கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அமெரிக்க MIT பல்கலைகழகத்தின் நீர்நாய் மோதிரம் அறிவீர்களா?

அமெரிக்காவின் MIT (Massachusetts Institute of Technology) (1861 துவக்கம்) பல்கலைக்கழகம் உலகப்புகழ் பெற்றது, அதில் படிக்கும் மாணவர்கள் பிரத்யேகமாக Brass Beaver ( வட அமெரிக்க நீர்நாய்) பொறித்த மோதிரத்தை கல்வி காலம் முழுவதும் பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னும் அணிவது வழக்கம்,

நீர்நாய்கள் இயற்கையான பொறியாளர்கள் என்பதால் பொறியியலாளர்களுக்கு உலக அரங்கில் பெயர்பெற்ற MIT பல்கலைக்கழகம் தனது இலச்சினையாக கொண்டுள்ளது.

நீர் நாய்கள் மரக்கிளைகள், தாவரங்கள், பாறைகள் ,கற்கள், சேற்றைப் பயன்படுத்தி அணைகள்  தங்குமிடங்களைக் கட்டுகின்றன, சுரங்கம் தோண்டுகின்றன, பிற விலங்குகளுக்கு வசிக்க சுரங்க குடியிருப்புகள் கூட கட்டித்தருகின்றன, பிற விலங்கினங்களுடன் சண்டை இடுவதில்லை, இணக்கமாக வசிக்கின்றன.

MIT மாணவர்களின் மோதிரங்கள் தங்கம்,  வெள்ளி , எஃக்கு என அவர்களுக்குப் பிடித்த உலோக விருப்பத்திற்கு ஏற்ப அமைகின்றன, தங்கம் என்றால் இது போல 14 காரட் தங்கத்தில் தான் அமெரிக்கர்கள் ஆபரணம் செய்து அணிவர்,

அமெரிக்காவில் Balfour class jewely என்ற பழம்பெரும் நிறுவனத்தார் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி இறுதிக்கு பிரத்யேக மோதிரங்கள், cuff pins ,tie pins தயாரிப்பவர்கள், அவர்கள் 1960 ஆம் ஆண்டு பல்கலை இறுதிக்கு தயாரித்தது இந்த MIT மோதிரம்.

நம் நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் MIT  Sloan School of Management ல் MBA படித்தவர், கட்டமைக்கப்பட்ட கடன் உறுதிப் பரிவர்த்தனைகளை வழங்குவதற்கான முறைகள் மற்றும் அமைப்புகள் பற்றி ஆய்வறிக்கை தந்து காப்புரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Iron man திரைப்படத்தில் Tony Stark அணிந்து வரும் பெருமைமிகு  MIT 87 பட்டதாரி மோதிரம் இணைப்பு படத்தில் பாருங்கள்.

JEE Main, JEE Advance போட்டித் தேர்வுகள் பற்றி அனுபவ பகிர்வு

நேற்று மகளின் +2 பொது தேர்வு நிறைவு பெற்றதற்கு வந்த வாழ்த்துகள் எங்களுக்கு புதிய உத்வேகம் தந்தன, பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகும் என்பதன் அர்த்தம் அறிந்தேன்,வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி .

JEE Mains , JEE Advanced தேர்வுகள் அதன் பயிற்சி விபரங்கள் பற்றி சிலர் கேட்டிருந்தனர் ,அவர்களுக்காக இந்த பதிவு.

"JEE mains" போட்டித் தேர்வு  மதிப்பெண்களை வைத்து  இந்தியா முழுக்க உள்ள  31 நகரங்களில் உள்ள  NIT (National Institute of Technology) ல் சேரலாம்.

"JEE mains" போட்டித் தேர்வு  மதிப்பெண்களை வைத்து   இந்தியா முழுக்க   25 நகரங்களில் உள்ள  IIIT (Indian Institute of Information Technology) ல் சேரலாம் 

JEE advanced போட்டி தேர்வு மதிப்பெண்களை  வைத்து இந்தியா முழுக்க  23  நகரங்களில் உள்ள IIT ல் (Indian Institute of Technology)  சேரலாம்.

Delhi Technological University போல இதர பல அரசின் பெருமைமிகு தொழிற்நுட்ப நிறுவனங்களில் சேரலாம்.

நான் இதில் VIT போன்ற தனியார் நிகர்நிலை பல்கலை, பொறியியல் கல்லூரிகளை பற்றி குறிப்பிடவில்லை, அங்கும் இந்த JEE mains, JEE advanced மதிப்பெண்களை வைத்து மாணாக்கர்கள் சேரலாம்.

JEE mains மற்றும் JEE advanced  போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிக்காலம் சுமார் 3 வருடங்கள் வரும், ஒரு மாணாக்கர் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம் இளங்கலை  படிக்க எண்ணுபவர்  அவர் 95% மதிப்பெண்களுக்கு மேல் பள்ளி தேர்வுகளில் வாங்குபவர் என்றால் இந்த பயிற்சியில் தாராளமாக சேரலாம்.அர்த்தமாக இருக்கும்,

 குறிப்பாக இந்த பயிற்சியில் சேர மாணவர்கள் சுய விருப்பம் அவசியம், பெற்றோர் அழுத்தம் அறவே கூடாது, எனக்கும் என் மனைவிக்கும் இந்த JEE விபரங்களை நுணுக்கமாக படித்து சொன்னது எங்கள் மகள் தான், நாங்கள் இது வரை எந்த அழுத்தமும் தந்ததில்லை, இந்த துறை படி அதுவே சரி, என திணித்ததில்லை, அது நமக்கு ஒத்து வராது என தடுத்ததில்லை.

சில பள்ளிகளில் தினமும் வகுப்பு முடிந்த பின் integrated ஆக இந்த JEE பயிற்சி தருகின்றனர், என் மகள் பள்ளியில் அந்த பயிற்சி தருவதில்லை,நாங்கள் வசிப்பது பம்மல், பள்ளி இருப்பது குரோம்பேட்டை, எனவே எங்களுக்கு அருகாமையில் உள்ள JEE பயிற்சி மையம் என்றால் K.K.நகர் ராமசாமி சாலையில் உள்ள Fiitjee ஆகும்.

என்மகள்   9 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் , ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் FiitJEE மையம் நடத்தும்  bigbang ஸ்காலர்ஷிப் தேர்வு எழுதி 50% பயிற்சி கட்டண சலுகை பெற்றார், மகளிர்க்கான சலுகையான 25% பயிற்சி கட்டண சலுகையும் சேர மொத்தம் 75% பயிற்சி கட்டண சலுகை பெற்றார், ஒவ்வொரு வார இறுதி சனி , ஞாயிறும் முழு நேர வகுப்பு உண்டு, பண்டிகை விடுமுறை குறுக்கிட்டால், அதற்கு ஈடு செய்ய வார நாட்களில் மாலையில் வகுப்பு உண்டு, சனி மாலை 4-30 முதல் 8-30, ஞாயிறு காலை 9-30 முதல் 4-30 ,என வாரா வாரம் வகுப்புகள் உண்டு, வாரா வாரம் தேர்வுகள் உண்டு,இது தவிர வாரநாட்களில் மாலை வேளைகளில் TAB ல் பாடம் நடக்கும், தேர்வுகள் நடக்கும், 95 சதம் வருகை அவசியம், Fiitjee வகுப்பறைக்கு உள்ளே சென்ற மாணவர்கள் வகுப்பு முடிந்த உடன் தான் வெளியே வரமுடியும்.

ஒரு குழந்தைக்கு ஸ்பூனில் ஊட்டுவது போல துவங்கி தானே சாப்பிட வைப்பது தான் இப்பயிற்சியின் தத்துவம்,  10,11,12 ஆம் வகுப்புகளில் அவர்களின் பள்ளி பாடத்திட்டத்தில் இருக்கும் maths ,physics, chemistry பாடங்களுக்கேற்ப JEE advanced, JEE mains பாடங்களை இலகுவாக அனுகுவதற்கு தீவிரமான பயிற்சி அளிப்பார்கள், இதனால் 10th, 11,12 வகுப்புக்கு வெளியே ட்யூஷன் சேர அவசியம் இருக்காது, byjus போன்றவை சேர வேண்டாம், எனவே இந்த JEE பயிற்சிக்கட்டணம் 100% தகும் என்பேன்,அவர்கள் இந்த மூன்று வருடங்களுக்கு சுமார் 100 reference புத்தகங்களுக்கு மேல் தருகின்றனர், அவற்றை படித்து கணக்கு புதிர் நீக்கி பயிற்சி செய்தால் பள்ளியிலும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம், படிப்பில் ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி , கண்டிப்பாக இது மாணாக்கரின் தன்னார்வம் கோருகிற பயிற்சி,பெற்றோர் கட்டாயத்துக்காக சேர்ந்தால் நிச்சயம் மாணாக்கர்கள் அழுத்தம் தாளாமல் வெளியேறி விடுவர்.

எனவே என்னால் முடிந்தது சரியான நேரத்துக்கு பள்ளியில் இருந்து வீடு, வீடு முதல் பயிற்சி மையம்,பயிற்சி மையம் முதல் வீடு, மறுநாள் பயிற்சி மையம் என கண்ணும் கருத்துமாக மகளை கொண்டு விடுவேன், இதற்கு தான் priority, மற்றவை அடுத்த பட்சம் என வகுத்துக் கொண்டேன், இப்படி கொண்டு விட்டு கூட்டி வர முடிந்தவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம், காரணம் பல நாட்கள் வார இறுதி சாலை வாகன நெரிசல், கனமழை என வாட்டும்,அப்போது பெற்றோர் பயிற்சி முடிந்து திரும்பாத மாணாக்கரை நினைத்து பரிதவிக்க வேண்டும் என்பதால் சொல்கிறேன்.

அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பில் எல்லா பாடங்களிலும் 95% மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக தனியார் பயிற்சி மையங்களில் சேர முழுத்தொகைக்கும் கூட ஸ்காலர்ஷிப் கிடைக்கும், அந்த ஸ்காலர்ஷிப் தொகை மூன்று லட்சம் ரூபாய் இருக்கும், ஆனால் வேறு வழியில்லை, 
நாம் உதவி கேட்க தயங்கக் கூடாது, எத்தனையோ நல்ல உள்ளங்கள், அரசு பள்ளியில் படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்,சிறு நிறுவனங்கள் இன்று JEE ஸ்காலர்ஷிப் தருவதற்கு தக்க மாணவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், உங்கள் முன் சமூக ஊடகம் உள்ளது, தகுதி உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக உதவிகள் கிடைக்கும், அரசுப் பள்ளி மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் உங்கள் தேர்வுத் தாள்களை பிரதி எடுத்து வையுங்கள், தர அட்டையை பிரதி எடுத்து வையுங்கள், வகுப்பு ஆசிரியரிடம் தலைமை ஆசிரியரிடம் நற்சாட்சி பத்திரம் ,சிபாரிசு கடிதம் கேட்டுப் பெறுங்கள்.

அதன் பிறகு JEE main நுழைவுத்தேர்வுக்கு நான்கு வருட பயிற்சி தரும் Fitjee, Allen , Ahaguru, Resonance, Chate,PACE ,Bansal போன்ற நிறுவனங்களில் உங்களுடைய நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள், அதில் பயிற்சி கட்டண சலுகைக்கு நுழைவுத் தேர்வுகள் எழுதுங்கள், நன்கு படிக்கும் மாணவர்களால் 50% வரை கூட கட்டண சலுகை தேர்வெழுதி பெற முடியும்,நன்கு படிக்கும்  மாணவியருக்கு 25% சதம் கட்டண சலுகை மகளிர் முன்னேற்றத்துக்காக கூடுதலாக கிடைக்கும்.

9,10,11,12 ஆம் வகுப்புகளில் பள்ளிப்பாடம் உடன் இந்த JEE coaching ற்கும் சனி ஞாயிறு தினங்களில் செல்ல வேண்டி வரும்,நிறைய பயண அலைச்சல் இருக்கும், தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டி வரும், கடும் உழைப்பு கோரும் பயிற்சி,ஆனால் IIT க்குள் நுழைந்து விட்டால் ஒரு மாணவர் உழைத்த உழைப்பிற்கு வாழ்நாளுக்கும் பலனிருக்கும் .

CBSE மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நுழையும் IIT , IISC நிறுவனங்களுக்குள் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில்  நுழைய வேண்டும் என்பதே என் விருப்பம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உங்கள் மாணவர்களுக்கு அதற்கான வழிகாட்டுதலை முன்னெடுப்பை தாருங்கள்,ஒன்று பத்தாக,பத்து நூறாக, நூறு ஆயிரமாக, ஆயிரம் லட்சமாக வரும் ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருகுவர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற அரசாணை உள்ளதை நினைவில் வைப்போம், நம் மாணவ மணிகளுக்கு ஊக்கமும் உத்வேகமும் தருவோம்.

அரசுப்பள்ளியில் படித்து ஐஐடி, ஐஐஎஸ்சி,எய்ம்ஸ்-ல் இளநிலை பயில்வதற்கான முழு செலவை மாநில அரசே ஏற்கும்,6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்த உதவியை பெறலாம் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
18|03|2022-2:00PM

பின்குறிப்பு: உங்கள் குழந்தைகளை JEE பயிற்சியில் சேர்க்க விழைவோர் ஒருமுறை இங்கே K.K. நகர் சென்று விசாரிக்கவும்,பல தகவல்கள் தருவர்,எனக்கு சேத்துப்பட்டு , நுங்கம்பாக்கம் பிற மையங்கள் பற்றி தெரியவில்லை, competitor பயிற்சி நிறுவனங்கள் பற்றி தெரியவில்லை.

Fiitjee Towers, DR, 51, Ramaswamy Salai, K. K. Nagar, Chennai, Tamil Nadu 6000780, 44 4213 5965

 இதற்கென்றே குணமான ஒருவரை நியமித்துள்ளனர்,அவர் தமிழகமெங்கும் உள்ள மற்ற பயிற்சி மையங்கள் பற்றிய தகவல்களையும் தருவார்,ஒரு முறை பெற்றோர் சென்று வாருங்கள்,அடுத்த முறை ஐயங்களை குழந்தைகளுடன் சென்று கேளுங்கள்,அதன் பின் அவர்கள் தந்த brochure ஐ ஒன்று விடாமல் படிக்க சொல்லுங்கள்,படியுங்கள், JEE விண்ணப்ப படிவம் 30 பக்கம் இருக்கும், படிப்பவரும் பெற்றோரும் என 90 கையொப்பம் இட வேண்டி வரும், Exit ,Instalment ,Fullpay என மூன்று options உள்ளது,நீங்கள் மூவர் சேர்ந்து என்ன option சேருவது என முடிவு செய்யுங்கள், அதற்கு இந்த நேரே சென்று விசாரிப்பது மிகவும் பயனளிக்கும்,

எனக்கு business calls மட்டுமே ஏற்று பேச முடியும் என்பதால் கமெண்ட்ஸில் உங்கள் ஐயங்களை எழுதவும், நிச்சயம் பதிலளிக்கிறேன், அது பிற பெற்றோருக்கும் FAQ போல அமையும்.

ஸ்டில்ட் ஃப்ளோர் | Stilt Floor என்றால் என்ன ? மெஸ்ஸனைன் ஃப்ளோர் | Mezzanine Floor என்றால் என்ன?

நம்மில் பலருக்கும் Stilt Floor என்றால் Parking Floor அல்லது தரைத்தளம் என்று என்று தெரியும்,இங்கு liftlobby,staircase,electrical room அமையும். 

ஸ்டில்ட் பார்க்கிங்கின் உயரம் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் வரை இருக்கும்,

தரைத்தளம் Car Parking இன்றி அமைகையில் , சுற்றிலும் சுவர் அல்லது structural glazing செய்து மூடுகையில்  Ground Floor என்றும்  அழைக்கப்படுவதுண்டு, 

இந்த Stilts என்பதன் அர்த்தம் நேரடியாக பொய்க்கால் ஆட்டகலையில் கலைஞர்கள் காலில் அணிந்து நடக்கும் பொய்ங்கால் கட்டைகளான  stilts ஐயே குறிக்கிறது, எனவே எங்கே எல்லாம் கட்டிடத்தின் தூண்கள் கட்டிடத்தை தாங்கி நிற்பது போல அமைகிறதோ அந்த தளத்தை Stilts Floor என அழைக்கின்றனர், 
ஒரு பத்து வருட அனுபவமுள்ள பொறியாளருக்கு Stilts Floor என்பதன் அர்த்தம் தெரியாமல் விழிக்கவே அவருக்கு parkinking floor என்றேன், புரிந்தது, அவருக்கு இதமாக  சொல்லித்தந்தேன், அவர் மிகவும் நன்றி சொன்னார், இந்த அறிவு பலருக்கு உதவும் என்று பதிவிடுகிறேன், உதாரண இணைப்பு படங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கவும்.

PS: அதே போலவே Mezzanine Floor பற்றியும் அறிவோம்.

பாதி தளம் அல்லது அரை தளத்திற்கு இத்தாலி மொழியில் இருந்து பிறந்த terminology இந்த Mezzanine.

Mezzanine என்பது இத்தாலிய வார்த்தையான மெஸ்ஸாவிலிருந்து வந்தது, 

உதாரணமாக இத்தாலி உலக சினிமாவான 8 1/2 க்கு இத்தாலி பதிப்பின் பெயர் "Otto e mezzo" 

 அதாவது  otto என்றால் எட்டையும் e என்றால் மற்றும் mezzo என்றால் "பாதி" அல்லது அரை என கொள்க, 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தளங்களில் பெயர் வழங்குதலுக்கு இந்த Mezzanine என்ற  சொல்லாடல் அரை அல்லது பாதி உயரமுள்ள தளங்களுக்கு  நூற்றாண்டுகளாக வழங்கப்படுகிறது.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

இந்தியாவின் முதல் கணினியை வடிவமைத்த பேராசிரியர் ரங்கசாமி நரசிம்மன்


பேராசிரியர் ரங்கசாமி நரசிம்மன்  இந்தியாவில் கணினி அறிவியல் துறையில் முன்னோடியாவார், இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரான கணினி TIFRAC இன் முதன்மை வடிவமைப்பாளர் இவர்.

TIFRAC என்பது Tata Institute of Fundamental Research Automatic Calculator என்பதன் சுருக்கமாகும் 

TIFRAC  மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட முதல் கணினி , 1950 ஆம் ஆண்டு தொடர் ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு முதலில் இயக்கப்பட்டது.

இப்புகைப்படத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஹோமி பாபா ஆகியோர் உள்ளனர், பேராசிரியர் ரங்கசாமி நரசிம்மன் முதல் இந்திய டிஜிட்டல் கணினியை ஜவஹர்லால் நேரு மற்றும் ஹோமி ஜே. பாபா ஆகியோருக்கு டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச்சில் இயக்கி காட்டும் தருணம் இது.

TIFRAC  குறைந்தபட்ச வன்பொருளையே (hardwares) கொண்டிருந்தது, முக்கியமாக அதன் CPU ஒவ்வொன்றும் 40 பிட்கள் கொண்ட 1024 வார்த்தைகள் நினைவகத்தை கொண்டிருந்தது.  காகித நாடா (paper tape )உள்ளீடு மற்றும் டெலிபிரிண்டர் மட்டுமே வெளியீட்டு சாதனமாக கொண்டிருந்தது.

இதன் அடிப்படை மென்பொருள் bootstrap மற்றும் ஒரு
 ஒரு சில துணை நிரல்களின் பயனர் நிரல்களையும் library ல் சேமிப்பதற்கான எளிய நிரல் கொண்டது . இதன்  நிரல் உருவாக்கம் (program development) சிக்கலானது மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்வதாக இருந்தது.

TIFRACக்கு நல்ல  குளிர்சாதன வசதி  தேவைப்பட்டது.  அறையின் தட்பவெப்பம் 20° க்கு குறைகையில் அதன் வன்பொருளில் தொடர்பு சிக்கல்கள் எழுந்தன.

கல்வி நோக்கத்திற்காக கணினிகளைப் பயன்படுத்தவும் நாட்டில் கணினி பயன்பாட்டிற்கும்   TIFRAC ஒரு நல்ல தொடக்க புள்ளியாக இருந்தது. 

அப்போது  IBM இந்தியாவில் கணினி சந்தையில் நுழைந்திருந்தது, முக்கியமாக வணிக பயன்பாட்டிற்கான கணினி சந்தையில் நுழைந்திருந்தது, IBM1401 என்பது முதல் வணிக கணினி ஆகும் ,  IBM1620 என்பது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட  முதல் கல்வி கணினி ஆகும் .

TIFRAC ற்கு முக்கிய பயனர்கள் கல்வி சார்ந்தவர்கள் ஆவர்.  TIFRன் காஸ்மிக் ரே பிரிவு, மெட்ராஸ் பல்கலைக்கழகம், ISI-பெங்களூர், மற்றும் மத்திய நீர் மற்றும் சக்தி ஆராய்ச்சி (CWPR) புனே வை குறிப்பிடலாம்.

இந்தியாவில் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பீஷ்மர் என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஆர் நரசிம்மன் (1926-2007) ஆரம்ப கட்டங்களில் இந்தியாவில் கணினி அறிவியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

1947 ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில்  தொலைத்தொடர்புப் பொறியியலில் பட்டம் பெற்ற பின், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் எம்எஸ் பட்டம் பெற்று இந்தியானா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலைப் ஆராய்ச்சி பணிக்காக சென்றார்.  

1954 ஆம் ஆண்டு டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) பாம்பேயில் இணைந்தார். அவர் முப்பத்தாறு ஆண்டுகள் TIFR இல் பணியாற்றினார், 1990 ஆம் ஆண்டு எமினென்ஸ் பேராசிரியராக ஓய்வு பெற்றார்.  

1954-1960 காலகட்டத்தில், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் ஆட்டோமேட்டிக் கால்குலேட்டரை (TIFRAC) வடிவமைத்து கட்டமைத்த குழுவை அவர் முன்னின்று வழிநடத்தினார், 
இந்தியாவில் செயல்பாட்டிற்கு வந்த முதல் மின்னணு டிஜிட்டல் கணினி மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 

டாக்டர். நரசிம்மன் தனது கல்வி வாழ்க்கையின் பெரும்பகுதியை TIFR இல் செலவிட்டார், நிறுவனத்தின் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தை உருவாக்கினார்.

 பேராசிரியர் ஆர் நரசிம்மன் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியாவை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார் , அதன் முதல் தலைவராக பணியாற்றினார். 

பேராசிரியர் நரசிம்மன்  கணினி பராமரிப்புக் கழகம் (CMC) அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.  

பேராசிரியர். ஆர். நரசிம்மன் தலைமையில், TIFR-க்குள் ஒரு தன்னாட்சிப் பிரிவு, மென்பொருள் மேம்பாடு மற்றும் கணினி நுட்பங்களுக்கான தேசிய மையம் (NCSDCT) உருவாக்கப்பட்டது.

இந்த பிரிவின் இயக்குநராக பேராசிரியர் நரசிம்மன் இருந்தார்.  இந்திய அரசின் மின்னணுவியல் துறைக்கு பல்வேறு வழிகளில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
கணினி தொழில்நுட்பம் மற்றும் வடிவ அங்கீகாரம் ஆகியவற்றில் அவர் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.  

அவர் Syntax pattern recognition பகுதியில் பணிக்கு முன்னோடியாக இருந்தார்.  அவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில், அவர் Manners and behavior அறிவியலின் ஆய்வுக்கு அமைப்பு-கோட்பாட்டு கருத்துக்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு தன்னை அற்பணித்தார்.

சமூக-பொருளாதார செயலாக்கம், Modeling language behavior, அறிவியலின் பங்கு ஆகியவற்றில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு சமூக மாற்றம் மற்றும் தொழில்நுட்ப கொள்கை சிக்கல்கள் பற்றிய தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.  

பேராசிரியர். நரசிம்மன் தகவல் செயலாக்கத்திற்கான சர்வதேச கூட்டமைப்பு கவுன்சிலின் இந்தியப் பிரதிநிதியாக இருந்தார் (1975-86);  

உறுப்பினர், அறிவியல் ஆலோசனைக் குழு, மேம்பட்ட ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான இந்தோ-பிரெஞ்சு மையம் (1988-90).

பேராசிரியர் நரசிம்மன் ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் (1971-73) பெற்றவர்;  

ஹோமி ஜே. பாபா விருது (யுஜிசி)
 (1976);  

ஓம் பிரகாஷ் பாசின் அறக்கட்டளை விருது 

(1988) மற்றும் பத்மஸ்ரீ  விருது(1976).  
இந்திய அறிவியல் அகாடமி விருது,

பெங்களூர், கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா விருது.
அலகாபாத் தேசிய அறிவியல் அகாடமி விருது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)