தாசி | தெலுங்கு | 1988 | பி.நர்சிங்கராவ் |அபூர்வமான படைப்பு | உலக சினிமா

























தாசி | தெலுங்கு | 1988 | பி.நர்சிங்கராவ் |அபூர்வமான படைப்பு | உலக சினிமா 


தாசி 1988 ஆம் ஆண்டு  தெலுங்கில் இயக்குனர் பி.நர்சிங்கராவ் எழுதி இயக்கி வெளியான அற்புதமான சுயாதீனத் திரைப்படம், இயக்குனர் பி.நர்சிங்கராவ் ஆந்திரத்தின் தரம்மிகுந்த உலகசினிமா படைப்பாளி, 


இதில் நடிகை அர்ச்சனா தாசி கமலாட்சி கதாபாத்திரமாகவே மாறிப்போயிருந்தார் .


இத்திரைப்படம் 36 வது தேசிய திரைப்பட விருது விழாவில் தெலுங்கின் சிறந்த திரைப்படம் உட்பட ஐந்து விருதுகளை வென்றது,


1989 ஆம் ஆண்டு நடந்த 16ஆம் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் நடுவர்கள் இப்படத்தை  நிலப்பிரபுத்துவ சூழலின் கோர யதார்த்தத்தை காட்சிமொழியில்  அசலாய் , அரிதாய்  , தத்ரூபமாக   சித்தரித்த படைப்பு  என புகழாரம் சூட்டி உயரிய விருதான Diploma of merit ஐயும் வழங்கி கௌரவித்தனர், 

இந்திய பனோரமாவில் 12 வது சர்வதேச திரைப்பட விழாவில் தாசி திரையிடப்பட்டு மிகவும் சிலாகிக்கப்பட்டது.


கதை: 1920 ஆம் ஆண்டில்   தெலுங்கானாவில்  ஹைதராபாத் நிஜாம் ஆளுகைக்குட்பட்ட ஜமீனில் இப்படம் துவங்குகிறது, 


தாசி என்று அழைக்கப்படும் கமலாட்சி (அர்ச்சனா) என்ற தேவரடியார்  பெண்ணின்  கதை இது. சிறுமியாக இருக்கையிலேயே  ஜமீன் தம்பதிகளுக்கு  வெறும் இருபது ரூபாய்க்கு  குடும்பத்தினரால் விற்கப்படுகிறாள் கமலாட்சி , அவள் பூப்படையும் முன்பே உடலாலும் மனதாலும் பல பல முறை சூறையாடப்பட்டவள். 


ஜமீன்வீட்டார்கள் காலால் இடும் வேலைகளை தலையால் செய்கிறாள் , சுணங்காமல் செய்கிறாள் கமலாட்சி, அவளுக்கென்று சின்ன சின்ன ஆசை விருப்பம் என இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாத அற்புதமான இதயம்  கொண்டவள் இவள் ,  ஜமீன்தாரர்  எப்போது அழைத்தாலும் வந்து படுக்கையில் இன்முகத்துடன் விருந்தாகிறாள்,எனவே மஞ்சத்திற்கு வர  அழகிய மனையாள் காத்திருந்தாலும் கமலாட்சியையே நாடுகிறார் ஜமீன்தார்,இதில் சிறிய பொறாமையும் ஜமீன்தார் மனைவிக்கு இவளிடத்தில் உண்டு.


ஜமீன்தாரர் மனைவிக்கு உடம்பு கைகால்  பிடித்து விடுவது,உடம்பில் சந்தன தைலம் தேய்த்து நீராட்டி கேசத்துக்கு பிரத்யேகமாக கடைந்த வெண்ணெய் அப்பி வைத்து,வாசனை திரவியங்கள் தேய்த்து குளிப்பாட்டி சாம்பராணி இட்டு , புடவை கட்டி அலங்கரித்து , நலுங்கிட்டு கைகால்களை நீவி விட்டு அத்தனை வேலைகளையும் சுழன்று சுழன்று செய்கிறாள் கமலாட்சி,  


இந்த குறுநில ஜமீனைப் பார்வையிட்டு நில அளவை செய்து வரி நிர்ணயிக்க வருடா வருடம் நிஜாமின் அமைச்சரவைக் குழு ஜமீனுக்கு விஜயம் செய்கையில் வந்தவர்களில் கிழவன் குமரன் என பேதமின்றி முக சுளிப்பின்றி விருந்தாகிறாள் கமலாட்சி, 


ஜமீன்தாரர் உறவினர் விருந்தினர்களின் முழுநேர பாலியல் பொம்மையாக இருக்கிறாள் இருந்தும் ஒரு இடத்திலும் சுணங்குவதில்லை, முகம் சுண்டுவதில்லை, அவள் சுறுசுறுப்பாக அங்கே இயங்கியபடியே இருக்க வேண்டும்,  பகல் அல்லது இரவு நடுநிசி என அவள் வந்து  தேவை தீர்க்க கணக்கேயில்லை. 


ஜமீன்தாருக்கு கமலாட்சி அலுக்க ஆரம்பிக்கையில் அவர் ஆசைப்பட்ட பணிக்காரனின் பெண்ணை அவள் குடிசைக்கு நேரில் சென்று தாஜா செய்து பயிற்சி தந்து அழைத்து வந்து ஜமீன்தாருக்கு கூட்டித்தந்து வாசலில் விளக்கு பிடித்து காவல் காக்கும் வேலையையும் செய்கிறாள் கமலாட்சி.


ஜமீன்தாருக்கும் மனைவிக்கும் பல வருடங்களாகவே குழந்தையில்லை, இந்நிலையில் கமலாட்சி கர்ப்பமாகிறாள், இது ஜமீன்தாரரின் வித்து என அவள் அறிவாள் , ​​அவள் இக்குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என விரும்புகிறாள்.  


இறுதியில் வெளியே அரண்மனையில் கலை நிகழ்ச்சிகள் வீர சாகச நிகழ்ச்சிகள் நடக்க ஜமீன்தாரர், மனைவி ,ஊரார் என அதில் ஐக்கியமாகி லயித்திருக்கிறார்கள், கமலாட்சி ஐமீன்தாரரின் மனைவியால் கருக்கலைப்பு செய்ய ஆணையிடப்பட்டவள், முழு பப்பாளிபழம் புகட்டப்பட்ட நான்கு மாத கர்ப்பிணி பெருவலியுடன் கருவறுக்கப்படுகிறாள், உலக சினிமாவில் மட்டுமே கருக்கலைப்பு காட்சிகள் அப்பெண்ணின் நிஜ வலியை அவஸ்தையை சித்தரித்திருக்கும்,இது அப்படிப்பட்டது , உதாரணமாக  4 months 3 weeks 2 days and later (ருமேனியா), பிரியாணி (மலையாளம்), ஒரு கொச்சு ஸ்வப்னம் (மலையாளம் ),portrait of a lady on fire (இங்கிலாந்து) ,Three extremes ,dumpling (சீனா) படைப்புகளைச் சொல்லலாம்.


பூர்ஷ்வாக்கள் எங்கும் எப்போதும் பூர்ஷ்வாக்கள் தான், இந்த கமலாட்சி போல எத்தனை எத்தனை கமலாட்சிகளை நம் தேசத்தில் ஒவ்வொரு ஜமீனும் கண்டிருக்கும் , அவர்களின் ஒட்டு மொத்த அபயக்குரலாக இப்படம் ஒலித்திருக்கிறது, 


இப்படத்திற்கு தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருது  இயக்குனர் 

பி. நர்சிங்கராவிற்கு கிடைத்தது


இப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அபுர்பா கிஷோர் பிர் அவர்களுக்கு கிடைத்தது, இப்படத்தில் முழுக்க மின்சாரமில்லாத யுகத்தை இயற்கை வெளிச்சம் மட்டுமே பயன்படுத்தி தத்ரூபமாக காட்டியிருந்தார்.

இவர் புனே திரைப்படக் கல்லூரியின் துவக்க கால பெருமைமிகு மாணவர்,கெரில்லா பாணி ஒளிப்பதிவை இந்திய சினிமாவில் முன்னெடுத்த படைப்பாளி,  இவரின் ஒளிப்பதிவுக்கு சான்றாக கோதூளி, 21down என பல தனித்துவமான படைப்புகளைச் சொல்லலாம்.


இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசியவிருது நடிகை அர்ச்சனாவுக்கு கிடைத்தது,இவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை, இந்திய சினிமாவில் underrated நடிகை, அத்தனை photogenic ஆன நடிகையும் கூட,இப்படம் அதற்கு சான்றாக அமைந்துள்ளது. இதில் கமலாட்சி திறந்த வெளியில் குளிக்கும் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது, வெங்கலச் சொம்பின் மினுமினுப்பும் கருப்புத் தங்க மேனியும் சூரிய ஒளியில் அப்படி இழைந்தோடியுள்ளது, இதே காட்சிக்கு tribute செய்வது போல் குட்டி ஸ்ராங்க் மலையாள படத்தில் இயக்குனர் ஒளிப்பதிவாளர் ஷாஜி.N.கருண் , கமாலினி முகர்ஜி முதுகு காட்டிக் குளிப்பதற்கு காட்சி வைத்துள்ளார், இது போலவே இது இவிட வரெ திரைப்படத்தில் ஜெயபாரதியின் நனைந்த முதுகை ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு அவர்கள் மிகுந்த ரசனையின் அழகியலுடன் படமாக்கியுள்ளார்.


இப்படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான தேசியவிருது சுதர்சனிற்கு கிடைத்தது.


இப்படத்திற்கு சிறந்த கலை இயக்கத்திற்கான தேசிய விருது  டி.வைகுந்தத்திற்கு கிடைத்தது.


இப்படத்தில் பின்னணி இசை இல்லை,நாட்டார் கலை நிகழ்ச்சியின் போது இசைக்கப்படும் வாத்திய இசை மட்டுமே உண்டு, ஜமீன்தாரரை வரிய புலவர்கள் திரண்டு வந்து  நேரில் போற்றிப் பாடும் அந்த காட்சியில்  எல்லாம் நாம் அக்காலத்திற்கே பயணிக்கிறோம்.


இப்படம் ஆங்கில சப்டைட்டிலுடன் யூட்யூபில் கிடைக்கிறது

https://youtu.be/p1UotUnJDIE

திரைப்பட ஆர்வலர்கள் ,மாணவர்கள், ஒளிப்பதிவாளர்கள் தவறவிடக்கூடாத படம் இது


#தாசி,#அர்ச்சனா,#பி_நர்சிங்கராவ்,#aburba_kishor_bir,#ரூபா


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)