மிட்நைட் கவ்பாய் | 1969 | Midnight cowboy

மிட்நைட் கவ்பாய் | 1969 | Midnight cowboy என்ற ஹாலிவுட் Dark Classic திரைப்படத்தின் வீச்சு இன்றும் அளவிட முடியாதது, இதன்  ஒரிஜினல் Fan art போஸ்டர்கள்,பிரிக்காத  ஒரிஜினல் LP இசைத் தட்டு இவை  இணையத்தில் 80000₹ வரை விலை போகின்றன , இதன் poster printed டீ ஷர்ட்கள், இன்றும் இணையத்தில் நன்றாக விற்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிட்நைட் கவ்பாய் முதலில் R restricted rating கொண்டிருந்தது , பிறகு இதன் நிஜ கலைத்தன்மைக்காக  rating  X என்று தளர்த்தப்பட்டது, ஒரு x rating (adults only) படம் சிறந்த படத்துக்கான ஆஸ்கரை வென்றது இதுவே முதல்முறை என்று வியக்கப்பட்டது.

டல்லாஸை சேர்ந்த ஜோ பக் என்ற கவ்பாய் இளைஞனுக்கும் நியூயார்க்கில் வளர்ந்த ராட்ஸோ என்ற அழுக்கு அன்றாடம்காய்ச்சிக்கும் நியூயார்க் நகரின் சேரியில் ஏற்படும் ஆழமான நட்பு தான் இதன் கதைக்களம்.

படத்தின் spoiler கதை : ஜோ பக் டெக்ஸாஸின் சிறிய ஊரில்  பயணவழி உணவகத்தில் , பாத்திரங்கழுவி வேலை செய்யும் இளைஞன், ஆஜானுபாகுவான உடற்கட்டும் ஆறரை அடி உயரமும் கொண்டவன், தன்னை ஒரு cowboy material என நம்புகிறவன்.

1969 அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் கொடிகட்டிப் பறக்கும் காலம் அது, வியட்நாம் போருக்கு செல்லாதவர்களுக்கு  blue collar வேலைகள் மட்டுமே எஞ்சி இருந்தன,பசிக்கு உணவு வேண்டும் என்றால் உழைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் மக்கள் , பணம் பணம் என அலையும் ,ஒருவருக்கொருவர் ஏமாற்றி குழிபறிக்கும் பரபரப்பான காலம் அது.

இந்த சூழலில் தான் ஜோ (Jon Voight)
தனது dish washer வேலையை விட்டவன் சம்பள பாக்கியை பெற்றுக் கொண்டு நியூயார்க் நகரத்திற்கு city liners சொகுசுப் பேருந்து ஏறிச் செல்கிறான்,  ஆண் விபச்சாரியாக மாற ஆவல் கொண்டு ஆர்வமுடன் செல்கிறான், மனம் முழுக்க மகிழ்ச்சி, கையில் உள்ள ட்ரான்ஸிஸ்டரில் நியூயார்க் வானொலி நிலையம் அலைவரிசை நன்றாக கிடைக்க , அதில் NY பெண்கள் தமது ஆண்துணை எப்படி இருக்க வேண்டும் என விவரிக்க ,தனக்கு அத்தனை பராக்கிரமங்களும் இருப்பதை உணர்ந்து துள்ளுகிறான் ஜோ.

நெடுஞ்சாலையில்  எதிர்ப்பட்ட ராட்சத விளம்பரப் பலகையில்  உங்களிடம் எண்ணெய் கிணறு இல்லையா? இன்றே ஒன்றை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள் என எழுதியிருக்கிறது, அதைக்கண்டவன் நாமும் ஒரு எண்ணெய்க்கிணறை வாங்கவேண்டும் என ஆவல் கொள்கிறான்.

நியூயார்க்கில் இறங்கி ஒரு நடுத்தர ஹோட்டலில் அறை எடுத்து தங்குகிறான் ஜோ , நியூயார்க்கில் எதற்கும் காசு,எந்திர மனிதர்கள், யாரும் இவனுக்கு வழி கூட சொல்லுவதில்லை.

தனிமையில் வாடுகிறான் ஜோ, அனாதை என்பதால் யாருக்கும் கடிதம் எழுத முடியாத நிலையில் நியூயார்க் skyline படம் கொண்ட அஞ்சல் அட்டைகளை வெறுமன வாங்கி வைத்திருக்கிறான் ஜோ.  தான் பணிபுரிந்த உணவகத்தில் உள்ள  ஜோவின் கருப்பின நண்பனுக்கு  படிக்கத்  தெரியாது என்பதை உணர்ந்தவன்   எழுதிய அட்டையை கிழிக்கிறான்.

ஆரம்பத்தில் வாடிக்கையாளர் கிடைக்காமல் தோல்வியுற்ற  ஜோ , காஸ் என்ற நடுத்தர வயதுப் பெண்ணிற்கு அவரது ஆடம்பரமான பார்க் அவென்யூ பென்ட் ஹவுஸ் குடியிருப்பிற்கு பின் தொடர்ந்து  சென்று  சுகித்து இன்பம் தருகிறான். கிளம்புகையில் தான் ஒரு hustler, இது  தான் எனக்கு வயிற்றுப்பாடு என உரைத்து , ஜோ பணம் கேட்கும் போது அவள் வீறிட்டு அவமானமுற்று அழுது அரற்றுகிறாள், ஜோ புதிய இடத்தில் புதிய கிராக்கியிடம் நன்கு அவமானப்பட்ட பிறகு  அவளுக்கு 20 டாலர் பணத்தைக் கொடுத்து விட்டு வருமாறு ஆகிறது, 

அதே நாள் இரவு மதுவிடுதியில் வைத்து  ஜோ , என்ரிகோ சால்வடோர் "ராட்ஸோ" என்ற ரீக்கோவுடன் (டஸ்டின் ஹாஃப்மென்) நட்பாகிறான், 
ராட்ஸோவிடம் இன்று காலை தன் வாடிக்கையாளரால் ஏமாற்றப்பட்டதை சொல்லிப் புலம்புகிறான், 

ராட்ஸோ நியூயார்க்கில் விபசாரத்திற்கு  ஒரு நல்ல மேளாளர்  இல்லை என்றால் இப்படித் தான் ஆகும் என்கிறான்,தனக்கு தெரிந்த பெயரெடுத்த  தரகனுக்கு ஜோவை அறிமுகப்படுத்துகிறேன் , அப்புறம் நீ ஒரு நாளைக்கு 50, 100 என சம்பாதிப்பாய் என்று விஸ்தரித்து ஆவலூட்டி  அவனிடமிருந்து $20 கமிஷன் பெறுகிறான்  .  
அந்த தரகன் வசிக்கும் கட்டிடத்தின் லிஃப்ட் வரை வந்து அறை எண் சொல்லி கழன்றும் கொள்கிறான் ராட்ஸோ, அந்த பிம்ப் என்று அறிமுகம் செய்த நபர்  உண்மையில் ஒரு தீவிர கிருத்துவ மத வெறி போதகர்  என்பதைக் கண்டு தெளியும் ஜோ தெறித்து தப்புகிறான், நகரெங்கிலும் ராட்சோவை தேடியபடி  திரிகிறான், 

ஆனால் பல தினங்களாக ராட்சோவை கண்டுபிடிக்க முடியவில்லை.  ஜோ தனது நாட்களை நகரத்தில் அலைந்து திரிந்து தனது ஹோட்டல் அறையில் coin box bw tv ல் படம் பார்த்து  கழிக்கிறான்.  
விரைவில் கையிருப்பு பணம் அத்தனையும் தீர்ந்து விடுகிறது, ஜோ தனது ஹோட்டல் அறையில் இருந்து வெளியே துரத்தப்படுகிறான், அவன் உடமைகள் அத்தனையையும் ஹோட்டல் நிர்வாகம் வைத்துக் கொள்கிறது. வாடகை தந்தால் தான் அவற்றை திரும்ப பெற முடியும் என்ற நிலை.

ஜோ உடைமைகளை மீட்க சினிமா தியேட்டரில்  கண்ணாடி அணிந்த இளைஞனிடம்   வாய்வழி புணர்ச்சி பெற்று 25$ பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறான், 
ஆனால் அந்த இளைஞனிடம் பணம் இல்லை என்பதை அந்த வீண் புணர்ச்சிக்கு  பிறகே அறிந்து கொள்கிறான்.  
ஜோ அவனை கழிவறையில் சட்டை பிடித்து தூக்கி அச்சுறுத்தி அவனது கைக்கடிகாரத்தைக் கேட்கிறான்,அவன் அம்மா இந்த sentiment கடிகாரத்தை தொலைத்தால் உயிரை விட்டுவிடுவாள் என அழுகிறான்,  அதனால்  அவனை காயப்படுத்தாமல் விடுகிறான் ஜோ.  

அடுத்த நாள், ஜோ ராட்சோவை உணவகத்தில்  கண்ணாடி வழியே கண்டவன்  கோபத்துடன் அவனை சென்று உலுக்குகிறான். ஆனால் ராட்ஸோவிடம் வெறும் 64 சென்ட் சில்லரை மட்டும் எஞ்சியுள்ளன,அருவருத்து அவனையும் தாக்காமல் விட்டு அகல்கிறான் ஜோ.ஆனால் ராட்ஸோ அவனை நீங்குவதில்லை, நன்றி உள்ள நாய் போல அப்படி கொஞ்சுகிறான்.இருவரும் பாலத்தின் மீது நடந்து வருகையில் ஜோ ஆஜானுபாகுவாக நடக்க ராட்ஸோ  வந்தி விந்தி நடக்கிறான், அவன் பிறப்பிலேயே கால்கள் சூம்பிப் பிறந்ததையும், அவன் தந்தையால் அதற்கு மருத்துவம் பார்க்க இயலாததையும் பகிர்கிறான்.

ராட்சோ, சட்டவிரோதமாக பின்வழியாக நுழைந்து தங்கியிருக்கும்  மின்சாரம் துண்டிக்கப்பட்ட  கட்டிடத்திற்கு ஜோவையும் அழைத்துச் செல்கிறான் , ராட்சோவிடம் குளிருக்கு அணிய நல்ல ஸ்வெட்டர் கூட இல்லாததால் அவனுக்கு கடும் சளி பிடித்து வாட்டுகிறது,கண்டபடி இருமிக்கொண்டே இருக்கிறான்.
ஜோ தயக்கத்துடன் அவனது அறையில் தங்க அழைத்ததை ஏற்றுக்கொள்கிறான், முதலில் ராட்ஸோ தன்னிடம் ஓரின சேர்க்கை உறவை எதிர்பார்ப்பதாக ஐயமுற்ற ஜோ , அவனிடம் கடும் நிபந்தனை விதித்து அவன் அறையில் தங்குகிறான்.

ராட்ஸொவும் ஜோவும் நியூயார்க் நடைபாதை வியாபாரிகளிடம் தக்காளி உருளைக்கிழங்கு தேங்காய் என திருடி வருகிறார்கள்,  வீட்டில் வைத்து ஜோவுக்கு துரித இத்தாலி  உணவு சமைத்துத் தருகிறான் ராட்ஸோ, மெல்ல கல்லுக்குள் ஈரம் போல ராட்ஸோவுக்கான நட்பை உயரிய அன்பை பொழியத் துவங்குகிறான் ஜோ.

அவர்கள் Partners in crime கூட்டை துவக்குகின்றனர்.இவர்கள் இருவரும்  நல்ல பிணைப்பை வளர்த்துக் கொள்ளும்போது, ​​ராட்சோவின் உடல்நிலை மேலும் மோசமாகிறது,அமெரிக்காவில் வசிக்க social security அட்டை,  இன்சூரன்ஸ் , இலவச  மருத்துவம் என எதுவும் இல்லாத நிலையில் ராட்ஸோவை மருத்துவமனையில் சேர்க்க முடியவில்லை, ராட்ஸோ ஜோவுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை, வாழ்வதை வெறுக்கத் துவங்கிவிட்டான்.

இடையிடையே  ஃப்ளாஷ்பேக்கில், ஜோவின் காலம் சென்ற தந்தை வழிப் பாட்டி , ஜோவை அவரது தந்தை இறந்தபின்  தாயும்  கைவிட்டுச் சென்ற பிறகு மிகுந்த செல்லம் தந்து  வளர்ப்பதை தொடர்ச்சியாக நாம் பார்க்கிறோம், 

பாட்டி ஜோவுக்கு தினமும் cinema பார்க்க காசு தருகிறார், உணவகத்தில் சாப்பிடவும் காசு தருகிறார், இதனால் இவருக்கு படிப்பு ஏறுவதில்லை, 

ஜோ பள்ளி இறுதி படிக்கையில்  அன்னி என்ற வயதில் மூத்த பெண்ணுடன்   ஜோ முதல் முறையாக  பாலியல் இன்பம் துய்த்துள்ளான்,  ஒரு திரையரங்கில் திரைக்குப் பின்னால் ஜோவும் அவனது ஐந்து நண்பர்களும் ஒன்றன் பின் ஒன்றாக அவளுடன் உடலுறவு கொள்கையில் , அங்கே அன்னியின் வீட்டார்கள் வந்து இவர்களை அடித்து துன்புறுத்தி நொறுக்கி, பிதுக்கி விடுகின்றனர்,  அக்கொடூர அனுபவத்தின் தொடர்ச்சியான ஃப்ளாஷ்பேக்குகளை படம் இடையிடையே கிளறி வெளிக் கொண்டு வருகிறது.  
அதன் பின் அன்னியின் மனநிலை பாதித்து, அவளை மனநல காப்பகத்துக்கு  அழைத்துச் செல்வதை நாம்  கண்ணுறுகிறோம்.

ராட்ஸோ ஜோவிடம் இனி தன்னை ரீக்கோ என அழைக்க சொல்கிறான்,  தனது தந்தை ஒரு loser,இத்தாலியில் இருந்து நியூயார்க்கிற்கு குடியேறிய படிப்பறிவில்லாத  shoe shiner என்கிறான்.

அப்பாவுடைய அந்த கடுமையான ஷூ பாலீஷ் இடும் வேலை அவருக்கு தாரித்ரியம் மட்டுமே தந்தது , இணைப்பாக மோசமான முதுகு வலி மற்றும் நுரையீரல் பாதிப்பிற்கும் வழிவகுத்தது என்கிறான். ராட்சோ தனது தந்தையிடமிருந்து ஷூஷைனிங்கைக் கற்றுக்கொண்டிருந்தாலும்  தான் அந்த வேலையை எடுத்துச் செய்யவில்லை என்கிறான்.

10 வருடங்களுக்கு முன்பு ராட்ஸோவின் தந்தையை அடக்கம் செய்த சமாதியை இவர்கள் பார்வையிடும் காட்சி அற்புதமானது, ராட்ஸோவுக்கு கையாலாகாத தந்தை மீதான கோபம் இன்னும் அகலாததால் அங்கே வேறு ஒரு சமாதியில் மரியாதைக்கு வைக்கப்பட்ட பூங்கொத்தை எடுத்து தந்தை சமாதி மீது விட்டெறிகிறான் ராட்ஸோ, கதிகலங்க வைக்கும் தருணம் அது.

ராட்சோ இந்த பூட்பாலீஷ்  வேலையை  இழிவாக கருதினாலும்,நடுநிசியில் ஒரு பூட் பாலீஷ் செய்பவன் ஒருவனின் பெட்டியின் பூட்டை உடைத்து சாதனங்களைத் திருடியவன்,    ஜோ தன் பெண் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அவனது  கவ்பாய் பூட்ஸுகளுக்கு தகதகவென பாலீஷ் இட்டு மெருகேற்றுகிறான், அருகில் ஒரு போலீஸ்காரர் வந்து அமர்ந்து தன் பூட்ஸ்களை காட்ட அவருக்கும் பாலீஷ் இடுகிறான் ராட்சோ .

ராட்ஸோ மியாமிக்கு சென்றால் ஜோவுக்கு நல்ல பெண் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்   என நம்புகிறான், 
பட்டினியுடன் இருவர் காண்கிற பகல் கனவில் ராட்ஸோவும்  ஜோவும்  கூட்டமான கடற்கரையில் கவலையின்றி உல்லாசமாக இருப்பதையும், டஜன் கணக்கான நடுத்தர வயது பெண்கள் மேலாளர் ராட்ஸோவிடம் டோக்கன் பெற்று ஜோவிடம் வந்து  புணர்ச்சி வாங்குவது போல  பார்க்கிறோம்.

ஆனால் இவை வெறும் கனவு தான், நிஜத்தில் இருவரும் கொலைப்பட்டினி, நியூயார்க் குளிருக்கு அணிய  நல்ல கம்பளி கோட் கூட இருவருக்கும் இல்லை, இவர்கள் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதால் ஹீட்டரும் வைத்துக் கொள்ள முடியாது.பசியாற ஜோவின் உயிருக்கு உயிரான  ட்ரான்ஸிஸ்டரை வெறும் 5 $ க்கு அடகு கடையில் விற்று விட்டு வருகின்றனர்.

பாப் ஆர்ட் என்பது 1950 களில் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஒரு  art movement, பாப் இசை நமக்கு நினைவிருக்கும்.
பாப் இசை ஆளுமைகள் இருவர் ஒரு உணவகத்தில் ஜோவின் cow boy தோற்றத்தைக்  கண்டவர்கள் அவனை நெருங்கி,  போலராய்டு கேமரா கொண்டு ஜோவின்  புகைப்படத்தை அவனிடம் அனுமதி வாங்காமல்  எடுத்துக் கொண்டவர்கள் , அன்று இரவு நடக்கும்   கலை நிகழ்வுக்கான அழைப்பிதழை ஜோவிடம் வழங்கிச் செல்கிறார்கள்.

ஆனால் ராட்சோ அந்த இசை நிகழ்வில் வைத்து  மோசமாக  இருமுகிறான், இலவச உணவைத் திருடி தன்  கோட் பையில் பதுக்கி வைக்கிறான்,பல முக்கிய விருந்தினர்கள் கவனத்தை அப்படி ஈர்த்து அருவருக்க வைக்கிறான்.

 ஜோவுக்கு ஷெர்லி என்ற அழகிய blonde பெண்  சிகரெட்டைத் தருகிறாள் , அது வீர்யம் வாய்ந்த கஞ்சா திணிக்கப்பட்ட joint என்பது தெரியாமல் முழுதாக புகைத்தும் விடுகிறான் ஜோ.

 உடல் நலிவுற்று போதையில் தள்ளாடியபடி இருக்கும் ராட்ஸோ , செல்வ சீமாட்டி ஷெர்லியிடம் ஜோவை இரவு அவள் வீட்டுக்கு அழைத்து போய் சுகிக்க 20$ பணமும், தனக்கு டாக்ஸி கட்டணமாக ஒரு டாலரும் பேசி வாங்கியவன், படியிறங்குகையில் தடுமாறி விழுந்து எழ முடியாமல் எழுகிறான், இதைப் பார்க்கும் ஜோ ,மிகவும் கவலை கொள்கிறான், கிடைத்த கிராக்கியையும்  விட முடியாது, ராட்ஸோவையும் உடன் அழைத்துப் போக முடியாது.ராட்ஸோ நான் நன்றாக இருக்கிறேன், நான் டாக்ஸியில் போய்விடுவேன் என்று சொல்லி கிளம்புகிறான்.

ஜோ ஷெர்லியுடன் விருந்தில் இருந்து  அவள் வீட்டுக்குப் போகிறான், ஷெர்லியுடன் இரவைக் கழிப்பதற்காக 20 $ கொடுக்க ஒப்புக்கொள்கிறாள், ஆனால் ஜோவால் உடலுறவில் ஈடுபட முடியவில்லை, காரணம் கஞ்சா போதை , எதைப் பற்றி மனம் நினைக்கிறதோ அதில் இருந்து மனம் வேறு இலக்கிற்கு எளிதாக பயணிப்பதில்லை,மனம் முழுக்க ராட்ஸோவின் உடல்நலம் பற்றிய கவலையால் அவனுக்கு குறி புடைப்பதில்லை, இயங்க மனமும்  தெம்புமில்லை, 

அவர்கள் படுக்கையில் நிர்வாணமாக   ஸ்க்ரைபேஜ் வார்த்தை விளையாட்டு  விளையாடுகிறார்கள், 
அதில் gay என்று வாக்கியம் அமைத்த ஷெர்லி   ஜோவை , நீ ஒருவேளை ஓரின ஈர்ப்பாளனாக இருப்பதால் ,உனக்கு அழகிய பெண்ணான என் மீது ஈர்ப்பு வரவில்லை,என சீண்டுகிறாள்.
அப்போது ஜோவுக்கு ரோஷம் வந்து விடுகிறது திடீரென்று அவனால் வீர்யம்  கொண்டு  ஷெர்லியை படுக்கையில் புரட்டி எடுத்து செயல்பட முடிகிறது. 

படுக்கையில் உள்ள கலர் டிவியின் ரிமோட் கன்ட்ரோல் மீது ஷெர்லியின் புட்டங்கள் அமுங்கி டிவியில் அலைவரிசைகள் ஒவ்வொன்றாக மாறுகிறது, கார்ட்டூன், அரசியல், பாப்,ராக்,  விலங்குகள் , க்ளாஸிக் திரைப்படம் என ஒவ்வொன்றாக மாறுகிறது.
(நடிகர் கமல்ஹாசன் ஆளவந்தான் திரைப்படத்தில் படுக்கையில்   ரவீனா டான்டனுடன் முயங்குகையில் இந்த ரிமோட் காட்சியை அழகாக பயன்படுத்தியிருப்பார் )

இரவு முழுக்க ஜோவின் அதிரடி சேவையில் உளமார கண்டுண்டு போகிறாள் ஷெர்லி, மறுநாள் காலை ஜோவின் பிரதாபங்களை தன் தோழியை தொலைபேசியில் அழைத்து சொல்லி வியக்கிறாள், அவளையும் ஜோவை முயன்று பார்க்க வற்புறுத்தி appointment வாங்கித் தந்து 20 $  பணமும் மனதாரத் தந்து ஜோவை வழி அனுப்புகிறாள்.

 ஜோ வீடு திரும்புகையில் இருமல் மருந்து , ஜுரத்துக்கு மாத்திரைகள், வலிநிவாரணி களிம்பு ,இத்தாலி உணவு  என அனைத்தும் வாங்கிப் போகிறான்.
 ராட்சோ படுத்த படுக்கையாக காய்ச்சலுடன் இருக்கிறான்,முதல் நாள் விருந்தில் தனக்கு பொருந்தாத ஒரு கோட்டை திருடி வந்து அணிந்திருக்கிறான் ராட்ஸோ, அந்த பொருந்தாத உடையை கிண்டல் செய்கிறான் ஜோ, ஆனால் ராட்ஸோ பேச்சை மாற்றி அதை ஜோவுக்கு என்று திருடி வந்தேன் என்கிறான்,  

தனக்கு அடிக்கடி கால்களுக்கு கீழ் நன்கு மரத்து விடுகிறது என்று ஜோவிடம்  சொல்கிறான் ராட்ஸோ,தன்னை கட்டிலில் கிடத்தி படுக்க வைக்க கேட்கிறான், ஜோவுக்கு கதி கலங்கி விடுகிறது, அவனுக்கு சூப் வைத்துத் தருகிறான்.
விரைவில் தனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள், ராட்ஸோவை மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறேன் என்கிறான், கையில் இன்னும் ஏழு டாலர் பணம் உள்ளது என்கிறான் ஜோ, 

ராட்ஸோ மருத்துவ உதவியை மறுத்தவன், தன்னை ஃபுளோரிடாவிற்கு பேருந்தில் ஏற்றி விட்டு விடும் படி ஜோவிடம் கெஞ்சுகிறான். கிட்டத்தட்ட 31 மணிநேரப் பயணம், ஜோவினால் அவனை அப்படி  தனியே விட மனமில்லை, ஜோவை சுகிக்க அழைத்த வாடிக்கையாளப் பெண்ணை போன் செய்து இன்றே சுகிக்க வரலாமா? என பரபரக்க அவள் வேண்டாம் என்கிறாள், ஃப்ளோரிடா செல்ல இருவருக்கு 60$ எப்படியும் தேவைப்படும் .

விரக்தியில், ஜோ ஒரு வயதான ஓரினச் சேர்க்கையாளரை  கேளிக்கை விடுதி வாசலில் வைத்து  சந்தித்தவன், அவர் தனியே தங்கியிருக்கும் அறைக்குச் செல்கிறான்.அவர் நல்ல மனிதர், அவருக்கு தான் செய்யப்போகும் காரியம் ஏனோ உறுத்தியதும் புணர்ச்சியை நாளை வைத்துக் கொள்வோம் என மறுதலிக்கிறார், 20$ பேசிய இடத்தில் அவனுக்கு 10$ தந்து நட்புடன் அனுப்புகிறார்,ஆனால் ஜோவுக்கு ஃப்ளோரிடா போக பணம் தேவை , எனவே அவர் பணம் வைத்திருக்கும் மேசைக்கு அருகே வந்து நிற்கிறான், அவரிடம் எனக்கு பணம் தேவை, என்கிறான், அவர் என்னிடம் வேறு பணம் இல்லை என்கிறார், ஜோ விடுவதில்லை, உயிர் பிழைக்க வேண்டும் என்றால் பணம் கேட்கிறான், அவர் மறுக்க அவரை தள்ளி வீழ்த்தி தாடையை உடைத்து விடுகிறான், அவர் பாடுபட்டு சேர்த்த பணம் பறிபோக பிதற்றுவதை சகியாத ஜோ அவர் கதையை முடித்துவிட்டு அகல்கிறான் என்று கண்ணுறுகிறோம்.

 ஜோ அந்த மனிதரிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் ஃப்ளோரிடா பேருந்துக்கு இரண்டு டிக்கெட்டுகளை வாங்குகிறான்,  பயணத்தின் போது, ​​ராட்சோவின் உடல்நிலை மேலும் மோசமடைகிறது,
பயண வழியில் இவன் ஆடையில் இருந்த ரத்தத்தை ராட்ஸோ சுட்டிக்காட்டி அவரை கொன்றுவிட்டாயா? என்கிறான், ஜோ அதைப்பற்றி பேசவேண்டாம் என்கிறான், 

steak for everybody , every lunch and dinner,north east yellow birds to florida , என்ற பெரிய விமான சேவை விளம்பரப்பலகை அருகே பாலத்தின் மீது இருவரும் பேருந்து பிடிக்க  நடப்பதை நாம் கண்ணுறுகிறோம்.
பேருந்து பயணவழி உணவகத்தில் நிற்கையில் ராட்ஸோவுக்கும் தனக்கும் புத்தாடைகள் வாங்கியவன் பழைய கவ்பாய் ஆடைகளை களைந்து குப்பைத் தொட்டியில் இடுகிறான், ராட்ஸோவுக்கு அழகிய மியாமி beach shirt அணிவித்து அழகு பார்க்கிறான் ஜோ.
 ராட்ஸோ திடீரென ரத்த அழுத்தம் குறைந்து வியர்வையில் நனைகிறான்.தான் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டேன் என அழுகிறான்.

 இப்படி hustler ஆக இருந்து சம்பாதிப்பதைக் காட்டிலும் வாழ்க்கையில் சம்பாதிக்க எளிதான வேறு பல வழிகள் இருக்கிறது என்று ஜோ ராட்ஸோவுக்கு சொல்கிறான்.
எனவே ஃபுளோரிடாவில் இறங்கியதும்  நிரந்தரமான வேலை தேடிக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக  கூறுகிறான் ஜோ.  

ராட்சோ இம்முறை பதிலளிக்கத் தவறிவிட, ​​ஜோ அவன் இறந்துவிட்டதை நம்பமுடியாமல் திகைத்து உறைகிறான்.  ஓட்டுநரிடம் மெதுவாக தன் ஐயத்தை சொல்லி அழைத்து வருகிறான் ஜோ, சொகுசு பேருந்து ஜனங்கள் முழுக்க இவர்கள் இருவரையும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.

இவர்கள் இருக்கை அருகே வந்த ஓட்டுனர் ஜோவிடம் நாம் மியாமிக்குத் தொடர்வதைத் தவிர வேறெதுவும் வழி இல்லை என்றவர், இவர் உன்  சகோதரன் தானே ? என்றவர், அவர் இமைகளை மூடு என்று பணிக்க , ஜோ கண்ணீருடன் ராட்ஸோவின் இமைகளை மூடுகிறான், ஜோ, இறந்துபோன தன் நண்பனின் அருகே, அமர்ந்து ஃப்ளோரிடா பயணத்தை தொடர்கிறான், பத்து நிமிடங்களில் மியாமியை நாம் எட்டிவிடுவோம் என்கிறார் ஓட்டுனர், பேருந்தில் உள்ள அனைவரும் இவர்களை மறந்து கிழவி முதல் குமரி வரை அனைவரும்  உதட்டுசாயம் பூசி அந்த கேளிக்கை நகரை எதிர்கொள்கின்றனர்.

இப்போது பேருந்து கண்ணாடி மீது வானுயர்ந்த  ஹோட்டல் கட்டிடங்களின் பிம்பங்கள் விழ, உள்ளே கண்கள் மூடியபடி தலை சரிந்த ராட்ஸோவை நாம் மங்கலாகப் பார்ப்பதுடன் படம் நிறைகிறது,

நடிகர் டஸ்டின் ஹாஃப்மேன் அற்புதமான method actor, இதில் அவர் செய்த ராட்ஸோ கதாபாத்திரம் உலகில் வெளியான  எத்தனையோ திரைப்படங்களில் புனையப்பட்ட உயிர் நண்பன் கதாபாத்திரங்கள் சிறப்பாக உருவாக அடிகோலியது என்றால் மிகையில்லை , முறையான நடிப்பு தான் method acting, இது பல்வேறு நாடக பயிற்சியாளர்களால் வடிவமைக்கப்பட்ட பயிற்சி மற்றும் ஒத்திகை நுட்பங்களின் வரம்பினைக் கொண்டது, ஒரு கதாபாத்திரத்தின் உள் உந்துதல் மற்றும் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு,சரியாகப்  புரிந்துகொண்டு, அனுபவித்து தன்னிச்சையாக  வெளிக்கொணர்வதன் மூலம் உலகெங்கிலும் தேர்ந்த நடிகர்கள் நடிக்கும் முறையாகும். நிஜமான மற்றும் இயல்பான நடிப்பை வழங்கும் நடிகர்களில் டஸ்டின் ஹாஃப்மேன் முக்கியமானவர் , அவருக்கு இப்போது 84 வயது, நம் நடிகர் கமல்ஹாசனை விட 20 வருடங்கள் மூத்தவர்,நடிகர் கமல்ஹாசனும் தலைசிறந்த முக்கியமான method actor என்பதால் பலர் இருவரையும் குறிப்பிட்டு,அவரைப் போல இவர் நடிக்கிறார் என்று ஒப்பிடுகின்றனர், அது சற்றும் உண்மையில்லை, இருவரின் நடிப்பும் வெவ்வேறும்  தனித்துவமானதும் கூட.

Jigalo / hustler ஜோ கதாபாத்திரம் செய்த Jon Voight அபாரமான நடிகர்,இப்படத்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்,இந்த இரு கதாபாத்திரங்களையும் தம் வாழ்நாளின் முழுமைக்குமான அடையாளமாகவே செய்திருக்கின்றனர், சினிமா இயக்குனர்கள் சினிமா ஆர்வலர்கள் இந்த படத்தை தவற விடாதீர்கள்.

ஒளிப்பதிவில் காட்சிகளின் உணர்வுகளுக்கேற்ப mood lighting செய்து jump cuts , montages shot உத்தியை கையாண்டு அற்புதமாக வண்ண ஒளிப்பதிவு செய்திருந்தார் Adam Holender என்ற போலந்து நாட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர். இவர் ஹாலிவுட்டில் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர், இவர் ஒளிப்பதிவு பாடமாக வைக்கக்கூடிய தரம் கொண்டவை.

மிட்நைட் கவ்பாய் பாப் கலைஞர்களின் பாடல்களை விரிவாகப் பயன்படுத்திய  திரைப்படங்களில் முதன்மையானது.  இசையமைப்பாளர் John Barry பாப் இசையை தொகுத்து மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார், சிறந்த ஒரிஜினல இசை கருப்பொருளுக்கான கிராமி விருதையும் அவர் வென்றார்.

மறைந்த இயக்குனர் John Schlesinger ஹாலிவுட்டில் முக்கியமான படைப்பாளி, இவர் மேடை நாடக இயக்குனரும் ,  நடிகரும் கூட, இவர் இந்த திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை வென்றார், மேலும் ஆஸ்கர் விருதுக்கு அவரின் மற்ற  திரைப் படங்களான 
Darling, Sunday Bloody Sunday  இரு படைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.

#ஹாலிவுட்,#டஸ்டின்_ஹாஃப்மேன்,#மிட்நைட்_கவ்பாய்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)