கடவுள் அமைத்த மேடை | 1979 | S.P.முத்துராமன் | கொல்லப்புடி மாருதிராவ்

கடவுள் அமைத்த மேடை (1979) மூலக்கதை கொல்லப்புடி மாருதி ராவ் (ஹேராம் தரகர்),தமிழில் திரைக்கதை வசனம் பாடல்கள்  எழுதியவர் கவிஞர் வாலி அவர்கள், இயக்கம் S.P. முத்துராமன், 

இதில் கதாநாயகி சுமித்ரா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் இரட்டை சகோதரிகள் தோன்றும் காட்சிகளை பல்லிளிக்காமல் அத்தனை லாவகமாக படமாக்கியுள்ளார்.
இரட்டை சகோதரிகளில் அக்கா பேசும் திறனற்றவர், தங்கை போஸ்ட்மேன் சிவகுமாரை காதலிக்கிறார், தனக்கு எங்கே திருமணம் ஆகப்போகிறது என மருகும் அக்காவின் ஏக்கத்தை புரிந்து கொண்ட தங்கை தன் காதலனை ஏமாற்றி தன் அக்காவை மணமேடையில் அமரவைத்து தாலி கட்ட வைத்து காதலனை மறக்கிறார்,(காதலன் சிவகுமாருக்கு சுமித்ராவுக்கு அச்சு அசலான சகோதரி இருப்பது தெரியாதாம் பாருங்கள்) வாய் பேச முடியாத குட்டு வெளிப்படும் முன்னர் ஒரு திருப்பம்,  வில்லன் ஒருவன் தனக்கு சுமித்ரா கிடைக்காத ஆத்திரத்தில் ,உள்ளே குன்றத்தூர் கோயில் மண்டபத்தில் திருமணம் நடக்கும் வேளையில் குதிரை வண்டி சேணத்தை பேனாகத்தியால் அறுத்துவிட, மலைக்கோயில் சாலையில் குதிரை வண்டி இறங்குகையில் சேணம் முழுக்க அறுபட்டு வண்டி குடைசாய்கிறது, சுமித்ராவுக்கு தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்க, அங்கே இவரின் சித்தப்பா மேஜர் சுந்தர்ராஜனும் குடும்ப மருத்துவர் வி.கோபாலகிருஷ்ணனும் சதி திட்டமிட்டு தலையில் அடிபட்ட அதிர்ச்சியில் பேச்சுதிறன் போய்விட்டது என்று சொல்ல, லட்சிய கணவர் சிவகுமார் மனைவியை இக்குறையுடன் உள்ளது உள்ளபடி ஏற்கிறார், ஆனால் தங்கை வாழ்க்கையை பறித்துக் கொண்ட குற்ற உணர்வில் சுமித்ரா கணவனின் ஆசைக்கு இணங்காமல் பட்டினி போடுகிறார், உனக்காக தியாகம் செய்த எனக்கு இது தான் பரிசா? என மனம் வெதும்பிய சிவகுமார் இனி உன் நிழலை கூட தொடமாட்டேன் என சபதம் இட, தன்னிலை உணர்ந்த சுமித்ரா, கணவனின் இச்சைக்கு அடிபணிகிறார், இவர்களுக்கு மகன் பிறக்கிறான், சிவகுமார் கண்பார்வை அற்ற அனாதை சிறுவன் காஜாவை வீட்டில் வளர்க்க, அவன் குழந்தையை  பார்த்துக் கொள்கிறான், ஒரு நாள் குழந்தை தவழ்கையில் கிணற்றில் விழ இருக்க, குழந்தையை காப்பாற்றுகையில் சுமித்ரா கிணற்றில் விழுந்து தத்தளிக்கிறார்,மதியம் சாப்பிட வரும் சிவகுமார் கைகால்கள் கழுவ கிணற்றடி சுவர் மீது நீர் கோர ஏறுகையில் மனைவி மூழ்குவதைப் பார்த்து குதித்து காப்பாற்றுகிறார், அவர் பிறவியில் பேசும் திறன் இழந்தவர் என்பதால் அதிர்ச்சியில் பேச்சு திரும்புவதில்லை, அந்த பேனாகத்தி வில்லன் மீண்டும் சுமித்ராவை அடைய முயல்கிறான், அப்போது சிவகுமார் சைக்கிளில் விட்டு இறங்காமல் எப்போதும் முயன்றிராதது போல சைக்கிள் சண்டை (முழுதும் டூப் வைத்து) செய்கிறார், இனியும் இன்னோரு திருப்பம் கூட வைத்தார் இயக்குனர்.அதே பேனா கத்தி வில்லன் சிவகுமாரும் சுமித்ராவும் ஊர்காவல் தெய்வத்துக்கு திருவிழாவின் போது  பொங்கல் வைத்துவிட்டு இரவில் சைக்கிளில் வீடு திரும்புகையில் லாரியை வைத்து மோதி தூக்கி விடுகிறான்.

இப்போது மருத்துவமனையில் வைத்து  சுமித்ரா இறந்தும்  விடுகிறார்,மனைவியை அணு அணுவாக நேசிக்கிற சிவகுமார் உயிருக்குப் போராடுகிறார்,மனைவியை காட்டுங்கள் இல்லாவிட்டால் என்னை சாக விடுங்கள் என்கிறார், மருத்துவர் பூர்ணம் விஸ்வநாதன், வி.கோபால கருஷ்ணன், மாமனார் மேஜர் என செய்வதறியாமல் திகைக்க, தந்தி கிடைத்து இவர்களை பார்க்க ஊரில் இருந்து  வந்த அசல் காதலி தங்கை சுமித்ரா சிவகுமாரின் இதயத்துடிப்பு வேகமாக செயலிழந்து வருவதை அறிந்தவர் தலையில் தானே ப்ளாஸ்திரி சுற்றிக் கட்டி சிவகுமார் முன் சென்று இதோ நான் வந்துட்டேன் பாருங்க என்கிறார், சிவகுமார் நீ பேசற என திகைக்க, எனக்கு (போனஸ்) பேச்சு வந்துடுச்சுங்க என்கிறார் , அக்கா சுமித்ரா சவத்தை என்ன செய்தனர் என காட்டுவதில்லை, வீடு திரும்பிய உடன் சுமித்ரா தனக்கு தானே திருமாங்கல்யம் கட்ட எத்தனிக்க, சிவகுமார் என்ன செய்யறே என்று கேட்க, அன்று விபத்தில் தாலி காணாமல் போனதால் இந்த புதுதாலி அணிகிறேன் என்கிறார், இதை  நான் தான் கட்டுவேன் என சிவகுமார் தாலி கட்டுகிறார், சுமார் இருபது வருடங்கள் இப்படியே இன்பமாக கழிய, சிவகுமாரைத் தேடி வருகிறார் ஒரு ஓய்வு பெற்ற ஜட்ஜ், அவர் மகன் காதலிக்கும் பெண்ணின் தாத்தா, திருமண சம்பந்தம் பேச வந்திருக்கிறார்,  வீட்டில்  சுமித்ராவை பார்த்தவுடன், சிவகுமாரை பார்த்து எப்போது நீங்கள் ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்று போஸ்ட் மாஸ்டர் ஆனீர்கள் ? என்கிறார், உங்கள் மனைவியை நான் நன்கு அறிவேன், இவர் என் வீட்டில் தான் பல வருடங்கள் வேலை நிமித்தமாக தங்கி இருந்தார் என பழங்கதையை சொல்லி சிவகுமார் சுமித்ரா வாழ்வில் பூகம்பத்தை ஏற்படுத்துகிறார் ,சிவகுமார் தன் மனைவிக்கு இப்படி ஒரு முன்கதை இருப்பதை அறியாதவர் துடிதுடித்துப் போய் மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்யப் போகிறார்,அப்போது மனைவி தந்துவிட்ட மன்னிப்பு கடிதத்தையும் மனசாட்சியாக எழுதிய தன்வரலாற்று புத்தகத்தை படித்தபின் மகளை ஆத்மார்த்தமாக மன்னித்து ஏற்க ,மகன் திருமணம் முடிவாவதுடன்  படம் நிறைகிறது.

இப்படத்தில் G.சீனிவாசன் ஒரு  முதியவர் கதாபாத்திரம் செய்தார்,அவரின் மகன் விஷக்காய்ச்சலில் இறந்து விட, அந்த செய்தி தாத்தாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வார் சிவகுமார், மாதா மாதம் மகன் அனுப்பியது போல இவர் மனியார்டர் அனுப்புகிறார், கிழவருக்கு மகன் எழுதியது போல இவரே மனதில் இருந்து கடிதம் வாசித்து அவரை ஊக்கப்படுத்தி அவர் வாழ்நாளை கூட்டுவார்.

இப்படம் ஆந்திரா காரம் அத்தனை ஓவர்டோஸ் வன்முறை, விபத்துகள்,சோகம் என அனைத்தும், தெலுங்கில்  கொல்லப்புடி மாருதிராவ் எழுதி இயங்கிய தேவுடு சேசின பெல்லி திரைப்படத்தை அச்சு அசலாக தமிழில் பிரதியெடுத்திருந்தார் இயங்குனர் S.P.முத்துராமன்,இசைஞானியின் பாடல்கள் மற்றும்  மிரட்டும் பிரமிப்பூட்டும் அசத்தலான பின்னணி இசைக்காக வேண்டியேனும் இப்படத்தை பார்க்க வேண்டும் .

திரைப்படத்தில் மயிலே மயிலே உன் தோகை எங்கே பாடல் அற்புதமான பாடல்,கேட்ட மாத்திரத்தில் மனதில் ரீங்காரம் இட்டபடி இருக்கும்,எஸ்பிபி மற்றும் ஜென்ஸி இணைந்து முதன் முதலில் பாடிய டூயட்,ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த பாடல்.

இப்படத்தில் தான் இசைஞானி இசையில்  பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஒரே ஒரு முதலும் கடைசியுமான பாடலை பாடியிருக்கிறார்,நாயகர் சிவகுமாருக்கு பாடிய தத்துவப்பாடல் இந்த " தென்றலே  நீ பேசு" பாடல்.

சிறுவன் காஜா ஷெரிஃப் பாடும் ரேர்ஜெம்  " தங்கத்துரையே மூனாம்பிறையே ஆரோ ஆரிரரோ 
என்ற ரேர்ஜெம் பாடல் ஒன்று உண்டு,S.P.சைலஜா பாடியது.

நாயகி சுமித்ரா மகிழ்ச்சி துள்ளப் பாடும் " வானில் பறக்கும் பறவை கூட்டம் " என்ற பாடல் கூட திரும்பத்திரும்ப கேட்க வைக்கும் , ஜானகியம்மா பாடியது.

இப்படத்தின் ஒளிப்பதிவு  இயங்குனர் S.P. முத்துராமன் அவர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள், குன்றத்தூர் முருகன் கோயில் பின்னால் அப்போது புழக்கத்தில் இருந்த மலைச்சாலையை இப்படத்தில் காணலாம், குன்றத்தூர் கோயில் கடந்த நாற்பது வருட காலகட்டத்தில்  பல பல மாற்றங்களை கண்டுள்ளது, படி மண்டபம் இல்லாத குன்றத்தூர் முருகன் கோயிலை இப்படத்தில் காணலாம்.

இப்படத்தில் கிராமம் போஸ்ட் ஆபிஸ் காட்சிகளை பாலூர் கிராமத்தில் படமாக்கியுள்ளனர்,பாலூர் பதங்கீஸ்வரர் சிவன் கோயில் வளாகத்தில் ஒரு காட்சி படமாக்கி உள்ளனர்,பாலாற்றங்கரையில் , திருமுக்கூடல், பழைய சீவரம் போன்று பாலாறு வழித்தடத்தில் அமைந்த இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை இப்படத்தில் காணலாம், அன்றைய நாட்களில் ஊட்டிக்கு போகாமல் சென்னைக்கு அருகே செங்கல்பட்டு பாலாறு மார்க்கத்தில் படமாக்கப்பட்ட முக்கியமான திரைப்படம், ஏணிப்படிகள் திரைப்படம் கூட பாலாறு சுற்று வட்டாரத்தில் படமாக்கப்பட்ட திரைப்படம் தான் .

படத்தின் நல்ல பிரதி யூட்யூபில் உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)