once upon a time in hollywood | 2019| உன்னதமான ஜோடிகள் Roman Polanski , Sharon tate மற்றும் Jay Jebring ஆய்வு

மிகவும் உன்னதமான ஜோடிகள் இந்த Roman Polanski , Sharon tate  உடன்  Jay Jebring இம்மூவர் .
இவர்கள் மூவரும் once upon a time in hollywood திரைப்படத்தில் தத்தம் கதாபாத்திர பெயர்களிலேயே தோன்றுகின்றனர்.

நடிகை Sharon tate மற்றும் சிகையலங்கார நிபுணர் Jay Jebring 1964 ஆம் ஆண்டு முதலே காதலர்கள், ஆத்மார்த்தமான நண்பர்கள், விருப்பு வெறுப்பில் அத்தனை ஒற்றுமை கொண்டவர்கள், இசை துவங்கி மனிதரை மனிதராக நேசிப்பது என எதிலும்.

1966 ஆம்ஆண்டு The Fearless Vampire Killers படம் நடிப்பதற்கு வேண்டி லண்டன் செல்கிறார் நடிகை Sharon tate, இயக்குனர் Roman Polanski ஐ தன் காதலரையும் மீறி அத்தனை பிடித்து விடுகிறது, அதன் பிறகு இந்த முன்னாள் காதலர்களின் காதல் முறிகிறது, ஆனால் நட்பு அதே போலவே தொடர்கிறது, எங்கிருந்தாலும் வாழ்க என தியாகம் செய்தல், சதிகாரி என தூற்றுதல், காதல் துரோகி என குற்றம் சாட்டுதல், கருவருத்தல், revenge porn போன்ற மலினமான தாக்குதல்கள் எதுவும் இவர் செய்யவில்லை, இந்த நண்பர்கள் தினமும் பார்த்துக் கொள்வதில் மாற்றமில்லை, Roman Polanski  மனைவி  Sharon tate மற்றும் அவரது நண்பர் Jay Jebring  இடையிலான நட்பை முழுதும் மதிக்கிறார்,அவர்களை சந்தேகப்படுவதில்லை, தனக்கு எப்படி personnel space முக்கியமோ அதுபோல மனைவியின் personnel space ஐ மதிக்கிறார்,தான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கையில் இங்கு ஹாலிவுட் சியலோ ட்ரைவ் வீட்டில் தன் எட்டுமாத கர்ப்பிணி மனைவியுடன் அவரது நண்பர் உடன் இருப்பது அவளுக்கு மிகுந்த பாதுகாப்பு,அவளுக்கு மகிழ்ச்சியைத் தருவது என யோசித்துள்ளார்,
இவர்களை முழுமையாக நம்பினார், இதை வியந்து எழுதக் காரணம் இது நடந்து சுமார் 55 வருடங்களாகிறது, இங்கே எழுதியவற்றை இன்று கூட நம் சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாது.

தன் மனைவியின் உயிர் பிரிந்த கடைசி தருணத்தில்  கணவன் தான்  உடனில்லை ஆனால் மனைவியின் நண்பர் அவள் உடனிருந்து போராடி மரித்ததை இன்றும் இயக்குனர் Roman Polanski  மதித்து போற்றுகிறார், மனைவி படுகொலை செய்யப்பட்ட அடுத்த சில மாதங்களுக்கு ஹாலிவுட்டின் பிரபலங்களுக்கு கூட இந்த கொலைசதியில் பங்கிருக்குமோ என உளவு பார்த்ததை தன் சுயசரிதையில் பகிர்ந்திருக்கிறார், 4 கொலைகள் நடந்த தன் வீட்டில் ஒரு படிக்கும் கண்ணாடி கிடைக்க,தன்னிடம் குடும்ப நண்பர் நடிகர் ப்ரூஸ்லீ பேசுகையில் தன்  படிக்கும் கண்ணாடி தொலைந்து விட்டது புதிது வாங்க வேண்டும் என சொல்ல அதை உளவு பார்த்து அவர் குற்றவாளி அல்ல என உளமார உணர்ந்து தெளிந்திருக்கிறார், பல உச்ச நடிகர்களின் கார்களை அதன் இருக்கைகளை தானே நேரில் களமாய்வு செய்து உளவறிந்திருக்கிறார் Roman Polanski.

once upon a time in hollywood திரைப்படத்தில் அன்று நடந்த துயர வரலாற்றை அத்தனை அழகாக மாற்றி அற்புதமான climax வைத்தார் இயக்குனர் QT, எவ்வாறு Pulp Fiction திரைப்படத்தில், கழிவறைக் கதவு திறந்து திடீரென வெளிப்பட்டு  butch ஆல் சுடப்பட்டு இறந்து போன vincent vega வை உணவகத்தின் கழிவறையில் இருந்து கதவு திறந்து உயிருடன் வெளியேற்றி படத்துக்கு happy ending தந்தது போன்ற அசகாய மாற்றம் அது.

ஆனால் நிஜத்தில் அந்த துக்க வரலாறு இப்படித் தான் இருந்தது, ஆகஸ்ட் 8, 1969 அன்று,  Jay Jebring, sharon tate , இவர்களின் நண்பர்கள் , Frykowski மற்றும் அவர் காதலி Abigail Folger ஆகியோர் மெக்சிகன் உணவகமான el coyoteற்கு சென்றனர். 

நடுநிசியில்  அவர்கள் நால்வர் ஹாலிவுட் சியோலோ டிரைவில் உள்ள போலன்ஸ்கி இல்லத்திற்குத் திரும்பிய பிறகு, "மேன்சன் ஃபேமிலி " உறுப்பினர்களான Patricia Grenwinkel, Susan Atkins and Charles "Tex" Watson ஆகியோர் வீட்டிற்குள் கூரிய கத்தியுடன் நுழைகின்றனர். 

வீட்டில் இருந்த இந்த  நால்வரையும் வரவேற்பு அறைக்குள் வைத்து கத்தி மற்றும் துப்பாக்கி முனையில் சிறைபிடித்த பிறகு, அவர்களை தரையில் முகம் குப்புற படுக்க உத்தரவிடுகின்றனர், 

Sharon tate மற்றும் Jay Jebring கழுத்தை இணைத்து சுருக்கிடுகின்றனர்,Jay Jebring திமிறி எதிர்ப்பு தெரிவித்து tate நிறைமாத கர்ப்பிணி அவளை ஒன்றும் செய்யாதீர்கள்,அவிழ்த்து விட்டுவிடுங்கள், என ஊடுருவல்காரர்களிடம் போராடியிருக்கிறார்,sharon tate என்னை சிறைபிடித்து செல்லுங்கள் எட்டு வாரங்களில் குழந்தை பிறந்தவுடன் என்னை மட்டும் கொல்லுங்கள்,என் குழந்தையை விட்டுவிடுங்கள் எனக் கெஞ்சுகிறார்.  

நான்கு காட்டுமிராண்டிகளில் ஒருவனான வாட்சன் என்பவன் Jay Jebringஐ சுட்டு, அவர் இறந்து கிடக்கும் போது முகத்தில் பலமுறை பூட்ஸால் உதைத்துள்ளான், அதில் அவரது மூக்கு மற்றும் கண்களின் மத்தியில் உள்ள எலும்பு கூட உடைந்தது, அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காமல் அவர் ஏழு முறை கத்தியால் குத்தப்பட்டார் , ஆழமான கத்தியால் குத்தப்பட்ட காயங்களால் இரத்த இழப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.  

காட்டிமிராண்டி குழு பின்னர் ஃப்ரைகோவ்ஸ்கி, ஃபோல்கர் மற்றும் sharon tate  ஆகியோரை வெறி தீர கத்தியால் குத்திக் கொன்றனர்,
Sharon tate , Jay Jebring இருவர் கழுத்தை இறுக்கி தூக்கி    கூரையில் ஏற்றி மாட்டிவிட்டு அப்போதும் ஆத்திரம் தீராமல்  Jebring முகத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டும்  ஏழு முறை கத்தியாலும் குத்தப்பட்டுள்ளார், sharon tate முதுகிலும் மார்பிலும் பதினாறு முறை கத்தியால் ஆழமாக குத்தப்பட்டுள்ளார்.
இறுதியில் sharon tate உடம்பில் வழிந்த ரத்தத்தால் வாயிற் கதவில் PIG என எழுதிவிட்டு அகன்றுள்ளனர்.

Mansons family தலைவன் மற்றும் இந்த கொலைகாரர்கள் நால்வர் ஆயுள் தண்டனை அனுபவிக்கின்றனர், ஆனால் இயக்குனர் QT அவர்களை தன் படைப்பில் சாதாரணமாக தண்டிக்கவில்லை, ரிக்டால்டன் வீட்டில் பிரிவு உபசார விழா இரவில் தற்செயலாக தன் ஸ்டண்ட் மேன் க்ளிஃப் பூத் தன் நன்றியுள்ள ஆனால் கொடூரமான வளர்ப்பு நாய் ப்ராண்டியுடன் வந்து தங்கியிருக்கும் இரவில் வந்து இந்த கொலைகாரர்கள் வசமாக வந்து சிக்கிக் கொள்கின்றனர், Inglourious Basterds திரைப்படத்தில் எப்படி பங்கரில் தற்கொலை செய்து இறந்து போன ஹிட்லரை, தன் அபாரமான கற்பனை வளத்தால் ஒரு திரையரங்கில் வைத்து அவன் அதிகாரிகள் பரிவாரங்கள் என ஆயிரம் பேரையும் கொளுத்தி விடுவாரோ , அப்படி இந்த sharon tate மற்றும் அவர் நண்பர்கள் மூவரை படுகொலை செய்தவர்கள் மூவரை பிணம் பிரட்டி எடுத்து விடுகிறார், தனிமையில் நீச்சல் குளத்தில் காதில் வாக்மென் வைத்து பாட்டு கேட்கும் ரிக் டால்டன் மீது வந்து விழும் கொலைகாரியின் முகம் கண் என விசுவாச பிட்புல் ரக நாய் ப்ராண்டியால் முக்கால் பாகம் தின்னப்பட்டுள்ளது,

பிட்புல் நாய் பிராண்டிக்கு உணவு வைக்கும் படலம் எல்லாம் அத்தனை லயமானது, டின் உணவு திறக்கையில் வ்வ்வ் என சத்தம் எழுப்பினால் pedigree topping செய்த அந்த  ருசியான உணவை அப்படியே குப்பையில் எறிந்து விடுவார் ஸ்டண்ட் மேன் க்ளிஃப் பூத் (ப்ராட்பிட்), 

உள்ளே அறையில் தூங்கிய இத்தாலி நடிகையும் ரிக்டால்டனின் புது மனைவி Francesca Capucci இந்த கொலைகாரியுடன் சண்டையிடும் காட்சி எல்லாம் அத்தனை நன்றாயிருக்கும்.

ராணுவ ஒழுங்குடன் வளர்க்கப்பட்ட பிட்புல் நாய் ப்ராண்டி, நீச்சல் குளத்தில் நரக வலியுடன் விழுந்தவள் ஆக்ரோஷமாக வானில் துப்பாக்கியால் பலமுறை சுட , அசகாய தீரன் ரிக்டால்டன், அவருக்கு அவள் ஒரு கொசு போல,  வீட்டின் உள்ளே சென்று தான் முன்பு The 14 Fists of McClusky என்ற திரைப்படத்தில் சுமார் 150 நாஜிக்களை கொத்தாக கொன்றழிக்கப் பயன்படுத்திய flamethrower கொண்டு வந்தவர்,அவளை அந்த நீச்சல் குளத்தில் வைத்து எரித்து பஸ்பமாக்கிவிடுவார்,

இறுதிக் காட்சியில் நடிகை sharon tate ரிக்டால்டனை தன் ஆதர்சம் என்று இண்டர்காமில் புகழ்வாள்,Jay Jebring என்ன உன் வீட்டில் போலீஸ் என நடந்ததைக் கேட்க,இவர் சுட்டெரித்த கதையை சொல்ல  ,இவரை  வீட்டிற்குள் வந்து ஒரு drink அருந்திவிட்டுச் செல்ல மிகவும் பணித்த sharon tate , அவள் வீட்டு தானியங்கி இரும்பு வாயிற்கதவை வீட்டின் உள் இருந்து திறப்பாள், ரிக்டால்டனின் ஒளிமயமான எதிர்காலம் நடிகை sharon tate பரிந்துரைப்படி இயக்குனர் Roman Polanski மூலம் துவங்குவது போல நம்பிக்கை ஒளியுடன் இறுதிக்காட்சி முடியும்.

ஒரு கலைஞனின் சமூக அவலத்தின் மீதான அறக்கோபம் இப்படித்தான் தன் படைப்பில் உக்கிரமாக வெளிப்பட வேண்டும், அப்போது தான் அந்த படைப்பாளி மனதில் கனன்று கொண்டிருக்கும் எரிமலை குளிரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)