once upon a time in hollywood ஒன்ஸ் அபான் ய டைம் இன் ஹாலிவுட் ஆய்வு


Once upon a time in hollywood திரைப்படத்தில்  Lancer என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு இடைவேளை காட்சியையும் மறக்க முடியாததாக ஆக்கியிருந்தார் இயக்குனர் QT.

தன் நடிப்பு வாழ்வின் அந்திமத்தில் இருக்கும் Rick Dalton ன் அழகிய தீரன் முகத்தை ஆனவரை கொடூரனாக இப்படக்குழுவினர் மாற்றியிருக்கின்றனர், வழமையாக யாரும் செய்திராதது இது.

அவருக்கு ஹிப்பித் தலை பொய்சிகை வைத்து, சீனதொங்குமீசை வைத்து , வித்தியாசமான தடித்த அடர்நிற டெனிம் உடைகள் அணிவித்திருக்கின்றனர், கொள்ளை கூட்டத் தலைவன் எட்டு வயது சிறுமியை கடத்தி வைத்து 50000£ பணயத்தொகை கேட்கிற கொடூர வில்லன் Caleb Dacota கதாபாத்திரம் இது, 

முதல்நாள் இரவில் தன் அளவுகடந்த குடிப்பழக்கத்தால் எட்டு லார்ஜ் ஸ்காட்ச் அருந்திய போதை தெளிய படப்பிடிப்பு ஒப்பனை மேஜையில் பெரிய கண்ணாடி பாத்திரம் முழுக்க நீரில் ஐஸ்கட்டிகள் நிரப்பி, அதில் முகத்தை இறக்கி போதை தெளிகிற நிலையில் ரிக்டால்டன் உள்ளபோது இயக்குனர் அவரின் இந்த புதிய தோற்றத்தை விளக்கி கலக்கமூட்டியிருக்கிறார் ,ஒரு முறை தோற்றத்தை திரையில் சிதைத்தால் நிஜ முகத்தையே அடுத்தடுத்து மாற்றி மக்களை மறக்கச்செய்திடுவர்.

ஏற்கனவே இவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்துகள் செய்து பலபல அபராத சீட்டுகள் வாங்கியதில் கார் ஓட்டுனர் உரிமமே ரத்தாகி விட்டது, தன் ஸ்டண்ட் டபுள் க்ளிஃப் பூத் கார் ஓட்ட படப்பிடிப்புகளுக்கு சென்று வருகிறார் நடிகர் ரிக் டால்டன்.

நெஞ்சு முழுக்க சளி, சங்கிலித் தொடராக புகைப்பழக்கம் வேறு, பேசும் வசன வரிகளை கூட மறந்து விட்டு one more போகலாம் என இயக்குனரை கெஞ்சும் நிலை,அந்த அவமானத்தின் பின்னர் தன் கேரவனுக்கு வந்து கண்ணாடியில் தன் முகம் பார்த்து தனக்கே  கொலை மிரட்டல் விடுத்துக் கொள்கிறார் நடிகர் ரிக் டால்டன்.

இவரின் இருபதாண்டு நடிப்பு அனுபவத்தில் ஒன்ஸ் மோர் கேட்டதில்லை, ஒரே டேக் நடிகர், புதிய இளம் நாயகனுடன் இறங்கி நடிக்கிறார், அதுவும் வேறு ஓரு அனுபவமிக்க வில்லன் நடிகர் நடிக்க இருந்து அவர் முதுகை உடைத்துக் கொள்ள இவர் ஒப்பந்தமாகியுள்ளார்,

அனைவரும் தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பில் இருக்க,இவரின் ஒட்டு மீசை காய ஒருமணிநேரமாகும் அதுவரை உண்ணாதே, என ஒப்பனை கலைஞர் பெண்மணியால் அறிவுருத்தப்பட்டிருக்கிறார், Caleb Dacota என்ற  தன் பெயரெழுதிய ஓய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்கலாம் என வந்தவர்,பாக்கெட்டில் இருந்து ஸ்காட்ச் எடுத்து குடிக்கிறார், அங்கே அடுத்த காட்சியில் உடன் நடிக்க இருக்கும் சிறுமி அவள் பெயர் எழுதிய நாற்காலியில் அமர்ந்து வால்ட் டிஸ்னி பற்றிய புத்தகம் படிக்கிறாள்,

அச்சிறுமியிடம் நான் உன் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தால் உனக்கு தொந்தரவாயிருக்குமா? என அனுமதி கேட்க, அவள் முன்னெச்சரிக்கை மிகுந்தவள், அரைமனதுடன் ,எனக்கு தெரியவில்லை என்கிறாள்,

இவர் சிகரட் பற்ற வைத்து இழுக்க இருமல் அதிகமாகிறது, இவர் நெஞ்சு சளியை கனைத்து மேலேற்றி தரையில் துப்ப சப்தமெழுப்பி அருவருக்கிறாள், இவர் மன்னிப்பு கேட்கிறார்,அங்கே சற்று தாழ்வாக உணர்கிறார் ரிக்டால்டன்,

சிறுமியிடம் இது உணவு வேளையாயிற்றே, நீ சாப்பிடப் போகவில்லையா? எனக்கேட்க , எனக்கு அடுத்து காட்சி நடிக்க உள்ளதால் சாப்பிடவில்லை, நடிப்பு என்று வந்துவிட்டால் நான் லௌகீக விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை, நான் ஒரு actor, பலரும் சொல்வது போல actress இல்லை, acting என்று வந்தால் அந்த நடிகர் 100% அற்பணிப்பை தரவேண்டும் என வயதுக்கு மீறி வாயடிக்கிறாள் அந்த சிறுமி.

உன் பெயர் என்ன? 

மிரபல்லா லான்சர் என தன் கதாபாத்திரத்தின்  பெயரைச் சொல்கிறாள் சிறுமி,

இல்லை உன் உண்மைப்பெயரை சொல் என்று கேட்க, இல்லை நான் இப்போது மிரபல்லா கதாபாத்திரமாகிவிட்டேன், என திமிராக பெயரைச் சொல்வதில்லை சிறுமி.

சிறுமியை, என்ன வாசிக்கிறாய் எனக் கேட்க அவள் Walt Disney: The Biography வாசிக்கிறேன், உலகின் மிக உயர்ந்த ஆளுமை இவர் தான், அவர் போல யாரும் இனி வர முடியுமா? என அத்தனை கூவி வியக்கிறாள்,

உனக்கென்ன  வயது ? பனிரெண்டிருக்குமா? என இவர் மலைத்துப் போய் கேட்க, இல்லை எட்டு என்கிறாள், தான் இதுகாரும் சாதித்த எதையும் அறியாமல் யாரையோ விதந்தோந்துவதை இவர் ரசிப்பதில்லை.

தன் பையில் இருந்து  Ride a Wild Bronc என்ற வெஸ்டன் பாக்கெட் நாவல்  ஒன்றை எடுத்துப் படிக்கிறார், என்ன புத்தகம் அது என 
சிறுமி அலட்சியமாகக் கேட்க, ஒரு வெஸ்டன் கதை, இன்னும் படித்து முடிக்கவில்லை, 

நான் முழுக்கதையை கேட்கவில்லை, எதைப் பற்றியது  எனதான் கேட்டேன் என தன் மேதமையைக் காட்டுகிறாள், 

 இது டாம் ப்ரீஸி என்ற ஒரு தீரனின் கதை,அவனை ஈஸி ப்ரீஸி என்பர்,  தன் இருபதுகளில் அவன் எந்தக் காட்டுக்குதிரையையும் கூட அடக்கிவிடுவான், முப்பதுகளில் அவன் வீழ்ச்சி துவங்குகிறது, தன் முதுகை உடைத்துக்கொண்டபின், தொட்ட அனைத்தும் தோல்வியாகிறது, 

சிறுமி, முடமாகிவிட்டானா? இல்லை படித்துக் கொண்டுள்ளேன் ,இன்னும் போகனும் என கைகாட்டி,தழுதழுக்க உடைந்து அழுகிறார், மூக்கைச் சிந்தி மீண்டும் அழுகிறார்,சிறுமி ரிக் டால்டனை அருகே வந்து தேற்றுகிறாள், இவர் தன் தன்னிலை  உணர்ந்தவர் , அழுவதை நிறுத்தி என்னை விடு pumpkin puss என கொஞ்சி சிறுமியை விலக்குகிறார்.

சிறுமி தன் இருக்கைக்கு திரும்பியவள், என்னை நீ pumpkin puss என கொஞ்சுவதற்கு அழைத்ததை விரும்பவில்லை, நீ அழுவதால் அந்த வார்த்தைக்கு நான் ஆட்சேபிக்கவில்லை என்கிறாள்.

அந்த உணவு இடைவேளை முடிந்தபின் நடக்கும் படப்பிடிப்பு காட்சி  மிகுந்த உக்கிரமானது.

சிறுமியை மடியில் வைத்து இடது கையால் இறுக்கிக் கொண்டு வலது கையால் அவள் தலையில் ரிவால்வர் வைக்க வேண்டிய தருணம் இதில் உண்டு.

சிறுமியின் சிற்றப்பா முன்னாள் ராணுவ வீரர், அவர் ப்ரிட்டீஷ் இந்திய 
ராணுவத்தில் சண்டையிட்டதை நக்கலுடன் கேட்டு அறிகிறார் வில்லன், அவர் அணிந்த fancy உடையின் பெயர் என்ன எனக்கேட்க பெங்கால் லேன்சர் என்கிறார், கேட்கக்கூடாததை கேட்பது போல அவர் கொக்கரித்து சிரிக்க, சிறுமியும் சுதந்திரம் எடுத்துக்கொண்டு கலகலவென சித்தப்பனைப் பார்த்து சிரிக்கிறாள், இவர் துரிதகதியில் அவள் மூளையில் ரிவால்வரை வைத்து அழுத்துகிறார்,சிறுமியின்  தாத்தனை வரச்சொன்னால் ,தாத்தன் தான் இங்கே  வர வேண்டும், என் இந்த மடியில் அவன் கையால் 50000£ ஐ கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றவர் சிறுமியை தூக்கி தரையில் வீசி எறிகிறார்,இந்த செய்தியின் தீவிரத்தை உடனே கொண்டு போய் கிழவனிடம் சேர் தூதுவனே என்கிறார், தூது வந்த சித்தப்பா வந்தவழி திரும்ப இயக்குனர் and cut என இழுத்துச் சொல்கிறார், இவரின் கைகளை நேரில் வந்து பற்றி குலுக்கி அற்புதமாக செய்தீர்கள், இத்தனை உக்கிரமாக இருக்கும் என ஒருக்கிலும் நினைக்கவில்லை, என மனதார பாராட்டுகிறார், 

நீங்கள் மன்னன் ஹேம்லட் போல என கோடி காட்டினீர்கள், அதை நூல் பிடித்து improv செய்தேன் என்கிறார் ரிக் டால்டன், ஓ improv என ஆத்மார்த்தமாக பாராட்டிவிட்டு அகல்கிறார் இயக்குனர்.

கீழே விழுந்து கிடந்த சிறுமியை கையைப்பற்றி தூக்கி மன்னித்துவிடு, நான் ஆத்மார்த்தமான நடிப்பின் போது உன்னை காயப்படுத்தியிருப்பேன் என்கிறார், அவள் இல்லவே இல்லை, என் முழங்கையில் pad கள் அணிந்துள்ளேன் என சுட்டிக் காட்டியவள், ஒத்திகைக்கு சம்பளம் பெறாத நிலையிலும் அடிக்கடி கீழே விழுந்து பயிற்சியாக செய்துள்ளேன்,
அதனால் அடிபடவில்லை என்கிறாள், உடன் அவரது காதருகே வந்து கிசுகிசுப்பாக என் வாழ்நாளில் இத்தனை நல்ல நடிப்பை இன்றுதான் முதலில் பார்த்தேன் என மனதார பாராட்டுகிறாள் சிறுமி.

சிறுமி சென்றவுடன் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து தலை தூக்கி, ஓரக்கண்ணில் இருந்த கண்ணீரை ஒயிலாக துடைத்து மேலே பார்த்து பெருமூச்சு விட்டு நிம்மதி கொள்கிறார் ரிக் டால்டன்.

இக்காட்சி மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ளது, திரைப்பட மாணவர்கள், திரைக்கதைக்கு நீண்ட காட்சி எழுதுபவர்கள் இக்காட்சியை அவசியம் பாருங்கள், இக்காட்சி ஒருங்கே ஒருவனின் வீழ்ச்சி, அவமானம், கழிவிரக்கம், கோபம், மகிழ்ச்சி, ஆசுவாசம் என அத்தனை moods ஐ கொண்டுள்ளது, ரிக் டால்டனாக Leornado DiCaprio அத்தனை அபாரமாக செய்து மனதில் நின்றுவிட்டார், Django unchained திரைப்படத்தின் Calvin Candy கதாபாத்திரத்தை விடவும் என்னை ஈர்த்தது இந்த கதாபாத்திரம்.

என் கூலர்ஸ் அணிந்து அழு 
ப்ரூஸ்லீ தோன்றும் காட்சி

படத்தில் நடிகை sharon tate மற்றும் இயக்குனர் ரோமன் பொலன்ஸ்கி தோற்றமும் ஆய்வும்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)