இந்தி சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தி சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Paanch | பாஞ்ச் | அனுராக் காஷ்யப்


"Evil is perhaps a child. It will play any game. Like the fictitious Characters in this film, the treacherous waters of felony and crime would need a solvent compassion. This film serves as a Psychological Revelation and a warning to the Society in which urban ambitions and estrangement are ever on the rise." |Anurag Kashyap|

கடந்த 6 வருடங்களுக்கு முன் "பாஞ்ச்" திரைப்படத்தை  பார்த்தும்  எழுதவில்லை,காரணம் அது கொண்டிருந்த கடினமான சரளமான மொழி, இப்போது தான் நல்ல பொருத்தமான சப்டைட்டில் உடன்  படத்தை  என்னால் ஊன்றி உள்வாங்கிப் பார்க்க முடிந்தது.

பொதுவாக, மிகைப்படுத்தப்பட்ட திரைப்படங்கள்,தடை செய்யப்பட்ட திரைப்படங்களை தேடிப் பார்க்கையில்  நாம்  ஏமாற்றமடைந்ததாக உணர்வோம். ஆனால் இது மாற்று குறையாத தங்கம், இந்தித் திரையுலகம் தயாரித்த மிகச் சிறந்த க்ரைம் Noir த்ரில்லர்களில் ஒன்று பாஞ்ச் திரைப்படம்.

சென்சார் இதை ஏன் தடை செய்தனர்? என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை,ஒருவேளை இந்த திரைப்படம் கல்ட் அந்தஸ்தை அடைந்து, இன்றைய இளைஞர்களை புகைபிடிக்கவும், குடித்து நேரத்தை வீணாக்குவதையும் தடுக்கும், என எண்ணி தடை செய்தார்கள் போலும், படத்தில் இளைஞர்களுக்கு செய்தி அத்தனை உறுதியாக சொல்லப்பட்டிருந்தது, 
நமக்கு அப்படி நிஜ பதைபதைப்பைத் தருகிறது என்றால் மிகையில்லை,

 புனேவில் 1976-77 ஆம் ஆண்டுகளில் ஜோஷி-அபியங்கர்  தொடர் கொலைகளை அடிப்படையாக கொண்டு உருவான  தரமான கலை திரைப்படம் பாஞ்ச், புனே எரவாடா சிறையில் 27 நவம்பர் 1983 ஆம் ஆண்டு ஒரே நாளில் நால்வர் தூக்கிலடப்பட்ட சம்பவம் அன்று நாட்டையை திரும்பிப் பார்க்க வைத்தது, 

நிஜக்கொலைகாரர்களான ராஜேந்திர ஜக்கல், திலீப் சுதர், சாந்தாராம் கன்ஹோஜி ஜக்தாப் மற்றும் முனாவர் ஹருன் ஷா என்ற நால்வருடன் சுவாரஸ்யம் கூட்ட வேண்டி ஷுய்லி என்ற ஒரு பெண் கதாபாத்திரத்தையும் சேர்த்து திரைக்கதை புனைந்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தில்  கேகே மேனன், தேஜஸ்வினி கோலாபுரி, ஆதித்ய ஸ்ரீவத்சவா,ஜாய் ஃபெர்ணான்டஸ், விஜய் மௌர்யா , சரத் சக்ஸேனா என அத்தனை பேரின் நடிப்பும் இயல்பாக அமைந்திருந்தது,   பாலிவுட் வரலாற்றில் இதுவரை உருவாக்கப்பட்ட சிறந்த இசை கோப்பு கொண்ட படம் இது , இசை விஷால் பரத்வாஜ், நம் சதுரங்கவேட்டை நடிகர் மற்றும் ஒளுப்பதிவாளர் நட்டியின்  மிகச்சிறந்த ஒளிப்பதிவில்  மிளிர்கிறது இப்படம், 

 பாஞ்ச் திரைப்படத்தின் கரு, Requiem for a Dream, Trainspotting ஆகியவற்றை நமக்கு  நினைவூட்டுகிறது,ஆனால் தனித்துவமான அடையாளத்துடன் மிளிர்கிறது .

பாஞ்ச் கதை மிகவும் எளிமையானது.  புனே கல்லூரி ஒன்றில் க்ரியேடிவ் ரைட்டிங் இளங்கலை படித்து முடித்து,  வேலை இல்லாத பட்டதாரிகள் ஐவர், இவர்களுக்கு ஒரு இசைக்குழு உண்டு அதன் பெயர் பேரசைட், அதாவது ஒட்டுண்ணி, இந்த பெயருக்கேற்ப ஐவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒட்டுண்ணியாகவே சகித்து வாழ்கின்றனர். இவர்கள் சொற்ப  சம்பளத்துக்காக இரவு மதுபான விடுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் Rock கச்சேரி நடத்துகின்றனர், 

பெரும்பாலான நேரம்  கஞ்ஜா சுருட்டி புகைக்கின்றனர், கஞ்ஜா மற்றும் மதுவுக்காக இவர்களின் சொற்ப சம்பளப் பணம்  முழுதும் செலவிடப்படுகின்றன, சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.  கல்லூரியில் இருந்து  வெளியேறியவர்கள் வேலை தேடுவதில் ஆர்வம் காட்டாமல் கஞ்சா ,மது குடிப்பதில் மட்டும் நேரம் செலவிடுகின்றனர், 

இந்த ஐவர் குழுவில் ஒரு பெண்ணும் அடக்கம் ,அவள் பெயர் ஷிய்லி, அவள் நித்யகல்யாணி, பணமிருக்கும் யாருடனும் நொடியில் ஐக்கியமாகி படுக்கையில் விருந்தாகிறாள், இவர்கள் தங்கியுள்ள மாடி அழுக்கு கோடவுனுக்கு தினமும் ஒரு பணக்கார இளைஞனை அழைத்து வந்து சுகிக்கிறாள், ஐவர் குழுவில் ஒருவனான பாண்டி அவளை ஒருதலையாக விரும்புகிறான், ஆனால் ஷிய்லி அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, அவள் கயமை, துரோகம், சரசலீலைகள் அத்தனையும் தெரிந்தும் பாண்டி அவளை நிபந்தனைகளின்றி விரும்புகிறான்.

இந்த ஐவருக்கும் தம்  பெற்றோர் உறவினர்களுடன்  எந்த தொடர்பும் இல்லை, இந்த மொட்டை மாடி கோடவுன் இவர்களின் பொதுவான நண்பனான நிர்மல் என்பவனுக்குச் சொந்தமானது, நிர்மலின் அப்பா உணவகம் நடத்துகிறார், மிகவும் கருமி ஆதலால் மகனுக்கு செலவுக்கு சல்லிப் பைசா தருவதில்லை, அவனும் இந்த இசைக்குழுவுக்கு தன்னார்வ தொண்டு செய்கிறான், வாடகை எதுவும் வாங்குவதில்லை. 

இவர்கள் ஐவரும் தம் ராக் இசைக்குழுவுக்கு ஒலி நாடா வெளியிடுவதற்கு ஆசைப்படுகின்றனர், லூக் (கேகே மேனன்) என்பவன் பரம மூர்க்கன்,அறைத்தலைவன்,அவன் அறைக்குள் யாருக்கும் அனுமதியில்லை , நிலையில்லாத எண்ண ஓட்டம் கொண்டவன்,கஞ்ஜா வாங்க பணம் இல்லை என்றால் கஞ்ஜா வியாபாரியையே தாக்கி கஞ்ஜா பொதியை திருடும் துணிவு கொண்டவன், பேருந்தில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கையில்
நடத்துனருடன் கைகலப்பு ஆகிவிட ,அவரின் கட்டணப்பையில் இருந்து திருடித் தப்புகிற துணிச்சல் காரன் லூக், நல்ல தரமான  இசை ஒலிநாடா வெளியிடுவதற்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் என அறிகையில் அதிர்கிறான்.

அவ்வளவு பணத்துக்கு என்ன செய்வது எங்கே திருடுவது என யோசிக்க,நண்பன் நிர்மலே வலிய வந்து தன்னை  கடத்தி அடைத்து  வைத்து  தன் பணக்கார அப்பாவிடம் கொழுத்த பணயத் தொகை  8 லட்சம் ரூபாயை கேட்கும் படி யோசனை தருகிறான், இத்தருணம்  வரை திரைப்படம் நிதானமான வேகத்தில் செல்கிறது.  

ஆனால் நிர்மலின் அப்பா தன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்துனர் தேஷ்பாண்டே உதவியை நாடுகையில்  சிக்கலாகிறது, இதனால் கோபமான லூக் நிர்மலின் அப்பாவை மிகவும் அசிங்கமாக திட்ட நிர்மலுக்கு  கோபம் மிகுந்து ஐவரை அறையை காலி செய்து வெளியே போக சொல்லுகிறான், அவன் மூர்க்கன் லூக்கை அசிங்கமாக திட்டி இரும்புக்கழியால் முதலில் தாக்கியது தான் தாமதம்,லூக் ஆத்திரம் முற்றி தன் நண்பன் நிர்மலை கண்மண் தெரியாமல் அந்த இரும்புக் கழியால் தாக்க, நிர்மல் முகம் சிதைந்து இறந்து விடுகிறான், அது முதல் நடக்கும் அனைத்தும் படபடப்பை கூட்டுகின்றன, இடியாப்ப சிக்கலாகின்றன, ஆப்பசைத்த குரங்கு போலாகின்றன.  

சடுதியில் நிகழ்ந்த கொலை மற்றொரு கொலையைக் கேட்கிறது, கொலையை மற்றொரு கொலையால் சமண் செய்ய முடியாது என ஐவர் கடைசி வரை உணருவதில்லை, ஒரு கொலையை மறைக்க அவர்கள் இன்னொரு கொலை செய்ய ,திமு திமுவென பத்து கொலைகள் அரங்கேறிவிடுகின்றன,  கொலையை மூடி மறைக்க இறங்கும்போது நிலைமை மேலும் மோசமாகின்றன.  

இறுதியில்,இவர்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் நிர்மலின் தந்தையைக் கொன்று கொள்ளையடித்த பெரும்பணம் 9 லட்சம் ரூபாயை தானே முழுதாக  அனுபவிக்க நினைத்து நம்பிக்கை துரோகம் செய்து கொலை செய்கின்றனர், 

கடைசியில் ஐவரில் எஞ்சியிருந்த முர்கி போலீஸால் சுட்டுக்கொல்லப்படுகிறான், ஷிய்லி பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடியவள் 8 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் போலீஸில் பிடிபடுவதுடன் பாஞ்ச் நிறைகிறது. 

 பாஞ்ச் திரைப்படம் யூட்யூப் மற்றும் சில் OTTல் உள்ளது,கே கே மேனனின் அபாரமான ஆற்றல்மிக்க நடிப்பிற்காகவும் தேஜஸ்வினி கோலாபுரியின் அசாதாரணமான நடிப்பிற்காகவும் பாஞ்ச் என்றும் நினைவுகூறப்படும்.  
ஃபைட் கிளப் திரைப்படத்தில் புகழ்பெற்ற டைலர் டைர்டனாக பிராட் பிட்டை நினைவுபடுத்தும் வகையில் கேகே மேனனின் நடிப்பு அமைந்துள்ளது.  

விஷால் பரத்வாஜின் இசை இப்படத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும், 
பாஞ்ச்  பாலிவுட்டின் சீரிய முயற்சியாகும், நேர்த்தியான இயக்கத்தில் புலிப்பாய்ச்சல் பாய்ந்திருந்தார் அனுராக் காஷ்யப்,  பொருத்தமான ராக் இசையை திரைப்படத்திற்கு புனைந்து பயன்படுத்தி நம்பகத்தன்மை கூட்டியிருந்தார்.

திரைப்படத்தில் தரமான மூன்று பாடல்கள்  உள்ளன, ஒன்று "க்யா தின் க்யா ராத்" என்ற Bluesy பாணி இசைக்கோர்வை,1940களின் கிளாசிக் ஜாஸை நமக்கு நினைவூட்டும், 
 
Psychedelic கருப்பொருளான "து ஜா மாத்" நமக்கு Cobain மற்றும் ராக் பாணி இசைக்கோர்வையை நினைவுபடுத்தும் .

"குதா கே லியே" இது Rock on பாணி இசைக்கோர்வை.

 கே கே மேனன் "லூக்" ஆக அத்தனை குருரதையுடன் கூடிய மிடுக்கனாக  தோன்றியுள்ளார், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா  "முர்கி" கதாபாத்திரத்தில் மிகவும் ஈர்க்கிறார் , "ஜாய்" ஆக ஜாய் பெர்னாண்டஸ் ,  "பாண்டி"யாக விஜய் மவுரியா மற்றும் conniving நித்யகல்யாணி கதாபாத்திரத்தில்  தேஜஸ்வினி கோலாபுரி என அபாரமான casting கொண்டுள்ளது பாஞ்ச்.  சரத் சக்சேனா போலீஸ் இன்ஸ்பெக்டராக தனது சிறிய பாத்திரத்திலும் வசீகரிக்கிறார்.

இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு,  கன்னி முயற்சி பாஞ்ச்.முழுக்க  அவருடைய புது முயற்சி. அவரே தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பரிமளித்திருக்கிறார், Black Friday (2004), Dev.D (2009),Gulaal (2009),That Girl in Yellow Boots (2011),Gangs of Wasseypur (2012),Ugly (2014),Raman Raghav 2.0 (2016)
போன்ற தரவரிசையில் முன்னோடியான சினிமா "பாஞ்ச் " என்றால் மிகையில்லை.

சீரியஸ் மேன் | 2020 | நவாஸுதீன் சித்திக்கி | நாசர் |


சீரியஸ்மேன் (2020 )

NIFR ல் காரியதரிசியாக பணிபுரியும் அய்யன் மணி மகாராஷ்டிராவின் உள்ளடங்கிய korti என்ற கிராமத்தில்  ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர், 

இவரது மேலதிகாரி வானசாஸ்திர விஞ்ஞானி அரவிந்த் ஆச்சர்யா, அவர் இப்போது வேற்றுகிரகவாசிகள் பற்றி விரிவான ஆராய்ச்சியை செய்கிறார், அவருக்கு அழகிய பெண் இளம் விஞ்ஞானியிடம் சபலம் உள்ளது,  ஆச்சர்யாவை கிட்டத்தட்ட வேவு பார்க்கிறார் அய்யன்மணி, அவரின் dictations மற்றும் attitude ஐ   அப்படியே பிரதியெடுத்து தன் மகன்  ஆதியை ஒரு child prodigy போன்ற பிம்பத்தை கட்டமைத்து மும்பை தாராவியின் 90 வருட பழமையான chawl ஒன்றில் வாடகைக்கு இருந்தபடி வளர்க்கிறார், 

10 வயது சிறுவன் மீது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்ட அளவு கடந்த அறிவு பாரம் ,அது சிறுவன் ஆதிக்கும் அய்யன் மணிக்கும் அவர் மனைவிக்கும் எப்படி எதிர்வினையாற்றுகிறது ? என்பதை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இயக்குனர் சுதிர் மிஸ்ரா இந்திய சினிமாவின் முக்கியமான படைப்பாளி,  இவரின் முந்தைய படங்களான Hazaaron Khwaishein Aisi , Inkaar முக்கியமான படைப்புகள் அந்த வரிசையில் இந்த படத்தையும் வைக்கலாம்.

நவாஸுதீன் சித்திக்கி அய்யன் மணி என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து போராடி மேலே வரத் துடிக்கும் முதல் தலைமுறை கல்வியறிவு பெற்ற குடும்பத் தலைவனாக  அற்புதமாக நடித்துள்ளார், 

நம் நாசர் National Institute of Fundamental Research அரசு நிறுவனத்தின் வானசாஸ்திர விஞ்ஞானியாக அட்டகாசமாக பொருந்துகிறார், சிறிய பெண் சபலம் கொண்ட mediocre விஞ்ஞானி கதாபாத்திரம், இதை அழகாகச் செய்துள்ளார்.

இவர் அய்யன் மணியை நுணுக்கமான ஆங்கில கெட்ட வார்த்தைகளால் திட்டுகையில் அவற்றை அப்படியே பிரதி எடுத்து word building செய்து தன் மகனை கொம்பு சீவி விட்டு  தயார்செய்து கண்காட்சிகள் நடத்துகிறார் அய்யன் மணி, தனக்கும் தன் மகனுக்கும் ஆன இந்த ரகசிய கல்வி பரிமாற்றங்களை தன் பிரிய மனைவிக்கு கூட சொல்வதில்லை அய்யன்மணி, அத்தனையையும் அந்த 200 சதுர அடி chawl ல் இருந்தபடி நடத்துகிறார், தன் மகனின் அறிவை ஊதிப் பெருக்க தன் அரசு சம்பளம் மொத்தத்தையும் செலவு செய்கிறார்.

தன் தாழ்வு மனப்பான்மையை துடைத்தெரிய அய்யன்மணி அரவிந்த் ஆச்சர்யாவின் proxy போலவே நடந்து கொள்ளும் இடங்கள் எல்லாம் அற்புதமானவை.

கலவிக்காட்சிகள் உள்ளதால் இந்தப்படம் வயது வந்தோருக்கு மட்டுமானது, 

அய்யன் மணி தன் ஒடுக்கப்பட்ட குடும்பத்திற்கு கல்வியும் உரிமையும் எத்தனை முக்கியமானது? என விஞ்ஞானி அரவிந்த் ஆச்சார்யாவிடம் விளக்கும் இடம் அற்புதமானது,

"She is too healthy for a farmer girl"

அது ஒரு சர்வதேச விருது பெற்ற கருப்புவெள்ளைப் புகைப்படம், அந்த படத்திற்கு வலுவான ஒரு பின்கதை உள்ளது, அந்த படத்தில் உள்ளது கர்ப்பிணித் தாயார்,மற்றும் அவரது பத்து வயது மகன் , 

அந்த மகன் தான் அய்யன் மணி, அவன் அம்மாவிற்கு இந்த புகைப்படமாவது  இந்த உலகப்புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ராபர்ட் அடிங்டனுக்கு திருப்தி அளிக்க வேண்டும், தன் கணவனுக்கு  பத்தாயிரம் ரூபாய் பணம் கிடைக்க வேண்டும் என்ற பதட்டம் , 

கடந்த இரு வாரமாக புகைப்படத்துக்கு வேண்டிய வறிய தோற்றத்துக்காக ஒட்ட ஒட்ட  பட்டினி இருந்து ஐந்து கிலோ எடை குறைத்து இப்படி புகைப்படத்திற்கு முன் நிற்கிறார், 

அவர் வேண்டியது போலவே புகைப்படத்துக்கு கோபன்ஹாகன் புகைப்பட திருவிழாவில் முதல் பரிசு கிடைத்து இரண்டு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை கிடைக்கவே இவர் அப்பாவுக்கு ராபர்ட் இருபதாயிரம் ரூபாய் தருகிறார், ஆனால் இவர் அம்மா ஊட்டச்சத்து குறைபாட்டால் பிரசவத்தில் மரிக்கிறார்,
பிறந்த ஆண் மகவும் எட்டு மணி நேரத்தில் இறந்து விடுகிறது, 

அந்த இருபதாயிரம் ரூபாய்  பணம் கண்ணை விற்று சித்திரம் வாங்கியது போல ஆகிவிட்டது, இந்த தகிப்பு எல்லாம் சேர்ந்து அய்யன் மணியை இப்படி தன் இலக்கை அடைய எதையும் செய்யும் நிலைக்கு தள்ளியது என்பதை அறிகிறோம்,உறைகிறோம்.

#சீரியஸ்_மேன்,#நவாஸுதீன்_சித்திக்கி,#நாசர்

முள்ளும் மலரும் | 1978 | மொழி மாற்ற முயற்சிகள் ஒரு ஆய்வு

முள்ளும் மலரும்(1978), வேனலில் ஒரு மழா( 1979), ப்யாரி பெஹனா(1985) மூன்று வடிவத்தைப் பார்த்தபின் முள்ளும் மலரும் தான் பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது, தமிழில் இருந்த அழகியல் , யதார்த்தமான எளிமை, க்ளாசிக் தன்மை, subtleness, minimalism என மீள் படைப்புகளில் பின்பற்றப்படாதது நம் துர்அதிர்ஷ்டம்.

முள்ளும் மலரும் தான் இதில் சந்தேகமின்றி மாஸ்டர்பீஸ், காளி கதாபாத்திரம் செய்த மூவரில் ரஜினி அற்புதமான நடிகர், அவர் தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிக்க வேண்டி தன்னை விட்டுக் கொடுத்து விட்டவர்,"சார்,ரெண்டு கையும் ,ரெண்டு காலும் போனாக்கூட காளிங்கறவன் பொளச்சுக்குவான் சார்,கெட்ட பய சார் அவன் " என்னும் வசனத்தை அவர் பேசுகையில் தான் அதன் வீரியம் புரிகிறது.

மலையாளத்தில் காளி கதாபாத்திரத்தில் மதுவிற்கு பதிலாக காளி கதாபாத்திரத்தில் ஜெயனை நடிக்க வைத்திருக்கலாம் இயக்குனர், மிதுன் நடிப்பும் காளி வேடத்தில் நன்றாக இருந்தது,ஆனால் அந்த தங்கைப் பாசத்தை, பாசத்தின் வெளிப்பாடான கர்வத்தை கண்ணில் தேக்கி வைத்து பிரதிபலித்தவர் ரஜினி மட்டுமே.

மலையாள வடிவத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் மது தன் சிறப்பான நடிப்பால் வாசு என்ற பாத்திரத்தை செய்திருந்தாலும், அவரிடம் அந்த வேகம்,இளமை ,குறும்பு,தீ இல்லை. 
படாபட் ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தனர்,அப்பாத்திரம் மேலும் சிறப்புற்றது.

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடல் எண்டே ராஜ்ய கொட்டாரத்தில் மதிலுகளில்லா என உருவம் பெற்றது (என் அரண்மனைக்கு சுவர்கள் இல்லை)இப்பாடலை தாசேட்டா பாடினார்.

ராமன் ஆண்டாலும் பாட்டை தமிழில் எஸ்பிபி பாடினார்,
https://youtu.be/tweD2O2WWT8

அதன் இந்தி வடிவ பாடலை கிஷோர் தா பாடியுள்ளார், 
https://youtu.be/8dCQf91cffA

மலையாள படத்தின் எல்லா பாடல்களையும் கவிஞர் ஸ்ரீகுமாரன் தம்பியே எழுதினார், அவர் இப்படத்தின் இயக்குனரும் கூட, படத்தின் ஒளிப்பதிவு பழம்பெரும் ஒளிப்பதிவு இயக்குனர் கே.ஏ.விஜயம்

மூன்று படத்திலுமே ஊட்டி க்ளென்மார்கன் விஞ்ச் ஸ்டேஷனில் தான் காளியின் பணியிடமாக கதைக்களம் அமைத்திருந்தனர்.

இந்தியில் காளியின் பெயர் காளிச்சரண்,மிதுன் சக்ரபொர்த்தி தான் காளிச்சரண்,படாபட் வேடத்தில் பத்மினி கோலாபுரி நடித்தார்.

முள்ளும் மலரும் படத்தில் ரஜினி,படாபட்டுக்கு டூயட் இல்லை,அது குரங்குகள் குடித்துவிட்டு ஆடுவது போல இருக்கும் என்பதால் டூயட் வைப்பதில் உடன்பாடு இல்லை என்றார் இயக்குனர் மகேந்திரன், மலையாள வடிவமான வேனலில் ஒரு மழா படத்தில் டூயட் வைத்தனர், https://youtu.be/jheuGwFqGn0

ப்யாரி பெஹனா படத்திலும் டூயட் வைத்துள்ளனர், 
தமிழ் வடிவத்தில் காளியை சீண்ட அவன் கைக்கடிகாரத்தை எடுத்து படாபட் ரவிக்கைக்குள் போட்டுக்கொள்வார், இந்தியில் அக்காட்சியில் மாற்றமில்லை,
https://youtu.be/JlXPTiBrF5o
மலையாளத்தில் கைக்கடிகாரத்துக்குப் பதில் சாவிக்கொத்தாக மாற்றியிருந்தனர்.

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலின் இந்தி வடிவம் இது .பாடலை ஆஷா போன்ஸ்லே,கிஷோர்தா பாடினார்கள்.
https://m.youtube.com/watch?v=whUdIlliTqY&feature=share

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலின் மலையாள வடிவம் இது அயலா பொரிச்சதுண்டு என வடிவம் பெற்றது .பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.
https://youtu.be/8BE3quMJkzI

முள்ளும் மலரும் படத்தின் இந்தி வடிவத்தில்  வடக்கில்  ராக்கி கட்டும் திருவிழா பிரசித்தம் என்பதால் ராக்கி திருவிழா பாடலை வைத்தனர்,விபத்தில் அடிபட்ட கையைக் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வெளியூர் சென்ற அண்ணன் காளி இதில் தனியனாக ரயிலில் வந்து இறங்குகிறான்,கருப்பு போர்வை போர்த்திய அண்ணனைக் கண்டு ஓடுகிறாள் தங்கை தன்வி அஸ்மி.
https://m.youtube.com/watch?v=UtAZPwX_TLM&feature=share

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் பாடலின் மலையாள வடிவத்தில் , பூஜைக்கொருங்கி நிற்கும் பொன்னம்பல மேடு என்ற பாடலாக உருவானது, தாசேட்டா பாடியது,தமிழில் சரத்பாபு ஷோபா மற்றும் தோழியரை ஜீப்பில் வைத்து ஓட்டுவார்,இதில் நாயகி ரோஜாரமணி நாயகன் ஜெயன் ஜீப் ஓட்டுவதை வேடிக்கை பார்க்கிறாள்.
https://youtu.be/2lURwL9AWVE

அடி பெண்ணே!!! பாடலின் மலையாள வடிவத்தில் ஷோபா நடித்த தங்கை கதாபாத்திரத்தில் மலையாளத்தில் ரோஜாரமணி நடித்தார், இவர் கோகிலா படத்தில் பணிப்பெண் கதாபாத்திரம் செய்தவர், சரத்பாபு நடித்த லாபாயிண்ட் இஞ்சினியர் கதாபாத்திரத்தில் ஜெயன்,

இந்த ஏது பந்தல் கண்டாலும் அது கல்யாண பந்தல் பாடலைப் பாடியது
வாணிஜெயராம் அவர்கள்.
https://youtu.be/jheuGwFqGn0

மலையாளத்தில் இசை எம்.எஸ்.வி.அவர்கள், தமிழில் படாபட் ஜெயலட்சுமிக்கும் ரஜினிக்கும் டூயட் கிடையாது, இதில் உண்டு,படாபட் வேடத்தில் ஸ்ரீவித்யா நடித்தார், நிறைவாகவே இருந்தது.

இந்தியில் இசை பப்பி லஹரி, இதில் சிறு வயது காளி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார்.சரத்பாபு கதாபாத்திரத்தில் வினோத் மெஹ்ரா நடித்திருந்தார்,இவருக்கு இந்தி வடிவத்தில்  கோட் மாட்டி விட்டனர்.

இப்படத்தின் இசையில் இசைஞானி இசையே மாஸ்டர் பீஸ், எம்எஸ்வி அவர்கள் பழைய மெட்டுகள் எதையும் உபயோகிக்கவில்லை, அனைத்து பாடல்களையும் புதிதாகவே படைத்திருந்தார்.பின்னணி இசையையும் அவர் தன் பாணியில் தான் தந்திருந்தார்,1985 ஆம் ஆண்டு வந்த இந்தி வடிவத்தின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தன,ஹிட் அடித்தன,ஆனால் பின்னணி இசை மனதில் நிற்கவில்லை, 

ஒளிப்பதிவில் பாலுமகேந்திரா அவர்கள் அழகியல் என்றால் என்ன என்பதை மெய்ப்படுத்திக் காட்டினார், நேச்சுரல் ஒளியமைப்பில் ஜாலங்கள் செய்திருந்தார், மலையாளத்தில் வி.ஏ. விஜயம் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது, இந்தியில் பக்கா கமர்ஷியல் சினிமாவுக்கான ஒளிப்பதிவாக மாற்றி செய்திருந்தனர்.

மூன்று படங்களிலும் அந்த மலினமான மளிகைக் கடை காமெடி ட்ராக் தவறாமல் இடம் பெற்றது, இந்திப்படத்தில் வீரு தேவ்கன் ஸ்டன்ட் மாஸ்டர் என்பதால் சண்டைகள் அதிகமாக இருந்தது.

இந்தி வடிவத்தில் பெயர் போடுகையில் ஒரு பாடல் சேர்த்திருந்தனர், தங்கைக்கொரு அண்ணனின் பாட்டு அது, பாடியது எஸ்.பி.பி அவர்கள்.
https://youtu.be/M7t2VlLzDNQ

கடைசியாக இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று இயக்குனர் மகேந்திரனின் பெருந்தன்மை, முள்ளும் மலரும் படத்தின் கதைக்கான க்ரெடிட்டை உமாசந்திரனுக்கு தந்து நல்ல ஒரு துவக்கத்தை ஏற்படுத்தினார், அது மலையாளத்திலும், இந்தியிலும் கூட அவருக்கு மூலக்கதைக்கான க்ரெடிட்டை பெற்றுத் தந்தது.

#முள்ளும்_மலரும்,#வேணலில்_ஒரு_மழா,#ப்யாரி_பெஹனா,#ரஜினி,#மது,#ஜிதேந்திரா,#ரீமேக்,#விஞ்ச்,#க்ளென்_மார்கன்,#ஊட்டி,#மகேந்திரன்,#இசைஞானி,#எம்எஸ்வி,#பாலு_மகேந்திரா

Mr.X from Bombay" (1964 ) திரைப்படத்தில் வரும் "khoobsurat haseena" பாடல் பற்றி

"Mr.X from Bombay"  (1964 ) திரைப்படத்தில் வரும் "khoobsurat haseena"  கிஷோர்தா,லதாஜி பாடி, நாயகி கும்குமுடன்  நடித்த  அற்புதமான க்ளாசிக் பாடல்,இப்பாடலின் இசை லக்‌ஷ்மிகாந்த் ப்யாரிலால்,பாடல் வரிகள் கவிஞர் ஆனந்த் பக்‌ஷி.


இப்பாடலை ஷாரூகான் நடித்த பாஸிகர் படத்தில் "Aye Mere Humsafar" என மிக அழகாக மீள் உருவாக்கம் செய்திருந்தார் அனுமாலிக்,பாடல் வரிகள் Gauhar Kanpuri, பாடியது அல்கா யக்னிக் மற்றும் வினோத் ரத்தோட்.

இன்று இது போல ரசனையுடன் மீள் உருவாக்கம் செய்யக்கூட இசையமைப்பாளர்கள் இல்லை ,இரண்டு வருடம் கீபோர்ட் படித்துவிட்டு பத்து லட்சம் முதலீட்டில் பத்தடிக்கு பத்தடி ஸ்டுடியோ நிர்மானித்து விட்டால் இசையமைப்பாளராம்.  

கிஷோர் தா அற்புதமான பாடகர், கதாநாயகராக ,துணை நடிகராக  அவர் எத்தனையோ படங்களில் நடித்தும் உள்ளார், ஆனால் தான் எதில் பாண்டத்யம் பெற்றிருக்கிறோம் என உணர்ந்திருந்த்தால் நடிப்பிற்கு முழுக்கு போட்டு கடைசி வரை பாடி வந்தார்.
https://indianexpress.com/article/entertainment/music/kishore-kumar-the-singer-who-hated-acting/

#கிஷோர்_தா,#Mr_from_Bombay,#பாஸிகர்,#baazigar,#Aye_Mere_Humsafar
#கிஷோர்_தா,#Mr_from_Bombay,#பாஸிகர்,#baazigar,#Aye_Mere_Humsafar

மௌனராகம் தமிழ் மற்றும் மலினமான இந்தி ஆக்கம் ஒப்பீடு

இந்த காணொளிகளை இங்கே காணவும்


மௌனராகம் படத்தில் வரும் மிஸ்டர் சந்திரமௌலி காட்சி இந்தியில் மிஸ்டர் துர்காபிரசாத் என்று மாற்றியிருக்கிறனர், 

இதில் கார்த்திக் கதாபாத்திரத்தில் chunky pande என்ற இந்தி நடிகர் பஃபூன் போல ஈயடிச்சான் காப்பி அடித்து அந்த கதாபாத்திரத்தை சொதப்பியிருந்தார், 

இங்கே  காஃபி சாப்பிட அழைப்பதை அங்கே டீ சாப்பிட அழைப்பதாக மாற்றினர், மௌனராகம் படத்தின் காஃபி ஷாப் tic tac restaurant  முன்பு இஸ்பஹானி சென்டர் இருந்த இடத்தில் இருந்தது, இன்று ஜெமினி மேம்பாலம் இறக்கத்தில் gn chetty சாலையில் உள்ளது, 

இயக்குனர் மணிரத்னம் தன் ஸ்க்ரிப்டில் திவ்யாவின் அப்பாவுக்கு பெயர் எதுவும் வைக்காமல் இருக்க, ரா.சங்கரன் அவர்கள் நடித்த அன்று தன் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என கேட்க , 

அப்போது இந்த பெயர் சூட்டப்பட்டதாம்,இது படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் பெயர், அந்த neck of the momentல் அவர்களுக்குள் இந்த பெயரை விவாதித்து சூட்டியதாக ரா.சங்கரன் அவர்கள்,சாய் வித் சித்ரா பேட்டியில் பகிர்ந்தார்.

நடிகர் கார்த்திக் ,நடிகை ரேவதி இந்த கதாபாத்திரத்தை எப்படி சிறப்புற உயர்வாக செய்திருக்கின்றனர் என்று புரிந்து கொள்ள  kasak இந்தி வடிவத்தின் இதே காட்சியை இங்கே இணைத்துள்ளேன், நடிப்பும் கதாபாத்திரமாக transform ஆவதும் சுலபமில்லை பாருங்கள்,ஏதோ picnic போவது போல இந்தியில் இந்த படத்தை எடுத்துள்ளனர்.

காப்புரிமை வாங்கிய reference material கையில் லட்டு போல இருந்தாலும் சிலரால் perfection தரமுடியாது என்பதற்கு உதாரணம் இது

#மௌன_ராகம்,#kasak,#கார்த்திக்,#ரேவதி,#மிஸ்டர்_சந்திரமௌலி,#மணிரத்னம்,#பிசி_ஸ்ரீராம்

பூவிழி வாசலிலே | பூவினு புதிய பூந்தென்னல் | பசிவடி பிராணம் | இயக்குனர் ஃபாஸில் | ஒப்பீடுகள்

பூவிழி வாசலிலே (1987) திரைப்படம் நம்மால் மறக்கமுடியாத த்ரில்லர் திரைப்படம், 

அதன் மூலப் படைப்பான "பூவின்னு புதிய பூந்தென்னல் " (1986) திரைப்படம் தோல்வியாக அமைந்தது, 

இயக்குனர் ஃபாஸில் தோல்வியை கண்டு துவளாமல் அந்த படைப்பை மெருகேற்றி மாற்றி பிற மொழிகளில் வெற்றி பெறுவதில் வித்தகர்,இப்படி என்னென்னும் கண்ணேட்டன்டெ படத்தை வருஷம் 16 என இயக்கியது வரலாறு.

தமிழில்  சத்யராஜ் நடித்த வேடத்தில் மலையாளத்தில் மம்மூட்டியும், ரகுவரன் வேடத்தில் சுரேஷ்கோபியும், கார்த்திகா வேடத்தில் நதியாவும் T.S.ராகவேந்தர்  நடித்த வேடத்தில் திலகனும் நடித்தனர், மம்மூட்டியின் ஆவனாழி திரைப்படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு திரைப்படமாக எடுக்கையில் சத்யராஜ் எப்படி இன்ஸ்பெக்டர் "கரடி "பலராமாக மனதில் நின்று விட்டாரோ , அது போல பூவிழி வாசலிலே திரைப்படத்தில் ஜீவாவாக  மம்மூட்டி செய்த கிரண் என்ற அந்த குடிகார ஓவியர் வேடத்தில் சத்யராஜ் பிரமாதப்படுத்திவிட்டார், 

சுஜீதா எனக்கு மிகவும் பிடித்த நடிகை, அத்தனை அழகாக இந்த  செவிப்புலன், பேச்சுபுலனற்ற மூன்று வயது சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார்,இவரே மலையாளம்,தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்திருந்தார்.

அதே போலவே நடிகர் பாப் ஆன்டனி வில்லனின் கையாள்  கதாபாத்திரத்தில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார், வில்லனுக்கு இவர் கதாபாத்திரத்தால் பலமா? இவர் கதாபாத்திரத்தால் வில்லனுக்கு பலமா? என்று வியப்பான வில்லன் கையாள் கதாபாத்திரம், காலஞ்சென்ற ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டன் இவருக்கு வைத்த backlighting, frames எல்லாம் அலாதியானவை, உலகத்தரமானவை, anton chigurh  போல இருக்கும் , பயத்தில் குடலை கலக்கி விடும் , பாப் ஆண்டனி வில்லன் கையாளாக  மலையாளம்,தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தியில் நடித்திருந்தார்.

மலையாள வடிவம் பூவின்னு புதிய பூத்தென்னல் இறுதிக்காட்சி பார்க்கையில் நமக்கு  கண்கள் குளமாகிவிடும், இதில் நீர் தான் theme, பகல் வெளிச்சம், கொச்சின் துறைமுகத்தில் நீர்மேல் அமைந்த சரக்கு ரயிலடி தண்டவாளத்தில் இந்த இறுதிக் காட்சியை படமாக்கியிருந்தனர், மம்மூட்டி இறுதியில்  குழந்தையை காப்பாற்ற  நடந்த சண்டையில் குழந்தையை கல்லைக் கட்டி நீரில் எரிய முனையும் பாப் ஆண்டனியை  leg kick செய்து கத்தியை திருப்பி இறக்கி கொன்றுவிடுவார், சுரேஷ் கோபி மம்முட்டியை நெஞ்சில் சுடுவார், அடுத்து குழந்தைக்கு குறி வைக்கையில் மம்முட்டி கைகளால் தடுத்து கெஞ்சியபடியே குழந்தையை மறைத்தபடி முன்னேறுவார், அப்போது மூன்று முறை அடுத்தடுத்து சுரேஷ் கோபியால் சுடப்படுவார், இருந்தும் சுரேஷ்கோபியின் குரல்வளையை பற்றி நெறித்து தூக்கி கொன்று தண்டவாளத்தில் வீசி தானும் விழுந்து இறப்பார், குழந்தை பென்னி வந்து அவருக்கு முத்தமிட்டு எழுப்பி தோற்பான், நதியா வந்து குழந்தையை அணைப்பதுடன் படம் முடியும், இந்த நாயகன் சாகும் சோக முடிவு படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது, அந்த ஓணத்திற்கு ஆறுபடங்கள் வெளியானதில்  ஆவனாழி மற்றும் நன்னி வீண்டும் வருக மட்டுமே வெற்றி பெற்றன, இது தயாரிப்பாளர் ஸ்வர்கசித்ரா அப்பச்சனின் முதல் திரைப்படம்  கூட,ஆனால் இட்ட முதலைக் கூட வசூலிக்கவில்லை.
ஆனால் தமிழ் வடிவமான பூவிழி வாசலிலே 1987 ஆம் ஆண்டு வெளியாகி அவ்வருடத்தின் வசூல் சாதனை திரைப்படமாக அமைந்தது.

இந்த ஐந்து இந்திய மொழி வடிவங்களில் இசைஞானி தமிழுக்கு  மட்டும் இசையமைத்தார், நடிகர் ரகுவரன் இந்த ஆனந்த் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனித்துவமான உடல்மொழியுடன் செய்தார், தனக்கு துரோகம் செய்து தன் மேனேஜருடன் EMA உறவில் இருந்த மனைவியைக் கொன்று, மேனேஜர் வேணுவைக் கொன்று, அந்த கொலையை பார்த்த விதவைத் தாயைக் கொன்று அந்த குழந்தையையும் கொல்லத் தேடுகிற சைக்கோ வில்லன் பிஸினஸ்மேன் கதாபாத்திரம், ஆப்பசைத்த குரங்கு போன்ற அவலத்தை அத்தனை தனித்துவமாக செய்திருந்தார் நடிகர் ரகுவரன், இந்தியில் இவர் வேடத்தில் அனுபம் கெர் நடித்தார்.

அதே போலவே இந்த குழந்தையை காப்பாற்றும் நாயகனின் பின்னணியும் சுவாரசியமானது,அத்தனை அழுத்தமான பாத்திர படைப்பு, அர்த்தமிக்கது,  சத்யராஜ் மனைவி சுசீலா அவரது முறைப்பெண், பால்யத்தில் இருந்தே சிறிய மனப்பிசகு உண்டு, வீட்டார் மருத்துவ  உதவி  தராமல்  மணமுடித்தால் சரியாகும் என்று  முறைமாப்பிள்ளை இவருக்கு மணமுடிந்து வைக்க மனைவி கருவுற்று குழந்தை பெற்றும் மனநிலை சரியாகாமல் மேலும் முற்றி, குழந்தையின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்று தானும் தூக்கு மாட்டி இறக்கிறார், சத்யராஜ் அது முதல் மொடா குடிகாரனாகிறார் , நாயகனின் முன்கதையை வசனங்கள் மூலமே நிறுவுகிறார் இயக்குனர் ,அதே போல வில்லனின் தரப்பு நியாயத்தை வசனங்கள் மூலமே நிறுவுகிறார் இயக்குனர்.

நாயகர்கள் சத்யராஜ் துவங்கி அனைவரும்  standard நிறுவனத்தின் Gazel என்ற மாப்பிள்ளை அழைப்பு கார் வைத்திருந்தனர், அதன் சக்கரத்தின் hub cover அடிக்கடி கழன்று விடும், அதை அடிக்கடி முடுக்கி தட்டி மூடவேண்டும், இல்லை என்றால் கார் ignition இயங்காது, பாதுகாப்பு அம்சமாக இந்த அவல feature standard நிறுவனத்தின் gazel கார்களில் இருந்ததா ? அல்லது திரைக்கதையில் detail ற்கு வேண்டி சேர்த்ததா? என தெரியவில்லை, அதே போல தமிழில் சவ ஊர்வலம் போகையில் தலையில் தோல் தொப்பி,தோல் கவச உடை, தோல் காலணி அணிந்து ஒருவர் கொள்ளிச் சட்டியுடன் நடந்து போவதை காட்டி அன்று கூடுதலாக திகில் கூட்டியிருப்பார்கள், அப்படி இந்தியாவில் எந்த ஊரில் சவ ஊர்வலம் நடக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை, இணைப்பு படம் பார்க்க.

மலையாளத்தில் சுரேஷ் கோபியிடம் இல்லாத அந்த வில்லத்தனம் ரகுவரனிடம் காணலாம், இரு உயரமான வில்லன்கள் என்பதால் தனக்கு clutches வைத்து சற்றே விந்தி நடந்து விழிகளாலேயே உடல்மொழியாலே வசனங்களாலேயே அப்படி மிரட்டுவார், இவர் போல யாரும்  பில்லியர்ட்ஸ் மேஜையில் நளினமாக தோன்றவில்லை,ரகுவரன் தெலுங்கு வடிவமான பசிவடி பிராணம் படத்திலும் தோன்றினார்.

பசிவடி பிராணம் (குழந்தையின் உயிர் ) திரைப்படம்  ஏழு மொழிகளிலும் வெளியான இந்த படைப்பின் உச்ச சாதனையை செய்த படைப்பாகும், பசிவடி பிராணம் திரைப்படம்  1987 ஆம் ஆண்டு வெளியானது, வெளியான   திரையரங்குகளில் ₹5 கோடிக்கு மேல் வசூலித்தது.

பசிவடி பிராணம் நடிகர்  சிரஞ்சீவியின் முதல் வெள்ளி விழா வெற்றிப் படமாக அமைந்தது.  திருப்பதியில் தினம் ஐந்து தினசரி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது,  இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை,பிரதாப் தியேட்டரில் 175 நாட்கள் ஓடியது.  அந்நாட்களில், 

ஆந்திர மாநில அரசு ஸ்லாப் முறையை அறிமுகப்படுத்தியதால், ஒரு தெலுங்கு திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் நான்கு தினசரி காட்சிகளுடன் ஓடுவது மிகவும் கடினமாக இருந்தது.  

ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் பசிவடி பிராணம்.  ரஷ்யாவில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்தது, ரஷ்யாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, "ராஜ்கபூரின் திரைப்படங்கள்" மற்றும் மிதுன் சக்ரவர்த்தியின் "டிஸ்கோ டான்சர் (1982)" ஆகியவற்றிற்குப் பிறகு, ரஷ்யாவில் வெற்றி பெற்ற இந்தியத் திரைப்படம் பசிவடி பிராணம்.

"பூவின்னு புதிய பூத்தென்னல் " திரைப்படம் தவிர்த்து அத்தனை படைப்புகளிலும் நாயகன் இறுதியில்  மடிவதில்லை, 

இப்படம் வங்கதேசத்தில் Khotipuron என்றும், சிங்களத்தில் Veda Barinam Vedak Nehe 1991 என்றும் ஆறு வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் மலையாளத் திரைப்படமாகவும்,மலையாளத்தில் இருந்து ரஷ்ய மொழிக்கு  மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.

தமிழில் பாடகர் மனோ அறிமுகமான படம் இது , அண்ணே அண்ணே பாடல் பாடியவர் என அடைப்புகுறி அடைமொழி இருந்தது, நிழல்கள் ரவிக்கு நிழல்கல் ரவி என டைட்டில் எழுதியிருந்தனர்.

தமிழ் வடிவத்தின் இறுதி சண்டைக்காட்சியை இரவில் அமைத்திருந்தார் ஃபாஸில், இதற்கு நெருப்பு theme, ரகுவரன் நெருப்பில் விழுந்து இறப்பார், சத்யராஜ் சாக்லெட் பட்டை தின்றபடியே பாப் ஆன்டனியை துப்பாக்கி இருந்தும் சுடாமல் கத்தியில் மார்பில் குத்தி கொல்வார், குழந்தை ராஜா அதை சாக்கோ பார் தின்றபடி மகிழ்ந்து பார்ப்பது போல தமிழ் பார்வையாளர்களுக்கு வேண்டி ரஸமாக அமைத்திருந்தார்.

இதில் குழந்தையின் இறந்த அப்பாவாக நடிகர் ஸ்ரீநாத் (உச்சக்கட்டம்) சில montages ல் மட்டும் வந்து போனார்,அம்மாவாக ராஜலட்சுமி நடித்தார், 

மலையாள டைட்டில் கார்டில் வரைகலை வரைந்து குழந்தையின் வீடு விடும் புறப்பாட்டை சொல்லியிருந்தனர்.

இப்படைப்புகளில் இசை என்றால் இசைஞானி இசையே சிறந்தது இரண்டாவது கண்ணூர் ராஜனுடையது, மலையாளத்தில் சித்ரா பாடிய பீலி ஏழும் வீஷிவா என்ற மெலடிக்கு மாற்றாக ஆட்டமெங்கே என்ற பார் பாடல் அமைந்தது, அத்தனை அழகிய மெலடி அது அதில் மம்முட்டி பாடி ஆடவும் செய்வார்.

பூவிழி வாசலிலே திரைப்படத்தில்  மலையாளம் மூத்த நடிகர் அடூர் பாஸி பள்ளியில் அச்சனாக நடித்தார், மணியம்பிள்ளராஜு சத்யராஜின் நண்பராக நடித்தார்.

இப்படைப்புகளில் மிகச்சிறந்த நாயகர் என்றால் மம்மூட்டி மற்றும் சத்யராஜ், மிகச்சிறந்த நாயகி என்றால் கார்த்திகா என்பேன்.

இயக்குனர் ஃபாஸிலின் சாதனை இந்திய சினிமாவில் முக்கியமானது என்றால் மிகையில்லை.

எம்ஜியார் அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்,எம்ஜியார்,பழம்பெரும் பன்மொழி இயக்குனர் S.ராமநாதன் (அமிதாப் பச்சனுக்கு breakthrough படமான Bombay to goa (1972) பட இயக்குனர், இவருடன் அமிதாப் சபரிமலைக்கும் சென்று வந்துள்ளார், இன்றும் இவரைத் தன் குருவாக நினைவுகூர்வார்)

#அமிதாப்பச்சன்,#எம்ஜியார்,#எஸ்ராமநாதன்

Khilona 1970 இந்தி மற்றும் எங்கிருந்தோ வந்தாள் 1970 தமிழ் ஒப்பீடுகள்

Khilona இந்தி 1970 ஆம் ஆண்டு L.V.பிரசாத் அவர்கள் தயாரிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாகி உள்ளது, எங்கிருந்தோ வந்தாள்  1970 ஆம் ஆண்டு நடிகர் பாலாஜி தயாரிப்பில் அக்டோபர் மாதம் சுடசுட வெளியாகி உள்ளது, டைட்டில் கார்ட் துவங்கி கலை அலங்காரம் வரை  அங்குலம் அங்குலமாக அப்படியே Khilona வில் இருந்து வரித்துக் கொண்டனர் தமிழ்படகுழு,காரணம் பிதாமகர் L.V. பிரசாத் ரசனையை விட என்ன சிறப்பாக தமிழில் செய்து விட முடியும் என்று,நடிப்பிலும் இசையிலும் மட்டுமே உண்டு வித்தியாசம்.

பிரசாத் மற்றும் சாரதா ஸ்டுடியோவில் கிலோனா படப்பிடிப்பு முடிந்து குழு வெளியேறியவுடன் தமிழ் படக்குழு  உள்ளே நுழைந்து  எங்கிருந்தோ வந்தாள் படத்தை எடுத்துள்ளனர், சின்ன கல்லு பெரிய லாபம் என்னும் டெக்னிக்.

நாயகி ஜெயலலிதாவுக்கு சிறு குழந்தையாக இருக்கையில் ரயில் விபத்து நடந்து ,அவரை ஒரு நாட்டிய மகளிர் பெண்மணி எடுத்து வளர்ப்பார், அந்த ரயில் விபத்து செலவில்லாத புகைப்பட montage  technic தான், அக் காட்சிகளைக் கூட அப்படியே கிலோனா raw footages ஐ எங்கிருந்தோ வந்தாளில் பயன்படுத்தி உள்ளனர்.

விளம்பர மாடல் கரண் கபூர்

கரண் கபூர் இவர் பாலிவுட் நடிகர் சஷிகபூரின் மகன்,மூத்த நடிகர் ப்ரித்விராஜ் கபூரின் பேரன், இவரது தாய் ஜெனீஃபர் கெண்டல், இங்கிலாந்தைச் சேர்ந்தவர், நடிகை மற்றும் நாடக ஆளுமை.

கரண் கபூர் பிந்தைய 80 களில் பாம்பே டையிங் மில்லின் விவால்டி ப்ராண்டின் ப்ரத்யேக மாடலும் கூட,70-80 களில் சில திரைப்படங்களும் நடித்துள்ளார்,

இவருக்கு பெரிய கலைக்குடும்பத்தின் வாரிசு,  விளம்பர மாடல் , நடிகர் என பன்முகங்கள் இருந்தாலும் இவரை ஈர்த்தது புகைப்படக்கலை மட்டுமே,

இந்தியாவின் தலைசிறந்த விளம்பரம் மற்றும் கலை புகைப்படக் கலைஞரான Adrian Steven இடம் புகைப்படக் கலையை கற்று அதில் மூழ்கியவர்.

அதன் மீது இருந்த தீராக் காதலால் மாடலிங்  மற்றும் நடிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டார், 1988 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக விளம்பர புகைப்படக்கலையை தன் profession ஆக தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
இங்கிலாந்துக்கும் இடம் பெயர்ந்து விட்டார்.

இவர் இந்தியாவில்  கோவாவில் தங்கியிருந்த  போது அங்கே ஆங்கிலோ இந்திய மக்களுடன் பழகி ஆராய்ந்து அவர் எடுத்த உயிரோட்டமுள்ள புகைப்படங்களைப் பாருங்கள் 
#கரண்_கபூர்,#karan_kapoor,#sashi_kapoor,#Jennifer_Kendal,#adrian_stevens,#vivaldi
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (260) உலக சினிமாபார்வை (234) ஆஸ்கர் (167) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) உலக சினிமா (38) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)