ஓரினச்சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓரினச்சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோணங்கி | மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்பதன் வாழும் உதாரணம்


`மனிதன், மகத்தான சல்லிப்பயல்'!

`நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் எனக் கேட்டு தப்பித்துக்கொள்ள பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால், முழுமையும்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.' 

~எழுத்தாளர் ஜி.நாகராஜன்~

நேற்று முன்தினம் துவங்கி எங்கு நோக்கிலும் அந்த ஓரினசேர்க்கை எழுத்தாளரின் பாலியல் வல்லுறவு கண்டன பதிவுகள் காணக்கிடைக்கின்றன, கண்டும் காணாமல் போக முடியவில்லை என் மகனுக்கு இப்படி ஒரு அவலம் நேர்வதை  நினைத்துப் பார்க்ககூட கூசுகிறது ,அச்சமாக உள்ளது, இது போன்ற எழுத்தாளர் எழுதிய படைப்புகள் எனக்கு பீக்கு சமானம்,ஆமாம் இது போல சூழலுக்கு ஏற்ற பொருத்தமான சொல்லை அன்றே விருமாண்டி சொன்னார்.

வல்லுறவுக்கு ஆளான  அந்த விடலைச் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் உடல் மற்றும் மனரீதியாக எத்தனை காயப்பட்டிருப்பார்கள்? என இங்கு சொல்ல வேண்டியதில்லை, 

அந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ ஆலோசனை மற்றும் தரமான  உரிய மனநல ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும்.

காரணம் , எதிர்பாராத அல்லது அதிர்ச்சிகரமான சூழலில் நிகழும்  குதப்புணர்ச்சி அல்லது வாய்ப்புணர்ச்சி வல்லுறவு பாதிக்கப்பட்டவரின் வாழ்நாள் முழுக்கத் துரத்தும், கடுமையான மன உளைச்சலைத் தரும், வாழ்நாள் முழுக்க கடுமையான தாழ்வு மனப்பான்மையைத் தரும், முன்னேற்றத் தடையைத் தரும்,கல்வியில் கவனம் செல்லாது, பணியில் சாதிக்க விடாது, தற்கொலைக்குத் தூண்டும், சமூகத்தை வெறுக்க வைக்கும், தன் உடம்பை வெறுக்க வைக்கும், தன் பாலினத்தை சந்தேகிக்க வைக்கும், பின்நாளில் மணவாழ்க்கையில் நுழைய கூட  தயக்கம் தரும்.

நம் சமூகத்தில் இது போன்ற வல்லுறவால் பாதிக்கப்பட்ட ஒருவர்,  தான் இந்த வல்லுறவுக்கு ஆட்பட்டேன் என்று சொன்னால் பெற்றோரிடம்  இழிசொல்லும், உற்றார் உறவினரிடம் அவமானமும் நெருங்கிய நண்பர்களிடம் கூட ஏளனம் தான் மிஞ்சும் என்பது கண்கூடு.

கடந்த பத்து வருடங்களாகத் தான் நம் வீட்டுக் குழந்தைகள் குட் டச் பேட் டச் பற்றி  பரவலாக அறிந்து முன்னெச்சரிக்கையுடன் நடக்கின்றனர், 
குடும்பத்தார் தூரத்து உறவினர் கூட குழந்தைகளைத் தொடாமல் உரையாடும் புதிய வழக்கம் கூட நம்மிடையே உருவாகியுள்ளது, 
பீடோஃபைல் மற்றும் இன்ஸெஸ்ட் தன்மை கொண்டவர்களை இன்றைய குழந்தைகள் அடையாளம் காண்பதற்கு போதிய அறிவு மற்றும் புரிதல்  உள்ளன, 

ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதை பொதுவில் வெளிப்படையாக அறிவித்து அது தெரிந்து வலிய வந்து பழகுபவர்களிடம்  ஓரினச் சேர்க்கை உறவு கொள்ளட்டும்,
ஒன்றும் அறியாமல் நம்பி வந்து வல்லுறவுக்கு இரையாகும்  விடலைகள் எதிர் கொள்ளும் வலி  மற்றும் மனத்துயர் கொடூரமானது, அவர்களின் உள்ளத்தவிப்பை வார்த்தையில் யாரும் எழுதி விட முடியாது, 
இந்த சமூகத்தில் அதற்கான ஆறுதல் பெற வெளி இன்னும் இங்கில்லை,

எப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் வருகிறதோ அப்படி ஆணுக்கும் ஆணுக்கும் , பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் வரும், அப்படி இயற்கையாக ஒத்திசைந்து காதல் வருகையில் அவர்கள் மனம் ஒத்து, ஊரறிய  லிவின் வகை உறவில் சேர்ந்து வாழ்ந்து ஓரினச்சேர்க்கை காதலர்களாக வாழ்க்கையை முயன்று பார்க்கட்டும், தடுக்கவில்லை.

ஐந்து வருடங்கள் அந்த பந்தம் நிலைத்தால் மனமும் உடலும் இசைந்தால்,உள்ளம்  உறுதி கொண்டால்,  அத்தம்பதிகள் ஒருபால் திருமணம் கூட புரியட்டும், ஒரு பால் உறவிலும் ஓருவருக்கு ஓருவர் உண்மையாக இருக்க வேண்டிய தார்மீக புரிதல் அவசியம், நான் போகிற போக்கில் சந்திக்கும் அனைவருக்கும் ஆசனவாயை தருவேன், வாய்புணர்ச்சி பெறுவேன், என ஒரு ஓரினச்சேர்க்கையாளர் வாழ்வது மிகவும் அருவருக்கத்தக்கது.

இது போல மனநிலை கொண்டவர்கள் சமூகத்தில் மிகவும் ஆபத்தானவர்கள், பெயரெடுத்த வல்லுறவாளர்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை, 

இவர்கள் வல்லுறவு செய்த பதின்ம வயது பாலகர்கள் அல்லது இளைஞர்களுக்கு உரிய ஆறுதல், மருத்துவ உதவி,  மனோதத்துவ நிபுணர் சிகிச்சை  கிடைக்காத பட்சத்தில்  தாம் வாழும் சமூகத்தை முற்றிலும் வெறுக்கத் துவங்கலாம், சோஸியோபாத் ஆகலாம் , நாளடைவில் சைக்கோ ஜெயசங்கர் , சைக்கோ ஜான்டேவிட் , சைக்கோ தஷ்வந்த் போல மாறக் கூட  வாய்ப்பு உண்டு,காரணம் அவர்கள் எதிர்கொண்ட வலி அதிர்ச்சி அத்தகையது.  

காரணம் இவர்களுக்கு கிடைக்காத மன ஆறுதல் தான், ஆங்கிலத்தில் பெய்ன் இன் த ஆஸ்  என்பார்கள், மூலவியாதிக்காரர்கள் அதை நன்கு அறிவார்கள், அந்த வலியை பாலகர்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிர்ச்சிகரமான தருணத்தில் வல்லுறவில் தருபவர்கள் மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்களே, 

அவர்கள் இருபாலின சேர்க்கையாளராகவும்  இருந்தால் இன்னும் ஆபத்தானது,
நம்பி வந்த மனைவிக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருக்கும், பெற்ற தாயிடம் கூட தன் கணவனின் விபரீத இச்சையை அவள் அனுபவிக்கும் வலியை பகிர முடியாது என்கையில் வேறு யாரிடம் அதை பகிர்ந்து விட முடியும்?, 
இருபாலின இச்சை கொண்டவர்களின் மனைவியர் பாவப்பட்ட பிறவியர் எனலாம், எந்த நம்பிக்கையில் தன் கணவனுடன் பயமின்றி பாதுகாப்பு கவசமின்றி உடலுறவு கொள்ள இயலும்? 
நம்பி வந்த மனைவிக்கு இப்படி துரோகத்தை செய்வது எத்தனை இழுக்கானது?, கணவன் எங்காவது இரவு தங்கி விட்டு வந்தால் மனைவி மனம் என்ன பாடு படும், கணவன் அறையில் யாரேனும் விருந்தினர் வீட்டு விடலை வந்து தங்கினால்,திருடனுக்கு தேள் கொட்டியது போல  எப்படி மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்? 

நம் சமூகத்தில் ஓரினச்சேர்க்கை இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான பாவச்செயல் தான் என்கையில்  ஓரினச்சேர்க்கையில் வல்லுறவு மிருகத்தனமானது.

ஒரினசேர்க்கையாளர்களான இருபாலர்களுக்கும் சொல்வது இது தான்,  உங்களுக்கு ஏற்ற ஒத்திசைவுடன் காதலன் அல்லது காதலி  கிடைத்தால் நேர்மையாக துரோகம் செய்யாமல் சமூகத்துக்கு தொந்தரவு இல்லாமல் அந்த ஓரினச்சேர்க்கை உறவை தொடருங்கள், 

இல்லையா, பகீங்கரமாக எனக்கு ஓரினசேர்க்கைக்கு நிரந்தர துணை தேவை   என உங்கள் சமூக ஊடக biodata பகுதியில் பிரகடனப்படுத்துங்கள், காரணம் குதம் கிழிந்து புண்ணாகையில் பால்வினை நோய் இருவருக்குமே பரவும்,பால்வினை மருத்துவர் பிறப்புறுப்பில் செலுத்தும் தடுப்பூசியின் வலியை விட அவரின் ஏச்சு பேச்சு,ஏளனப் பார்வை அத்தனை கொடியது.
எஸ்டிடிடி , சிபில்லிஸ், ஹெச்ஐவி என மேக, ஏப்பு வியாதிகள் வந்தால் அந்த கணவன் மனைவியின் இரு குடும்பங்கள் நொடியில் தகரும், 
இருபாலின சேர்க்கை என்பது பெருமையல்ல , மனைவியை ஏமாற்றுவது, பெற்ற குழந்தைகளை ஏமாற்றுவது ஆகும், 

ஒரு இருபால் இச்சை உறவாளருக்கு இருபது வயதில் மகன் இருக்கிறான் எனக் கொள்வோம்,அந்த தந்தை இருபது வயது உள்ள  இளைஞன் ஒருவனுடன் வல்லுறவு கொள்வது மகனுடன் வல்லுறவு கொள்வதற்கு ஒப்பான இழிசெயலாகவே நான் பார்க்கிறேன், 

மணந்த பாவத்துக்காக மனைவிக்கு பாலியல் தொற்று நோயைத் தருவது இழிச்செயல்,பஞ்சமாபாதகமாகும்.

அமீரகத்தில் பணிபுரிகையில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சாதாரணமாகத் தென்படுவர், ஃபிலிப்பினோக்கள் அதில் அதிகம், மிகவும் அழகிய இளம்பெண்கள் இப்படி ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்களாகி விடுவர்,அதை  பணியிடத்தில்  யாருமே பொருட்டாக கருத மாட்டோம், அந்த பெண்கள் ஆண்களை ஏறெடுத்தும் கூட பார்க்க மாட்டார்கள், தனக்கு கிடைத்த பெண் துணைக்கு அத்தனை உண்மையாக இருப்பார்கள்,கைகோர்த்து தான் நடப்பார்கள்,அத்தனை பொஸஸிவ்னெஸ் அவர்களிடையே இருக்கும்.

அமீரகத்தில் புதிதாக வரும் இந்தியர்களுக்கு சொல்லும் பொதுபுத்தி  அறிவுரை உண்டு, பத்தான் (பஷ்தூன்) டாக்ஸியில் பயணிக்கையில் ஓட்டுனர் இருக்கை அருகே அந்த பயணி  அமரக்கூடாது ,அமர்ந்தால் பாலியல் சீண்டல்  செய்வர், பத்தான்கள் தங்கி உள்ள வில்லா மீது பறக்கும் புறாக்கள் கூட இறகுகளால் ஆசனவாயை மறைத்துக் கொண்டு தான் பறக்கும் என்ற மலினமாக நகைச்சுவையைக் கூட நம்மாட்கள் பகிர்வர், ஆனால் அது உண்மையில்லை என்பதை 15 வருட அமீரக வாழ்க்கையில் கண்டறிந்துள்ளேன், பாய்ஜான் என்று சொல்லிவிட்டால் அத்தனை மகிழ்ச்சி கொண்டுவிடுவார்கள் , அப்படி முன்னின்று  உதவுவார்கள் அவர்கள், நம்மாட்களுக்கு எங்கே யாரை சந்தேகிக்க  வேண்டும்,யாரிடம் அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், எந்த விஷயத்தை நகைச்சுவையாக்கி நீர்த்து போக வைக்க வேண்டும் என்றே தெரியாது என்பதற்காக இந்த பத்தான் உதாரணத்தை இங்கே பகிர்ந்தேன், முன் பின் தெரியாத பத்தான்கள் கூட செய்யாத ஒரு கொடிய வல்லுறவை மன சிதைத்தலை எழுத்தாளர் என்ற  போர்வையில் ஒரு வல்லுறவாளர் செய்வது கடும் தண்டனைக்குரியது. 

மேலை நாடுகளில் ஆத்மார்த்தமான தம்பதிகளிம் இதுதான் வழக்கம், ஒருபால் ஈர்ப்பாளர்கள்  , ஸ்ட்ரெயிட்  என யாருமே கோர்ட்ஷிப் என்ற பழகும் காலத்தில் டேட் செய்து துணையை கண்டறிந்து நிதானமாக  ரிலேஷன்ஷிப் காலகட்டத்திற்குள் நுழைவர், அதன் பின்னர் ஐந்தாண்டு கடந்து தான் திருமணம், கோர்ட்ஷிப்பிற்கு முன் எத்தனை பேரிடம்  பழகுகிறோம் என்பது பொருட்டல்ல ஆனால் ரிலேஷன்ஷிப் காலத்தில் நிகழும் துரோகம் மன்னிக்க முடியாததாகவே அத்தம்பதிகள் கருதுகின்றனர், வெட்லாக் ஆன பின் துணைக்கு செய்கிற துரோகத்தை மகா பாவமாகவே கருதுகின்றனர், 
அது போல நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண்டால் கூட போதும் இங்கே கணவன் மனைவிக்கோ , மனைவி கணவனுக்கோ எந்த நிலையிலும் துரோகம் இழைக்கவே மாட்டோம்.

எழுத்தாளர் J. M. Coetzee எழுதிய Disgrace கதையில்  தன்னிடம் உள்ள internal marks என்ற லகான் துணையுடன் இளம் கல்லூரி மாணவி மெலனியை வலுக்கட்டாயமாக பெண்டாளும் பேராசிரியர் டேவிட் லூரி ஒரு தெருநாயைப் போலவே வாழும் காலத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு மனசாட்சியால் தண்டனை அடைவதைக் காண்போம்.
அக்கதையில் வல்லுறவுகொள்ளப்படுவது இளம்பெண் என்றாலும் கூட இக்கதையின் பேசுபொருள் ஒன்றே , அதாவது "மனத்தை சிதைத்தல்".
Disgrace பற்றி இங்கே படிக்கலாம்

https://m.facebook.com/story.php?story_fbid=10155449628286340&id=750161339&mibextid=Nif5oz

கோணங்கி பல்லாண்டுகளாக அரங்கேற்றிய இளைஞர்கள் வல்லுறவு பற்றி வினி சர்பனா எழுதிய  விகடன்  கட்டுரை இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10160939969206340&id=750161339&mibextid=Nif5oz

#me_too
#SpeakUpAgainstAbuse
#ArtistsAgainstAbuse
#EndSexualAbuse
#KonangiExposed
#NoMoreSilence
#MeTooArtistCommunity
#BreakTheSilence
#ProtectSurvivors
#JusticeForVictims
#HoldPerpetratorsAccountable
#StopSexualAbuseInArt
#SafeArtistsCommunity
#SupportSurvivors
#TogetherAgainstAbuse

தொடர் வல்லுறவாளர் கோணங்கி தங்கியுள்ள மதுரை அறை

விகடன் இந்த சமூக கட்டுரையை சடுதியில் நீக்கி விடலாம்,archive செய்யலாம் ,ப்ரீமியம் ஸ்டோரி ஆக்கிவிடலாம் என்பதால் அப்படியே copy செய்து பதிவிட்டுள்ளேன்,ஆண் குழந்தையை , பெண்குழந்தையை பெற்றோர் என  அனைவரும் ஒரு நிமிடம் ஒதுக்கி வாசியுங்கள்.

எழுத்தாளர் கோணங்கி பெயருக்கேற்பவே கோணல் புத்தி கொண்டு, சிறார்களை வல்லுறவு கொள்வதற்கென்றே மலினமான லாட்ஜில் அறை நிரந்தரமாக எடுத்து வைத்திருப்பதை படிக்கவே நாராசமாக , நரகலை மிதித்ததற்கு ஒப்பான  அருவருப்பாக உள்ளது, அந்த இளைஞர்களின் மனத்துயர் அறிவோம்,ஆதரவாக உடன் நிற்போம்.

https://www.vikatan.com/crime/gender/karthick-who-is-a-victim-of-sexual-abuse-talks-about-writer-konangi

// "எழுத்தாளர் கோணங்கி பாலியல் சித்திரவதை செய்தார். இப்ப புகாரை நீக்கச் சொல்லி..." பாதிக்கப்பட்ட மாணவர் .

ஆக்கம் : வினி சர்பனா

"நான், கோணங்கியால் பாதிக்கப்பட்டதை வெளியில சொன்னதும் பல பேர் பாதிக்கப்பட்டதாக ஃபேஸ்புக்ல் எழுதியிருக்காங்க." - கோணங்கி மீது பாலியல் புகார் கூறியுள்ள மாணவர் பேட்டி

பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது கார்த்திக் என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் பதிவிட்டிருக்கும் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாணவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், "டீன் ஏஜ் காலகட்டத்தில் கோணங்கியை ஒரு காட்ஃபாதராக நினைத்துப் பழகினேன். ஆனால், அவர் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால், நான் மனச்சிதைவுக்கு ஆளானேன். அவரிடமிருந்து போன் அழைப்பு வந்தாலே பயமும் வந்துவிடும். இதனால், தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப்பட்டேன். என் வாழ்க்கையே நரகமாகிவிட்டது” என்று தன் வாக்குமூலமாக போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். இது வாசகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் கார்த்திக்கையே தொடர்புகொண்டு பேசினேன்.

“எனக்கு நாடகம் நடிக்கிறதுல ஆர்வம் அதிகம். அதனால, காலேஜ் படிக்கும்போது கோணங்கியோட தம்பி முருகபூபதி நடத்துற 'மணல் மகுடி' நாடகக் குழுவுல சேர்ந்தேன். அப்போதான், கோணங்கி நேரடியாக அறிமுகமானார். ஒரு பெரிய எழுத்தாளர் நம்மகிட்ட நேரடியா சகஜமா பேசுறது ஒரு சந்தோஷத்தைக் கொடுக்குமில்லையா? அப்படித்தான் எனக்கு இருந்துச்சு. அவரை ஒரு காட்ஃபாதர் மாதிரி நினைச்சேன். நாடகக்குழு வெளியூரெல்லாம் போகும்போது அவரும் கூடவே வருவார். ரொம்ப அக்கறையா பேசுவார். அவர் அப்படி எளிமையா இருக்கிறது எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கும். ஆனா, போகப் போகத்தான் அவரோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்சது. அவரோட ஊரு கோவில்பட்டியா இருந்தாலும் எழுதுவதற்காகவே மதுரையில ஒரு ரூம் எடுத்து தங்கியிருந்தார். பிறகுதான் தெரிஞ்சது, அவரு தப்பா நடந்துக்கிறதுக்காக அந்த ரூமை எடுத்து வெச்சிருக்கார் என்பது.

டைப் பண்ணனும்னு சொல்லி என்னைக் கூட்டிக்கிட்டு போவார். எனக்கு அதுபற்றிய நாலேஜ் கிடையாது. ஒரு பெரிய எழுத்தாளர் கூப்பிட்டா போகாம எப்படி இருக்கமுடியும்?” என்கிறவர் அதற்குப்பிறகு சொல்ல ஆரம்பித்ததுதான் அதிர்ச்சி ரகம்.

“போனதும் சட்டையக் கழட்டச் சொல்லிடுவாரு. வெறும் துண்டை மட்டும் கட்டிக்கிட்டு உட்காரச் சொல்லுவாரு. வீட்டுல இருக்கிறமாதிரி கம்ஃபர்டபிளா இருக்கணும்ங்கிறதுக்காக சொல்றார்ன்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது, என்கூட தப்பா நடந்துக்கத்தான் அதுன்னு... இரவு ஆகிட்டாலே என்னை ட்ரிங்ஸ் பண்ணச் சொல்வார். அப்போதெல்லாம் எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. ஆனா, அவர் குடிப்பார். அந்த நேரத்துல என்கிட்ட தப்பா நடந்துக்குவாரு. அவர் இப்படிப் பாலியல் வன்முறையில ஈடுபடுவது எனக்கு அதிர்ச்சியா இருந்தது. மதுரையிலிருந்து கோவில்பட்டிக்குப் போனாலும் போன் செய்து அங்கேயும் வரச்சொல்வார். கிட்டத்தட்ட மூணு வருஷம் என்னை இந்த சித்திரவதைக்கு ஆளாக்கினார். எனக்கு அப்போ 19 வயசு. 'உன்கிட்ட நிறைய திறமை இருக்கு'... அப்படின்னு ரொம்ப என்கரேஜ் பண்ணி ஏமாத்துவார். இப்படித்தான் அவரோட அப்ரோச் இருக்கும். அவரை எதிர்த்துப் பேசமுடியல. தள்ளிப் படுத்தாலும் விடமாட்டார்.

நான் வந்த பிறகுதான், என்னை மாதிரியே பாதிக்கப்பட்ட இன்னொரு பையனும் கோணங்கியோட தம்பி பூபதிகிட்ட புகார் சொன்னார். அவர், 'அய்யய்யோ, அவர் இப்படியா நடந்துக்கி்றார்'னு புதுசா கேட்கிறமாதிரி கேட்டார்.

ஒருமுறை, நடந்தா பரவாயில்ல. அவரோட தம்பிக்கிட்ட நான் பார்த்து புகார் கொடுத்ததே 3 பேர். இந்த 10 வருசத்துல நிறைய ஆண்கள் கூட தப்பா நடந்துக்கிட்டிருக்காரு. அவரோட தம்பி கண்டுக்கல. அவரும் இதற்கு உடந்தைதான் போல" என்று சந்தேகம் எழுப்புகிறவரிடம், "பத்து ஆண்டுகள் கழித்து தற்போது இதை பிரச்னை ஆக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பப்படுகிறதே? அப்போதே, கோணங்கியின் அண்ணன் ச.தமிழ்ச்செல்வனிடம் சொன்னீர்களா? காவல்துறையில் புகார் கொடுக்காதது ஏன்?" என்று கேட்டேன்.

"அப்போ, அந்த வயசுல இதை வெளியில சொன்னா அசிங்கம்னு இருந்துட்டேன். எனக்கும் ஒரு குற்ற உணர்வா இருந்தது. கோணங்கியால என்னை மாதிரியே நிறைய பேரு பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும் இன்னும் கோபம் அதிகமாகிடுச்சு. அதனாலதான், இப்போ தைரியமா வெளியில சொல்றேன். என்னை மாதிரியே பாதிக்கப்பட்டவங்களும் ஃபேஸ்புக்கில் இதுபற்றி எழுதியிருக்காங்க. முக்கியமாக கோணங்கியோட அண்ணன் பையனே எழுதியிருக்கார். அதாவது, கோணங்கியின் அண்ணன் மகனின் நண்பனிடமும் கோணங்கி தவறாக நடந்துகொண்டிருக்கிறார். அவருடைய அண்ணன் ச.தமிழ்ச்செல்வனிடம் நான் இதைச் சொன்னதில்லை. ஏன்னா, அவர் வெளியூரிலிருந்து வந்து செல்வார்” என்கிற கார்த்திக் 'நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வியல்' தொடர்பான ஆராய்ச்சிப்படிப்பை முடிக்க இருக்கிறார்.

”கோணங்கி மன்னிப்பு கேட்டு மனம் திருந்தணும். இனி வேறு யாருக்கும் இந்தப் பாலியல் கொடூரம் நடக்கக்கூடாது. கோணங்கியால வேற யாரும் வாழ்க்கையை இழந்துடக்கூடாதுன்னுதான் இதுப்பத்தி எழுதினேன். நான், கோணங்கியால் பாதிக்கப்பட்டதை வெளியில சொன்னதும் பல பேர் பாதிக்கப்பட்டதாக ஃபேஸ்புக்ல் எழுதியிருக்காங்க. இதைப் பார்த்த, கோணங்கியின் தம்பி பூபதியின் நாடகக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி அந்தப் பதிவுகளை நீக்கச் சொல்றாங்க. எங்க அப்பா, அம்மா படிக்காதவங்க. நான், சாதாரண குடும்பத்திலிருந்து வந்திருக்கேன். கோணங்கி பெரிய செல்வாக்கு உடையவர். எங்களுக்கு எந்த சப்போர்ட்டும் இல்ல. தமிழக முதல்வரும் காவல்துறையும்தான் எங்களுக்குத் துணையா இருக்கணும்" என்கிறார் கோரிக்கையாக.

//

மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்ற என் கட்டுரை
https://m.facebook.com/story.php?story_fbid=10160936471541340&id=750161339&mibextid=Nif5oz

#me_too
#SpeakUpAgainstAbuse
#ArtistsAgainstAbuse
#EndSexualAbuse
#KonangiExposed
#NoMoreSilence
#MeTooArtistCommunity
#BreakTheSilence
#ProtectSurvivors
#JusticeForVictims
#HoldPerpetratorsAccountable
#StopSexualAbuseInArt
#SafeArtistsCommunity
#SupportSurvivors
#TogetherAgainstAbuse
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (146) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)