தொடர் வல்லுறவாளர் கோணங்கி தங்கியுள்ள மதுரை அறை

விகடன் இந்த சமூக கட்டுரையை சடுதியில் நீக்கி விடலாம்,archive செய்யலாம் ,ப்ரீமியம் ஸ்டோரி ஆக்கிவிடலாம் என்பதால் அப்படியே copy செய்து பதிவிட்டுள்ளேன்,ஆண் குழந்தையை , பெண்குழந்தையை பெற்றோர் என  அனைவரும் ஒரு நிமிடம் ஒதுக்கி வாசியுங்கள்.

எழுத்தாளர் கோணங்கி பெயருக்கேற்பவே கோணல் புத்தி கொண்டு, சிறார்களை வல்லுறவு கொள்வதற்கென்றே மலினமான லாட்ஜில் அறை நிரந்தரமாக எடுத்து வைத்திருப்பதை படிக்கவே நாராசமாக , நரகலை மிதித்ததற்கு ஒப்பான  அருவருப்பாக உள்ளது, அந்த இளைஞர்களின் மனத்துயர் அறிவோம்,ஆதரவாக உடன் நிற்போம்.

https://www.vikatan.com/crime/gender/karthick-who-is-a-victim-of-sexual-abuse-talks-about-writer-konangi

// "எழுத்தாளர் கோணங்கி பாலியல் சித்திரவதை செய்தார். இப்ப புகாரை நீக்கச் சொல்லி..." பாதிக்கப்பட்ட மாணவர் .

ஆக்கம் : வினி சர்பனா

"நான், கோணங்கியால் பாதிக்கப்பட்டதை வெளியில சொன்னதும் பல பேர் பாதிக்கப்பட்டதாக ஃபேஸ்புக்ல் எழுதியிருக்காங்க." - கோணங்கி மீது பாலியல் புகார் கூறியுள்ள மாணவர் பேட்டி

பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது கார்த்திக் என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் பதிவிட்டிருக்கும் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாணவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், "டீன் ஏஜ் காலகட்டத்தில் கோணங்கியை ஒரு காட்ஃபாதராக நினைத்துப் பழகினேன். ஆனால், அவர் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால், நான் மனச்சிதைவுக்கு ஆளானேன். அவரிடமிருந்து போன் அழைப்பு வந்தாலே பயமும் வந்துவிடும். இதனால், தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப்பட்டேன். என் வாழ்க்கையே நரகமாகிவிட்டது” என்று தன் வாக்குமூலமாக போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். இது வாசகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் கார்த்திக்கையே தொடர்புகொண்டு பேசினேன்.

“எனக்கு நாடகம் நடிக்கிறதுல ஆர்வம் அதிகம். அதனால, காலேஜ் படிக்கும்போது கோணங்கியோட தம்பி முருகபூபதி நடத்துற 'மணல் மகுடி' நாடகக் குழுவுல சேர்ந்தேன். அப்போதான், கோணங்கி நேரடியாக அறிமுகமானார். ஒரு பெரிய எழுத்தாளர் நம்மகிட்ட நேரடியா சகஜமா பேசுறது ஒரு சந்தோஷத்தைக் கொடுக்குமில்லையா? அப்படித்தான் எனக்கு இருந்துச்சு. அவரை ஒரு காட்ஃபாதர் மாதிரி நினைச்சேன். நாடகக்குழு வெளியூரெல்லாம் போகும்போது அவரும் கூடவே வருவார். ரொம்ப அக்கறையா பேசுவார். அவர் அப்படி எளிமையா இருக்கிறது எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கும். ஆனா, போகப் போகத்தான் அவரோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்சது. அவரோட ஊரு கோவில்பட்டியா இருந்தாலும் எழுதுவதற்காகவே மதுரையில ஒரு ரூம் எடுத்து தங்கியிருந்தார். பிறகுதான் தெரிஞ்சது, அவரு தப்பா நடந்துக்கிறதுக்காக அந்த ரூமை எடுத்து வெச்சிருக்கார் என்பது.

டைப் பண்ணனும்னு சொல்லி என்னைக் கூட்டிக்கிட்டு போவார். எனக்கு அதுபற்றிய நாலேஜ் கிடையாது. ஒரு பெரிய எழுத்தாளர் கூப்பிட்டா போகாம எப்படி இருக்கமுடியும்?” என்கிறவர் அதற்குப்பிறகு சொல்ல ஆரம்பித்ததுதான் அதிர்ச்சி ரகம்.

“போனதும் சட்டையக் கழட்டச் சொல்லிடுவாரு. வெறும் துண்டை மட்டும் கட்டிக்கிட்டு உட்காரச் சொல்லுவாரு. வீட்டுல இருக்கிறமாதிரி கம்ஃபர்டபிளா இருக்கணும்ங்கிறதுக்காக சொல்றார்ன்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது, என்கூட தப்பா நடந்துக்கத்தான் அதுன்னு... இரவு ஆகிட்டாலே என்னை ட்ரிங்ஸ் பண்ணச் சொல்வார். அப்போதெல்லாம் எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. ஆனா, அவர் குடிப்பார். அந்த நேரத்துல என்கிட்ட தப்பா நடந்துக்குவாரு. அவர் இப்படிப் பாலியல் வன்முறையில ஈடுபடுவது எனக்கு அதிர்ச்சியா இருந்தது. மதுரையிலிருந்து கோவில்பட்டிக்குப் போனாலும் போன் செய்து அங்கேயும் வரச்சொல்வார். கிட்டத்தட்ட மூணு வருஷம் என்னை இந்த சித்திரவதைக்கு ஆளாக்கினார். எனக்கு அப்போ 19 வயசு. 'உன்கிட்ட நிறைய திறமை இருக்கு'... அப்படின்னு ரொம்ப என்கரேஜ் பண்ணி ஏமாத்துவார். இப்படித்தான் அவரோட அப்ரோச் இருக்கும். அவரை எதிர்த்துப் பேசமுடியல. தள்ளிப் படுத்தாலும் விடமாட்டார்.

நான் வந்த பிறகுதான், என்னை மாதிரியே பாதிக்கப்பட்ட இன்னொரு பையனும் கோணங்கியோட தம்பி பூபதிகிட்ட புகார் சொன்னார். அவர், 'அய்யய்யோ, அவர் இப்படியா நடந்துக்கி்றார்'னு புதுசா கேட்கிறமாதிரி கேட்டார்.

ஒருமுறை, நடந்தா பரவாயில்ல. அவரோட தம்பிக்கிட்ட நான் பார்த்து புகார் கொடுத்ததே 3 பேர். இந்த 10 வருசத்துல நிறைய ஆண்கள் கூட தப்பா நடந்துக்கிட்டிருக்காரு. அவரோட தம்பி கண்டுக்கல. அவரும் இதற்கு உடந்தைதான் போல" என்று சந்தேகம் எழுப்புகிறவரிடம், "பத்து ஆண்டுகள் கழித்து தற்போது இதை பிரச்னை ஆக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பப்படுகிறதே? அப்போதே, கோணங்கியின் அண்ணன் ச.தமிழ்ச்செல்வனிடம் சொன்னீர்களா? காவல்துறையில் புகார் கொடுக்காதது ஏன்?" என்று கேட்டேன்.

"அப்போ, அந்த வயசுல இதை வெளியில சொன்னா அசிங்கம்னு இருந்துட்டேன். எனக்கும் ஒரு குற்ற உணர்வா இருந்தது. கோணங்கியால என்னை மாதிரியே நிறைய பேரு பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும் இன்னும் கோபம் அதிகமாகிடுச்சு. அதனாலதான், இப்போ தைரியமா வெளியில சொல்றேன். என்னை மாதிரியே பாதிக்கப்பட்டவங்களும் ஃபேஸ்புக்கில் இதுபற்றி எழுதியிருக்காங்க. முக்கியமாக கோணங்கியோட அண்ணன் பையனே எழுதியிருக்கார். அதாவது, கோணங்கியின் அண்ணன் மகனின் நண்பனிடமும் கோணங்கி தவறாக நடந்துகொண்டிருக்கிறார். அவருடைய அண்ணன் ச.தமிழ்ச்செல்வனிடம் நான் இதைச் சொன்னதில்லை. ஏன்னா, அவர் வெளியூரிலிருந்து வந்து செல்வார்” என்கிற கார்த்திக் 'நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வியல்' தொடர்பான ஆராய்ச்சிப்படிப்பை முடிக்க இருக்கிறார்.

”கோணங்கி மன்னிப்பு கேட்டு மனம் திருந்தணும். இனி வேறு யாருக்கும் இந்தப் பாலியல் கொடூரம் நடக்கக்கூடாது. கோணங்கியால வேற யாரும் வாழ்க்கையை இழந்துடக்கூடாதுன்னுதான் இதுப்பத்தி எழுதினேன். நான், கோணங்கியால் பாதிக்கப்பட்டதை வெளியில சொன்னதும் பல பேர் பாதிக்கப்பட்டதாக ஃபேஸ்புக்ல் எழுதியிருக்காங்க. இதைப் பார்த்த, கோணங்கியின் தம்பி பூபதியின் நாடகக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி அந்தப் பதிவுகளை நீக்கச் சொல்றாங்க. எங்க அப்பா, அம்மா படிக்காதவங்க. நான், சாதாரண குடும்பத்திலிருந்து வந்திருக்கேன். கோணங்கி பெரிய செல்வாக்கு உடையவர். எங்களுக்கு எந்த சப்போர்ட்டும் இல்ல. தமிழக முதல்வரும் காவல்துறையும்தான் எங்களுக்குத் துணையா இருக்கணும்" என்கிறார் கோரிக்கையாக.

//

மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்ற என் கட்டுரை
https://m.facebook.com/story.php?story_fbid=10160936471541340&id=750161339&mibextid=Nif5oz

#me_too
#SpeakUpAgainstAbuse
#ArtistsAgainstAbuse
#EndSexualAbuse
#KonangiExposed
#NoMoreSilence
#MeTooArtistCommunity
#BreakTheSilence
#ProtectSurvivors
#JusticeForVictims
#HoldPerpetratorsAccountable
#StopSexualAbuseInArt
#SafeArtistsCommunity
#SupportSurvivors
#TogetherAgainstAbuse
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (350) தமிழ் சினிமா (249) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (129) மலையாளம் (79) சென்னை (76) கட்டிடக்கலை (72) கட்டுமானம் (66) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) இசைஞானி (44) வாஸ்து (44) கலை (42) ஆன்மீகம் (39) உலக சினிமா (33) சினிமா (33) ஃப்ராடு (28) தமிழ்சினிமா (24) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) இசை (12) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) பாலிவுட் (10) விருமாண்டி (10) அஞ்சலி (9) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) அரசியல் (8) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) மோசடி (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நகர வடிவமைப்பு (3) நகைச்சுவை (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சாதிவெறி (2) சிந்தனை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விஜய்காந்த் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)