ஹேராம் | விட்டான் பாணத்த காமதேவன்

"விட்டான் பாணத்த காமதேவன்"

ஹேராம் படத்தில் இந்த பொல்லாத மதன பானம் பாடல் ஏன் வைத்தார்? இயக்குனர் என யோசித்திருக்கிறேன் , அது பாரம்பர்ய நடனம் அதன் பெயர்  லாவணி என்ற அளவிற்குத் தான் தெரியும், ஆனால் லாவணி கொண்டிருக்கும் உட்பொருள் "காம தகனம்" என்பதாம்.

மராட்டிய மாநிலத்திலிருந்து தஞ்சாவூருக்கு மாராட்டியர்களால் கொண்டுவரப்பட்ட கலை "லாவணி". இக்கலை நானூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்ததாகும்.
தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் "லாவணி' பிரபலம். "லாவணி' என்பது நாற்று நடுதல் என்று பொருள்படும். வயலில் நடவு நடும் பெண்கள் தங்களின் உழைப்பின் களைப்பைப் போக்க பாடும் பாடல் எனவும் கூறலாம். 

ஆரம்பத்தில் "லாவணி'யைப் பாடுவதற்கும், அதை காண்பதற்கும் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். 
அதற்குக் காரணம், இந்த "லாவணி' என்பது காமச்சுவை நிறைந்த பாடல்களால் அதிகம் நிரம்பியிருந்தது என்பதால் தான், பிறகு இந்த "லாவணி'யை வரையறை செய்த பிறகு, பெண்களும் அதிகம் பங்கேற்க ஆரம்பித்தார்கள். 

"லாவணி' நாட்டுப்புற இசைக்கலையில் முக்கியமானதாகும், மாசி மகத்தன்றும் நடக்கும்  "காம தகன விழா'வில் "லாவணி" நிகழ்த்தப்படும், மகாராஷ்டிரத்தில்  மகாராஜாக்கள் தங்கள் அரண்மனைக்கு வரும்  விருந்தினர்களுக்கு முன்பாக லாவணி நடன நிகழ்ச்சிகளை நடத்துவராம்,

அரண்மனையில் தலைமை அந்தப்புரக் காவலாளியாக திருநங்கையோ நம்பியோ இருப்பாராம், அவர் பாடல் வரிகளைப்பாடி ஆடும் அணிகளுக்கு  இடையிடையே பொருத்தமான வரிகளை எடுத்துத் தருவாராம்,இந்த பாடலிலும் திருநம்பி ஒருவர் "சக்குபாயி" என்பார்

முதலில் இரு ஆண்கள் எதிர் எதிராக அமர்ந்து, "எரிந்த கட்சி', "எரியாத கட்சி' என்று பிரிந்து "லாவணி'யைப் பாடுவார்களாம். இந்தப் பாடலின் முடிவில் காமன் எரிக்கப்படும் நிகழ்ச்சி "காம தகன விழா" வாக கொண்டாடப்படுகிறதாம்.

இப்பாடலில்  லாவணி ஆடியவர் Prachee Shah Paandya, மராத்தி நாடகம் மற்றும் சினிமா நடிகை, இவர் கதக் நாட்டியக் கலைஞரும் கூட, 2015 ஆம் ஆண்டு கதக் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஆடுகையில் ஒரு நிமிடத்தில் 93 முறை சுற்றி ஆடியதற்கு கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்,இவர் குஜராத் மார்வாடி குடும்பத்தில் மகாராஷ்டிரத்தில் பிறந்து வளர்ந்தவர், இப்பாடலில்  லாவணி ஆடுகையில் இவருக்கு 20 வயது, 

இவர் இந்திய அரசின் அதிகாரபூர்வமான கதக் ambassador ம் கூட, படத்தில் இந்தப் பாடலுக்கு நடன இயக்கம் இயக்குனர் கமல்ஹாசன் தான், 1970 களில்  அவர் கோலாபூரில் இரு வருடங்கள் தங்கி கதக் மற்றும் பிராந்திய நடனங்கள் பயின்றது அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது.

இப்பாடலின் துவக்கத்தில் சாகேத்ராம் காமத்தை எரிக்காத கட்சியில் இருக்கிறார், இப்பாடலில் லாவணி ஆடும் நடன மங்கையின் அசைவில் அவர் இறந்து போன மனைவி அபர்ணாவையே காண்கிறார்,

அபர்ணாவும் வங்காளத்தின் ஆட்பூரே பாணி புடவைக்கட்டில் சுழன்று சுழன்று லாவணி ஆடுகிறார், அங்கே அபர்ணா மறைந்து விட , தன் அழகிய கன்னி மனைவி மைதிலியின் அழகில் சொக்கிய சாகேத்ராம் அவளை  கவர்ந்து கொண்டு படிகளில் ஏறுவார்,

அரண்மனையின் விஸ்தாரமான விருந்தினர் அறைக்கு கொண்டு சென்று அந்த ஹம்ஸதூளிகா மஞ்சம் போன்ற படுக்கையில் கிடத்தி காம தகனம் செய்கிறார்,அங்கே கன்னி மனைவியை முயங்குகையில் சற்று முன் இவர் மகாராஜாவின் ஆயுதக் கிடங்கில் தேர்வு செய்திருந்த Mauser broom handle துப்பாக்கியாக ( upscale model) மனைவி தோற்ற மயக்கம் தருவார்,( மனைவியைத் துகிலுரிவதைப் போலவே படத்தின்  பட்டறைக் காட்சியில் தன் Mauser ஐ அக்கு வேறு ஆணி வேறாக பிரித்திருப்பார் சாகேத்ராம்)

அதன் பிறகு அவர் காமம் கொள்வதேயில்லை, அந்த காம தகனக் காட்சியை உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் அது தெய்வங்களின் சங்கமம் போலத்தான் தோன்றும், தாந்த்ரிக் கலவி போல ஆலிங்கனம் செய்த தம்பதிகள் அங்கே ஆகாயத்தில் பயணித்து சக்கரம் போல சுழன்ற படி முயங்கி கீழே பூமிக்கு வருவர், 

நழுவி விழுகையில்  பறவைக் கோணப் பார்வையில் கோலாப்பூரின் நிலப்பரப்பும் மலைகளும் panhala கோட்டையும் தெரியும்,ஏரோப்ளேன் லேண்டிங் காட்சியிலும் இந்தக் கோட்டை பற்றி பார்த்தோம்.

 (இது மந்த்ரா அனிமேஷன் நிறுவனம் செய்தது ) அங்கிருந்து தொம்மென்று அந்த king size bed ல் தடாலென விழுவர் , காம தகனம் அங்கே அந்தக் கனத்தில்  நிறைவுரும்,சாகேத்ராம் நெடுநாள் மன பாரத்தை அங்கே தகனம் செய்தவர் பியானோவில் தனியாவர்தனம் வாசிப்பார், தன் விரித்த தலையைக் கட்டுவார்.

இப்பாடலின் தமிழ் வரிகளை எழுதியது கவிஞர் வாலி அவர்கள், பாடியது அனுபமா, மற்றும் மகாலஷ்மி ஐயர்.

இப்பாடலின் இந்தி வரிகளை எழுதியது சமீர் மற்றும் ஜகதீஷ் ,பாடியது அனுபமா,மற்றும் ப்ரீதி உத்தம் .

இந்தப்படத்தின் இசைக்கு மட்டும் இயக்குனர் தனக்கு எப்படி வேண்டும் என்று சொல்லாமல் தானாகவே பழம் நழுவி பாலில் விழுமே,  அது போல இசைஞானியிடமிருந்து கிடைத்ததாம்,

மகாராஷ்ட்டிரம் என்று சொன்னால் அந்த பிராந்திய வாத்தியம், கொல்கத்தா என்று சொன்னால் அந்த பிராந்திய வாத்தியம், தில்லி என்கையில் அந்த பிராந்திய வாத்தியம், தென்னகம் என்கையில் அந்த பிராந்திய வாத்தியம், என அவராகவே பார்த்துப் பார்த்துப் பார்த்து homework செய்து ஆத்மார்த்தமாகச்  செய்தாராம், இவர் மனதில் இருந்த ஒலியை அவர் நோட்ஸில் ,இசைக் கலைஞர்களை வைத்து வாசித்துக் காட்ட , மலைத்து, பிரமித்தேன் என்று ஒரு பேட்டியில்  சொல்லியிருந்தார் இயக்குனர்.

#prachee_shah_paandya,#லாவணி,
#கமல்ஹாசன், #kamalhaasan,#இசைஞானி #ஹேராம்,#ப்ராச்சீ_ஷா_பாண்ட்யா
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)