மதனோல்சவம்| மலையாளம் |1978 |கமல்ஹாசன்

 
மதனோல்சவம் மலையாள திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளியானது,கொடைக்கானல் இதன் கதைக்களம்,கமல்ஹாசன் சாக்லேட் பாய் கதாநாயகன் இமேஜை உடைத்து  திருமணமான இளைஞன்  கதாபாத்திரத்தில் நடித்து நிரூபித்த படம் இது,இப்படம் நடிக்கையில் அவருக்கு வயது 24.


படத்தில் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரியின் இசையில் ஆறு இனிய பாடல்கள் உண்டு, படத்தின் அருமையான ஒளிப்பதிவு J.வில்லியம்ஸ்,இவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ் கணவர்,படத்தில் முக்கியமான டாக்டர் கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் ஜெயன் நடித்தார்.


படத்தின் துவக்கமே rich girls சூழ நாயகி எலிசி அறிமுகம் ஆகிறார், கமல்ஹாசன் கல்லூரி மாணவர், பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை,இவர் மோட்டார் கார் ரேஸ் வீரரும் கூட, தாயில்லாதவர்,அப்பா திக்குரிசிக்கு இரண்டாம் மனைவி உண்டு, ரேஸ் ட்ராக்கில் இவரிடம் ஆட்டோ க்ராஃப் வாங்க வந்த எலிசியை (ஜரீனா வஹாப்) இவருக்கு மிகவும் பிடிக்க, அவர் டெலிஃபோன் ஆபரேட்டராக இருக்கும் அட்லாண்டிக் ஹோட்டலுக்கு தினமும் சென்று பார்த்து காதலிக்கிறார், 


எலிசி ஆங்கிலோ இந்தியப் பெண், அவர் தந்தை டிகுரூஸ் (சங்கராடி) ஒரு கார் மெக்கானிக் ஷெட் வைத்து கார்களை பழுது பார்க்கிறார்,மிகவும் பிடிவாதமும் கோபமும் கொண்டவர், மகள் எலிசியை தினமும்  வீட்டிற்கு பைக்கில் கொண்டு விடும் கமலை இவருக்கு பிடிக்கவில்லை, கமல் இவர் வீடு ஏறி பெண் கேட்க அவர் உன் அப்பா வந்து படியேறி பெண் கேட்டால் என் முடிவை அவரிடம் சொல்கிறேன் என பிடிவாதம் பிடிக்கிறார். 


கமல் தன் அப்பாவிடம் சம்மதம் வாங்க எலிசியை வீட்டிற்கு அழைத்துப் போகிறார், அப்பாவோ பணக்கார செருக்கில் எலிசியை அவமானப்படுத்த ,இவர் வீட்டை விட்டு காதலியுடன் உடுத்திய துணியுடன் வெளியேறுகிறார். 


காதலி எலிசியின் அப்பா சங்கராடியும் இந்த காதலை,பணக்கார இளைஞனை வளைத்துப் போட்டார்கள் என  ஊரார் தூற்றுவார்கள் என்ற அற்ப காரணத்துக்காக ஏற்பதில்லை, இதனால் காதலி எலிசியும் வீட்டை துறக்கிறாள்.


கமல்ஹாசனுக்கு கொடைக்கானலில் அம்மா விட்டுப் போன ஒரு அவுட் ஹவுஸ் வீடும், அம்மா வாங்கித் தந்த ஒரு யமஹா 350 மோட்டார் சைக்கிளும் உள்ளது, அங்கே காதலியுடன் ஆனந்தமாக குடியேறுகிறார்,அவள் திருமணத்துக்கு பின்னே இல்லறம் என்று உறுதியாக இருந்ததால்   மறுநாளே எலிசியை பதிவுத் திருமணமும் செய்து கொள்கிறார்.இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் காதலியுடன் சர்ச் சென்று ஃபாதரிடம் கூட ஆசி பெற வருவதில்லை.


காதலி கேட்டதற்கிணங்க புகுந்த வீட்டிற்குள் மணப்பெண்ணை மணமகன் கையில் ஏந்தி சுமந்து வீட்டை மூன்று முறை வலம் வந்து அடியெடுத்து வைக்க கேட்கிறாள், அதை மட்டும் மறுக்காமல் செய்கிறார்.


இன்பமாக இல்லறம் கழிகிறது,அடிக்கடி தங்கள் டேப் ரிக்கார்டர் சகிதம் அருகே உள்ள சுற்றுலா தலங்களுக்கு பிக்னிக் செல்கின்றனர், கணவன் சொன்னதற்கிணங்க வேலையை விட்டு விடுகிறாள் எலிசி,கமல் படித்து முடித்து விடுகிறார், ஆனால் எளிதில் வேலை கிடைப்பதில்லை, இருக்கும் கையிருப்பை கரைத்து ஜீவிக்கின்றனர், 


நகை பைக் என சகலத்தையும் விற்று சிக்கனமாக உய்கின்றனர், ஆனாலும் இருவரும் வறுமை நிலைக்கு பயப்படுவதில்லை, பெற்றோருடம் சென்று நிற்பதில்லை, 


அரும்பாடுபட்டு கமல் ஒரு கண்ணியமான வேலையில் பெரிய பொறுப்பில் சேர்ந்து விடுகிறார். மணமாகி ஒரு ஆண்டு கழிந்த நிலையில் இருவருக்கும் குழந்தை பெற்றால் பெற்றோர்  கோபம் தீரும் என தோன்ற, மருத்துவரைப் பார்க்கின்றனர், 


அங்கே மருத்துவர் (நடிகர் ஜெயன் ) பல ஆய்வுகளைச் செய்து விட்டு இவரிடம் தனிமையில் தயங்கியபடி இவர் மனைவி எலிசிக்கு ரத்த புற்றுநோய் இருப்பதைச் சொல்கிறார்,


இது முற்றிய நிலை ஆதலால் அதிக பட்சம் மூன்று மாதம் மட்டுமே வாழ்வார் என்கிறார், இதை மனைவியிடம் கூறாமல் இன்னும் அதிகமாக அன்பு செலுத்தி கவனித்து வருகிறார் கமல்,  


வேலைக்குச் செல்லாமல்  வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவர் வேலையும் போய்விடுகிறது, தனக்கு ரத்த புற்று நோய் இருப்பது எலிசிக்கும் நலிவடையும் உடல் மூலம் தெரிந்து விடுகிறது, 


எலிசியைப் பார்க்க அவள் அம்மா வந்து போக ஆரம்பிக்கிறார், இந்நிலையில் இனி தான் அதிக கவனிப்பு தேவைப்படும் என்று மருத்துவர் ஜெயன் பரிந்துரைக்க, எலிசியை மருத்துவமனையில சேர்த்து அவள் உருக்குலைந்து போவதை உடன் இருந்து பார்க்கிறார் கமல், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எலிசி குணமாக வேண்டி கர்த்தரிடம் சென்று ஜெபித்தும் வருகிறார்.


இவர்கள் எதிர்பார்த்த அந்த கோர தினம் வந்து விடுகிறது, அல்புத ரோகத்துடன் நிறைய போராடித் தோற்ற நிலையில் எலிசி கணவனைத் கட்டிலில் தன் அருகே படுக்கச் சொல்லி அழைத்து  ஆரத்தழுவியபடி உயிர் துறக்கிறாள். கமல் எல்லா சொந்தங்கள் மிச்சம் இருந்தும் தனியனாகிறார், விதவனாகிறார்.


இப்படம் அதே 1978 ஆம் ஆண்டில் தமிழ் (பருவ மழை )தெலுங்கு (அமர ப்ரேமா )என ரீமேக் ஆனது,1982 ஆம் ஆண்டு  இந்தியில் ரீமேக் Dil Ka Sathi Dil என்று ரீமேக் ஆகியுள்ளது, படத்தின் தெலுங்குப் பதிப்பில் மட்டும் மீண்டும் கமல் மற்றும் ஜரீனா வஹாப் நடித்தனர்.


படத்தில் வைக்க வாய்ப்பிருந்தும் ரசாபாசமான விரசமான காட்சிகள் எதுவுமே இல்லை, படத்தின் இயக்கம் N. Sankaran Nair


ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் ஓவியர் ஜெ வரைந்தது போல கணவன் மனைவி ரொமான்ஸ் ஓவியங்களை காட்டியிருந்தார்கள், புளி சாதத்துக்குள் முட்டை வைத்து பிரியாணி ஆக்கியது போன்ற சேட்டை அது.


படத்தில் ஆறு பாடல்களையும் கவிஞர் ஓஎன்வி குருப் எழுதினார்.


தாசேட்டா பாடும் மாடப்ப்ராவே வா

சூப்பர்ஹிட் பாடல்

https://youtu.be/MAv_7RCwSs8


ஜானகியம்மா பாடிய சந்த்யே பாடலும் ரேர்ஜெம் பாடல்.

https://youtu.be/bzG-EILZr_k


ஜானகியம்மா பாடிய ஈ மலர் கன்யகள் பாடல் 

https://youtu.be/_wPlQtaL210


தாசேட்டா பாடிய நீ மாயும் நிலாவோ பாடல்

https://youtu.be/bzG-EILZr_k


தாசேட்டா பாடிய சாகரமே சாந்தமாக நீ பாடல்

https://youtu.be/kH2EADthDYs


தாசேட்டா மற்றும் சபீதா சௌத்திரி பாடிய மேலே பூமல என்ற அழகிய பாடல் 

https://youtu.be/MAQIwzuEUDk


பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை கொடைக்கானல் அழகை அப்படி அள்ளி வந்தவை, 


#கமல்ஹாசன்,#மதனோல்சவம்,#Kamalhaasan,#ஜரீனா_வஹாப்,#கொடைக்கானல்,#சலீல்_சௌத்ரி,#ஜே_வில்லியம்ஸ்,#ஓஎன்வி_குருப்,#தாசேட்டா,#ஜானகியம்மா

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)