அரவிந்தரின் பாண்டிச்சேரி வருகையும் பாண்டிச்சேரி பழைய துறைமுகமும்


முதல் படத்தில் இருப்பது பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் விற்பனையில் இருக்கும் Picture magnet,150₹ விலை , 

இது அரவிந்தரின் பாண்டிச்சேரி வருகையை குறிக்கிறது, 
ஏப்ரல் 4 1910 ஆம் ஆண்டு அவர்  SS Dupleix என்ற பெயர் கொண்ட பயணியர் கப்பலில் கல்கத்தாவிலிருந்து பாண்டிச்சேரி வந்தார், 

இன்றைய பாண்டிச்சேரி கடற்கரையில் காந்தி சிலை உள்ள திடலில் 1910 ஆம் ஆண்டு இரும்பு கடல் பாலம் இருந்தது,இது 1866 ஆம் ஆண்டு ஃப்ரெஞ்சு காலனி அரசால் கட்டப்பட்டது, பாண்டிச்சேரிக்கு வரும் கப்பல்கள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்த அங்கிருந்து பயணியர் படகில் இந்த கடல் பாலம் வந்தடைந்து, அங்கிருந்து shuttle  ரயில் பெட்டி வழியே பாண்டிச்சேரி customs பரிசோதனை அலுவலகத்துக்குச் சென்று பரிசோதனைக்குப் பின் நகருக்குள் நுழைவர்.

இந்த இரும்பு கடல் பாலம் 1952 ஆம் ஆண்டு பலத்த புயலில் முழுக்க சேதமடைந்து விட்டது.

இந்த இரும்பு கடல் பாலத்தில் அரவிந்தர் முதலில் நுழைந்து புதுச்சேரி வந்ததால் இந்த பாலம் அரவிந்த ஆசிரமவாசிகளுக்கு மிகவும் முக்கியமானது, புனிதமானதும் கூட, இப்பாலத்தின் இரும்பு  தூண்கள் இன்று கடலுக்குள் மூழ்கியுள்ளது,2004 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி கடற்கரையை சுனாமி தாக்கிய போது கடல் உள்வாங்குகையில் பல ஆண்டுளுக்குப் பின் அந்த இரும்புப் பாலம் வெளிப்பட்டதை இணைப்பு படங்களில் பாருங்கள்.

நான் 1988 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனாக பாண்டிச்சேரி சுற்றுலா  செல்கையில் புதுச்சேரி கடற்கரையில் மணல்வெளி இருந்தது, இத்தனை கடல் கொந்தளிப்பு இருக்கவில்லை, இத்தனை கடல் முன்னேறவில்லை, இத்தனை கருங்கல் பாறைகள் இட்டு நிரப்பவில்லை, அன்றைய பாண்டிச்சேரியின் அழகு , சுத்தம், நளினம் , ஒழுங்கு இன்னும் கண்களில் காட்சியாக நிற்க்கிறது, பிரம்மாண்டமான பாரதி பூங்காவில் விளையாடியபின் சுத்தமான கடற்கரை மணலில் வெகுநேரம் விளையாடி பானிபூரி சாப்பிட்டு கூட்டமான கடைவீதியில்  சுற்றியது பசுமையாக நினைவில் உள்ளது, 1989 ஆம் ஆண்டு புதிய துறைமுகம் கட்டத்துவங்கியதும் கடல்அரிப்பு நிகழ்ந்து மணல் நகர்வு தடைபட்டு கடல் முன்னேறி இந்த உலகப் புகழ்பெற்ற பாண்டிச்சேரி promenade ஐ கபளீகரம் செய்யத் துவங்கியது.

இந்த தண்டவாளம் அமைக்கப்பட்ட இரும்பு கடல் பாலம் 1988 ஆம் ஆண்டில்  அரித்து குச்சி குச்சியாக இரும்பு தூண்கள் மட்டுமே  எஞ்சியிருந்ததை நான் கண்டுள்ளேன் , 

 1952 ஆம் ஆண்டு இன்று நாம்  காணும் new iconic pier  காங்க்ரீட் பாலம்  கட்டப்பட்டது, இன்றும் காட்சிக்கு உள்ளது, கடந்த 2022 மார்ச் 5 அன்று அப்படியே ஒரு பகுதி சேதமடைந்து கடலுக்குள் அமிழ்ந்து விட்டது.

இன்று கப்பல் மூலம் மண் பீய்ச்சி அடித்து கடல் முன்னேறிய பாண்டிச்சேரி கடற்கரையில் எல்லாம் மணல்வெளிகள் மீட்கப்பட்டுள்ளன, செயற்கை மணல்வெளிகள் மிகுந்த பராமரிப்பும் பிரயத்தனமும் கோடிக்கணக்கான நிதியும் கோருபவை, இந்த பணிகளை பாண்டிச்சேரி அரசு தொடர்ந்து சிரத்தையாக செய்யும் என நம்புகிறேன்.

அலிப்பூர் குண்டு வெடிப்பு சதி இந்திய சுதந்திர போராட்டத்தில் மாபெரும்  கிளர்ச்சியாகும்.
பல ஆண்டுகள் நடந்த வழக்கில் மயிரிழையில்  அரவிந்தர் 17 பேர்களுடன் விடுதலையானார், அந்த விடுதலையை அரவிந்தரே எதிர்பார்க்கவில்லை, அவரை, மீண்டும் எப்படியாவது வேறு குற்றவழக்கில் சிக்க வைக்க பிரிட்டீஷ் ஏகாதிபத்ய அரசு சதா கண்காணிக்க, அவர் கல்கத்தாவில் இருந்து தப்பியவர் மேற்கு வங்கத்தின் ஃப்ரெஞ்சு காலனியான சந்தன்நகரில் பல நாட்கள் தலைமறைவாக இருந்தார்,  தன் நெருங்கிய சகாக்கள் நால்வருடன் மீண்டும் கல்கத்தா துறைமுகம்  வந்து பல சோதனைகளை கடந்து கப்பல் ஏறினார், அங்கிருந்து ஃபரெஞ்சு காலனியான புதுச்சேரிக்கு அடைக்கலம் தேடி வந்து அரசியலுக்கும் புரட்சிக்கும் முழுக்கு போட்டு புது தவவாழ்வை துவங்கிய கதை படிக்க மிகவும் சுவாரஸ்யமானது.

30 ஏப்ரல் 1910 ஆம் ஆண்டு அரவிந்தரை ஏற்றிக்கொண்டு வங்கக்கடலுக்குள் பாதுகாப்பாக பயணித்து நான்கு நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 4, 1910 அன்று புதுச்சேரிக்குள் இறக்கி விட்ட கப்பலின் பெயர் SS Dupleix இணைப்பு படத்தில் பாருங்கள், அன்று பயணிகள் கப்பலில் முதல் வகுப்பில் பயணிக்க 600₹ ஒருவழிக்கு கட்டணம் 
இருந்துள்ளதைப் பாருங்கள், இக்கப்பல் பாண்டிச்சேரிக்கு பின் கொழும்பு , எகிப்து ,மார்செய்ல்ஸ், சீனா,ஜப்பான் என சுற்றியிருக்கிறது.

பழைய புகைப்படத்தில் இரும்பு கடல் பாலத்தின்  நுழைவு வாயிலில் இருக்கும் 8 கருங்கல் தூண்களைப் பாருங்கள்,பாதுகாப்பு அரணான பீரங்கிகளைப் பாருங்கள், இந்த கருங்கல் தூண்கள் 1866 ஆம் ஆண்டு செஞ்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள வெங்கடரமணர் திருக்கோயிலில் இருந்து பெயர்த்துக் கொண்டு வந்து நிறுவப்பட்டவை, 1963 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு இந்த காந்தி சிலை 1965 ஆம் ஆண்டு அந்த இரும்பு பாலத்தின் முன்னால் உள்ள அரைவட்ட திடலில் இந்த கருங்கல் தூண்களுக்கு நடுவே நிறுவப்பட்டது, சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலையை செய்த சிற்பி D.P. ராய் சவுத்ரி அவர்கள் வடித்த சிலை இது.

அரவிந்த ஆசிரமம் பற்றி மற்றொரு சுவாரஸ்யமான சம்பவம்.

சிதலமடைந்து இருக்கும் செஞ்சி வெங்கடரமணர் திருக்கோயில்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)