வட மேற்கு வாஸ்து குறைபாடு கொண்ட மனை | Vasthu defect plot at north west

மனை வாங்குகையில் மிகவும் கவனமாக வாங்க வேண்டும், கரணம் தப்பினால் மரணம் என்பது மனைக்கு மிகவும் பொருந்தும்.

ஒரு போதும் சவப்பெட்டி போல தோற்றம் கொண்ட மனைகளை வாங்கவே கூடாது, அது பல பல இன்னல்களைத் மனையை தன் பெயரில் பதிந்த  உரிமையாளருக்கு  தந்தபடியே இருக்கும்.

இந்த மனை வண்டலூர் பைபாஸ் அருகே உள்ளது, ஒரு வங்கி மேலாளர் மாற்று திறனாளி, தனக்கு  இருந்த பூர்வீக சொத்தை 25 லட்சம் ரூபாய்க்கு விற்று மேற்கொண்டு 25 லட்சம் தன் வங்கியில் கடன் வாங்கி மொத்தம் 50 லட்சம் ரூபாய் செலவு செய்து பத்திரல்பதிவு செய்து இந்த மனையை அறியாமையால் வாங்கியுள்ளார், எப்படி விதி போதாத காலம் வருகையில்  கண்ணைக் கட்டி இந்த சவப்பெட்டி மனையை பேராசை கொண்ட நிலத்தரகரை அனுப்பி நைச்சியமாக இனிக்க இனிக்க வார்த்தைகள் பேசி தலையில் கட்டி உள்ளது பாருங்கள்.

இப்படி மனையை வாங்கியவர் என் கட்டுமானர் நண்பரிடம் வீடு கட்டும் ஒப்பந்தப் பணியை தர, அவர் வடிவமைப்பாளரான என்னிடம் வடிவமைப்புக்கு அனுப்பினார்,நான் அவர் ஏமாற்றப்பட்ட விபரம் தெளிவாக சொன்னேன், இது மூன்றுக்கும் மேல் பெரிய வாஸ்து கோளாறு கொண்ட மனையாகும்.

1.அதாவது நாற்சந்தியில் அமைந்துள்ள வீதி சூலை மனை,வீதி சூலையை தெருக்குத்து, விஷ அம்பு , poison arrow என்று வாஸ்து சாஸ்திரத்தில் வகைப்படுத்துகின்றனர்.

2.இது வட மேற்கு கோமுகமாக அகண்ட மனை.

3. வடமேற்கில் வெட்டும் பட்ட மனை.

இதை எத்தனை நைச்சியமாக பேசி ஏமாற்றி விற்று தரகு கட்டணம் 
1 லட்சம் ரூபாயும் மனசாட்சியின்றி பெற்றுள்ளார் பாருங்கள் நிலத் தரகர்.

இந்த மனை வாங்கி இரண்டே மாதத்தில் உரிமையாளர் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனத்தில் மெதுவாக செல்கையில் திருப்பத்தில் வேகமாக வந்த கார் இடித்து தூக்கி எறியப்பட்டு அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்து ப்ளேட் வைத்து பெரிய அறுவை சிகிச்சை முடிந்து ஆறுமாதங்கள் படுக்கையில் கழிந்து இப்போது பிஸியோதெரபி பயிற்சி செய்து மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ளார், என்னிடம் இந்த மனை வந்தவுடன் இதன் தீங்குகளை விளக்கினேன், மள மளவென கண்ணீர் விட்டார்.

1.மனையின் வடக்கு வட மேற்கிலிருந்து வரும் விதிசூலை ஒரு மோசமான குறைபாடு என்று வாஸ்து வல்லுனர்கள் கருதுகின்றனர், இது தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்தும்.

2.மனையின் மேற்கே வடமேற்கில் நீண்டு (extension) இருந்தால் 
அதில் குடியிருப்பவர்களுக்கு எதிரிகள் பயம் மற்றும் அதிகாரிகளின் பயம் உருவாகும்.
இவர்களின் வாகனங்கள் விபத்தில் அல்லது பிறர் மெத்தனத்தில்  சேதமடையும் அபாயம் உள்ளது.
வரவுக்கு மீறிய செலவு காரணமாக வறுமை ஏற்படும் அபாயம் உள்ளது.

3.மனையின் வடமேற்கு திசையில்  வெட்டு (splay)இருந்தால், அது சட்டப்பூர்வ சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும், எலும்பு முறிவு, உடல்நலக் குறைபாடுகள், தொடர் மருத்துவ செலவு,நுரையீரல் கோளாறுகள், மனச்சோர்வு மற்றும் தம்பதிகளிடையே தவறான புரிதல் அல்லது மன அழுத்தம் போன்ற  இருக்கும்.

இந்த மனையில் வடிவமைக்கையில் 360° சுத்தமாக வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், ஃபெங் ஷூய் விருட்ச சாஸ்திரம்,உரிமையாளரின் நடப்பு தசா புக்தி பலன்கள் இவற்றை ஆராய்ந்து தீர்வுகள் செய்து வடிவமைக்க வேண்டும், இதை வாஸ்து வல்லுனர்கள் மட்டுமே வடிவமைக்க வேண்டும் , இவ்வாறு செய்ய நல்லதே நடக்கும் என்பதைச் சொல்லி தைரியமூட்டியிருக்கிறேன்.

One should be very careful while buying the land, if Karanam escapes then death is very applicable to the land.

 One should never buy a plot that looks like a coffin, it will bring many troubles to the owner who registered the plot in his name.

 This plot is near Vandalur Bypass, a bank manager disabled, sold his native property for 25 lakh rupees and took a loan of 25 lakh from his bank and spent a total of 50 lakh rupees and registered the deed and bought this plot ignorantly.  Send the land to the greedy landlord and talk sweet words to make him happy.

The person who bought the plot gave a contract to my builder friend to build the house, he sent me the designer for the design, I clearly told him that he was cheated, this is a plot with more than three major Vastu defects.

 1. In other words, street stoves located at intersections are classified as street stoves, poison arrows, and poison arrows in Vastu Shastra.

 2. It is a large plot facing North West.

 3. Plot cut in north-west.

 Brokerage fees for cheating and selling this
 Look at the land broker who got 1 lakh rupees without conscience.

Within two months of buying this plot, the owner was driving a three-wheeler for the disabled when he was hit by a speeding car in a slow turn and he broke his hip bone and had a plate put on it.  He wept profusely.

 1. Vastu experts consider that a malefic aspect from the North North West of the house is a bad defect, it will cause loss in business, discord in the family, quarrels in the family.

 2. If there is an extension to the west of the house in the northwest
 Its occupants will develop fear of enemies and fear of authorities.
 Their vehicles are at risk of being damaged in an accident or due to the carelessness of others.
 There is a risk of poverty due to overspending.

 3. If there is a cut (splay) in the north-west direction of the house, it will lead to legal disputes, broken bones, health problems, continuous medical expenses, lung disorders, depression and misunderstanding or stress between couples.

 When designing this house, 360° clean Vastu Shastra, Manayadi Shastra,feng shui  ,Vrutsha Shastra, owner's current dasa bhukti results should be analyzed and designed, this should be designed only by Vastu experts, I have given courage by saying that it will be good to do this.

https://m.facebook.com/story.php?story_fbid=10159101936521340&id=750161339&mibextid=Nif5oz

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 9940255873
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)