உயிரே | தைய தையா பாடல் படமாக்கம் பற்றி

உயிரே (1998) திரைப்படம் எல்லோர் மனதுக்கும் நெருக்கமான படைப்பு,

உயிரே திரைப்படத்தில் வரும் " தைய தையா  "(chaiya chaiya) ஊட்டி குன்னூர் மலைரயில் பாதையில் நான்கரை நாட்கள் எடுக்கப்பட்ட பாடல், பாடியது சுக்வீந்தர் சிங், ஸப்னா அவஸ்தி, பாடல் வரிகள் இந்தியில் கவிஞர் குல்ஸார், தமிழில் கவிஞர் வைரமுத்து.

இப்படப்பிடிப்பிற்காக ஐந்து நாட்கள்  இந்த புராதான மலைரயில் வாடகைக்கு எடுக்கப்பட்டது, பாடலுக்கு வேண்டி நீராவி எஞ்சினுக்கு பின்னால் கலை இயக்குனர்  Samir Chanda ஆக்கத்தில் இரண்டு flat wagons இணைக்கப்பட்டன, 

ஷாருக் கான் மற்றும் மலைகா அரோரா அணிந்திருக்கும் ஆடைக்கேற்ப அந்த நீல நிற ரயில் எஞ்சினுக்கு பழுப்பு வண்ணமும் அடிக்கப்பட்டது, பாடல் காட்சி படமாக்கப்பட்டவுடன் மீண்டும் பழைய நீல வண்ணம் அடித்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்பாடலில் camera  trick இல்லை, blue matte ,green matte வைத்து ஏமாற்றும் vfx, அல்லது back production வேலைகள் எதுவும் இல்லை,  இயக்குனர் மணிரத்னம் மற்றும்  நடன இயக்குனர் ஃபாரா கான் ஓய்வு ஒழிச்சலின்றி இப்பாடலை இயக்கி படமாக்கினர், 

நான்கரை நாட்கள் காலை 9-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை நடந்த நடனப் படப்பிடிப்பிற்கு இடைவேளை விடுவதற்கு வெள்ளைத் துணியை கடைசி bogie ல்  இருந்த படி இவர்கள்  தூக்கி ஆட்டி தான் சமிஞ்யை செய்தார்களாம்,

இப்பாடலில் ஷாருக்கான் தவிர நடித்த அனைவருக்கும் இடுப்பில் harness அணிவிக்கப்பட்டு ரயிலுடன் பிணைக்கப்பட்டிருந்தது, காரணம் காற்றின் வேகம், தவிர நடனம் ஆடிக்கொண்டே தப்பித் தவறி பாதாளத்தைப் பார்த்தால் போயிற்று,அவர்களுக்கு தலை தட்டாமாலை சுற்றிவிடும், 

 இந்த நகரும் ரயில் கூரையில் ஷாருக்கான் குதித்து நடனமாட வேண்டியிருந்ததால் அவருக்கு harness கட்டவில்லையாம்.

இப்பாடலுக்கு வேண்டி மலை ரயிலை 5கிமீ வேகத்தில் இயக்கி உள்ளனர், இந்த fast pace நடன அசைவுகள் மற்றும் அடுத்தடுத்து மாறும் கேமரா கோணங்களால் நாம் வேகமான ரயிலாக மனதில் காண்கிறோம், இப்பாடலில் பாலங்கள் இடைப்படுகையில் அங்கே பாலத்தடியில் தயாராக  வைத்திருந்த ஐந்திற்கும் மேற்பட்ட கேமராக்களில் இப்பாடலில் இந்த ரயில் மற்றும் இயற்கை அழகை அப்படி அள்ளி வந்திருக்கின்றனர்  ,இந்த harness cable மலைகா அரோரா இடுப்பின் காக்ராவில் பிணைக்கப்பட்டிருந்தது அவரது இடுப்பையே கிழித்து ரத்தம் வரச் செய்துவிட்டதாம்.

இந்திய சினிமாவில் இப்பாடலில் தான் முதன் முதலில் Jimmy jib crane பயன்படுத்தப்பட்டது, AUMPRAKASH MOHAPATRA என்ற இந்தியாவின் சிறந்த Jimmy jib ஒளிப்பதிவாளர் இப்பாடலில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் second assistant, இவரை Jimmy jib crane தொழில்நுட்பத்தை கற்க தென் கொரியாவிற்கு செலவு செய்து அனுப்பி வைத்தது ஷாருக்கான்,அதற்கு முன்பு ஷாருகான் தோன்றிய  ஹுண்டாய் santro கார்களின் விளம்பரங்கள் மட்டுமே  இந்தியாவில் Jimmy jib crane கொண்டு கொரிய ஒளிப்பதிவு வல்லுனர்களால் இயக்கப்பட்டது.

உண்மையில் இது போல ஒரு ரயில் பாடலுக்கு  இந்திய சினிமாவில் அதற்கு முன்பும் ,பின்பும் இத்தனை மெனக்கெட்டதில்லை, இப்படி கொண்டாடப்பட்டதில்லை.

இசைப்புயலுக்கு இந்த பாடலுக்கு ஆஸ்கார் கிடைத்திருந்தால் நிரம்பத் தகும், அப்படி ஒரு composition, இப்பாடலின் இசை நிறைய ஹாலிவுட் படங்களிலும் உரிமை வாங்கியோ வாங்காமலோ   பயன்படுத்தப்பட்டுள்ளது.

அஜ்னபி திரைப்படத்தில் ராஜேஷ் கண்ணா , ஜீனத் அமன் தோன்றும் வைக்கோல் ரயில் டூயட் பாடல் பற்றி

https://m.facebook.com/story.php?story_fbid=10158480525441340&id=750161339

Hoga Tumse Pyara Kaun என்ற பாடல்  Zamane Ko Dikhana Hai (1981) படத்தில் இருந்து,  ரிஷிகபூர்,  பத்மினி கோலாபுரி தோன்றும்   back projection உபயோகித்து செய்த மலினமான காட்சியாக்கம் கொண்ட train top  பாடல் இது,

 பாடியது ஷைலேந்தர் சிங்.பாடல் வரிகள் Majrooh Sultanpuri,இசை ஆர்.டி.பர்மன்,

https://m.facebook.com/story.php?story_fbid=10159423085221340&id=750161339

#உயிரே,#ஷாருக்கான்,#மலாய்கா_அரோரா,#தைய_தையா,#மணிரத்னம்,#இசைப்புயல்,#ஊட்டி_மலை_ரயில்,#jimmy_jib
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (350) தமிழ் சினிமா (249) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (129) மலையாளம் (79) சென்னை (76) கட்டிடக்கலை (72) கட்டுமானம் (66) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) இசைஞானி (44) வாஸ்து (44) கலை (42) ஆன்மீகம் (39) உலக சினிமா (33) சினிமா (33) ஃப்ராடு (28) தமிழ்சினிமா (24) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) இசை (12) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) பாலிவுட் (10) விருமாண்டி (10) அஞ்சலி (9) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) அரசியல் (8) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) மோசடி (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நகர வடிவமைப்பு (3) நகைச்சுவை (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சாதிவெறி (2) சிந்தனை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விஜய்காந்த் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)