ப்ரிட்டீஷ் இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் A. லலிதா அவர்கள் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவி என்பது தெரியுமா?

ப்ரிட்டீஷ் இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் A. லலிதா அவர்கள் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவி ஆவார்.

இன்று நாம் காணும் கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு கிண்டி எஞ்சினியரிங் காலேஜ் என்று பேச்சு வழக்கிலும்  காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங் கிண்டி என அலுவல் வழக்கிலும் வழங்கப்பட்டது,1794 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பெருமைமிகு பொறியியல் கல்வி நிறுவனம்.

 229 ஆண்டுகள் பழமையும் 
23 தலைமுறைகளையும் கண்டது, இரண்டு உலகப் போர்களையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் கண்ட கல்லூரி வளாகம், 4 செப்டம்பர் 1978 அண்ணா பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட தினமாகும்,

இந்தியாவின்  முதல் பெண் பொறியியல் பட்டதாரி A.லலிதா அவர்கள் இங்கு 1943 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார்,சென்னைக்கு எத்தனை பெருமை  பாருங்கள், கிண்டி எஞ்சினியரிங் காலேஜ் துவங்கி 145 வருடங்கள் கடந்த நிலையில் தான் ஒரு முதல் பெண் பொறியியல் பட்டதாரி அங்கிருந்து உருவாகி உள்ளார் என்றால் அன்று பெண்கள் படிப்பதற்கு எத்தனை தடைகள் இருந்தன என்று சிந்தித்துப் பாருங்கள்.

இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் A.லலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு இன்றும் கூட  நம் தலைமுறைப் பெண்களுக்கு உத்வேகம் தருவதாகும்.

பொறியாளர் லலிதா ஆகஸ்ட் 27, 1919 அன்று சென்னையில் தெலுங்கு பேசும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார், அவர் நான்காம் பாரம் (SSLC) படித்து முடிக்கையில் அன்றைய சமூக விதிமுறைகளுக்கு இணங்க தன் 15 வயதில் 16 வயதுள்ள இளைஞனை திருமணம் செய்து கொண்டார்.  அவரது பெற்றோர்கள் கல்வியில் வலுவான நம்பிக்கை வைத்திருந்தனர்,அவர் திருமணமான பிறகும் அவர் படிப்பைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.  

லலிதாவின் 15 வயதில் மகள் ஷ்யாமா பிறந்த நான்கே மாதங்களில் கணவர் அகால மரணம் அடைந்து விட்டார்.அந்த காலகட்டத்தில்  கைம்பெண்கள்  சமூகத்தில்  சரியாக நடத்தப்படவில்லை, தலைமுடி மழித்து நார்மடி உடுத்தி உப்பு உறைப்பின்றி உண்டு இறுதி மூச்சு வரை  மூலையில் தான் ஒடுங்கியிருந்தனர், ஆனால் லலிதாவின் பெற்றோர் அவரை படி தாண்டி வெளி உலகம் செல்ல அனுமதித்தனர்,எத்தனை படிக்க முடியுமோ அத்தனை படிக்குமாறு ஊக்கமளித்தனர்,குழந்தையை பார்த்துக் கொண்டனர். தனக்கும் தன் மகளுக்கும் ஒரு அர்த்தமுள்ள  முழுமையான வாழ்க்கையை  சுயமாகவே உருவாக்க முடிவு செய்தார் லலிதா.  

லலிதா முதலில் தான் ஒரு  டாக்டராக வேண்டும் என்று நினைத்தார், ஆனால் டாக்டர் தொழிலின் பணிச்சுமை தன் குழந்தையை திறம்பட கவனித்துக்கொள்வதைத் தடுக்கும் என்று முடிவு செய்தவர், அவருடைய மற்றொரு விருப்பமான மின் பொறியியலாளராக ஆக படிக்க லட்சியம் கொண்டார்.  
துணிச்சலான பெண் லலிதாவால் ஏற்கனவே பெண்களுக்கு என ஒதுக்கியிருந்த  தொழிற்துறை படிப்புகளில் நுழைந்து தன்னை மட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை  .
அந்நாளில்  பொறியியல் படிப்பு   ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே இருந்தது. , இந்தியாவின் முதல் பெண் பொறியியலாளர் ஆவதற்கான அவரது லட்சியப் பயணம் 1937ஆம் ஆண்டு துவங்கியது.

லலிதா தனது PUC (Intermediate )  இடைநிலைத் தேர்வை ராணி மேரி கல்லூரியில் முதல் வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்றார்.  பின்னர் அவர் எண்ணிய படியே பொறியயலில் பட்டம் பெற முழு முனைப்பாக இருந்தார், 

அன்று கிண்டி எஞ்சினியரிங் காலேஜ் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது, லலிதா பொறியியல் கல்லூரியில் நான்கு ஆண்டு மின் பொறியியல் திட்டத்தில் சேர விரும்பினார்.  
லலிதா சிறந்த மாணவி, ஆனால் 1930 களின் பிற்பகுதியில் கூட தொழில்நுட்பப் பயிற்சி என்பது ஆண்களின் கோட்டையாகவே பார்க்கப்பட்டது, அதிர்ஷ்டவசமாக, CEG இல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியராக இருந்த லலிதாவின் தந்தை அய்யலசோமாயஜுலு , தனது மகளின் கல்லூரி அனுமதிக்கு வேண்டி அன்றைய முதல்வர் டாக்டர் கே.சி. சாக்கோவிடம் மிகவும் வாதிட்டார்,அவர் மனமிறங்கி லலிதாவை 1939 ஆம் வருட மின் பொறியியல் துறையில் அனுமதிக்க ஒப்புக்கொண்டார், இந்த இரண்டு ஆண்களும் லலிதா மீது முதலில் நம்பிக்கை வைத்தவர்கள், இந்தியாவில் பெண் பொறியியல் துறையில் சாதிக்க அடிகோலியவர்கள் என்றால் மிகையில்லை.

பேராசிரியரின் மகளும், கல்லூரி வளாகத்தில்  ஒரே பெண்ணுமான லலிதா, அவளது வகுப்புத் தோழர்கள் பலரால் ஏளனம் செய்யப்பட்டார், பல்கலை வளாகத்தில் பெண்களுக்கான கழிவறை கூட நூற்றாண்டுகளாக இல்லை, அவர் பொறியியல் சேர்ந்து படிக்கத் துவங்கி விட்டாலும் பெண்ணுடன் சேர்ந்து தாம் படிப்பதை எதிர்பார்க்காத ஆண் மாணவர்கள்,  பெண்கள் படிக்க வருவதை அறவே விரும்பாத விரிவுரையாளர்களிடம்  நட்புறவை உருவாக்குவது லலிதாவுக்கு அன்று  எளிதானதாக இல்லை. 

மகள் லலிதாவின் இக்கட்டான நிலையை கல்லூரியில்  கண்ட அவரின் தந்தை, கல்லூரி முதல்வருடன் இணைந்து , இந்தியாவில் பெண் பொறியாளர்கள் அதிகளவில் உருவாக வேண்டிய தேவையை வாதிட்டார்,  

CEG க்கு  பெண்கள் அதிகளவு சேருவதற்கான விளம்பரத்தை அவர் தினசரிகளில் வெளியிட்டார்,அதன் மூலம் PK திரேசியா மற்றும் லீலாம்மா ஜார்ஜ் ஆகியோர் பொறியியல் கல்லூரியில் சேர வழிவகுத்தது.  
இந்த  இரண்டு பெண்களின் துணை,மற்றும் நட்பு கல்லூரியில்  லலிதாவை மிகவும்  அணுக்கமாகவும் உணர வைத்தது, பெண் ஒற்றுமை என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்கான சான்றாக இது அமைந்தது, லலிதா 1943 ஆம் ஆண்டு இளங்கலை மின் பொறியியல் பட்டம் பெற்றார்.

கல்லூரியில் முடித்து வெளியேறி, வேலையில்  சேர முயற்சிகளில்  இருந்த லலிதா, சிம்லாவில் உள்ள  Indian Central Standardization Systems பொறியியல் உதவியாளராக வேலையில் சேர்ந்தார், அவர் தன் சகோதரர் குடும்பத்துடன் வாழ்ந்தார்,   தன் மகளைப் பார்த்துக் கொள்ள  மைத்துனியின் உதவியும் கிடைத்தது.

லலிதா இரண்டு வருடங்கள் அந்த வேலையில் இருந்தார், பின்னர் தன் தந்தையின் துறை சார் ஆராய்ச்சிக்கு உதவ எண்ணினார்.  லலிதாவின் தந்தைக்கு Smokeless oven மற்றும் Electric flame producer  உட்பட பல காப்புரிமைகள் இருந்தன, எனவே அவருடன் பணிபுரியும் போது அவர் அறிவார்ந்த தூண்டுதலுக்கு உதவிகள் செய்ய முடிந்தது, 

அடுத்து லலிதா கல்கத்தாவில் உள்ள Associated Electrical Industries நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பொறியியல் பிரிவில் AEI நிறுவனத்தில் பணிபுரிகையில் லலிதா தனது இரண்டாவது சகோதரருடன் வசித்து வந்தார்.

AEI நிறுவனத்தில் லலிதா  திறமையான மின் பொறியியலாளராக தன்னை நிரூபித்து உயர்ந்தார்,  ​​இந்தியாவின் மிகப்பெரிய அணையான பக்ரா நங்கல் அணை போன்ற பெரிய திட்டங்களில் அவர் பணியாற்றினார், அணைகளில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட  நீர் மின் நிலைய திட்டங்களின் டிரான்ஸ்மிஷன் லைன்களை வடிவமைப்பதிலும், Safety gear, துணை மின்நிலைய layouts மற்றும் ஒப்பந்த புள்ளிகளை நிறைவேற்றி செயலாக்கம் செய்வதிலும் முதன்மை பொறியாளராக பணியாற்றினார் லலிதா.  

AEI நிறுவனத்தில் தனது சிறந்த பணிகளின் மூலம், லலிதா உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பொறியியல் சமூகத்தின் மேலான கவனத்தைப் பெற்றார்.

லலிதா  சிறந்த மின் பொறியியலாளர், பணியில் தளராத மனப்பான்மை கொண்டவராக விளங்கினார்,  பல நிறுவனங்கள் அதை அறுதியிட்டு ஒப்புக் கொள்ளவும் துவங்கின.  

1953 ஆம் ஆண்டில், லண்டனை தலைமையிடமாக  கொண்ட Council of Electrical Engineers, அவரை As Associate Member அழைத்தது.  சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த அமைப்பின் முழுநேர உறுப்பினராகவுமானார்.  

1964 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த First International Conference for Engineers and Scientists (ICWES) மாநாட்டுக்கு  பிரத்யேகமாக அழைக்கப்பட்டது  அவரது தொழில் வாழ்க்கையின் மிகவும் பிரபலமான ஆவணப்படுத்தப்பட்ட சாதனையுமாகும்.  

துரதிர்ஷ்டவசமாக, மாநாட்டில் Indian chapter அமைக்கப்படவில்லை, எனவே லலிதா தனிப்பட்ட முறையில் அதில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.  
இதையடுத்து, In International Institute for Women Engineers நடத்திய சர்வதேச கருத்தரங்குகளில் லலிதா பங்குபெற்றார்.  ஒரு பிரிட்டிஷ் தொழிற்சாலைக்கான அவரது பயணம் பற்றிய குறிப்புகள் பல செய்தித்தாள்களில் வெளியாயின, பெண்ணியம் பேசும் பத்திரிகைகள் அவருடைய பல நேர்காணல்களை வெளியிட்டன.

லலிதா  1965 ஆம் ஆண்டு  Women's Engineering Society of London என்ற பெருமைமிகு அமைப்பின்  உறுப்பினராகவும் ஆனார். 

லலிதா அவர்கள்  1974 ஆம் ஆண்டில் மூளையில் ஏற்பட்ட  அழற்சி காரணமாக 60 வயதிலேயே இறந்தார், தன் இறுதி மூச்சு வரை பொறியியல் துறையில் பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார்.

ஒரு திறமையான மின் பொறியாளர் மற்றும் அன்பான தாய் என்பதற்கு மேலாக, லலிதா இந்தியாவில் விதவைகள் மறுவாழ்வு சங்கத்தில் பிரதிநிதியாகவும்  கூட இருந்தார். 
 1964 ஆம் ஆண்டு லண்டனில்  ICWES கருத்தரங்கில் லலிதா  உரை நிகழ்த்தியபோது, ​​150 ஆண்டுகளுக்கு முன்பு நான் பிறந்திரிந்தால் என கணவன்  இறந்தபோதே  என்னையும் உடன்கட்டை ஏற்றி எரித்திருப்பார்கள் என்று துணிச்சலுடன்  பேசினார்.

லலிதா அவர்கள் 80 ஆண்டுகளுக்கு முன்பு நம்  சமூகத்தில் நிலவிய பெண்ணடிமைத்தளையை , 
பெருந்தடைகளைத் தன்னால் உடைத்து சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தார், 
அது மட்டுமில்லாமல் மற்ற பெண்களும் சாதிக்கும் வாய்ப்பையும் உருவாக்கினார்.  

லலிதா இந்தியாவில் இரண்டாவது 
International Conference of Women Engineers and Scientists மாநாடு நடப்பதற்கு பெரும் பங்காற்றினார், இந்தியப் பெண் பொறியாளர்களை அந்த மாநாட்டில் கலந்துகொள்ள அறைகூவல் விடுத்தார் ஊக்குவித்தார் ,அந்த மாநாட்டில் அவருடன் மேலும் ஐந்து பெண் பொறியாளர்கள்  முன்னோடிகளாக இணைந்தனர்.  

தன்னைச் சுற்றியுள்ள மற்ற பெண்களை உத்வேகம் தந்து ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை லலிதா அவர்கள் புரிந்துகொண்டார்,  தனது சக பெண் பொறியாளர்களுக்கு பாலமாகவும் அமைந்தார்.  

இன்று இந்தியாவில் பெண்களை விடவும்  மூன்று மடங்கு அதிகமான ஆண் பொறியாளர்கள் உள்ளனர்,  இன்னும் பொறியியல் துறையில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் நுழைவது குறைவாகவே  உள்ளது.  

இந்தியாவின் முதல் பொறியாளர் லலிதா அவர்கள் பற்றி பேசுவதும்  பெண்களை அறியச்செய்வதும் முக்கியமாகிறது,

இந்தியாவில் பொறியாளராக  வர எண்ணும் பெண்களுக்கு லலிதா அவர்களின் வாழ்க்கை தொடர்ந்து நம்பிக்கையும் உத்வேகமும்  அளிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம் தன் வரலாற்று முக்கியத்துவத்தையும்  மாண்பையும் பழைய மாணவர்களின் பெருமையையும் அறிந்து நடக்க வேண்டும், இனியேனும் மண்டபத்தை வாடகைக்கு விடுவது போல கல்லூரி வளாகத்தை வகுப்பறைகளை சினிமா படப்பிடிப்புகள் மற்றும் தனியார் விழா நிகழ்ச்சிகளுக்கு அரைநாள் முழு நாள் வாடகைக்கு விடக்கூடாது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)