வீட்டின் முன் பூதாகரமான நுழைவு ரேம்ப் Access Ramp அமைக்கும் கயவாளித்தனம்

வீட்டின் முன் பூதாகரமான நுழைவு ரேம்ப் Access Ramp அமைப்பது சரியான முறையா? நிச்சயம் இல்லை.

மழைவெள்ளத்தில் தன் வீட்டைக் காக்க வேண்டி வீட்டை ஐந்ந்து அடிகள் சாலையில் இருந்து உயர்த்திக் கட்டுவது தவறில்லை,ஆனால் இவர் வீட்டு ramp வீட்டின் நுழைவுக் கதவின் உள்ளிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்,

இந்த ramp ன் துவக்கம் (0 level) இவர் வீட்டின் எல்லையில் இருந்து தான் துவங்க வேண்டும்.இப்படி சாலையில் பத்து அடி ஆக்கிரமித்தபடி அல்ல, வீட்டின் முகப்பில் சாக்கடை ஓடுமானால் அதற்கு மேல் ramp கொண்டு மூட அதிகபட்சம் சாலையில் அதிகபட்சம் மூன்றடி அடி வேண்டுமானால் வளர்ந்து வரலாம், 

வீடு கட்டும்போது வீட்டின் தரை மட்டத்தை நான்கடி   உயர்த்தி கொள்ளலாம், ஆனால் வாகன நிறுத்தும் இடத்தை சாலை மட்டத்திலிருந்து ஒன்றரை அடி முதல் இரண்டடி உயர்த்துவதே சரியாக இருக்கும் ,கார் ,பைக் உள்ளே போக வெளியே வர இந்த உயரம் பொருத்தமாக இருக்கும். வெளியே தார் சாலை புதிதாக கட்டுகையில் மட்டம்  உயர்த்தப்படுகையில் கார் பார்க்கிங்கில் நீங்கள் வேய்ந்த பேவர் ப்ளாக் கற்களை பிடுங்கி மண் அடித்து அதே பேவர்களை உபயோகித்து மீண்டும் உயர்த்தலாம்,  

வீட்டை ஆர்கிடெக்ட் , பொறியாளரை வைத்து கட்டினால் இது போல நுழைவு வாயில் Ramp ஐ ஊர் சாபம் வாங்காமல் ease slope Ratio விற்கு வடிவமைத்து கட்டித் தருவர், 

consultation fees பணம் மிச்சம் செய்ய கொத்தனார் மேஸ்திரியை நம்பிக் கட்டினால் இப்படித்தான், அவருக்கு 1:10 slope,1:12 slope,1:16 slope, 1: 8 slope எதற்கும் வித்தியாசம் தெரியாது,

எல்லாவற்றிற்கும் இப்படி bun போல மொழுகி வைத்து விடுவார். தலைமுறைக்கும் ஊர் சாபம் கிடைக்கும்.

இது போல சட்டத்தை மதிக்காமல் சாலையை ஆக்கிரமிக்கும்  ஆசாமிகளை முனிசிபாலிட்டி கடுமையாக தண்டத் தொகை தீட்டி தண்டிக்க வேண்டும்,தவறும் பட்சத்தில் குழாய் இணைப்பு,மின் இணைப்பை துண்டிக்கலாம்.

30 அடி அகல சாலையில் இவர் பங்களா வீட்டின் ramp பத்தடியை பிடித்துக் கொண்டால் மீதம் இருபது அடி மட்டும் இருக்கும், பிற வீட்டாருக்கும் ,தீயணைப்பு வண்டி போவதற்கும் ,மழை வெள்ளம் வடியவும் இதர வாகன போக்குவரத்திற்கும் எத்தனை இடைஞ்சலாக அது இருக்கும்.

PS: நிறைய நண்பர்கள் தங்கள் வீட்டின் அருகிலும் இப்படி ராட்சத நுழைவு Ramp உள்ளதாக சொல்கின்றனர், அவர்களை நினைத்தால் பாவமாக உள்ளது, கவுன்சிலர்கள் தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்படாமல் பதவியில் இருக்கையிலேயே இப்படி உள்ளது, இது போல அத்துமீறல்களை நீங்கள் உயிருக்கு பயந்து புகாரளிக்காமல் இருக்கலாம்  அல்லது அஞ்சாது இணையத்தில் ஐஜிக்கு போட்டோக்களுடன் ப்ரெசன்டேஷன் செய்து புகாரளிக்கலாம்,தீர்வு கிடைக்குமா? தெரியவில்லை,ஓட்டு கேட்டு வருகையில் அந்த ramp களை இடித்தால் ஓட்டு போடுகிறேன் என சொல்லுங்கள்.

நான் வடிவமைக்கும் கட்டிடத்தில் Ramp அமைக்கையில்  முனிசிபாலிட்டி சாக்கடைக்கு மேல் Ramp வருகையில் மூடி கூட maintainance ற்கு எங்கு வர வேண்டும், எந்த அளவு எத்தனை எண்ணிக்கை வரவேண்டும் என காட்டியிருப்பேன்

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே 
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
 #சாலை_ஆக்கிரமிப்பு,#எங்க_பாட்டன்_சொத்து,#Ramp,#ஊர்சாபம்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)