உத்தரம் | 1989 (விடை)|மலையாளம் | V. K. பவித்ரன் | M.T.வாசுதேவன் நாயர்





















உத்தரம் | 1989 (விடை) | V. K. பவித்ரன் | M.T.வாசுதேவன் நாயர்

இயக்குனர் K.G.ஜோர்ஜ் அவர்களின் யவனிகா திரைப்படம் போலவே ஒரு அற்புதமான investigation thriller உத்தரம், இங்கிலாந்து பெண் எழுத்தாளர் Daphne du Maurier எழுதிய அபாரமான சிறுகதை " no motive " அக்கதையில் லயித்த எழுத்தாளர் M.T.வாசுதேவன் நாயர் உத்தரம் திரைக்கதையை கச்சிதமாக எழுத அதை அற்புதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் V. K. பவித்ரன், யவனிகாவில் எப்படி தபலாக்காரன் ஐயப்பன் மர்மமாக காணாமல் போனதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்காரியா (மம்மூட்டி) ஐயப்பன் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரையும் விசாரித்து இறுதியில் ஐயப்பன் காணாமல் போன மர்மத்திரையை விலக்குவார், அப்படிப்பட்ட ஒரு அபாரமான த்ரில்லர் உத்தரம்,இயக்குனர் K.G.ஜோர்ஜின் இரகள் திரைப்படம் எப்படி ஒரு underrated classic படைப்போ அதே போலவே உத்தரம் திரைப்படமும் underrated classic.

முதல் காட்சியிலேயே ரப்பர் தோட்ட முதலாளி மேத்யூவின் மனைவி செலினா இரட்டைக்குழல் துப்பாக்கி முனையை மார்பில் பதித்து விசையை காலால் சுண்டி தற்கொலை செய்து  கொள்கிறாள், வெறும் 27 வயது,புதுக்கவிதைகள் அதாவது தரமான தத்துவார்த்தம் பொதிந்த புதுக்கவிதைகள் புனைந்து தரமான கவிதை தொகுப்பு வெளியிட்டவள் செலீனா, கணவன் மேத்யூசிடம் அத்தனை அன்பு கொண்டவள், குழந்தையின்மையைக் கூட குறையாகவே எண்ணாதவள், உலகை உலகத்தாரை இயற்கையை அப்படி நேசிப்பவள்,  கணவனுடன்  காலை உணவு சேர்ந்து உண்டவள் ,மேத்யூஸ் ரப்பர் தோட்டத்திற்கு பார்வையிட புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் இத்தனை கோரமாக தன் கதையை முடித்துக் கொண்டிருக்கிறாள்.

மனைவியின் தற்கொலைக்கு எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாததால், மேத்யூ தனது நண்பரான பாலுவை அழைக்கிறார், இருவரும் தில்லியில் டைம்ஸ் பத்திரிக்கையில் ஒன்றாக வேலை செய்தவர்கள், மேத்யூஸ் சப் எடிட்டராக இருந்தவர் இங்கே வந்து ரப்பர் கிருஷி  செய்கிறார்,

பாலு திருமணமாகாதவர்,நண்பர் மேத்யூஸுக்கும் அவர் மனைவி செலீனா காட்டிய நட்பிற்கும் அன்பிற்கும் மிகவும் கடமைப்பட்டவர், இவர் புதுக்கவிதைகளின் ஆராதகரும் கூட என்பதால் நண்பனை விட தனக்கு இந்த மர்மத்தை விடுவிக்கப்படவேண்டும் என நினைக்கிறார்.

செலீனா தற்கொலை செய்து இறந்தாலும் அதை கணவர் மேத்யூஸ் குடும்ப மானம் காக்க துப்பாக்கி துடைக்கையில் நேர்ந்த விபத்து என்று போலீஸில் பதிந்து வழக்கை புதைத்திருக்கிறார், இருந்தும் மனைவி இறந்த மர்மத்தை அறிய நினைக்கிறார், நண்பன் பாலுவுக்கு முழு சுதந்திரம் தந்திருக்கிறார்.பாலு இந்த புலன் விசாரணையை துவக்குவதற்கு இரு வாரம் முன்பு தன் டைம்ஸ் பத்திரிக்கை வேலையை விட்டவர்,இங்கு நண்பனுக்காக நேரில் வந்து விட்டார்.

இந்த தனக்குப் பிடித்த கவிதாயினி தோழியின் தற்கொலையை அவள் குடும்பத்தார் தோழி பார்வதி உறைவிடப் பள்ளி  என ஒவ்வொருயிடமாக பயணித்து விசாரணை என்பதே தெரியாமல் நிறைய பொய்கள் சொல்லி நடித்து துப்பு துலக்கி  விசாரணை நடத்துகிறார்,  செலினா தற்கொலைக்கு பின்னால் உள்ள நோக்கத்தைக் கண்டறியும் ஒயிலான திடீர் ஷெர்லாக் ஹோம்ஸ் பாலகிருஷ்ண நாயரின் விசாரணையை இத்திரைப்படம் அத்தனை இயல்பாக பதிவு செய்திருக்கிறது,

படத்தின் ஒளிப்பதிவு ராமசந்திரபாபு அவர்கள், படத்தின் இசை ஜான்ஸன் மாஸ்டர், படத்தில் மேத்யூவாக நடிகர் சுகுமாரன் நடிப்பு ஒண்ணாந்தரம், சமையல்காரராக சங்கராடி, செலீனாவாக சுபர்ணா ஆனந்த் (இயக்குனர் பரதனின் வைஷாலி பட நாயகி ) செலீனாவின் உயிர்த்தோழியாக பார்வதி , செலீனாவின் தந்தை ஃபாதர் ரெவனன்டாக கரமன ஜனார்த்தனன் நாயர் என அற்புதமான cast கொண்ட படம், சினிமா ஆர்வலர்கள் மாணவர்கள்  no motive ஆங்கில் சிறுகதையை  கண்டிப்பாக தேடி வாசியுங்கள் ,இந்த gripping and moving thriller படத்தை தவறாமல் பாருங்கள்,

இந்த படத்தை  இன்னொரு முறை பார்த்தால் சிறிய சிறிய nuances பற்றி எழுதலாம், எம்.டி.வாசுதேவநாயரின் சிறிய சிறிய டீடெயல் அபாரமானது, ஒரு காட்சியில் நடிகை சுகுமாரியின் கணவர் நோயில் படுத்த படுக்கையாக இருக்கிறார்,அவர் அருகே அந்தரத்தில் தொங்கும் கயிறு,படுத்த படுக்கையாக இருக்கும் அவர் பிடித்து எழுவதற்கு,  இதை நிஜத்தில் சிறுப்பத்தில் ஒரு வீட்டில் பார்த்துள்ளேன், சினிமாவில் இப்போது தான் பார்த்தேன்.மௌனம் சம்மதம் போல மம்மூட்டி  துப்பறியும் ஏகம் படம் பார்த்தாலும் இதில் அத்தனை ஸ்டைல், அத்தனை நம்பகத்தன்மை அழகியலுடன் கைகூடியுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் வட்டம்பரம்பில் கிருஷ்ணன் பவித்ரன், இவர் திரைப்பயணம் அலாதியானது, அர்த்தமுள்ள ஐந்து படைப்புகள் மட்டும் தந்த படைப்பாளி,மனம் முழுக்க சினிமா ஆர்வம் கொண்டவர், இவர் கேரளத்தில் பட்டப்படிப்பு முடிந்ததும் புனே திரைப்பட கல்லூரிக்குச் சென்று அனுமதி பெற முயன்றவர் , இரண்டு முயற்சிகளும் தோல்வியுறவே  புனேவில் உள்ள திரைப்பட கல்லூரிக்கு அருகிலுள்ள புனே சட்டக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்.அங்கே   சட்டம் படிப்பதற்குப் பதிலாக,சட்ட  வகுப்பை கட் அடித்து விட்டு உலக கிளாசிக் மற்றும் திரைப்படங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதைப் பார்க்க அவர் புனே திரைப்படக் கல்லூரியில் தனது முழுநேரத்தையும்  செலவிட்டார்.ஏகலைவன் போல கிடைத்த  இந்த வாய்ப்பை அவர் புனே திரைப்படக்கல்லூரி  மாணவர்களுடன் நட்பு கொள்ளவும், சினிமாவை நெருக்கமாக புரிந்து கொள்ளவும் பயன்படுத்தினார், இவர் தீவிர கம்யூனிஸ்ட்,இவரது  இயக்கத்தில்  முதலில் வெளியான திரைப்படம் யாரோ ஒராள் 1978 ஆம் ஆண்டு வெளியானது,  கபினி நதி  சுவன்னதுபோல் என்ற கம்யூனிஸ்ட் போராட்ட திரைப்படத்தை தயாரித்தவர் , உப்பு என்ற தலைசிறந்த திரைப்படத்தை 1986 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார்,பலி என்ற திரைப்படத்தை 1991 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார், இவரது கடைசி திரைப்படம் குட்டப்பன் சாட்சி 2002 ஆம் ஆண்டு வெளியானது,
26 February 2006 மறைந்தார், இவர் மனைவி நடிகை கலாமண்டலம் ஹேமாவதி.

படம் யூட்யூபில் உள்ளது
https://youtu.be/nxUt1exBXx8

#உத்தரம்,#மம்மூட்டி,#சுகுமாரன்,#ராமசந்திரபாபு,#ஜான்ஸன்_மாஸ்டர்,#பார்வதி,#VK_பவித்ரன்,#MT_வாசுதேவன்_நாயர்


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)