையும் கட்டுமானத்தையும் சாத்தியமாக்கியது என்றால் மிகையில்லை,

திரு.K.N.ஸ்ரீனிவாசன் அவர்கள் மகன் கே.எஸ்.ரங்கநாத் சென்னையின் ஒரு leading architect,l&t நிறுவனத்தின் மணப்பாக்கம் தலைமை அலுவலகத்திற்கு தாமரை வடிவ கட்டிடத்தை வடிவமைத்த பெருமைக்குரியவர்.

https://m.timesofindia.com/city/chennai/a-true-blue-architect-and-his-theatre-marvels/amp_articleshow/61811513.cms

தேவி குழுமத்தார் தயாரித்த இயக்குனர் பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=10158760430686340&id=750161339

மேலும் தேவி திரையரங்கம் பற்றிய அரிய தகவல்களுக்கு மதுரை மன்னன் அவர்கள் பதிவைப் பார்க்கவும் 

https://m.facebook.com/story.php?story_fbid=493934091917749&id=100039034866668


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)