ஹராம்கோர் |2017 | Haramkhor | இந்தி | இந்தியா சினிமா | ஷ்லோக் ஷர்மா

 ஹராம்கோர் |2017 | Haramkhor 


விடலைப்பருவத்து காதல் அபாயகரமானது, அன்பிற்கு ஏங்கி அது எங்கே யாரிடம் கிடைத்தாலும்  அதன் நன்மை தீமை தெரியாமல் அதில் மாட்டி விழச்செய்துவிடும், இந்த விடலைப் பருவத்து காதல் theme ல் எத்தனையோ அற்புதமான படைப்புகள் உள்ளன, தமிழில் பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள்,தங்கர்பச்சானின் அழகி, மராத்தியில் நாகராஜ் மஞ்சுளேவின் ஃபண்ட்ரி என நீளும் , ஹராம்கோரில் வித்தியாசமாக விடலைபருவச் சிறுவனின் ஒருதலைக் காதலையும் பத்தாம் வகுப்பு மாணவிக்கும் அவளின் கணித ஆசிரியருக்கும் நிகழும் கூடாக்காதலையும் இந்த முக்கோணக் காதல் படைப்பு லஜ்ஜையின்றி பேசுகிறது, 


தமிழில் சுந்தர காண்டம் திரைப்படத்தில் ஆசிரியர் பாக்யராஜ் மாணவி சிந்துஜாவின் காதலை ஏற்று அவளிடம் தவறாக பழகி பயன்படுத்தி சுகித்தால் எப்படி இருந்திருக்கும்?, அது தான் ஹராம்கோர் திரைப்படம் (ஹராம் கோர்=கேடுகெட்டப்பயல் )


நடிகர் நவாசுதீன் சித்திக்கி சமகால இந்திய சினிமாவின் நம்பிக்கை ஒளி, அவர் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரங்களே இருக்க முடியாது , இதில்  ஷ்யாம்சந்த் சய்னி என்ற  ஹராம்கோர் pedophiliac வாத்தியாராகவே உருமாறியிருக்கிறார், 


மாணவி சந்தியாவாக ஸ்வேதா த்ரிபாதி, இவர் மாஸான் திரைப்படத்தில் காசியில் வெட்டியான் குடும்பத்தில் இருந்து வந்து பொறியியல் கல்லூரி படிக்கும் இளைஞனைக் காதலிக்கும் பணக்கார கல்லூரி மாணவி ஷாலுவாக நடித்து நம் மனதைக் கொள்ளை கொண்டவர், இதில் கத்தி மீது நடப்பதைப்  போன்ற கதாபாத்திரம் , பதினைந்து வயது மாணவியின் முதிர்ச்சியில்லாத கூடாக்காதலை சிறப்பாக நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்,


 படத்தின் இயக்கம் ஷ்லோக் சர்மா , படத்தின் தயாரிப்பு இயக்குனர் அனுராக் காஷ்யப்.இப்படத்தை கெரில்லா யுத்தியில் குஜராத்தின் குக்கிராமப் பள்ளி ஒன்றில் வைத்து வெறும் 16 நாட்களில் படமாக்கியுள்ளனர்,கிராம மக்கள் யாருக்கும் சினிமா எடுத்ததே தெரியாதபடிக்கு இயக்கியுள்ளனர், படத்தின் இசை ஜஸ்லீன் ராயல், படத்தின் ஒளிப்பதிவு  சித்தார்த் திவான், 

ஆனால் 2015 ல் துவக்கப்பட்ட இப்படம் சென்சார் அலைக்கழிப்புகளால் இரண்டு வருடம் தாமதமாகி 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் வெளியானது.


படத்தின் spoiler கதை : சந்தியா 15 வயது பத்தாம் வகுப்பு மாணவி , மத்திய பிரதேசத்தில் மின்சாரம் அடிக்கடி தடைபடும் குக்கிராமத்தில் 2000 ஆண்டில் இப்படம் துவங்குகிறது , ஊரைச்சுற்றி நிறுவப்பட்ட காற்றாலைகள் 24 மணி நேரமும் சுற்றியபடி மின்சாரத்தை தயாரிக்கின்றன, ஆனால் இவர்கள் கிராமத்தில் 12 மணிநேரம் மின்வெட்டு, அந்த குக்கிராமத்திற்கு இந்த பயன்ற்ற காற்றாலைகள் போல சந்தியாவுக்கு அவளைச் சுற்றியுள்ள மனிதர்கள், இவளுக்கு வேண்டிய அன்பு அவர்களால் அவளுக்கு  கிடைப்பதேயில்லை.


அவ்வூரில் ஜெனரேட்டர் வைத்து உய்யும் வசதியான பெண் சந்தியா அன்புக்கு ஏங்குபவள், தனிமையில் வளர்ந்தவள்,இரக்கமில்லாத  தாய் போலீஸ் கணவரையும் இவளையும் ஒட்டுக்கும்  பிரிந்து விட்டிருக்கிறாள், இவர் அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாதி நேரம் குடித்தபடியே இருக்கிறார், இவளிடம் மனம் விட்டுப் பேச ஆளில்லை.


சந்தியாவை சக பள்ளி மாணவன் கமல் என்ற ஏழைச்சிறுவன் காதலிக்கிறான், அவளுக்காகவே இவன் கருப்பன் என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கும் கணக்கு வாத்தியார் ஷ்யாமிடம் ட்யூஷன் கூட சேர்கிறான், இவன் கூடவே சுற்றும் மிண்டு இவன் காதலை தூபம் போட்டு ஏற்றி விடுகிறான், கமல் என்ற மாணவன் சரியான குரங்குத்தனம் செய்பவன் , மாணவி சந்தியாவை கவர பள்ளியில் சாலையில் பல சேஷ்டைகள் செய்வான், அப்படி ஒரு முறை மரம் ஏறி விழுந்து இரண்டு கைகளையுமே உடைத்துக் கொள்கிறான், இரண்டு கையிலுமே மாவுக்கட்டு போட்டு ஒரு மாதமாக அலைகிறான், அவன் வீட்டுப்பாடங்களை நண்பன் மிண்டு எழுதுகினான், அவனுக்கு படிக்கப் பிடிப்பதில்லை, வாத்தியார் ஷ்யாம் அவனிடம் எச்சரித்திருந்தான், ஒன்று அவனுக்கு வீட்டுப்பாடம் செய், அல்லது அவனுக்கு பிட்டம் அலம்பி விடு என்று, 


வாத்தியார் ஷ்யாம் இரு வருடங்களுக்கு முன்னர் தன்னிடம் படித்த  +2 மாணவி சுனிதாவை  மனைவியாக ஆக்கிக்கொண்டவன், அவள் குழந்தைக்கு ஏங்க,  இவன் அதற்கு ஏற்றபடி என் வருமானம் இல்லை காத்திரு என்கிறான், தன் உடைக்கு சற்றும் பொருத்தமில்லாத ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் அணிந்து ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் தான் பள்ளிக்கு வருகிறான்,  


சந்தியாவிடம் அதிக அக்கறை எடுத்து கணக்கு சொல்லித் தருகிறான், தான் தன் மனைவியுடன் இல்லற பந்தத்தில் இல்லை, அவளிடம், அவளுக்கும் எனக்கும்  சதா சண்டை  நிம்மதியே இல்லை என்று புளுகுகிறான், 


சந்தியா வாத்தியாரின் அக்கறையில் விழுகிறாள், அவன் மனைவி சுனிதா மீது பொறாமை கொள்கிறாள், இவன் வீட்டில் இரவு நேரத்திலும் கதவைத் தட்டி உள்ளே வந்து போக ஆரம்பிக்கிறாள் சந்தியா, ஷ்யாமின் மனைவிக்கு இது தலைவலியாகிறது, ஷ்யாமின் மனைவிக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க சந்த்யா தன் அப்பாவிடம் noc வாங்க உதவுகிறாள்.


ஒரு முறை ட்யூஷனில் சந்தியாவின் செருப்பை மிண்டு ஒளித்து வைத்தவன்,கமல் அதை தேடி எடுத்து தந்தால் சந்தியாவுக்கு காதல் வரும் என தூபமிடுகின்றான், 

அப்போது வாத்தியார் ஷ்யாம் தன் மனைவி செருப்புகளை ஓடி எடுத்து வந்து அவளுக்குத் தருகிறான், அதற்குள் மிண்டு அவள் செருப்பை எடுத்துத் தந்துவிடுகிறான், இப்படி வாத்தியார் ஷ்யாம் அவளை அடைய ஆரம்ப கட்ட வேலைகள் பலவும் செய்கிறான், 


சிறுவன் மிண்டு கமலிடம் நீ சந்தியாவை  நிர்வாணமாகப் பார்த்தால் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிடும் என்கிறான், மறுநாள் கமல் அவள் குளியலறையில் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கிறான், மிண்டு நீ மட்டும் அவளை நிர்வாணமாகப் பார்த்தால் போதாது அவளும் உன்னை நிர்வாணமாகப் பார்த்தால் தான் திருமணம் என்கிறான், கமல் தைரியத்தை வளர்த்துக் கொண்டு எனக்கு உன்னை பிடிக்கிறது, உனக்கும் என்னைப் பிடித்தால் அந்த பச்சை சல்வார் அணிந்து கொண்டு அந்த ஒற்றை மரத்தடிக்கு வா என்கிறான், சிறுவர்கள் இருவரும் அங்கு பலமணிநேரம் காத்திருந்தும் அவள் வரவில்லை. 


ஒரு முறை சந்தியா இரவில் வெளியே கிளம்பும் தன் அப்பாவின் ஜீப்பில் ஏறி ஒளிந்து வேவு பார்க்கிறாள் , அவர் தன் நீண்ட நாள் காதலி நீலு வீட்டிற்கு மாடிப் படியேறிப் போகிறார், அங்கே அவள் பிறந்த நாள் கொண்டாடுவதை ஒளிந்து நின்று பார்த்தபடி இருட்டில் திரும்ப ஓடி வருகையில் தடுக்கி விழுந்து முட்டியை பார்த்துக் கொள்கிறாள்,

வீட்டுக்குப் போகாமல் வாத்தியார் ஷ்யாம் வீட்டுக்குப் போனவளுக்கு அவன் மனைவி சுனிதா மருந்து இட்டு ,சிறிய வீட்டின் கூடத்தில் கீழே படுக்க வைக்கிறாள்,மாடியில் கணவன் மனைவி தூங்குவதை மரப்படிகள் ஏறிச் சென்று கதவை விலக்கிப் பார்க்கிறாள் சந்தியா, அங்கே இருவரும் உறவு கொள்வதை குறுகுறுப்புடன் பார்த்து விட்டு விறுவிறுவென இறங்கி வந்து உறங்குவது போல நடிக்கிறாள்,


வாத்தியார் ஷ்யாம் மனைவி உறங்கிய பின் மெல்ல பதுங்கி படியிறங்கி வந்து இவளைத் தொட்டு வருடிப் பார்க்கிறான், தூங்குவது போல நடிக்கிறாயா? என்கிறான், அவள் கோபத்தில் பேசுவதில்லை, மறுநாள் பள்ளி விட்டு வருகையில் அவனிடம் நீயும் மனைவியும் உறவு கொள்ளவில்லை என்றாய் ,நீ பொய் தானே சொன்னாய் என கிடுக்கிப் பிடி போடுகிறாள், அவன் பேச்சை மாற்றி ஊடலைத் தீர்க்கிறான், 


ஒரு நாள் தந்தை ஜீப் வராத நிலையில் பள்ளிக்கு சந்தியா நடந்து செல்கையில் கடும் வெயிலில் மாதவிடாயில் உதிரப்போக்கு அதிகமாகி மயங்கி விழுந்து விடுகிறாள் சந்தியா, அவளை சிறுவர்கள் கமலும் மிண்டுவும் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். இவர் அப்பாவுக்கு வீட்டில் பெண் இருக்க வேண்டிய அவசியம் புரிகிறது,


மறுநாள் வாத்தியார் ஷ்யாம்  சந்தியா வீட்டிற்கு வந்தவன், நீ நிறைய விடுப்பு எடுத்து விட்டாய், இந்தா  தேர்வு வினாத் தாள்கள், இதை வைத்து தேர்வு எழுது எனத்  தந்து தாஜா செய்கிறான் , அவள் இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்கிறாள் ,கோபத்தை தணிக்க, 

தூசு படிந்து போய் இருந்த அவளின் பிரிந்து சென்ற அம்மாவின் லூனா வாகனத்தை  சரிசெய்து இவளுக்கு ஓட்டத் தருகிறான் ஷ்யாம்,

இனி நீ வெயிலில் நடந்து போகத் தேவையில்லை என்கிறான், அவளை நீ அபாரமான சிகப்பு என்கிறான், அவள், நீ கருப்பாய் இருந்தாலும் அழகு,தன் தந்தையைப் போல அடர்த்தியான மீசை வைத்தால் தனக்குப் பிடிக்கும் என்கிறாள், அது போலீஸ் காலனி அங்கே shooting range ல் கேட்கும் துப்பாக்கி குண்டு சப்தங்கள் கேட்டு தொடை நடுங்குகிறான் ஷ்யாம் , அன்று வீட்டில் பட்டப்பகலில் வைத்து இவர்கள் உறவு கொள்கின்றனர்,


அடுத்து வந்த நாட்களில் தன் அம்மா அப்பா மீதான வெறுப்பை சந்த்யா கூடாக்காதலாக மாற்றி வாத்தியார் ஷ்யாம் மீது பயமின்றி பொழிகிறாள், அவளுக்கு மிகுந்த possessiveness வேறு இருக்கிறது, இதனால் சிறு சிறு சம்பவங்களுக்கு எல்லாம் வாத்தியார் ஷ்யாமிடம் அவள் ஊடல் கொள்கிறாள், 


நம் மெரினா கடற்கரையில் உச்சி வெயிலில்  சென்று பார்த்தால் வயது வித்தியாசமின்றி காதல் ஜோடிகள் சுடும் மணலில் கடலை வறுத்துக் கொண்டும் , சார்பு பாம்புகளாக பிண்ணிப் பிணைந்தபடியும் இருப்பார்கள், அவர்களுக்கு உலகமே அந்நியமாகிவிடும், தன்நிலை மறந்துவிடும், உச்சந்தலைக்கு காமம் ஏறிவிடும், அப்படிப்பட்ட நிலைக்கு ஷ்யாமும் சந்தியாவும் வந்துவிடுகின்றனர், கரடு முரடான திறந்தவெளி அத்துவானக்காடு எதுவும் இவர்களுக்கு உறைப்பதில்லை, சுற்றிலும் வினோத சப்தம் எழுப்பியபடி இயங்கிக் கொண்டு இருக்கும் காற்றாலைகள், நடுவே இவர்கள் கட்டாந்தரையில் படுத்தபடி கலவி கொள்கின்றனர்.


அடுத்தநாள் பள்ளி வகுப்பு முடிந்ததும் இவள் காதில் , இன்று பெர்ஃப்யூம் இட்டு வா என்று நேயர் விருப்பம் தெரிவித்து விட்டுப் போகிறான் வாத்தியார் ஷ்யாம்.


இரவு அப்பா சந்தியாவிடம் நீலுவை காட்டி அறிமுகம் செய்கிறார், உன்னிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் , என் காதலி பல வருடங்களாக பழக்கம், ஆனால் உனக்கு ஒரு முதிர்ச்சி பக்குவம் வரும் வரை சொல்ல வேண்டாம் என இருந்தோம், அடுத்த வருடம் நீ ஜூனியர் காலேஜ் போகப்போகிறாய், இனி நீலு நம்முடன் இருப்பாள், நல்லவள் உனக்குப் பிடிக்கும் என்கிறார்.


சந்தியாவிற்கு தன்னை நிர்வாணமாக காட்ட தருணம் பார்த்த கமல் , மிண்டு ஆலோசனைப்படி ட்யூஷன் கட்டணத்தை ப்ளாஸ்டிக் கவரில் சில்லரைகளை மூட்டையாக கட்டி கொண்டு வருகிறான், வாத்தியார் ஷ்யாம் அதை வாங்குகையில் சில்லரை மூட்டையை தரையில் சிதற விடுகிறான், அந்த சிறிய கூடம் முழுக்க நாலணா எட்டணா சில்லரைகள் அதைப் பொறுக்குவதற்கு ஒரு அடிபிடி சண்டை, தள்ளுமுள்ளு,எப்போதும்  சக்திமான் உடை அணிந்த அழுக்கு சிறுவன் கொத்தாக சில்லரைகளை பொறுக்கி கால்சட்டையில் பதுக்க, ஷ்யாம் அவனை தூக்கி தலைகீழாக குலுக்கி சில்லரைகளை மீட்கிறான், நடந்த அமளியில் கமலின் கால்சட்டையை இழுக்க முயன்ற மிண்டுவால் கால்சட்டையை அவிழ்க்க முடியவில்லை, எனவே அந்த முயற்சி தோல்வி அடைகிறது, அன்று தன் மனைவி உட்பட  எல்லோரையும் கோபத்தில் வெளுத்து விடுகிறான் வாத்தியார் ஷ்யாம்.


ஒருமாதம் கடந்த நிலையில் சந்தியா பள்ளியில் ஷ்யாமிடம் வந்து உடனே என்னை தண்ணீர் தொட்டி அருகே வந்து பார் என்கிறாள் ,வந்தவனிடம், தனக்கு மாதவிலக்கு வரவில்லை என்கிறாள், இவன் பயத்தை காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் கோபம் தலைக்கேறி விடுகிறது , இது தான் அவன் இயல்பு, அப்போது அந்த கோபத்தை அங்கு நீர் அருந்த வந்த மாணவியரிடம் நீ ஒழுங்காக இருக்க மாட்டாயா? உங்களுக்கு மாதுரி தீட்சித் என நினைப்பா என திரும்பத் திரும்ப கேட்கிறான், 


மாணவிகளை தலையில் முகத்தில் அறைந்து விடுகிறான், தலைமை ஆசிரியர் மாணவிகளின் நிலையைப் பார்த்தவர்,ஷ்யாமிடம், உங்களை பணி இடை நீக்கம் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்கிறார்.இவன் தேங்க் யூ என்கிறான், உதடு வீங்கிய மாணவியிடம் ஐஸ் வைத்து ஒத்தடம் கொடும்மா என பரிவாக சொல்லி விட்டு அகல்கிறான் ஷ்யாம்.


மறுநாள் பக்கத்து நகரில் உள்ள அரசு  மருத்துவமனைக்கு ஷ்யாமும் சந்தியாவும் பேருந்தில் ஏறிப் போகின்றனர்,சிறுவன் கமல் இவர்களை ஒளிந்திருந்து பார்க்கிறான், ஆவல் மிகுதியால் பின் சென்று பேருந்தில் ஏறுகிறான்,  கூட்டமில்லாத பேருந்து  என்பதால் உடனே இறங்கியும் விடுகிறான்,


 மருத்துவமனையில் சந்தியாவிடம்  டாக்டர் வயது கேட்க அவள் 15 என்கிறாள், அவன் 15 நாள் மற்றும் 18 வருடங்கள் என்று புகுந்து திருத்துகிறான்,இவனிடம்  விண்ணப்ப படிவத்தை தந்து வெளியே பூர்த்தி செய்து  காத்திருக்கச் சொல்கிறாள், சந்தியாவிடம் உண்மையைச் சொல்  விருப்பமின்றி உறவு கொண்டாயா? இவன் உனக்கு உண்மையில் என்ன உறவு வேண்டும் ? என்கிறாள், இவன் அக்கா புருஷன் தான் என்கிறாள், அப்படியானால் உன் அக்கா ஏன் வரவில்லை? உன் அடையாள அட்டை காட்டு என்கிறார் டாக்டர், அங்கே வெளியே எட்டிப்பார்த்த நீலு டாக்டரிடம் இவளைத் தெரியும், 


அவள் சொல்வது உண்மை என சொல்கிறாள்.

உள்ளே சோதனைக்கு சிறுநீர் வாங்கியவள் நீ என்னை நம்பினால் இதை என்னிடம் பகிரலாம் என்கிறாள், வெளியே வந்த டாக்டரிடம்  ஷ்யாம் பரிசோதனை என்ன ஆயிற்று என்று கேட்க அவள் கர்ப்பமில்லை மாதவிடாய் தடைபட்டுள்ளது என்கிறாள், ஷ்யாமுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை, உணவகத்தில் அவள் கோன் ஐஸ் சாப்பிடுகிறாள் , அங்கே இருந்த லேப் டெக்னீஷியன் பெண்மணி நீலு யார் தெரியுமா? என் அப்பாவின் காதலி என்கிறாள்,

அவள் அப்பாவிடம் சொல்லமாட்டாளா?என்கிறான். மாட்டாள், சொல்வதென்றால் அப்போதே  சொல்லியிருப்பாளே, என்கிறாள்.

இவனுக்கு இதைக் கேட்டதும் மயிர் கூச்சரிகிறது, அவளிடம் காட்டுகிறான்.

உனக்கு பயமாகவேயில்லையா? என்கிறான் ஷ்யாம்,

 காதல் பயப்படுபவர்களுக்கானதில்லை என்கிறாள் சந்தியா, 


உன் மனைவியிடம் நீ என்ன சொல்வாய் ? என்கிறாள் ,அவளுக்கு புடவை எடுக்க வந்தேன் என்பேன், 

எங்கே புடவை? என்கிறாள் இவர்கள் பேருந்து விட்டு இறங்குகையில் அவன் கையில் புடவைப் பையை தந்தவள் இவளின் துப்பட்டா தொப்பியை அதில் இருந்து எடுத்து அணிந்து கொள்கிறாள், 


ஷ்யாம் சொல்கிறான், இதை இத்துடன் நிறுத்திக் கொள்வோம், எனக்கு ஒரு குடுமபம் உள்ளது,நீ கணிதத்தில் மோசமாக இருக்கிறாய் அதை சரிசெய் நன்றாகப் படி என்கிறான், அவள் முகம் தொங்கியவள் விலகுகிறாள், இவன் அவள் புஜத்தை பிடிக்க, ஒரு ஆள் பார்க்கிறார் விடுங்கள் என ஆவேசமாக நடக்கிறாள் சந்தியா.


வீட்டில் நீலு இவளிடம் வந்தவள், ஏன் உன் ரசனையும் உன் அப்பாவின் ரசனையும் இத்தனை மோசமாக இருக்கிறது என்கிறாள்,தானும் அம்மா இல்லாதவள், அப்பாவின் அரவணைப்பின்றி வளர்ந்தவள், பதின்ம வயதில் ஒரு வயதான ஆணிடம் காதல்வயப்பட்டு , அவனால் கர்ப்பமாக்கப்பட்டு ஏமாற்றப்பட்டேன், பின்னர் கருக்கலைப்பு , காதல் தோல்வியால் மனநிலை பிழர்தல் பிரச்சனை, அதற்கு எடுத்துக் கொண்ட ஸ்டீராய்டு மருந்துகள் என்னை தூக்கத்திலேயே வைத்திருந்தன, எழுந்தபின் பேய்பசி, சாப்பிடுவேன்,தூங்குவேன், இப்படித் தான் நான் குண்டாகிவிட்டேன், அந்த வயதில் ஒழுங்காக படித்திருந்தால் இன்று டாக்டராக அமர்ந்திருப்பேன், உனக்கு என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் பேசு,நீ என்னை நம்பலாம் என்கிறாள், இவளுக்கு நீலுவை கட்டிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது, அனுமதி கேட்கிறாள், அவள் கரங்கள் நீட்ட அணைத்துக் கொள்கிறாள்,படத்தில்  அற்புதமான நம்பிக்கை ஒளி போன்ற காட்சி இது , 


இப்போது மிண்டு வீட்டில் அவனது KB 10 கேமராவில் ஃபில்ம் ரோல் மாட்டி கமலை ஜட்டி மட்டும் அணிந்த நிலையில் போட்டோ எடுக்கிறான் மிண்டு, அதை பக்கத்து நகரம் சென்று கழுவி பெரிய ப்ரிண்ட் போட்டவன், அவன் அணிந்திருந்த ஜட்டி மீது காகிதத்தில் சிகப்பு ஹார்ட்டின் வரைந்து வெட்டி ஒட்டி தருகிறான், அவளைப் நேரில் பார்க்க துணிந்து அந்த போட்டோவுடன் செல்கிறான் கமல்,


 சந்தியா,அப்பா ,நீலு மூவரும் பக்கத்து நகரில்  multi cuisine உணவகத்தில் சாப்பிடுகையில் கண்ணாடி வழியே அடிப்பது போல பார்க்கிறான், 


அப்பா அவனை உள்ளே அழைத்தவர் பக்கத்து இருக்கையில் அமர வைக்கிறார்,இவன் தான் சந்தியாவை அன்று காப்பாற்றியவன்,என்றவர், அவனுக்கு தன் கையால் புலாவ் பரிமாறுகிறார்,அங்கு வைத்து சந்தியா தொலைவில் உள்ள  ஊருக்கு ஜூனியர் காலேஜில் சேர்ந்து படிக்கப்   போவதை அறிகிறான் கமல், சந்தியாவின் அப்பா பன்னீர் பரிமாறுகிறார், குளிர்பானம் வேண்டுமா? என்றவர் கோக் கேட்டு வாங்கி  இவனுக்கு குடிக்கத் தருகிறார்,அப்பாவின் செய்கையால் மிகவும் நெக்குருகிவிடுகிறான் கமல், அன்று அந்த போட்டோவை கடைசி வரை வெளியே எடுக்கவேயில்லை.


வாத்தியார் ஷ்யாமால் தாக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் இவன் மீது போலீஸில் புகார் தர , அங்கு வந்த சந்தியா வாத்தியார் மீது எந்த தவறுமில்லை, இவர் தண்ணீர் அருந்தும் குழாய் அருகே அவர்களும் தண்ணீர் பிடித்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினர், அது இவர் மீது பட்டது, இவர் கண்டிக்க துரத்துகையில் அவர்கள் ஓடி கீழே விழுத்ததில் தான் அவர்களுக்கு அடி பட்டது என பொய் சாட்சி சொல்கிறாள்.


இந்த விஷயம் வாத்தியார் ஷ்யாமின் மனைவி சுனிதாவுக்கு தெரிய வர அவள் ஷ்யாமுடன் சண்டை போடுகிறாள், இனி உன்னோடு வாழ முடியாது என அவனை அறைந்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள், இவன் எத்தனை கெஞ்சியும் கேட்பதில்லை,  இவன் தன் கால்சராயையும் ஷூவை சடுதியில் அணிந்து , சைக்கிளில் சென்று தேடிப் பார்க்கிறான் அவளைக் காணவில்லை,


கடும் கோபத்தில் சைக்கிளை போலீஸ் காலனியில் ஒரு புதரில் நிறுத்தி விட்டு உன்னுடன் பேசனும் வா என்று சந்தியாவை லூனாவை கிளப்ப வைத்து அதில் ஏறிக்  கொண்டு அத்துவானக்காட்டிற்குச் செல்கிறான், 


இதே நேரத்தில் இவனது வீட்டில் கூரை ஓடு பிரித்து உள்ளே இறங்கிய அளவில் சிறிய மிண்டு , கமல் உள்ளே நுழைய ஏதுவாக ஜன்னலைத் திறக்கிறான், 

உள்ளே சென்றவர்கள் கூடத்திலேயே மலஜலம் கழித்து வைக்கின்றனர், ரொட்டிக்கு இருந்த மாவை கூடம் முழுக்க இரைக்கின்றனர், உருண்டையாக்கி வாத்தியார் ஷ்யாம். மற்றும. சுனிதா திருமணப் படத்தின் மீது வீசி எறிகின்றனர், வீட்டில் பாத்திரங்களை கவிழ்க்கின்றனர், துவைத்த துணிகளை நனைத்து துவம்சம் செய்கின்ளனர், சந்தியாவை நாசம் செய்வதை தடுக்க முடியாமல் இருந்த கையறுநிலையை அந்த வீட்டில் காட்டுகின்றனர், பெருச்சாளி குகை போல ஆகிறது அவ்வீடு, பின்னர் கமல் ஷ்யாமின் ஒரு நீலசட்டையையும் அவனின் செருப்பையும் திருடிக் கொள்ள, இருவரும் ஜன்னல் வழியே குதிக்கின்றனர்.


அத்துவானக் காட்டிற்கு லூனாவில் ஊர்ந்து சென்றதும்,  காற்றாலை அருகே வண்டியை நிறுத்தி அவளை அறைகிறான்,அடிக்கிறான், உன்னை யார் வந்து எனக்கு போலீஸில் வக்காலத்து வாங்கச் சொன்னது, உன்னால் சுனிதாவுக்கும் எனக்கும் சண்டை வீட்டை விட்டே போய்விட்டாள் என்று அழுது அரற்றியவனை சந்தியா தேற்றுகிறாள், இருவரும் வெட்டவெளியில் உறவு கொள்கின்றனர்.


லூனாவில் வீட்டுக்குப் போகும் வழியில் இறங்கிகொண்ட ஷ்யாம் சைக்கிளைத் தேட அதை சிறுவர்கள் எங்கேயோ கொண்டு போய் போட்டிருக்கவே பல மணி நேரம் தேடி கண்டுபிடிக்கிறான் ஷ்யாம், வீட்டுக்குப் போனால் ,வீடே அமர்க்களமாக சின்னாபின்னமாகியிருக்க, இவன் திரும்பி வந்த மனைவி தான் இதைச் செய்திருப்பாள் என எண்ணி மாடி மேலே ஏறிப் போய் பார்க்கூறும், மனைவி அங்கே எடுத்து வைத்து சுத்தம் செய்கிறாள், கோபம் தீராத அவளிடம் தனக்கு இரண்டு சிறுவர்கள் மீது சந்தேகம் உள்ளது என்கிறான்,அப்போது பார்த்து சுனிதாவுக்கு இவனும் சந்தியாவும் பள்ளியில் எடுத்துக் கொண்ட போட்டோ கிடைக்க அவனிடம் தந்து பத்திரமாக வைத்துக்கொள் என்கிறாள்.இவன் இது எப்போது எடுத்தது என தெரியாதது போல நடிக்கிறான்.,தன் செருப்புகளை காணவில்லை, தன் புதிய நீலச்சட்டையை காணவில்லை என்கிறான்.


மறுநாள் சந்தியா வீட்டில் ஆட்கள் வீட்டை காலி செய்து வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்,


வயல் வெளியில் வைத்து இரு சிறுவர்களும் அவள் ஊரை விட்டுப் போகும் முன்னர் அவளுக்கு கமலை நிர்வாணமாக பார்க்க வைக்க ஒத்திகை  பார்க்கின்றனர், 


ஜட்டி மட்டும் அணிந்த மிண்டு மீது வாத்தியார் ஷ்யாமின் நீல சட்டையை மார்பு முதுகு என இரண்டாக வெட்டி குண்டூசிகளால் இணைக்கிறான் கமல், இதே போலவே ஷ்யாமின் கால்சராயையும் இரண்டாக கிழித்தவன் பல பல குண்டூசிகளால் அதை இணைக்கிறான், கமல் இரண்டு நூல் முனையை இழுக்க அது அப்படியே விண்டு காற்றில் பறந்து அவனின் வெற்று உடம்பு தெரிகிறது, இப்போது ஒத்திகை திருப்தியாக கமல் அந்த ஆடைகளை தன் மீது பொருத்திக் கொள்கிறான், தன் காலுக்கு சற்றும் பொருந்தாத ஷ்யாமின் செருப்பு வேறு அணிந்து சந்தியாவின் வீட்டை நோக்கி இருவரும் ஓடுகின்றனர், வழியில் மழை பிடித்துக் கொள்கிறது,சாலையில்  ஷ்யாம் தலைக்கு ப்ளாஸ்டிக் கவர் கட்டியகடி சைக்கிள் ஓட்டி வந்தவன், அவனைப் பார்த்து வேகமாக ஓடும் இவர்களை துரத்துகிறான், 


துரத்துகையில் அவன் சட்டை கால்சராய் செருப்புகள் எல்லாம் கழண்டு அவனை மேலும்  வெறுப்பேற்றுகின்றன, சிறுவர்களை ஆவேசமாகத் துரத்திப் போனவன் மிண்டுவை பிடித்து அடித்து கழுத்தை நெரித்தும்  தரையில் கிடத்தி அமுக்கி கொன்றுவிடுகிறான், 


அங்கே கமல் தன் உருவத்துக்கு பொருத்தமில்லாத பெரிய கல்லை எடுத்து வாத்தியார் முதுகு, இடுப்பு ,கழுத்து,தலை என அவன் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து அடித்து வாத்தியார் ஷ்யாமைக் கொன்று விடுகிறான்.இந்த நொடியில் இருந்தே அடுத்த பத்து நிமிடங்களுக்கு வசனங்கள் நின்றுவிடுகின்றன, 


அங்கிருந்து வெறும் ஜட்டியுடன் எழுந்து சந்தியாவின் வீட்டில் சென்று அவளைப் பார்த்து நடந்தவற்றை சொல்கிறான், இவனுக்கு தன் பச்சை சல்வாரை அணிவித்தவள் யார் கண்ணிலும் படாமல் அவனுடன் போகிறாள் சந்தியா, அங்கே வயல்வெளியில் நீரில்லாத ஒரு குட்டையில் கிடக்கும் இருவர் உடலையும் பார்த்து அழுகிறாள், கமலை  மாறி மாறி அடிக்கிறாள், ஆனால் அணைத்தும் கொள்கிறாள், மீண்டும்அடிக்கிறாள், ஆனால் அணைத்தும் கொள்கிறாள்,தன்னை பெரிய ஆபத்தில் இருந்து  கமல்  காப்பாற்றியதை புரிந்து கொள்கிறாள், மழையில் இருவரும் நனைந்தபடி ஆசுவாசம் கொள்வது போல காட்சி நிறைகிறது.


இப்படத்தை iPhone 6s Plus மொபைல் போன் கொண்டு படமாக்கியிருக்கிறார்கள்,  இப்படத்திற்கு எங்கும் tripod ல் கேமரா வைத்து படமாக்கப்படவில்லை.


இத்திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது,வயது வந்தோருக்கான படம் இது.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)