மழு |1982 | மலையாளம்

மழு (கோடாரி) 1982 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் , படத்தின் கதை ஜெயநாராயணன், இயக்கம் P.K.கிருஷ்ணன், இசை ஷ்யாம் மாஸ்டர், ஒளிப்பதிவு P.லக்‌ஷ்மணன்,  இது தமிழில் B Grade திரைப்பட வினியோகஸ்தர்களால் மாமனாரின் இன்ப வெறி என பெயர்மாற்றம் செய்து வெளியிடப்பட்டு கல்லா கட்டியுள்ளது, இப்படத்தில் Incest Relationship என்ற கூடாக்காமம் அந்த 80களில் யாரும் பரீட்சிக்காத கருப்பொருள் ஆகும், அன்று அது மிகப் பெரிய விவாதத்தை தோற்றுவித்துள்ளது.

தமிழில் அமலா பால் நடிப்பில்  வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தை விட நூறு மடங்கு கலைத்தன்மையை, நம்பகத்தன்மையை இப்படம் கொண்டிருக்கிறது,
சிந்து சமவெளியில் இருந்த போலித்தன்மை இதில் அறவே இல்லை,உலக சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.

இப்படத்தில் நடிகர் சுகுமாரன் தன் இயக்குனர் நண்பரான 
P.K. கிருஷ்ணனுக்காக துணிந்து தன் மலையாள சூப்பர் ஸ்டார் என்ற உயரத்தில் இருந்து இறங்கி இந்த சிறப்பு கௌரவத் தோற்றத்தை செய்துள்ளார், எந்த நிரூபனமான கதாநாயகனும் இன்றும் கூட செய்ய யோசிக்கும் கதாபாத்திரம் இது.

படத்தின் கதை:-

தாஸன் (சுகுமாரன்) இந்திய ராணுவத்தில் தரைப்படை வீரர்,  தன் இளம் மனைவி சீதாவை (ரதிதேவி) தன் கடும் உழைப்பாளியான விவசாயி அண்ணன் (பாலன் கே நாயர்) பொறுப்பில் விட்டு விட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சண்டையிடச் சென்றுள்ளதை அறிகிறோம்,தாஸனுக்கும் அண்ணனுக்கும் இருபது வயது வித்தியாசம், தந்தை மகன் போன்ற பந்தம், அத்தனை பாசத்துடன் வளர்த்தவர், தன் குட்டி தம்பிக்காக திருமணமே செய்து கொள்ளாதவர்.

 பாலன் கே.நாயரை ஊரில் அவரது ஆகிருதியும் வயதும் காரணமாக ஆசான் என்றே அழைக்கின்றனர் ,  தங்கள் நெல் வயலில் தினமும் அத்தனை பாடுபடுகின்றனர், சீதா கால்களால் ஏற்றம் சுற்றி இறைத்தால் ஆசான் மரம் காடு கழனி வெட்டித் திருத்துவது, வாய்க்கால் வெட்டுவது , ஏர் பூட்டி உழுவது  , மரம் வெட்டுவது, விறகு சுமப்பது என கடும் உழைப்பு உழைக்கிறார்கள்.

மூணார் தேயிலை எஸ்டேட் முதலாளி சத்தாருக்கு அழகிய சீதா  மீது கண், பலமுறை அவளை அடைய நினைத்தும் காட்டுப்பன்றியை அடித்து விரட்டப்படுவது போல ஆகிருதி மிகுந்த பாலன் நாயரால் அடித்து வெளுத்து அடிக்கப்படுகிறான், சீதையை  தாசன் திரும்பி  வரும் வரை அவள் சித்தியிடம் பாதுகாப்பாக விடலாம் என்றால், அவள் கொடுமைக்கார மாற்றாந்தாயிடம் செல்ல மறுக்கிறாள்.

ஒருநாள் தபால்காரர்  அந்த வலிமிகு தந்தியை கொண்டு வருகிறார், தாஸன்  போரின் போது காணாமல் போய்விட்டான், அவனை தொடர்ந்து தேடி வருகிறோம் என்கிறது தந்தி, இவர்களுக்கு தெய்வத்தை இறைஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை, அத்தனை துயர் மிகு தருணம் அவர்களைப் பீடிக்கிறது.

அடுத்தவாரமே ராணுவத்தில் இருந்து சக ராணுவ ஊழியர்களும் உயர் அதிகாரியும் தலையில் ட்ரங்க் பெட்டியை சுமந்து மலைத்தோட்டத்தில் விசாரித்து இவர்களின் குடிசைக்கு வருகின்றனர், மரியாதை நிமித்தமாக இவர்களுக்கு வீர வணக்கம்  வைத்து பெட்டியை இறக்கி வைத்தவர்கள், தாஸன் பாகிஸ்தான் படையினரால் கைதியாக பிடிக்கப்பட்டு தலை அறுத்து கொல்லப்பட்டதை துயருடன் பகிர்ந்து, இழப்பீடு நிதியாக பணம் தந்துவிட்டு, எந்த உதவி தேவை என்றாலும் தயங்காமல் கேட்கச் சொல்லிவிட்டு அகல்கின்றனர்.

அது முதல் இருவரின் தலைக்கு மீதும் சந்தர்ப்பவாதம் என்ற கத்தி தலைமேல் தொங்குகிறது , 
சில மாதங்கள் ஓடுகிறது, மீண்டும் அந்த காட்டுப்பன்றி தாக்குதல் போல எஸ்டேட் முதலாளி சத்தார் மற்றும் கூட்டாளிகள் குளிக்க சென்ற சீதாவை   காட்டில் வைத்து அடைய  நினைக்கின்றனர், கிழவன் குளிருக்கு கிடைத்த பரிசு பார் என அங்கலாய்க்கின்றனர், அவர்களை ஆசான் அடித்து விரட்டி விடுகிறார், இம்முறை துப்பாக்கியை பிடுங்கி நெற்றிப் பொட்டில் வைத்து நன்கு எச்சரித்தும் விடுகிறார்.

சீதா விரகதாபத்தால் தவிக்கிற இளம்வயது,காட்டு வாசிகள் காட்டில் கலவி கொள்வதை மரம் வெட்ட மலை ஏறுகையில் பார்த்தவள், மரம் வெட்டும் ஆசானின் ஆகிருதியில் சலனப்படுகிறாள்,இதை கவனித்த ஆசான் அதுமுதல் சீதையை கவனமாக தவிர்க்கிறார்,குடிசையில் இரண்டு தடுப்பாக தனி அறைகள், இவர் மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறார் ,சீதைக்கு வேறு நல்ல வரன் பார்க்கிறேன் என கிளம்புகிறார் ஆசான் , நீ இங்கிருந்தால் நல்லதல்ல உன் சித்தியிடம் சென்றுவிடு என புத்திமதிகள் சொல்லி விடை கூறி அனுப்பி வைக்கிறார், ஆனால் சீதை ஊர் எல்லை தாண்டுவதற்குள் மனம்மாறி மீண்டும்  வீட்டிற்குள்ளே இவர் உடன் வந்து விடுகிறாள், கஞ்சி விளம்புகிறேன் என்றவளை, பேருந்து போய்விடும் என விரட்டியவர்,  தட்டுத் தடுமாறி   உறியில் இருந்து துவையல், கஞ்சிப்பானைகளை இறக்குகிறார், பழக்கமில்லாததால் பானையை கீழே போட்டு உடைத்து விடுகிறார், சீதா உரிமையுடன் விலக சொல்லி புதிதாக கஞ்சி சமைக்கிறாள்,விளம்பித் தருகிறாள்,சாப்பிடுகையில்  இந்த கைபக்குவம் தனக்கு வராது, என்றாலும் இது எத்தனை நாளுக்கு தான்  இப்படியே செல்ல முடியும் என்கிறார்.

விஷப்பனி கூரைவழியே இறங்கும் நள்ளிரவில் சீதை  பக்கத்து அறைக்கு கேட்காமல்  அத்தனை வாய்பொத்தி அழுதாலும் கூட ஆசானுக்கு  அவளின் விரகம் தெரிந்து விடுகிறது,
மறுநாள் சீதை காலில் நெரிஞ்சி முள் குத்தி ரத்தம் வருகிறது, அருவிப்பாறையில் அமரவைத்து அழுந்த இறங்கிய நெரிஞ்சி முள்ளை கைகளால் அழுத்தி பற்களால் லாவகமாக எடுக்கையில் அவளின்  நனைந்த தேகம் வழியே கண்கள் ஊர்ந்து  ஆவுடையில்  நிலைகுத்தி ஆசானின் மன உறுதியை சீர் குலைத்துவிடுகிறது, இரவு குளிர் ஜுரம் கொள்கிறார் ஆசான்.

எத்தனை பீடி குடித்து எறிந்தும், சைத்தான் விலகவில்லை , சீதை  உறங்குகையில் அவளின் அலங்கோலம் எதுவோ செய்கிறது,
ஆசான்  சலனப்படத் துவங்குகிறார்,

 மறுநாள் மலையேற்றத்தில் முதலில் இவர் மேடேறி சீதைக்கு ஏற கை தர, இவள் பிடிமானம் தளர்ந்து ஆசானை தன் மீது தள்ளிக் கொள்கிறாள், அங்கே இவர்களின் அருவி சங்கமம் துவங்குகிறது.

அந்த நொடியில் தலைக்கு மேல் தொங்கிய சந்தர்ப்பவாத கத்தி இருவர் தலையிலும் இறங்கிவிடுகிறது, முதல் பாவம்  நிகழ்ந்துவிடுகிறது, 

அன்று இரவு ஆசான் மனசாட்சி உறுத்த திண்ணையில் நடந்துல் எத்தனை பீடி குடித்து எறிந்தும் மனம் செய்த தவறுக்கு பிராயசித்தம்ஙதோற்றவில்லை, உள்ளே இதே போல தூங்காமல் தவித்த சீதா ,ஆசானை விடியல் வரை இப்படியே நடந்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது எதற்கு?உள்ளே வந்து படுங்கள் என சன்னமாக சொல்ல, அதுமுதல் இவர்கள் கணவன் மனைவியாக கட்டிலில் துயில் கொள்கின்றனர்.

கொன்ற பாவம் தின்றால் போச்சு என்பது போல ஊரில் அதன் பின் அவர்கள் வீட்டில் குலவியது போதாமல் காடு அருவி என ஒரு இடம் கூட  விடாமல் கொடி படருவதற்கு கொழுகொம்பு கிடைத்தது போல கூடாக்காமம் பயில்கின்றனர்,

அந்தி மயங்குவது வரை வீடு திரும்புவதில்லை , அந்த மலைத்தோட்டத்தில்  ஒருவர் விடாமல்  இந்த முறைகேடான உறவு பற்றி பேசத் துவங்குகின்றனர், இந்நிலையில் சீதா கர்ப்பமாகிறாள்,கருவுற்றதற்கு அத்தனை மகிழ்கிறாள், ஆனால் ஆசான் மகிழ்ச்சியையோ சோகத்தையோ வெளிக்காட்டுவதில்லை  .

அன்று மாலை ராணுவத்தில் இருந்து தாஸன் தன் பெட்டி படுக்கையுடன் ஊருக்குள் வருகிறார்,தன்னுடன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்ட தன்  சகாவை தலையறுத்தனர், தான் அவர்களிடம் போர் கைதியாக பிடிபட்டு கிடைத்த சிறிய சந்தர்ப்பத்தை பயப்படுத்தி தப்பி இந்திய ராணுவ முகாம் அடைந்த கதையை ஊராரிடம் சொல்கிறார் , அங்கு வந்த தபால் காரர் நாராயணன் நாயர் எப்படி ஆசான் இவர் மனைவி சீதையை தாரமாக வரித்துக் கொண்ட கதையை சொல்ல என விக்கித்து நிற்கிறார்,நீ வந்திருக்க வேண்டாம் தாஸா என பொடி வைத்து பேசுகிறார், தலையில் பெட்டி சுமப்பவர் தவிர ஊராரில் ஒருவர் கூட அந்த மாலைக்கருக்கலில் மரியாதைக்கு கூட அவர் குடிசை வரை வராதது வியப்பளிக்கிறது தாஸனுக்கு.

வெளித்திண்ணையில் தன் பெட்டியை வைத்தவர் வீட்டிற்குள்   மனைவி சீதை அறைக்குப் போனால் தங்களுடைய அறையில் சுவரில் மாட்டி இருந்த தன் படம் முகம் பார்க்க சங்கடப்பட்டு திருப்பி மாட்டப்பட்டதைப் பார்க்கிறார் தாஸன்,தான் வாங்கித் தந்த பாசிமாலையும் அதன் மீது மாட்டியுள்ளது, ஆசானின் உடைகள் இந்த அறையில் இருப்பதையும் அறையில் படுக்கை பாய் இருந்த கோலத்தையும் கண்டு விக்கித்து வெளியேறுகிறார், மனம் முழுக்க காதலும் கொப்பளிக்கும் காமமுமாக இந்த குளிர் இரவில் தன் மலைகிராமத்திற்குள் வந்தவர் தலையில் இப்படி எரிமலை வெடித்திருக்கிறது.

காட்டில் இருந்து விறகும் கோடாரியுடன் வீடு திரும்பிய ஆசானும் சீதையும் வெளியே இருந்த பெட்டியை யாருடையது என பார்க்க சிம்னி விளக்கு ஏற்றி திறக்கின்றனர்,அதில் தாஸன் படம் இருக்க  கண்ணி வெடியில் கால் வைத்ததைப் போல உறைந்து விடுகின்றனர்,

வெளியே சென்ற தாஸன் சாராயம் குடித்து விட்டு  வீடு திரும்பியவர் இவர்களைப் பார்த்ததும் அங்கே கிடந்த விறகு வெட்டும் கோடாரியை ஆசானை நோக்கி தூக்கி எறிகிறார், ஆசான் குற்ற உணர்வுடன் கோடாரியை எடுத்து வந்து தாஸன் கையில் தந்து தன்னை கூறுபோடத் தருகிறார்,அதை தூக்கி தூர எறிகிறார்,முகம் திருப்புகிறார் தாஸன், சீதை தாஸனை எதிர்கொண்டு காண தைரியமின்றி குடிசைக்குள் சென்று மூங்கில் தட்டியை அடைத்து விடுகிறாள்.

நெடுநாள் பிரிவால் தாஸனால்  கொப்பளிக்கும் காமத்தை அடக்க முடியவில்லை,நடந்த தவறுக்கு நீதி கேட்கவோ தண்டிக்கவோ மனம் முற்படுவதில்லை,குடிசைக்குள்  சீதை மீது வெறியுடன் பாய்கிறார், சீதை இப்போது தாஸனை அந்நியன் போலவே கருதத் துவங்கிவிட்டாள்,  அவள் மேலாடையை கிழித்து  அடைய நினைக்கிறார் தாஸன்,
ஆசான் கோடாரியை எடுத்துக் கொண்டு சீதாவை காப்பாற்ற கதவை திறக்கவும்  சீதை  தாஸனை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு கதவைத் திறக்கவும் சரியாக உள்ளது, இருவரும் குற்றத்தில் பங்குதாரராகி கைகோர்ப்பதுடன் மழு நிறைகிறது.

இதில் ஆசான் என்ற வயது முதிர்ந்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த  நடிகர் பாலன் கே. நாயர் "ஒப்போல்" திரைப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர், பாலன் கே. நாயர் 1970 ஆம் ஆண்டு ஏ. வின்சென்ட் மாஸ்டர் இயக்கிய நிழலாட்டம் திரைப்படத்தில் அறிமுகமானார். மலையாள திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்  கோழிக்கோட்டில் மெக்கானிக்காக பணிபுரிந்தார் உலோக பட்டறையும்  வைத்திருந்தார், அவரின் உடற்கட்டு கடும் உழைப்பாளியின் உடற்கட்டு, சிறு கொழுப்பையும் கூட பார்க்க முடியாது,
கரடு முரடான தோற்றம் எதுவாயினும் அதை அனாசயமாக செய்தார், இந்த விவசாயி கதாபாத்திரத்திற்கு அப்படி பொருந்தியிருந்தார்,ஒரு காட்சியில் தம்பி மனைவி சீதையை விடை தந்து அனுப்பும் காட்சியில் ஒரு நூறடி உயர மரத்தை கோடாரியால் வெட்டி தனியே வீழ்த்துகிறார்,இப்படத்தில் சீதா கதாபாத்திரம் செய்த நடிகை ரதிதேவி மிக அற்புதமாக இந்த erotism ததும்பும் இளம் மனைவி கதாபாத்திரத்தைச் செய்தார்.  

படத்தில் ஷ்யாம் மாஸ்டர் இசையில் கவிஞர் பூவாச்சல் காதர் எழுதிய சுந்தரி சௌம்ய சுந்தரி என்ற பாடல் அற்புதமானது, உன்னி மேனன் பாடியது.

சிந்து சமவெளி ப்ளாஸ்டிக் என்றால் மழுவை ஸ்படிகம் என வகைப்படுத்தலாம், இன்று சர்ச்சைக்குரிய கருப்பொருளுக்காக ஒரு கல்ட் அந்தஸ்தை பெற்றுவிட்ட படம் மழு.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)