சைக்கோ சங்கர் மற்றும் இளம் ஆயுதப்படை காவலர் சின்னசாமி

இந்த கொலைக்கருவி  ஆய்வு கோப்பு படம் கொடூர சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய வரலாற்றில்  மிகவும் முக்கியமானது, 

2011 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று அன்றைய காவல் துறை ஆணையர் , சைலேந்திரபாபு அவர்கள் ஆயுதப்படை இளம் காவலர் M.சின்னசாமி (26) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்ய பயன்படுத்திய 7.62mm Bolt Action rifle துப்பாக்கியை கையில் வாங்கி ஆராய்கையில் எடுத்த படம் இது, இந்த படம் கோவை சிறைச்சாலையில் எடுக்கப்பட்டது.

காவலர் M.சின்னசாமி பற்றிய செய்திக்குறிப்பு 2011ஆம் ஆண்டு  மார்ச் 18ஆம் தேதி முதலில் வாசித்தது முதல் நான் பல நாட்கள் தூக்கம் தொலைத்திருக்கிறேன், கடமையில் பிசகியதற்கு வருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட இளம் காவலர் M.சின்னசாமி .

குருவி தலையில் பனங்காய் போல 25 வயது இளம் காவலர்கள் இருவர் வசம் ஒப்படைக்கப்பட்டவன் necrophiliac சைக்கோ கொலைகாரன் M.ஜெய்சங்கர்,இவனை சைக்கோ சங்கர் என்றே அழைப்பர்.

necrophiliac என்றால் பிணங்களுடன் உறவு கொள்பவன் என்று பொருள், இவன் உறவு கொள்கையில் கழுத்தை அறுத்து விட்டு உயிர் பிரிகையிலும் உயிர் பிரிந்த பின் பல முறையும் உறவு கொள்ளும் ராட்சசன், சேலத்தில் ஜெயமணி என்ற பெண் காவலரை அப்படி கடத்தி வன்புணர்ந்து கொலைசெய்து நெடுநாள் காணாப்பிணமாக்கியவன், இத்தனை பயங்கரனை சின்னசாமி மற்றும் ராஜவேலு என்ற காவலர்கள் வசம் ஒப்படைத்தது கோவை சிறை நிர்வாகம், 

அந்த கொடூரனை பல ஊர்களில் பல நீதிமன்றங்களில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும் இதே கோவை சிறையில் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்பது தரப்பட்ட பணி,இந்த கொடூரனை பேருந்தில் அழைத்துப் போகையில் அவன் மானம் போய்விடக்கூடுமாம் , அது மனித உரிமை மீறலாம்,இவன்  தன்னை  கைவிலங்கிடக்கூடாது என்ற சிறப்பு சலுகை பெற்றதால் இந்த பயணங்கள் எதிலும் கை விலங்கிடப்படவில்லை, இரு காவலரும் அவன் இடம் வலம் நின்று கையுடன் கை  பிணைத்து அழைத்து போய் வர வேண்டும், அரசு பொது பேருந்து தான் சிக்கனமான செலவு குறைந்த போக்குவரத்து என்பதால் அதில் தான் அழைத்து போய் வந்துள்ளனர்.

நெக்ரோபீலியாக் சைக்கோ ஜெய்சங்கர் முதலில் நாமக்கல் நீதிமன்றத்தில் 2011 மார்ச் 16ஆம் தேதியும், இரவு  திருச்சி மத்திய சிறையில் ராத்தங்கலுக்கும், மார்ச் 17 அன்று  தர்மபுரி நீதிமன்றத்திலும் அவன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக அடுத்தடுத்து ஆஜர்படுத்தப்பட்டான்,
அவன் மீதான வழக்குகள் துரிதமாக நடக்கத்தொடங்கிய நிலையில் மறுநாள் 18 வெள்ளி இரவு 9.30 மணியளவில் கோவைக்கு நேரடி பேருந்து ஏறுவதற்கு வேண்டி இவர்கள் சேலம் மத்திய பேருந்து நிலையம் வந்துள்ளனர் , அங்கு கோவைக்கு சாதாரண இருக்கை கொண்ட பேருந்துகள் மட்டுமே அடுத்து கிளம்ப காத்திருக்க, சைக்கோ கொலைகாரன் ஜெய்சங்கர் தான் சாதாரண பேருந்தில் ஏறமாட்டேன், கோவைக்கு செல்லும்  டீலக்ஸ் பேருந்தில் அழைத்துச் செல்லுமாறு அழிச்சாட்டியம் செய்துள்ளான்.
இளம் காவலர் ராஜவேலு டீலக்ஸ் பேருந்து நேர அட்டவணையை சரிபார்க்கச் செல்ல, ​​சைக்கோ ஜெய்சங்கர்   சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காவலர் சின்னசாமியை கீழே தள்ளிவிட்டு தப்பியுள்ளான்,இரு காவலர்களுக்கும் கால்களின் அடியில் பூமி நழுவுவது போல அதிர்ச்சி, உயரதிகாரிகளின் சுடுசொற்கள், பணி ரீதியான அழுத்தம், தண்டனை நடவடிக்கை என கலங்கிப் போனவர்கள் , அங்கே சேலம் காவல்துறையினருடன் இணைந்து 1-00 மணி வரை தேடி அலைந்திருக்கின்றனர்,  இந்த கொடூரன் தப்பிய செய்தியை கோவை உயரதிகாரிகளிடம்  சொல்லிவிட்டு நள்ளிரவு கோவை திரும்புவதற்கு பேருந்து ஏறியுள்ளனர், வழி நெடுக ஆற்றாமையில் காவலர் ராஜவேலுவிடம் புலம்பியபடியே வந்துள்ளார் காவலர் சின்னசாமி, கொடூரமான சைக்கோ பெண்போலீஸையே வன்புணர்ந்து கொன்றவனை தன் கையால் தப்ப விட்டோமே என்ற குற்ற உணர்வு அவரின் நெஞ்சை அழுத்தியிருக்கிறது.

கோவை காந்திபுரம் பஸ் டெர்மினலில் இறங்கி பஸ்சில் பாப்பநாயக்கன்பாளையத்திற்கு பேருந்து ஏறியுள்ளனர், அங்கு தான்  ஆயுதப்படை போலீஸ் மைதானம் அருகே இரு காவலர்களும் அறை  எடுத்து தங்கியிருக்கின்றனர்,   19 மார்ச் 2011 அன்று  பாப்பநாயக்கன்பாளையத்தில் அதிகாலை 2-25 மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கிய சின்னசாமி சடுதியில்  துப்பாக்கியை பூட்டு விடுவித்து இயக்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டார், காவலர் சின்னசாமியின் தாடையை துளைத்து மேலேறிய  தோட்டா கபாலத்தை பிளந்து வெளியேறியுள்ளது,இளம் காவலர் சின்னசாமியின் கோப்பு புகைப்படம் கூட பதிவிட  கிடைக்கவில்லை என்பது சோகம்.

சைக்கோ கொலைகாரன்  மகா கிராதகன் M.ஜெய்சங்கர் பகீரத பிரயத்தனங்களுக்குப் பின் பிடிபட்டான், செல்லும் வழியெங்கும் கொலைகள் ,வல்லுறவுகள் நிகழ்த்தியிருந்தான் ரத்த காட்டேரி,  இவன் எடப்பாடி போர்ட் ஹை ஸ்கூல் முன்னாள் மாணவன் ,+2 வரை கல்வி,ட்ரக் டிரைவர்,நல்ல வருமானம்,இவனுடைய வல்லுறவு வெறி தணிய உறவில் 15 வயதுப் பெண்ணை மணமுடித்து வைத்தாள் இவன் தாய், மூன்று மகள்களும்  உண்டு, 

முதல் வல்லுறவு மற்றும் கொலை குற்றத்துக்கு ,தன்  32 ஆம் வயதில் தான் சிக்கி  உள்ளான் சைக்கோ சங்கர், அது வரை எத்தனை பேரை ஊரில் குளத்தில் மூழ்கடித்தும், தலையில் கல்லை போட்டும் கொன்றிருப்பானோ தெரியாது, இவன் தந்தை மாரிசாமி எடப்பாடி பகுதியில் பெரிய ரவுடி,கள்ள சாராய கடத்தல்  லாரி ஓட்டியவன், இதே போல வல்லுறவு கொலை வழக்குகளுக்காக 32 வருடம் ஆயுள் தண்டனை பெற்றவன் மாரிமுத்து , அவனும் பெங்களூரு சிறையில் தான் இறந்து போனான்  , ஸ்பைடர் பட சைக்கோ எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்துக்கு சைக்கோ சங்கர் தான் நேரடி reference,

அவன்  27 பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு அதிகாலை 2-30 மணிக்கு, ஊழல்களுக்கு மிகவும் பெயர் போன பெங்களூரு பரப்பன அக்ரஹாரா தனிமைச்சிறையில் கழுத்தை துண்டு பிளேடு கொண்டு அறுத்துக் கொண்டு ரத்தவெள்ளத்தில் இறந்து போனது வரலாறு, 30க்கும் மேற்பட்ட வன்புணர்வு வழக்குகள், 19 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என பேனாக்கத்தியால் துடிக்க துடிக்க கழுத்தறுத்து கொலை செய்தவன், அக்கொடிய மிருகம் போய் இப்படி சாதாரணமாக ஆசுவாசமாக மரணமடைந்தது மிகவும் ஏமாற்றமானது, 

நம் நாட்டில் இது போல கொடூரர்களுக்கு கூட உடனடியாக மரணதண்டனை வழங்காதது நம் போன்ற கீழ்படிதலுள்ள குடிமக்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டமானது .

பொதுமக்களாகிய நாம் வீட்டில் நிம்மதியாக உறங்குவதன் காரணகர்த்தா காவல்துறை தான், நாடெங்கிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபடும்  காவலர்களின் உழைப்பு மிகவும் போற்றத்தக்கது, மார்ச் 18 ஆம் தேதி காவலர் சின்னசாமியின் 12 ஆம் நினைவு தினம்,அவர் யார் பெற்ற பிள்ளையோ தெரியாது, எத்தனையோ கனவுகளுடன் காவல்துறையில் இணைந்தவர் அவருக்கு அஞ்சலி, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)