தசரதம் | 1989 | சிபி மலயில் | லோஹிதிதாஸ் | மலையாளம்





















தசரதம் (1989) என்று எத்தனை அழகிய அர்த்தமுள்ள பெயரை ஒரு தந்தைமையை உரைக்கிற திரைப்படத்திற்கு முத்தாய்ப்பாக வைத்திருக்கிறார் லோஹிததாஸ் அவர்கள்.

தசரதம்  லோஹிததாஸ் கதை திரைக்கதையில் இயக்குனர் சிபி மலயில் இயக்கத்தில் வெளியான திரைப்படம், அன்று முப்பது வருடங்களுக்கு வெளியாகையில் முன் மலையாள சினிமாவில் இந்த வாடகைத்தாய் கதை   தீவிரமான சர்ச்சையைக் கிளப்பியது,  

இப்படத்தில் மந்தாரச் செப்புண்டோ மாணிக்கக் கல்லுண்டோ பாடல் மனம் மயக்கும் பாடல், முதலில் இப்பாடல் எனக்கு துபாய் FM ல் அறிமுகமாக, அன்று முழுதும் அப்பாடல் மனதில் ரீங்காரமிட்டது, உடனே அப்படத்தை தேடிப் பார்த்து பிரமித்துப்போனேன், 1996 ஆம் ஆண்டு வெளியான  கோகுலத்தில் சீதை திரைப்படத்தில் பணக்கார முதலாளி கார்த்திக்,மோகன்லாலின்   இதே கேரக்டர் ஸ்கெட்சைத் தான்  கொண்டிருந்தார், இதில் மோகன்லால் இந்த பணக்கார தொழிலதிபர் ராஜீவ் கதாபாத்திரத்தை அமரத்துவமிக்கதாக ஆக்கியிருந்தார், முகம் முழுக்க பெருக்கெடுக்கும் அபாரமான உணர்ச்சிகளை கொண்டு வரும் காட்சிகள் இப்படத்தில் ஏகம் உண்டு, நாம் அப்படியே கட்டுண்டு கரைந்து போவோம்.

பெரும் பணக்காரர்,  பெற்றோர் உற்றார் உறவினர் இல்லாத இளைஞர் ராஜீவாக  மோகன்லாலின் நடிப்பு இதில் ஒண்ணாந்தரம். மோகன்லாலின் மிகச்சிறந்த நடிப்பை கொண்ட படங்களில் ஒன்று,அவரிடம் எதுவும் எதிர்பாராத பெரிய குடும்பஸ்தனான  ஆப்த  நண்பர் ஸக்காரியாவாக  நெடுமுடிவேணு, அவர் மனைவி மாரியம்மாவாக kpac லலிதா,  வாடகைத்தாயாக ரேகா,ரேகாவின் நோயாளி கணவராக முரளி,IVF  செய்ய பரிந்துரைக்கும் டாக்டர் நண்பர் ஹமீதாக  சுகுமாரன் என அபாரமான casting கொண்ட திரைப்படம் தசரதம், 

படத்தின் கதை :ராஜீவ் மேனன் (மோகன்லால்) பெரும் செல்வந்தராகப் பிறந்தவர், யாருமற்ற தனிக்கட்டை, உண்மையான அன்பு எங்கும் கிடைக்காமல் அலுத்தவர்,தாய் சிறுவயதில் இவரையும் தந்தையையும் புறக்கணித்துப் பிரிந்து போனதால்  வாழ்க்கைத் துணை என்ற பந்தத்தில் சிறிதும் நம்பிக்கை அற்றவர்,எப்பேர்பட்ட சுந்தரியிடமும் லயிக்காதவர்  , வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாத ஒரு விட்டேர்த்தி மனோபாவம் கொண்ட குடிகாரராக வலம் வருகிறார். 

அவருக்கு வழிகாட்ட தந்தை உயிருடன் இல்லை, பாரம்பரிய குடும்ப வணிகத்தை நம்பகமான மேலாளர் பிள்ளை (கரமண ஜனார்தனன் நாயர்) நேர்மையாக கண்ணும் கருத்துமாக நடத்தி வருகிறார்,

 ராஜீவ் தனது வாழ்க்கையை , பெரும் பணத்தை மது பானங்களில் வீணடித்துக் கொண்டு மிகச் சுதந்திரமாக உள்ளார்,அவரின்  நெருங்கிய நண்பர் ஸகாரியா (நெடுமுடி வேணு) தனது மனைவி மற்றும் மூன்று  குழந்தைகளுடன்  ராஜீவின் அரண்மனை போன்ற வீட்டில் ஒரு வாரம் தங்குகிறார்.

 அங்கு ராஜீவ் ஸ்காரியாவின் குழந்தைகளுடன் பழகி களித்து  நிஷ்கலங்கமில்லதாத அன்பால் நெக்குருகிவிடுகிறார்,அவர்கள் வீட்டுக்கு போகாமல் இங்கேயே இருக்கட்டுமே என்று எத்தனை மன்றாடியும் ஸக்காரியா கேட்பதில்லை, எங்களுக்கு எங்கள் குச்சு வீடே சொர்க்கம், சாஸ்வதம் என்கிறார்.

இந்த குழந்தைகள் பாசம் தந்த மாற்றத்தால் ராஜீவ் தனக்கே  தனக்காய் ஒரு குழந்தையைப் பெற விரும்புகிறார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை, ஒரு குழந்தையைத் தத்தெடுக்கவும் விரும்புவதில்லை.

அவரது நல்ல நண்பர்களில் ஒருவரான, வழிகாட்டியும், தத்துவஞானியுமான டாக்டர் ஹமீத் (சுகுமாரன்), இவர் வித்தை வாடகைத்தாய்க்கு செலுத்தும் செயற்கை கருவூட்டலுக்கான யோசனையை சொன்னவர்,  வாடகைத் தாய்  ஒருவரைக் கண்டுபிடிக்க ராஜீவுக்கு அறிவுறுத்துகிறார்.  

அப்போது முன்னாள் கால்பந்து வீரர் சந்திரதாஸ் (முரளி)  முதுகுத்தண்டில் பெரிய அறுவைசிகிச்சை செய்வதற்கு  பெரும் பணம் தேவைப்படுவதை இவர்கள் அறிந்தவர்கள் அவரைச் சென்று சந்திக்கிறார்கள், 

அவரது அழகிய ஆரோக்கியமான மனைவி ஆனி (ரேகா) தன் உயிருக்கு உயிரான கணவரின் சிகிச்சைக்கு தேவைப்படும் பெரும் பணத்துக்காக செயற்கை கருவூட்டல் மூலம் ராஜீவின் குழந்தையை வாடகைத்தாயாக மாறி பெற்றெடுக்க ஒப்புக்கொள்கிறார்.  

சந்திரதாஸ் மனைவியின் இந்த விபரீத முடிவுக்கு எத்தனை தடை சொல்லியும் ஆனி சற்றும் கேட்பதில்லை.
ஆனி கர்ப்ப காலம் மற்றும்  பிள்ளைப்பேறு  முடிந்தவுடன் பெற்ற குழந்தையை ராஜீவிடம் ஒப்படைத்து, தன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கணவருடன் மணவாழ்க்கையில் இனிதே தொடர விரும்புகிறார்,ஆரம்பத்தில் அந்நியன் வித்தை வயிற்றில் செலுத்திக்கொண்ட அருவருப்பு, இருந்தாலும் ராஜீவின் முன்னெடுப்புகள், ஒப்பந்த ஷரத்துகளால் அக்குழந்தையை ஆதூரமாக சுமக்க தன் மனதை மாற்றிக் கொள்கிறார்.

வழக்கமாக  முதிர்ச்சியற்றவரான  ராஜீவ் இப்போது சமூகத்தில நிறைய மாறியிருக்கிறார்,  கர்ப்பம், பிரசவம்,குழந்தை வளர்ப்பு பற்றிய நிறைய புத்தகங்களை வாங்கிப் படிக்கிறார்,பிறப்பது ஆணோ பெண்ணோ எதற்கும் இருக்கட்டும் என்று இருவகை உடைகள் பொம்மைகள் அறை முழுவதும் வாங்கி அடுக்குகிறார் .

 ஆனியை மகிழ்ச்சியான மனநிலையில்  வைத்துக் கொள்ள மிகவும் மெனக்கெடுகிறார்,இது அவளுக்கு தொந்தரவாக இருந்தாலுமே அதை கைவிடுவதில்லை,  அவளுக்கு  கைதேர்ந்த செவிலியர்கள் அனுப்பி  கவனித்துக் கொள்கிறார், அவள் வீட்டில்  ஏகப்பட்ட வசதிகள் செய்து தந்து அவளைத் திக்கு முக்காடச் செய்கிறார் ராஜீவ், கணவர் சந்திரதாஸிக்கு இக்கட்டான நிலை, தர்ம சங்கடம், உயிரை விட முடியாதபடிக்கு ஆசை மனைவி ஆனி அவளை பேரன்பால் கட்டிப் போட்டிருக்கிறாள்.எனவே இவரும் ஆனிக்கு அப்படி சிருஷைகள் செய்கிறார்.

ராஜீவ் மிகச்சிறந்த சுவையான  சத்துள்ள உணவை நேரத்துக்கு வழங்குகிறார், மற்றும் பல  ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சூழலை இவர்கள் வீட்டில் தன் பெரும்பாலும் கொண்டு ஏற்படுத்துகிறார், குழந்தையின் பிறப்பை உறுதி செய்ய பல பரிசோதனைகள் நடத்துகிறார் .  
ஒரு குழந்தையைப் பெறப்போகும் அசல் தந்தையின்  சிந்தனையை கொண்டிருக்கிறார், தனக்கொரு வாரிசு வரப்போகும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போகிறார் ராஜீவ்.

ஆனிக்கு ஒரு நன்னாளில் ஆண் குழந்தை சுகப்பிரசவமாகிறது , ஆனால் குழந்தைப்பிறப்பின் பின்னர் தன் வயிற்றில் வளர்ந்த அந்த சிசுவைப் பிரிய மறுக்கிறாள் ஆனி, யார் வந்து எத்தனை சொன்னாலும் தருவதில்லை, கணவருக்கு தர்ம சங்கடம் தருகிறார் ஆனி, சட்டச் சிக்கல் ஒப்பந்த ஷரத்து என எதற்கும் மசியவில்லை ஆனியின் தாயுள்ளம்.

 கடைசியில் தாயுள்ளம் என்பது விலை தந்து வாங்கவே முடியாதது என்பதை ஆத்மார்த்தமாக உணர்ந்த ராஜீவ் குழந்தையை ஆனியிடமே ஒப்படைக்கிறார்.  

கடைசிக் காட்சியில் குழந்தையை தாயிடமே ஒப்படைத்து வந்த ராஜீவ் தன் வீட்டில் நெடுங்காலம்  பணிப்பெண்ணாக இருக்கும் மேகியிடம்  (சுகுமாரி) தாய்மை என்பது இத்தனை உணர்ச்சி மிகுந்ததா?ஆனி மட்டும் இப்படியா? அல்லது ஒவ்வொரு தாயுமே இப்படித்தானா? 

உன்னால் என்னை உன் வயிற்றில் பிறந்த பிள்ளை போல என்னைக் கருதமுடியுமா? 
என்று ஏக்கத்துடன் கேட்கிறார், ஆனால் அவர் இக்கேள்வியை எதிர்பாராதவர் விக்கித்து பதிலின்றி நிற்க,  கண்களில் நீர்வைத்துக் கொண்ட ராஜீவ் அவள் பதிலுக்கு காத்திராமல் அகல்வதுடன் படம் நிறைகிறது.

இதே இயக்குனர்கள் சிபிமலையில் மற்றும் இயக்குனர் கதாசிரியர் லோஹிததாஸ் படைப்பில் வெளியான பரதம் ஒரு அற்புதமான சகோத்த்துவம் போற்றுகிற உணர்ச்சிகரமான படைப்பு, படம் நிறைகையில் மனம் நிறையும், ஆத்ம சுத்தி நிகழ்த்தும் படைப்புகள், தசரதம் மற்றும் பரதம், லோஹிததாஸ் அவர்கள் நட்பிற்கு காட்சிகள் எழுத எழுத அதை நெக்குருகி பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

வாடகைத்தாய் பற்றிய கதை என்றால்  தமிழில் நினைவுக்கு வருவது எழுத்தாளர் சிவசங்கரியின் அவன் அவள் அது நாவல், அதை  1980 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படமாகவும் எடுத்திருந்தனர், ஆனால் திரைப்படத்தை விட நாவலில் வீச்சும், வலியும் அதிகம்.

இப்படத்தின் ஒளிப்பதிவு வேணு , இப்படத்தின் இசை ஜான்ஸன் மாஸ்டர்,இரு பாடல்களை கவிஞர் பூவாச்சல் காதர் எழுதினார், இவர் சமீபத்தில் மறைந்தார், மலையாள சினிமாவில் மறக்கமுடியாத பல சிறந்த பாடல்களைத் தந்த கவி , 

 இப்படத்தில் வரும் மந்தாரச் செப்புண்டோ என்ற அற்புதமான பாடலைக் கேளுங்கள் ,கரைந்து போவீர்கள்,மோகன்லாலுக்கு M.G.ஸ்ரீகுமார் குரல் அத்தனை சேர்ச்சையாக இருக்கும், இணைந்து பாடியது பாடகி சித்ரா, இப்பாடல் வாடகைத்தாய் ஒருத்தி தன் வாரிசை சுமக்கையில் ராஜீவ் தகப்பனாக வரவிருக்கும் வாரிசை வரவேற்று காத்திருக்கையில் பாடும் பாடல்.

சிஞ்சிலம் தேன்மொழி பாடலும் அற்புதமான பாடல் M.G.ஸ்ரீகுமார் குரல், நண்பர் ஸக்காரியாவின் குழந்தைகளுடன் ராஜீவ் களித்திருக்கையில் பாடுகிற பாடல்.

இப்படம் சப்டைட்டில் இன்றி யூட்யூபில் கிடைக்கிறது.

#தசரதம், #மோகன்லால்,#நெடுமுடி_வேணு,#சுகுமாரன்,#ரேகா,#முரளி,  #IVF,#surrogate_mother,#லோஹி,#லோஹிததாஸ்,#சிபிமலயில்,#வேணு,#ஜான்ஸன்_மாஸ்டர்,

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)