தீதி கான்ட்ராக்டர் | அஞ்சலி |Earth architecture |Sustsinable Architecture
"மனிதனால் கட்டப்பட்ட வீட்டிற்கும்  இயற்கைக்கும் நான் ஒரு பாலமாக விளங்குகிறேன்,
பழைய கட்டிடங்களைப் பாருங்கள், அவை நிலப்பரப்புடன் அழகாக ஒத்திசைந்து இருக்கின்றன, 
ஆனால் இன்றைய அந்நியத்தன்மை நிரம்பிய புதிய கட்டிடங்களோ இயற்கையுடன் போரிடுகின்றன."

  - தீதி கான்ட்ராக்டர்-

ஆத்மார்த்தமான  கட்டிடக்கலைக்கு  முறையான கல்வி அல்லது பட்டம் தேவையில்லை, என்று சொன்னால் இன்றைய பல கட்டிடக் கலைஞர்களுக்கு கோபம் வரக்கூடும் , விசித்திரமாகத் தோன்றும் , 

ஆனால் இது உண்மை, உலகில் பல கட்டடக் கலைஞர்களில் ஏகலைவன் போல சுயமாக கற்றவர்கள்  கட்டிடக்கலையில் முறையான பட்டப்படிப்பு இல்லாதவர்கள் உள்ளனர்.  

இவர்களில் முக்கியமானவர்கள் Frank Lloyd Wright, Louis Sullivan, Le Corbusier, Mies van der Rohe, Buchminister Fuller, Luis Barragan, and Tadao Ando. என சொல்லிக் கொண்டே போகலாம்.  கட்டிடக்கலைத் தொழிலில் லயித்து ஆத்மார்த்தமாக படைப்புகள் தந்து  உலகலவில் கவனம் பெற்ற கட்டிடக்கலைஞர்கள் பெயர்கள் இவை, ஆனால் ஒப்பீட்டளவில் வெகுகுறைவாக அறியப்பட்ட அல்லது அறியவேபடாத இன்னும் பலர் உள்ளனர்.

அத்தகைய முக்கியமான self taught architect ஆளுமை  தீதி கான்ட்ராக்டர், இவர் இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவைச் சேர்ந்தவர் , முறையாக கட்டிடக்கலை  பயிற்சி பெற்ற  லட்சக்கணக்கான கட்டிடக் கலைஞர்களைப் போலல்லாமல், 
தீதி கான்ட்ராக்டர் களிமண், மூங்கில் மற்றும் கற்பாறைகள் கொண்டு செய்யப்படும் Earth Architecture கட்டிடக்கலை வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் அனுபவரீதியாக நிபுணத்துவம் பெற்றவர்.  

கடந்த முப்பது வருடங்களாக ஆத்மார்த்தமாக Sustainable Architecture ஐ (நிலையான கட்டிடக்கலை) வளர்க்க அயராது பாடுபட்டார், கட்டுமானத்தில் எதையும் வீணாக்காமல் உபயோகிப்பது, மீள் சுழற்சி செய்து உபயோகிப்பது, விலை குறைந்த ஆனால் நீடித்து உழைக்கும் பொருட்களை உபயோகித்து கட்டுவது, தேவைக்கு மட்டும் கட்டுவது, சிக்கனமாக கட்டுமானம் செய்வது Sustainable Architectureன் முக்கிய அம்சங்கள்.

சாதிப்பதற்கு வயது என்றும் ஒரு தடையில்லை என்பார்கள் , தீதி கான்ட்ராக்டர் தனது  தொண்ணூறு வயதிலும் கூட இக்கட்டிடக்கலையில் பரீட்சார்த்தங்கள் நிகழ்த்தியபடியே தான் இருந்தார்,  

தீதி கான்ட்ராக்டரின் உண்மையான பெயர் டெலியா கின்சிங்கர், 1929 இல் அமெரிக்காவில் பிறந்தார்.  இவரது தந்தை, எட்மண்ட் கின்சிங்கர்  ஜெர்மன் நாட்டவர் , தாய், ஆலிஸ் ஃபிஷ் கின்சிங்கர் அமெரிக்கர் ஆவார். 

இவர்கள் இருவரும் 1920 களின் முற்பகுதியில் Bauhaus என்ற ஜெர்மானிய கலை இயக்க குழுவில் இருந்த புகழ்பெற்ற ஓவியர்கள்.  டெலியா கின்சிங்கர் அமெரிக்காவின் டெக்சாஸில் வளர்ந்தவர், ஐரோப்பாவிலும் சிலகாலம் வசித்தவர் .
இவர்  11 வயது சிறுமியாக இருக்கையில் Father of American Architecture என்று போற்றப்படும்  Frank Lloyd Wright அவர்கள் வடிவமைத்த  படைப்புகளை உள்வாங்கி லயிக்கத்  தொடங்கினார், 

அவரது பெற்றோருடன் அவரது படைப்புகளின் கண்காட்சியைக் கண்டார்.  இது அவரது மனதில் ஆழ்ந்த தாக்கத்தை  ஏற்படுத்தியதுடன், கட்டிடக்கலை மீதான  ஆர்வத்தையும் வளர்த்தது.  
ஆனால் இவரது பெற்றோர் ஒருபோதும் கட்டிடக்கலையை விருப்பபாடமாக  படிக்க ஊக்குவிக்கவில்லை, அது பெண்களுக்கானதல்ல என தவிர்த்தனர்.

இதனால் இவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் வரலாறு  இளங்கலை பட்டம் பெற்றார், 1951 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக்கழகத்தில்  சிவில் இன்ஜினியரிங் படித்து வந்த  இந்திய குஜராத் மாணவரான  ராம்ஜி நாராயணனை காதலித்து மணந்தார்.
இவர்கள்  தஇருமணத்துக்குப் பின் இந்தியாவுக்குத் திரும்பினர், இத்தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள்,  இந்தியா திரும்பிய ஆரம்ப ஆண்டுகளில், தம்பதியினர் நாசிக்கில் பெரிய பாரம்பரியமான கூட்டுக் குடும்பத்தில் பத்து ஆண்டுகள் தங்கியிருந்தனர், 
பின்னர் 1960 களில் மும்பைக்கு குடிபெயர்ந்து புகழ்பெற்ற ஜுஹு கடற்கரை பார்த்த அழகிய வீட்டில் வசித்து வந்தனர். 

மேவார் மகாராணி உதய்பூரில் உள்ள தனது ஏரியில் அமைந்த அரண்மனையை ஹோட்டலாக மாற்றியபோது இவர் தான் உள் அலங்காரம் செய்யும் வாய்ப்பைப் பெற்று அதில் லயிப்புடன் பணியாற்றத் துவங்கினார்,
அப்போது இந்திய கைவினைப் பொருட்கள் வாரியத்தின் தலைவர் கமலாதேவி சட்டோபாத்யா இவருக்கு உள் அலங்காரப் பணியில்  முன்னின்று உதவினார், 

இந்தியா முழுவதிலுமிருந்து உள் அலங்காரத்திற்கு வேண்டி ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்களைக் தருவித்தார், 
இந்த உள் அலங்காரப் பணியில் புதுமைகள் புகுத்தி அப்போது வழக்கத்தில் இருந்த  மேட்டிமையான மேற்கத்திய பாணி உள் அலங்கார வடிவமைப்பை  சுதேசி பாணியில்  வடிவமைத்தவர், எளிமையான உள்நாட்டு கைவினைப் பொருட்கள்  வடிவமைப்புப் பணியில் எத்தனை அழகான மாற்றத்தை தரும்  என்று நிருபித்தார் தீதி.
 பாலிவுட் மூத்த நடிகரும் குடும்ப நண்பருமான ப்ரித்விராஜ் கபூரின் ஜுஹு வீடு மற்றும் preview தியேட்டரை இவர் வடிவமைத்தார்.

மகாத்மா காந்தியின்  சொல்படி இவரை உள்ளூர் கைவினைப் பொருட்களை ஊக்குவித்தார், லாரி பேக்கர் போல நாரி காந்தி போல கடைசி வரை கடைபிடித்தார், எளிமையின் அழகியலை வாழ்க்கை முழுவதும் உள்ளூரில் எளிதாய் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களில் தேடி கண்டறிந்தபடி இருந்தார், 

 “கையால் செய்யப்பட்டது” என்பது ஒரு பொருளுக்கு மிகுந்த கௌரவத்தை தருவது என்று வாடிக்கையாளர்களிடம் அதன் தனித்துவத்தை சுவைபட எடுத்துரைத்தார்.
கைவினை கட்டுமானப் பொருள் என்பது  பூதாகாரமாக கடை பரப்பிய காலனித்துவ உற்பத்தியின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவது மட்டுமின்றி, உள்நாட்டு கைவினைப் பொருட்களை அத்தொழில் அழியாமல் முன்னெடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் கூட என சொல்லி வந்திருக்கிறார். 

 1970 களின் பிற்பாதியில் இவர் பம்பாயிலிருந்து இமாசல பிரதேசத்திற்கு  குடியேறியபோது, ​​ஆண்ட்ரெட்டாவில் உள்ள பிரபலமான andretta artists village கலைக்கிராமத்தில்  குடியேற முடிவு செய்தார், நம் ஆரோவில், தக்‌ஷின்சித்ரா, கலாக்‌ஷேத்ரா போன்ற கலைகிராமம் அது.

இவர் அங்கே உலகப் புகழ்பெற்ற மட்பாண்டங்கள் மற்றும் வடஇந்திய பாணி பாரம்பரிய கைவினைகள் ,  பல்வேறு பிற மாநிலத்தின் தனித்துவமான கைவினைகளுக்கு  ஆராதகியாகவும்  இருந்தார்.

1970 களில்  தர்மசாலாவுக்கு அருகிலுள்ள சித்பரி என்ற அழகிய மலைக்கிராமத்தில் குடியேறினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள  தௌலதர் மலைகளின் அடிவாரத்தில் சித்பரி அமைந்துள்ளது.  

சித்பரியை தனது வீடாக மாற்றி, தனது முதல்காதலான கட்டிடக்கலையை தொடர கவனம் செலுத்தத் துவங்கினார்  தீதி கான்ட்ராக்டர், இவரது தனித்துவமான sustainable architecture பாணியுடன் இவர்  கட்டிடக்கலை மற்றும் உள் அலங்கார வடிவமைப்புகள் செய்ய ஆரம்பித்தார்.  

தீதி கான்ட்ராக்டர் களிமண், மூங்கில், ஸ்லேட் என்ற படிமப்பாறைக் கற்கள் மற்றும் கூழாங்கல்   இவற்றை முடிந்தவரை தனது கட்டுமானங்களில்  உபயோகித்தார், இந்த பொருட்களின் பண்புகளையும், அவற்றைக் கையாளும் நேர்த்தியையும் இவர்  கற்றுக்கொண்டவுடன் ஒருபோதும்  பின்வாங்கியதில்லை.

கடந்த முப்பது வருடங்களில்,இவர் தர்மசாலா மற்றும் சுற்றுப் பகுதியில் sustainable architecture பாணியில்  15 க்கும் மேற்பட்ட வீடுகளை வடிவமைத்து கட்டுமானம் செய்தார், 
 
இவரது முக்கியமான படைப்புகளைத் தேடிப் பாருங்கள்.
Nishtha Rural Health Centre , 
Education and Environment Centre at Dharamshala, 
Dharmalaya Centre for Compassionate Living at Bir, 
Sambhaavnaa Institute of Public Policy and Politics at Kandwari.

தீதியின் கட்டிடக்கலை பற்றிய ஆழமான அபாரமான ஆய்வு, அவரது கட்டிடங்களில்  பூமித்தாயை அலங்கரித்து பூச்சொறிதல் போல இதமாக வெளிப்பட்டுள்ளது எனலாம், 

இயற்கையுடன் முரண்படும்   இன்றைய நவீன கட்டிடங்களுக்கு முற்றிலும் முரணான கட்டுமானம் தீதிநுடையது. இவரது வடிவமைப்பில்  கட்டிடங்கள் மற்றும் நிலப்பரப்புக்கு  இவர் தரும் சமமான முக்கியத்துவம் yang-and-yin தத்துவம் போன்றது,  

தீதியின் கட்டிடக்கலையின்  குறிப்பிடத்தக்க அம்சம், மண், மூங்கில், கூழாங்கல் மற்றும் ஸ்லேட் போன்ற உள்ளூர் பொருட்களின் ஆக்கபூர்வமான பயன்பாடு ஆகும்.
 பல ஆண்டுகளாக, இந்த பொருட்களைக் கையாளும் கலையை அவர் தனித்துவமாக பரீட்சார்த்தங்கள் செய்து பூரணப்படுத்தியுள்ளார், அவை தனித்துவமான மகிழ்ச்சியான  உணர்வை வசிப்பவர்களிடம் உருவாக்குகின்றன.

 சமகால வாழ்க்கைச் சிக்கல்களில் ஒன்று  , இயற்கைக்கும்  நமக்குமான தொடர்பை இழக்கிறோம். 
நாம் இயற்கை சுழற்சியில் இருந்து எதையாவது எடுக்கும்போது, ​​அது அந்த சுழற்சியை எவ்வாறு பாதிக்கிறது, அதை மாற்ற முடியுமா, அல்லது மீண்டும் பயன்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும் , ஒரு மண்சுவர்  கட்டிடத்திலிருந்து மீதமாகிற மண்ணை காய்கறி தோட்டத்தில் மீண்டும் பயன்படுத்தலாம் . 

படிக்கட்டுகள் தீதி வடிவமைத்த வீடுகளில் முக்கிய அம்சமாகும், படிக்கட்டுகள் வடிவமைப்பில்  தீதி மிகவும் ஈர்க்கப்பட்டார், படிக்கட்டுகள்  அமைவிடம், திசை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை பார்த்துப் பார்த்து மெருகேற்றினார் தீதி.

 படிக்கட்டு  வடிவமைப்பு கட்டுமானக்கலைஞர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. நீங்கள் படிகளில் ஏறிச் செல்வீர்கள்,படிகளின்  இருபுறமும் என்ன இருக்கும், மற்றும் நீங்கள் ஏறுகையில் இறங்குகையில் காண்பதென்ன போன்றவற்றை  நுணுக்கமாக வடிவமைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்கிறார் தீதி. 

தீதியைப் பொறுத்தவரை ஒளி என்பது கட்டிடக்கலையின்  ஆத்மா.  இது அறைக்குள் அப்படி ஊடுருவி உறவாடுகிறது, வடிவங்கள், வடிவியல் கோடுகள், வண்ணங்கள் மற்றும் பொருட்களின் அமைப்புகளை அழகூட்டிக் காட்டுகிறது  என்கிறார் தீதி. 

தற்போதைய மற்றும் வருங்கால தலைமுறை கட்டிடக் கலைஞர்கள், கலைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கட்டிட கட்டுமானத்துடன் தொடர்புடைய பிற தொழில் வல்லுநர்களுக்கு தீதியின் வாழ்க்கையும் படைப்புகளும் எப்போதும் உத்வேகமாக இருக்கும்.  

தீதி கான்ட்ராக்டர் பற்றி இரண்டு அற்புதமான திரைப்படங்கள்
Didi Contractor: Marrying the Earth to the Building (2017)
Earth Crusader (2016)
 வெளியாகியிருக்கின்றன, கட்டிடக்கலை ஆர்வலர்கள் இப்படைப்புகளைத் தேடிப் பாருங்கள்.

தீதி ஆசியக் கட்டிடக்கலையின் உயரிய விருதான Architects and Designers (WADe) ஆசிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.
பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக துவங்கப்பட்ட இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்களுக்கு தரப்படும் விருதான நாரி சக்தி புராஸ்கர் விருது 2019 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி தன் 91 ஆம் வயதில் மறைந்தார், அவர் மறைந்தாலும் அவரின் ஆத்மார்த்தமான படைப்புகள் வாழ்வாங்கு வாழும், இமாசல பிரதேசம் தர்மசாலா செல்பவர்கள் அவரின் தனித்துவமான  கட்டிடப். படைப்புகளை சென்று பார்த்து வரத் தவறாதீர்கள்.

Earth Crusader இங்கே
https://youtu.be/hsXA8-QvzIE

தீதி பேட்டி
https://youtu.be/Y77FZO8hH-c

Didi Contractor Marrying the earth to the building trailer
https://youtu.be/LmksF4-DYrw

#தீதி_கான்ட்ராக்டர், #dharmashala,#himachal_Pradesh,#didi_contractor,#sustainable_architecture

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)